புதன், 11 மார்ச், 2009

தி.மு.க. கூட்டணியில் - வேலூர் பாராளுமன்ற தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் மனித நேய கட்சி தலைவர் பேட்டி

வாணியம்பாடி,மார்ச்.11- மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வாணியம்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மனிதநேய மக்கள் கட்சி, தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தை அளிக்க வேண்டும் என்பதால் தொடங்கப்பட்டது.. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட உள்ளது. தொடர்ந்து தி.மு..வுடன் கூட்டணியாக இருக்க விரும்புகிறோம். முஸ்லீம் மக்களுக்காக எந்த பெரிய கட்சியும் சீட் ஒதுக்கி தந்தாலும் நாங்கள் தனியான சின்னத்தில்தான் பேட்டியிடுவோம். தி.மு.. கூட்டணியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி உள்பட, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மத்திய சென்னை ஆகிய 6 தொகுதிகளை கேட்டுள்ளோம். இந்த தொகுதியில் கூட்டணி கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவு சக்தி கொண்டுள்ளோம் என்பது தி.மு..வுக்கு தெரியும். மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் என்ற கனவு ஒருபோதும் பலிக்காது.

தமிழ்நாட்டில் நாங்கள் கேட்கும், தொகுதிகளை ஒதுக்கி தரவில்லை எனில், 3-வது அணி ஒன்றை உருவாக்கி போட்டியிடும் நிலை ஏற்படும். இலங்கை தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு முன் வர வேண்டும். இதுகுறித்து உடனடியாக மத்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி

கருத்துகள் இல்லை: