சனி, 14 மார்ச், 2009

செருப்பை வீசினால் சிறை தண்டனை; குண்டு வீசினால்..?


ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி; மரத்துக்கு மரம் உண்டியல் வைத்து வசூல் செய்த காமெடியனை போலீஸ் கைது செய்யும்போது, அவர் கூறுவர்;'பெரிய கோயிலா கட்டி பெரிய உண்டியலா வச்சா உட்ருவிக! சின்ன கோயிலா கட்டி மரத்துக்கு மரம் உண்டியல் வச்சா புடுச்சுட்டு போயிருவீங்க! என்பார். அதுபோல, உலக மகா பயங்கரவாதிகளை விட்டுவிடும் உலகம், சின்னத்தப்பு செய்பவர்களுக்கு பெரிய தண்டனை வழங்குவதை பார்க்கிறோம்.

இன்று ஒரு சின்னக்குழந்தையிடம், உலகமக்களின் அதிக வெறுப்பிற்குரிய நபர் யார்? எனக்கேட்டால் பட்டென பதில் சொல்லும் 'புஷ்' என்று. அந்த அளவுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் குண்டுமழை பொழிந்து அப்பாவிகளை அழித்தவர். அது மட்டுமன்றி, தன்னுடைய கள்ளக்குழந்தை இஸ்ரேலுக்கு புறவாசல்வழியாக உதவிசெய்து பாலஸ்தீன மக்களின் பூமியை மயானமாக மாற்றியவர்.அவர் மீது உலகம் நடவடிக்கை என்ற பெயரில் சிறு துரும்பைக்கூட அசைக்கவில்லை. ஆனால், இந்த உலக ரவுடியின் ஈராக் விஷயத்தின்போது, ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உணர்வுக்கு வடிகாலாக, மாவீரன் முந்தஸா அல் ஸைதி அவர்கள் ஷூவை வீசி உலகவரலாற்றில் இடம்பெற்றார். அவருக்கு புஷ்ஷின் பொம்மை அரசாங்கமாக திகழும் ஈராக் அரசு, மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

*குர்திஷ் இனமக்கள் சிலரை கொன்றார் என்பதற்காக சதாமுக்கு தூக்கு.
*ஒரு பகுதி மக்கள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார் என்பதற்காக சூடான் அதிபருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கும் ஐ.நா. நீதிமன்றம்.
*செருப்பு வீசியவருக்கு3.ஆண்டு தண்டனை.
கொத்துக்கொத்தாய் குண்டு வீசி குழந்தைகளையும் விட்டுவைக்காமல் கொன்றொழித்த புஷ்ஷுக்கு உலக 'ஜனநாயகவாதி' பட்டம்.


என்ன செய்ய முஸ்லிம்களின் உயிருக்குத்தான் மதிப்பில்லையே!
படம்;தினத்தந்தி

கருத்துகள் இல்லை: