ஆள்வது ஒருநாடாக இருப்பினும் அகிலமனைத்தும் நம் அதிகாரத்திற்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் ஜனநாயகம்[?] அந்த வகையில் எங்கே எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். நீண்ட நெடிய ராணுவ ஆட்சிக்குப்பின் மக்களாட்சி மலர்ந்துள்ள பாகிஸ்தானில் அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. எனவே இதை காரணம் காட்டி மீண்டும் பாகிஸ்தானில் அரசியல் இஸ்திர தன்மையை ஏற்ப்படுத்த அமெரிக்கா திட்டமிடுகிறதோ என்று சந்தேகிக்கும் வகையில்,
பாகிஸ்தானின் ராணுவத்தளபதி பர்வேஸ் கயானி கூறியதாக வந்துள்ள செய்தியில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை அதிபர் சர்தாரி பதினாறாம் தேதிக்குள் சரிசெய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பர்வேஸ் கயானி சமீபத்தில்தான் வாஷிங்க்டன் சென்று திரும்பினார். அதன்பின் இவ்வாறு அதிபரை கோரியிருப்பது அமெரிக்காவின் தூண்டுதலா? என்று ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்புகிறது.
பஞ்சாபின் முதல்வராக இருந்தவரும், நவாஸ் ஷரிபின் சகோதரருமான ஷாபாசின் ஆட்சியை கலைத்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தியதால் நவாஸ் ஷரீபின் ஆதரவாளர்கள், அதிபர் சர்தாரியின் மீது அதிருப்தியில் உள்ளனர். மேலும், பர்வேஸ் முஷரப் அதிபராக இருந்த போது நீதிபதிகளை மாற்றம் செய்தார். முஷராப் நியமித்த நீதிபதிகளை மாற்றிவிட்டு முன்னிருந்த நீதிபதிகளையே நியமிக்கவேண்டும் என்று நவாஸ் கட்சியினர் பதினாறாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில், ரானுவத்தளபதியின் மேற்கண்ட கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மீடியாக்கள் சித்தரிக்கின்றது
thanks to :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக