ஞாயிறு, 8 மார்ச், 2009

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

thanks to : ஆதம்.ஆரிபின்

நமது சமுதாயத்திற்காக 2002 ஆண்டில் ஜனாப்.அப்துல் லத்திப் சட்டமன்றத்தில் MLA ஆக இருந்தார், அதன் பிறகு யாருமில்லை என்பதுதான் உண்மை,நமக்கு முறையான அரசியல் கட்சியும் இல்லை, அப்படி இருப்பதாக நோக்கினால் முஸ்லீம் லீக் முன்று பிரிவுகளாகவும் , இண்டியன் யூனியன் முஸ்லீம் லீக் இரு பிரிவுகளாகவும்,(காதர் மொய்தீன், தாவுது மியா கான் ), மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் - உமர் பாரூக் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் - ஷேய்க் தாவுத், இந்திய தேசிய லீக், தமிழ் மாநில தேசிய லீக், தேசிய லீக் முன்று பிரிவு களாகவும், தலைவர்கள், தொண்டர்கள் ஆக மொத்தம் பாத்து வேனில் அடக்கி விடலாம், அதே செல்வாக்கும் இல்லை, நோன்பு நேரங்களில் மாற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு கஞ்சிக்கு அழைப்பு கொடுத்து பத்திரிக்கைகளில் பதிய வைப்பார்கள், அதே நேரம் செல்வாக்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகளும் உண்டு அதில் த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரோன்ட் ஆப் இந்தியா (ப்பிய்) இம்மூன்று அமைப்புகளும் அமைப்புகளாகும் , இதற்கு அடுத்தநிலையில்ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத் , அமைப்புகஇருந்தாலும் இந்த அமைப்புகளுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது, இந்தநிலையில் த.மு.மு.க,PFI,த.த.ஜ, ஆகிய அமைப்புகள் கருத்துக்கள்வேறுபட்டாலும் அரசியல் தளத்தில் ஒன்று பட்டு மூன்று காலவரையில்இவர்கள் தேர்தலை முன்னிட்டு நன்மையை விரும்பி ஒன்று பட்டு லாம் , மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி யார் விரும்பினாலும்விரும்பவிட்டளும் ஒரு எழுச்சியான கட்சி என்பது மறுக்க இயலாது, இதுவரை பல லீக் களாலும் திரட்ட இயலாததை செய்து இருக்கிறது,

கூட்டத்தைமட்டுமல்ல ஒரு எழுச்சியையும் உருவாக்கி உள்ளதை த.த.ஜ, PFI, ஜாக் (J.A.Q.H), இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஆகிய அமைப்புகளை சார்ந்தசகோதரர்களும் வரவேற்று உள்ளார்கள் , ஏனன்றால் ஒரு தயாநிதி மாறன்அல்லது TTV .தினகரனுக்கோ அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுவதைவிட, நாம் ஏன் நம்முடைய சகோதரனுக்கு உழைக்கக்கூடாது என்ற எண்ணம்நம்மிடைய மேலோங்கி உள்ளது, எவனோ ஒருவன் வெற்றிபெற போதுநாம் ஏன் ம.ம.க விற்கு ஆதரவு கொடுக்க கூடாது ? , அதற்கேற்ப சமிபகாலமாக த.மு.மு.க வின் வார இதழ் க்கூட முஸ்லீம் லீகை தவிர மாற்றநமது அமைப்புகளை சாட வில்லை, பீஜே மற்றும் பாகர் பிரிவை கூட தனதுஇதழில் தவிர்த்து வந்தது என்பது குறிப்பிட தக்கது, பாக்கரை தூண்டி விடவாய்ப்புகள் அதிகம் ஆனால் நடுநிலையோடு இருந்து வந்தது, த.த.ஜ வுடன்சுமுகமான உறவை பேண ம.ம.க மாநாடு அழைப்பிதல் கூட நேரில்கொடுக்கப்பட்டது, இரு அமைப்புகளின் தொண்டர்களுக்கும் கூட சுமுகஉறவையே விரும்புகிரரர் , இரு அமைப்புகளும் கொஞ்சம் இறங்கி பேச்சுநடத்தினால் சமுதாயத்திற்கு நல்லது, இதே போலே மனிதநீதி பாசறைஉடன் த.மு.மு.க சில வேறுபாடுகள் இருந்தாலும் கொழிகொடில் நடந்தமாநாட்டில் த.மு.மு.க தலைவர் ஜவதிருள்ள் கலந்துகொண்டதுகுறிப்படத்தக்கது, ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, போன்றஅமைப்புகள் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆதரவு தெரிவித்து உள்ளது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூட வாழ்த்து அனுப்பி உள்ளது, ஆக இந்தஅமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு நமது சமுதாயத்தில் ஒருமாற்றத்தை கொண்டு வரலாம், பதினைந்து தினங்களில் பேசி நல்ல முடிவுஎடுக்க வேண்டும், இதை பிரிண்ட் செய்து நமது சகோதர்களுக்கு எடுத்துசொல்லுங்கள். insha allah…. வெற்றி பெறுவோம்…. - ஆதம்.ஆரிபின்

கருத்துகள் இல்லை: