திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 செப்டம்பர், 2010

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை; திறக்காத, மு.க.வின் மனக்கதவு!

இந்திய திருநாட்டில் கரசேவை[!] என்ற பெயரில் காடையர்களை கூட்டிச்சென்று, கருணை நாயனாகிய அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்தவர்களுக்கு ஒரு நாளில் சிறைக்கதவு திறக்கிறது. அவர்கள் துணைப் பிரதமர் பதவி வரைக்கும் அலங்கரிக்க முடிந்தது.

முதல்வரின் ஆசியோடுதான் நாங்கள் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை குஜராத்தில் நிகழ்த்தினோம் என பகிரங்கமாக சொன்னவர்களை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது. ஆசி வழங்கி முஸ்லிம்களின் ஆவியை பறித்தவர் அரியாசனத்தில் முதல்வராய் அமரமுடிகிறது.

மும்பையில் ஒரே நாளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப் பட்டதற்கு காரணமாக அமைந்த 'தலையங்கம்' தீட்டிய, பிரபல மும்பை அரசியல் தாதா இன்றைக்கும் சுதந்திரமாக 'தலையங்கம் தீட்டமுடிகிறது. அவரை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது.

கோவை குண்டு வெடிப்புக்கு முன்னால் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை என்ன ஆனது என்று எவருக்கும் தெரியவில்லை. மேலும், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பலமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, ஆனந்தாக்களும், .........ரிகளும் சாவகாசமாக வலம் வரமுடிகிறது.

இவ்வாறாக சட்டம் தனது நடு[!] நிலையான கடமையை செய்து கொண்டிருக்கும் நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் பதினான்கு ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் சட்டத்தின் கதவு திறக்கமாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது.

ஆம்! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களில் ஒரு தொகையினரை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. இந்த மனிதாபிமான விடுதலையில் முஸ்லிம் சிறைவாசிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு, இன்னும் பத்து நாளில் தாமாகவே தண்டனை முடிந்து வெளியே வரவிருந்த சில முஸ்லிம்களை விடுவித்துவிட்டு, எதோ முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றியது போன்று நாடகமாடினார் முதல்வர். சரி! இந்த ஆண்டாவது கோவை சிறையில் பதினான்கு ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளில் கணிசமானோரை அண்ணா பிறந்த நாளில் விடுவிப்பார் என்று முஸ்லிம்கள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில்,


பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாள் விழாவையொட்டி மனிதாபிமான அடிப்படையில் 70 வயது நிரம்பிய மற்றும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு செய்து, கடலூர், பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் உள்ள 80 வயது உடைய ஒரு பெண் கைதி உட்பட 13 சிறை வாசிகளை முன் விடுதலை செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து,

மீண்டும் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார். ஏனெனில் நாமறிந்தவரை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சிறைவாசிகளில் 70 வயது நிரம்பியவர் எவரும் இல்லை.

எனவே தொடர்ந்து முஸ்லிம்கள் விஷயத்தில் தொடர் மவுனம் சாதிக்கும் திமுகவின், சில சீட்டுக்களுக்காகவும், வீசும் நோட்டுகளுக்காகவும், அல்லது வேறு சில நோக்கங்களுக்காகவும் இனியும் இந்த முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், கருணாநிதிக்கு வெண்சாமரம் வீசப்போகிறதா..? அல்லது தனது ஒற்றுமையின் வலிமையை வாக்குகளாக மாற்றி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பப் போகிறதா என்பதை தேர்தல் நேரத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தாம்பரம்: மதவெறியைத் தூண்டும் திமுக எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...


ஜாதி மதங்கள் கடந்து சமத்துவத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
கடந்த 09.08.2010 அன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் கூட்டம் நிறைந்த சண்முகம் சாலை அதனருகில் உள்ள அப்துல் ரசாக் சாலையில் தாம்பரம் ரெங்கனாதபுரத்தை சார்ந்த அசனார் (வயது 25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வருகிறார். எதிர்புறம் பத்மநாபன் என்பவர் ஆட்டோவில் வருகிறார். தாம்பரம் பெரிய மசூதிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்னால் இரு வாகனமும் மோதி கொள்கின்றனர். இரு வாகன ஓட்டிகளும் வாய்த் தகராறில் துவங்கி கை கலப்பு வரை செல்கிறது. இதனிடையே பீட்டர் இங்லேண்ட் துணிக்கடை ஊழியர் வினோத் என்பவரும் உரிமையாளர் கே.பி. ஜெகதீசன் என்பவரும் பத்மநாபனுக்கு ஆதர வாக அசனாரை சரமாரியாகத் தாக்குகின்றனர். இதனைக் கண்ட சண்முகம் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் சில முஸ்லிம்களும் தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து அசனாரை மீட்க வருகிறார்கள். உடனே கடை உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் வாகனத்தில் வந்தவர் அசனார் முஸ்லிம் என்பதற்காகவும் அவரை மீட்க வந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவும் தன்னையும் தன் கடையின் கண்ணாடியையும் தமுமுகவினர் தாக்கி விட்டனர் என்று தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் டி.காமராஜ் (எம்.எல்.ஏ.வின் மைத்துனர்) என்பவருக்கும் தகவல்தர, ஏற்கனவே தமுமுக மீதும் இஸ்லாமிய சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நகரமன்ற துணைத்தலைவர் காமராஜர் மூலம் தனது குண்டர் படையை ஏவி 9.8.2010 அன்று இரவு பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் வகையில் 150&க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்துக் கொண்டு அராஜகம் செய்தார். மேலும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தனது அதிகார பலத்தை பயன்ப டுத்தி, தமுமுகவினர் மீது காவல் துறையை ஏவி விட்டார். இதிலும் மதவெறி அடங்காத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. போலிசை தூண்டிவிட்டு தமுமுக சகோதரர்கள் எம்.பயாஸ், எம். அப்பாஸ், சதாம் உசேன், ஷாஜமான், முகமது அலி, ஹமிது, அசனார் உள்ளிட்டவர்களை கே.பி.ஜெகதீசன்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றப்பிரிவு எண் 307ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்தார். கைதானோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதிலும் திருப்தி கொள்ளாத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. 10.08.2010 அன்று, தான் ஒரு திராவிட இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து ஜாதி சங்க உறுப்பினராக மாறி, மதவெறி கும்பலோடு கைகோர்த்து தமுமுகவினரை கண்டிக்கிறோம் என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி கட்டாய கடை அடைப்பு நடத்தினார். இதனை கேள்விப்பட்ட தமுமுகவினர் தாம்பரத்தில் ஒன்றுகூடினர். எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவி டக்கூடாது என்பதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாக்கூப் தலைமையில் மிகவும் கட்டுப்பாடுடன் பொறுமை காத்தனர்.

காவல் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். 10.08.2010 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்கள் நேரடியாக களத்திற்கு வந்தார். முன்னதாக தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது, மாவட்ட மமக செயலாளர் எம். யாக்கூப், துணைச் செயலாளர் ம.ஹைதர் அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. 2006&ல் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் எஸ்.ஆர். ராஜாவை அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்த தமுமுகவினரை துச் சமாக மதித்து தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை காட்டிக்கொண்டே இருந்தார். வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் தரப்புக்கும் எம்.எல்.ஏ. தரப்புக்கும் அடிதடி தகராறு நடந்தபோது த.வெள்ளை யனைக் காப்பாற்றியது தமுமுக வினர்தான். சென்னையின் பெருநக ரமான தாம்பரத்தில் சிறுகடை வியாபாரிகளின் நலன் காக்க நாள்தோறும் போராடிக் கொண்டி ருக்கும் தமுமுகவை அழித்துவிட வேண்டும் என எம்.எல்.ஏ. கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்.

மக்களின் பிரச்சனையை உடனுக் குடன் முடித்துக் கொடுத்து மக்களின் நன் மதிப்பை பெற்று தமுமுகவினர் வளர்ந்து வரும் இச்சூழலில் இந்து முன்னணியுடன் கைகோர்த்துக் கொண்டு மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயல்கிறார். இதனிடையே விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சியின் மு.அக்பர், கம்யூனிஸ்ட் லோகநாதன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் முகம்மது சித்திக், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள், வணிகர் சங்கம் ஹாஜி சலீம், சேவியர் அருள்தாஸ் ஆகியோர் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.

 எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...

எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...


வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கம் கடையை திறக்கச் சொல்ல, எம்.எல்.ஏ. ராஜாவின் தூண்டுதலின் பேரில் குண்டர் படை வியாபாரிகளை மிரட்டி கடை களை அடைத்தனர். தமுமுக வினரை மதவெறியை தூண்டுபவர் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டு தாம்பரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., வெற்றிகொண்டான் போன்ற திமுக முக்கியப் பிரமுகர்கள் முஸ்லிம்களிடத்தில் நல்லுறவை ஏற்படுத்துவது போன்று தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசி சென்றாலும் எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நீடித்துக்கொண்டே இருக்கிறது. மதமோதலைத் தூண்டி விடும் எஸ்.ஆர்.ராஜாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், வணிகர் சங்கமும் சுவரொட்டிகளை ஒட்டின. ஆனால் எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் சுவரொ ட்டிகளை கிழித்து எறிந்தனர்.

திராவிட இயக்கத்தில் மத வெறியைத் தூண்டும் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மீது திமுக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.

தோழர் ஜீவா, என்.ஆர்.ராசமாணிக்கம், முனு ஆதி போன்ற சமூக சிந்தனைவாதிகள் வாழ்ந்த தாம்பரத்தில் மதவெறி சிந்தனையுடன் செயல்படும் ராஜாவால் திமுக அரசுக்கு தீராக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

வன்னிஅரசு - மாநில செய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தை கட்சி


தாம்பரத்தில் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது.

மூ. அக்பர், காங்கிரஸ் கட்சி


எனது அரசியல் வாழ்வில் இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இரு வாகன மோதலை மத மோதலாக கையா ண்ட தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கண்டனத்திற் குரியவர்.

வணிகர்சங்க பிரமுகர்-ஹாஜி சலிம்

தாம்பரத்தில் ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் தான் கடை அடைப்பு நடைபெறுகிறது. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

-மாயவரம் அமீன்

ஞாயிறு, 29 மார்ச், 2009

திமுகவுடன் தொகுதி உடன்பாடு மனிதநேய மக்கள் கட்சியின் நிலை என்ன?

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு முதல் கட்ட தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மனித நேயக் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக திமுக அறிவித்துள்ளது. தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் வெளியூரிலும், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளிநாட்டிலும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வெளியேயும் இருக்கின்றார்கள். நிர்வாகிகள் அனைவரும் திங்கட்கிழமை சென்னை திரும்புகிறார்கள். திங்கட்கிழமை கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடைபெறலாம் எனத் தெரிகிறது.


27.03.09 காலையில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பி. அப்துஸ் சமது ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரசாமி. துரை முருகன். பொன் முடி ஆகியோருடன் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். அன்று மாலை கோபாலபுரத்தில் கலைஞருடன் மனிதநேய மக்கள் கட்சியின் குழு சந்தித்து பேசியது. அப்போது இறுதியாக மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. திமுக தரப்பில் ஒரு தொகுதி மட்டும் தான் என்ற நிலையில் உறுதியாக நின்றது.


28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி தொண்டர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

சமுதாயத்தின் தன்மானம் முக்கியம் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே ஒரு தொகுதியை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.


இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும் என நம்புகிறோம்.


தலைமை நிர்வாக குழு
மனிதநேய மக்கள் கட்சி



thanks to : tmmk.in