
மத்திய ஆசியாவின் முதல் அணு ஆயுதமற்ற மண்டலம் இன்று முதல் அமலாகிறது.இதற்காக அப்பகுதியில் உள்ள நாடுகள் அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த 1993 ம் ஆண்டு அப்போதைய உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் முன்மொழிந்த அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையில் மத்திய ஆசிய நாடுகளான கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உர்பெகிஸ்தான் இன்று கையெழுத்திட்டுள்ளன.இதன் மூலம் மத்திய ஆசியாவில் முதல் அணு ஆயுதமற்ற மண்டல் உருவெடுத்துள்ளது.
உலகளவில் ஏற்கனவே அணு ஆயுதமற்ற மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகியவற்றுடன் மத்திய ஆசியாவும் இணைந்துள்ளது.
சுதந்திரம் பெறுவதற்கு முன் வடக்குப் பகுதியில் உள்ள செமிபலடின்ஸ்க் பகுதியில் 400 க்கும் அதிகமான அணு ஆயுத சோதனைகளை நடத்திய கசகஸ்தான், உலகில் 4 வது பெரிய அணு ஆயுத வல்லமையுள்ள நாடாக விளங்கியது.ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் அணு ஆயுதத்தை கசகஸ்தான் கைவிட்டு விட்டது.
அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த 5 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், அணு ஆயுத சோதனையை தடை செய்யும் உடன்படிக்கையை நோக்கி அந்த நாடுகள் செல்வதற்கான முதல்படியாக இது இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக