ஞாயிறு, 29 மார்ச், 2009

திமுகவுடன் தொகுதி உடன்பாடு மனிதநேய மக்கள் கட்சியின் நிலை என்ன?

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு முதல் கட்ட தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மனித நேயக் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக திமுக அறிவித்துள்ளது. தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் வெளியூரிலும், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளிநாட்டிலும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வெளியேயும் இருக்கின்றார்கள். நிர்வாகிகள் அனைவரும் திங்கட்கிழமை சென்னை திரும்புகிறார்கள். திங்கட்கிழமை கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடைபெறலாம் எனத் தெரிகிறது.


27.03.09 காலையில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பி. அப்துஸ் சமது ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரசாமி. துரை முருகன். பொன் முடி ஆகியோருடன் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். அன்று மாலை கோபாலபுரத்தில் கலைஞருடன் மனிதநேய மக்கள் கட்சியின் குழு சந்தித்து பேசியது. அப்போது இறுதியாக மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. திமுக தரப்பில் ஒரு தொகுதி மட்டும் தான் என்ற நிலையில் உறுதியாக நின்றது.


28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி தொண்டர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

சமுதாயத்தின் தன்மானம் முக்கியம் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே ஒரு தொகுதியை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.


இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும் என நம்புகிறோம்.


தலைமை நிர்வாக குழு
மனிதநேய மக்கள் கட்சி



thanks to : tmmk.in

கருத்துகள் இல்லை: