திங்கள், 16 மார்ச், 2009

பெண்களை ஆண்கள் சோதனையிட முடியாது: உச்ச நீதிமன்றம்

மார்ச் 15: பெண்கள் போதைப்பொருள் வைத்திருப்பதாக சந்தேகித்தாலும் அவர்களிடம் ஆண் அதிகாரிகள் சோதனையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த குர்ணம் கெüர், அவரது மருமகள்கள் ரஞ்சித் கெüர், குர்ஜித் கெüர் ஆகியோர் அண்மையில் அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், எங்களது வீட்டில் திடீரென சோதனை நடத்திய போலீஸôர் எங்களை கைது செய்தனர். அத்துடன், நாங்கள் ஹெராயின் போதைப்பொருள் கடத்தும் தொழில்புரிவதாகவும் பொய் குற்றச்சாட்டு சுமத்தினர். ஆண் அதிகாரிகளே எங்களிடம் சோதனை நடத்தினர். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த நிலையில் இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அந்த மூவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மாநில அரசினால் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது மாநில அரசு. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சின்ஹா, முகுந்தகம் சர்மா, தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பெண்கள் போதைப்பொருள்கள் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தாலும் அவர்களிடம் ஆண் அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடாது. பெண் அதிகாரிகள் கொண்டே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உத்தவிட்டது.

கருத்துகள் இல்லை: