சனி, 31 ஜூலை, 2010

மேலும் ஒரு போலி என்கவுன்டர் வழக்கில் சிக்குகிறார் குஜராத் டிஐஜி வன்ஸாரா

அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டிஐஜி டிஜி வன்ஸாரா, இன்னொரு போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளியான வன்ஸாரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் டிஐஜி பதவியிலிருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு போலி என்கவுன்டர் வழக்கில் அவர்சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

வன்ஸாரா அகமதாபாத் நகர குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையராக இருந்தபோது 2003ம் ஆண்டு சாதிக் ஜமால் மேத்தர் என்பவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்டர் என தற்போது சலசலப்பு எழுந்துள்ளது.

பவநகரைச் சேர்ந்த சாதிக், 2003ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அகமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள காலக்ஸி சினிமா தியேட்டருக்கு அருகே குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது இதுகுறித்து பேட்டி அளித்த வன்ஸாரா, சாதிக் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி. முதல்வர் நரேந்திர மோடி மற்றும் விஎச்பி தலைவர் பிரவீன் டொகாடியா ஆகியோரைக் கொல்ல திட்டமிட்டிருந்தார். இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன் அவரைப் பிடிக்க போலீஸார் விரைந்தபோது தாக்க முயன்றார். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்தார் என்று கூறியிருந்தார்.

பின்னர் சாதிக்கின் கூட்டாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்று கூறி இந்த வழக்கை மூடி விட்டனர்.

இந்த நிலையில் தனது சகோதரரை போலி என்கவுன்டர் மூலம் கொன்று விட்டதாக கூறி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது நீதிபதி அகில் குரேஷி முன்னிலையில் இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக மீடியாக்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரின் சார்பில் அவரது வக்கீல் வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. ஆகஸ்ட் 6ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கையும் சிபிஐக்கு விட குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் வன்ஸாரா வசமாக சிக்குவார் என கூறப்படுகிறது.

சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கு: குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற சிபிஐ கோரிக்கை

அகமதாபாத்,ஜுலை30:சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கை குஜராத்தை விட்டு வேறு எங்காவது மாற்ற வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கில் அதிரடியாக செயல்பட்டு வரும் சிபிஐ இதுவரை இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சிபிஐ இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுவதாவது;
குஜராத்திலிருந்து முதலில் இந்த வழக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். குஜராத்தில் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தால் நியாயமான முறையில் பாரபட்சமின்றி நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

அதேபோல போலியான என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்ட, சொராஹ்ப்தீன் படுகொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கையும் நாங்கள் விரிவாக விசாரிக்கவுள்ளோம்.

சொராஹ்ப்தீனைக் கொன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அமீத் ஷா உள்ளிட்ட அரசியல்வாதிகள் உத்தரவிட்டது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம்.அரசியல் தொடர்புகளை அறிய முயன்று வருகிறோம்.

சொராஹ்ப்தீனை போலீஸார் போலியான என்கவுண்டர் மூலம் கொலைசெய்வதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் போலியான என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

சொராஹ்ப்தீனும்,அவரது மனைவி கெளசர்பீயும் பயணம் செய்த பஸ்சிலிருந்து இருவரையும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கடத்திச் சென்றதை நேரில் பார்த்தவர் இவர். இந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி சொராஹ்ப்தீனையும், அவரது மனைவி கெளசரை 29ம் தேதியும் குஜராத் போலீஸார் கொன்றனர். நரேந்திர மோடியைக் கொல்ல இவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக போலீஸார் அப்போது கூறினர். ஆனால் குஜராத் அரசின் சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் இது உண்மை அல்ல என்று தெரியவந்தது.

சொராஹ்ப்தீன் கடத்தப்பட்டது, கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவரான பிரஜாபதி 2006ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி சோராபுதீன் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சிபஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சொராஹ்ப்தீனைக் கொலை செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி வன்சரா கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அமீத் ஷா கைது செய்யப்பட்டார். அதேபோல கெளசர்பீயை அடைத்து வைத்திருந்த பண்ணை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 6 மாத கால அவகாசம் தரப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3 மாத கால நீட்டிப்பு கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இன்று இதுதொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்கிறது.

ஐக்கிய ஆஃப்ரிக்காவை கட்டியெழுப்பும் கனவு உயிரோட்டத்துடனேயே இருக்கிறது- கடாஃபி

கம்பாலா,ஜுலை30:ஐக்கிய ஆஃப்ரிக்கா ஒன்றைக் கட்டியெழுப்ப தம்மால் முடியுமெனத் தெரிவித்துள்ள லிபியத் தலைவர் மு அம்மர் கடாஃபி இதற்கான தனது கனவு தற்போதும் விழிப்புடனேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆஃப்ரிக்க ஐக்கிய அரசு ஒன்றை நிறுவுவதற்கு பல வருடங்களாகக் குரல் கொடுத்துவரும் கடாஃபி மேற்குலக தலையீடின்றி ஆஃப்ரிக்காவைக் கட்டியெழுப்புவதற்கு இதுமட்டுமே வழியென கூறிவருகின்றார்.

ஆனால் கடாஃபியின் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கும் பல ஆஃப்ரிக்க நாடுகள் இது தங்கள் நாட்டின் இறையாண்மையை அபகரிக்கும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளன.

முன்னர் நடைபெற்ற மாநாடுகளைப் போன்று இவ்வாரம் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற ஆஃப்ரிக்க உச்சிமாநாட்டிலும் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உச்சி மாநாட்டின் முடிவில் கம்பாலாவில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த கடாபி; "ஆஃப்ரிக்கா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். எனினும் ஐக்கிய அமெரிக்காவைப் போன்ற ஒரு அரசாக இது ஒருநாள் உருவாகும். ஆஃப்ரிக்க அதிகாரசபை ஒன்றை அமைப்பது தொடர்பாக நாம்நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அத்துடன் ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான திசையில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் தீர்த்து வருவதுடன் ஆஃப்ரிக்க அரசு ஒன்றை நிறுவும் முயற்சிகளை நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "ஆஃப்ரிக்க அரசு ஒன்றை அமைப்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. நிபுணர்கள் இதுகுறித்து ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர். அடுத்த உச்சிமாநாடு அல்லது அதற்குப் பின்னர் இப்பணிகள் நிறைவடைம் என எதிர்பார்க்கப்படுகிறது." எனக் கடாஃபி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்தவொரு ஆஃப்ரிக்க அமைப்பிடமும் இறையாண்மையை விட்டுக்கொடுப்பதை தம்மால் எதிர்பார்க்க முடியாதென ஆஃப்ரிக்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராய்ட்டர்ஸ்

நஷ்டஈடு வழங்க 30 பில்லியன் டாலர் சொத்துக்களை விற்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்!

லண்டன்,ஜுலை31:அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் கிணற்றின் வாய்பகுதியில் கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன.அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந்நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார்.

மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

வியட்நாமின் உள்ள நாம் கான் சோன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள தனது முதலீடான சுமார் ரூ.5,000 கோடியைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதில் உள்ள தனது பங்குகளை வேறு நிறுவனத்திடம் விற்க எச்எஸ்பிசி வங்கியின் உதவியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாடியுள்ளது.

இதை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, பெட்ரோ வியட்நாம், மலேசியாவின் பெட்ரோனாஸ், தாய்லாந்தின் பிடிடிஇபி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.

மேலும் அபாச்சி கார்பரேசன் நிறுவனத்தில் உள்ள தனது ரூ. 35,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் பிரிட்டிஷ் பெட்ராலியம் விற்கிறது.

அதே போல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றில் உள்ள தனது ஆயிரக்கணக்கான பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இதை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் ஆயில் நிறுவனமும் முயன்று வருகின்றன. ரிலையன்ஸ் சுமார் ரூ.2,000 கோடிக்கு இதை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரூ2,500 கோடி தர முன் வந்துள்ளது.

அதே போல வெனிசுவேலாவில் இரு எண்ணெய் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை ரஷ்யாவின் டிஎன்கே நிறுவனத்திடம் விற்கவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பேச்சு நடத்தி வருகிறது.

மேலும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மாபெரும் புருதோயி பே எணணெய் கிணறுகள், அர்ஜென்டினாவில் உள்ள பான் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனம், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்தில் உள்ள முதலீடுகளையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் விற்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே இதுவரை சுமார் ரூ.1,300 கோடியளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்கிவிட்டது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ரூ. 300 கோடியை நஷ்டஈடாகத் தரப் போவதாகவும் அறிவித்துள்ளது.

நஷ்டஈடுகள், கசிவால் ஏற்பட்ட நஷ்டம், எண்ணெய்க் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,60,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை சமாளிக்கவே உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தனது 30 பில்லியன் டாலர் அதாவது ரூ.1,50,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை இந்த நிறுவனம் வி்ற்கவுள்ளது.

இதற்கிடையே எண்ணெய் கசிவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கசிவு ஏற்பட்ட எண்ணெய் கிணறை நிரந்தரமாகவே மூடிவிடவும் முடிவு செய்துள்ளது.

இந்த எண்ணெய் கசிவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக பெட்ரோலிய வரலாற்றிலேயே மாபெரும் நஷ்டத்தை உருவாக்கிய இந்தக் கசிவு,பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தலைவர் டோனி ஹேவர்டின் பதவியையும் காவு வாங்கிவிட்டது. அவருக்குப் பதிலாக பாப் டட்லியை அந்த நிறுவனம் புதிய தலைவராக நியமித்துள்ளது.

வியாழன், 29 ஜூலை, 2010

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க திட்டம்

புதுடெல்லி,ஜுலை29:முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க அரசு தீவிரமாக கருதி உள்ளது என சிறுபான்மை நல வாரியத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

"நாங்கள் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். காங்கிரஸ் அதன் செயல் திட்டத்தில் இதை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. நான் இதற்காக தொடர்ந்து வலயுறுத்தி வருகிறேன். காங்கிரசின் தலைமை இதை செயல்படுத்தும் அதில் சிறிதளவேனும் சந்தேகம் இல்லை." இவ்வாறு PTI க்கு கொடுத்த ஒரு பேட்டியல் அவர் கூறினார்.

காங்கிரஸ் அரசு ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கையின் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டுப் பரிந்துரையை செயல்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்; "ரங்கநாத மிஸ்ரா கமிசன் அறிக்கை சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் பார்லிமென்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு 10 சதவிகிதமும் பிற பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
மேலும் இந்த கமிசன் சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளது.

மண்டல் கமிசன் அறிக்கையில் கூறியுள்ளவாறு பிற்ப்ப்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 8.4 சதவிகிதம் சிறுபான்மையினர் விரிவாக்கத்திற்காக உள்ளது. ஓபிசி பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள மொத்த 27 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் 8.4 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதில் 6 சதவிகிதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்காக கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா கமிசன் 15 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் 27 சதவிகிதம் ஓபிசி யிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இதில் இரண்டாவதாக உள்ளதை நாங்கள் தேர்வு செய்துள்ளோம் இது ரங்கநாத மிஸ்ரா கமிசன் அறிக்கையில் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது." என்றார். மேலும் தான் தனிப்பட்ட முறையில் இதில் ஈடுபாட்டோடு செயல்படுவதாகும் அவர் கூறினார்

கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அதன் பங்கீடு மற்றும் வரையறுப்பது சம்பந்தமாக சில விசயங்களை காங்கிரஸ் தெரிந்துள்ளது.

தமிழ்நாடு 3.5 சதவிகிதம் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகிதத்தில் இருந்து வழங்கி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி புரியும் ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி இருந்தது பின்னர் இது உச்சநீதி மன்றத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

ஈரானில் குழந்தைகளுக்கு 18 வயது வரை ஊக்குவிப்புத் தொகை வழங்க முடிவு

டெஹ்ரான்,ஜுலை29:தனது நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக இனிமேல் பிறக்கவுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் 18 வயதுவரை குறிப்பிட்டதொரு ஊக்குவிப்பு தொகையை வழங்கும் திட்டத்தை ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் நேற்று தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தின் கீழ் இனிமேல் பிறக்கவுள்ள ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் வங்கிக்கணக்கொன்றை ஆரம்பித்து அப்பிள்ளையின் 18 வயது வரை பணம் டெபாசிட் செய்யப்படும். ஆரம்ப தொகையாக 950 அமெரிக்க டாலர்களும் பின்னர் வருடந்தோரும் 95 அமெரிக்க டாலர்களும் டெபாசிட் செய்யப்படும் எனவும் அஹமதி நிஜாத் தெரிவித்தார்.

மேலும் இச்சட்டத்தின்படி அப்பிள்ளை தனது 20 வது வயதில் வங்கி கணக்கிலுள்ள பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் தற்போதைய மக்கள் தொகை 75 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது

போஸ்னியா 'ஸ்ரெப்ரெனிக்கா' இனப்படுகொலை: 15 வது வருட நினைவு தினம்

போஸ்னியா ஸ்ரெப்ரெனிக்கா முஸ்லிம்கள் இனப்படுகொலை நடந்து
15 வருடம் முடிந்ததையடுத்து போஸ்னியாவில் கடந்த ஜூலை 15 அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை போஸ்னியா முஸ்லிம்கள் இனப்படுகொலையாகும்.

ஏறத்தாழ 8000 போஸ்னிய முஸ்லிம்கள் செர்பியர்களால் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்ரெப்ரெனிக்காவிலிருந்து 6 கி.மீ அருகில் உள்ள போடோகேரி என்ற கிராமத்தில் நடைப்பெற்ற நினைவு தின நிகழ்சிகளில் 60,000 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 775 பேரின் உடல்கள், இதற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட 3,749 பேரின் உடல்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஆதரவாளர்கள் அடக்கஸ்தலத்தில் குழுமி இறந்தவர்களுக்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.

ஐக்கிய நாடுகளின் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த முஸ்லிம்கள் பகுதிகளில் செர்பிய இராணுவத்தினர் நுழைந்து இந்த இனப்படுகொலையை நடத்தினர்.

நகர்புற முஸ்லிம் ஆண்களும்,சிறுவர்களும் மலைப்பகுதிகளில் தப்பி ஓடி ஒழிந்தனர். ஆனாலும், அவர்களை செர்பிய இராணுவத்தினர் தேடிக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர். இறந்தவர்களின் உடல்களை பெரிய குழிகளில் போட்டு ஒன்றாக புதைத்தனர். இந்த மிகப் பெரிய படுகொலையை மூடி மறைக்கும் முயற்சியாக கூட்டாக புதைக்கப்பட்ட உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட வெவ்வேறான இடங்களில் புதைத்தனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டு
இந்தக் கூட்டுப் படுகொலையை ஐக்கிய நாடுகளின் போர்கால
குற்ற நீதிமன்றமும் உலக நீதிமன்றமும் இனப்படுகொலை என முடிவு செய்துள்ளது. யுகோஸ்லாவியாவின் இருண்ட நாட்களாக இந்நிகழ்வு நினைவு கூறப்படுகிறது.

இந்த இனப்படுகொலை சம்பவத்தில் இழந்த இரண்டு தலைமுறை ஆண்கள் மற்றும் சிறுவர்களை இழந்து தவிக்கும் சோகத்திலிருந்து மீள கஷ்டப்படும் போராடும் மக்களது ஒரு உணர்ச்சிப் பூர்வமான நிகழ்ச்சியாக இருந்தது ஞயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரெப்ரெனிக்கா நினைவு நிகழ்ச்சி.

கதீஜா மேச்டோவிக் என்ற 68 வயது நிறைந்த பெண்மணி, தன் கணவன் மற்றும் இரண்டு மகன்களின் உடல்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடக்கம் செய்தார். "அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். இவ்வளவு கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்று என் நம்பிக்கையும் இறந்து விட்டது." என அவர் கூறினார்.

மேலும் "என்னுடைய மகன்கள் மட்டும் கொல்லப்படவில்லை , இதைப் போல் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த பகுதியில் முஸ்லிம்களே வாழ கூடாது அல்லது இல்லாமல் ஆக்கவேண்டும் என்பதை உறுதி படுத்துவதாக இருந்தது. என்னைப் போன்ற ஒரு நிலை உலகில் வேறு எந்த தாய்க்கும் நிகழக் கூடாது என பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட இறந்தவர்களில் 6500 பேர்களின் உடல்கள் கண்டறியப் பட்டுள்ளது, இருந்தாலும் கண்டுபிடிக்கப்படாத நபர்களின் உடல்களின் உறவினர்களோ, நகரை சுற்றியுள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் மேலும் உடல்கள் கிடைக்கலாம் என நம்புகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் செர்பியாவின் பிரதமர் போரிஸ் டாடிக் கலந்து கொண்ட முக்கியமான் நபர்களில் முதல் நபராக இருந்தார்.

நட்புணர்வு மற்றும் அமைதியை உண்டாக்கும் விதமாக இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

மேலும் டாடிக் கூறும்போது; "இதில் பங்கு கொள்வதன் மூலம் நாட்டு மக்களிடையே நட்புணர்விக்கான பாலத்தை உருவாக முடியும்" என தான் நம்புவதாக அவர் கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் செர்பியாவின் பிரதமரை பேச விடாமல் வழி மறித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜிமாளுடீன் லாடிக் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் அல்-ஜசீராவிடம் கூறுகையில் "போஸ்னியாவில் இனப்படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லாத செர்பியத் தலைவர்கள் இருக்கும் நிலையில் டாடிக் உளப் பூர்வமாக இணக்கம் ஏற்ப்படுத்த விரும்புகிறார்" என கூறினார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டு மறுப்பு
செர்பிய தேசியவாத அரசியல் தலைவர்களால் வழி நடத்தப்படும் செர்பியா,இந்த இனப்படுகொலை கொடூரத்தின் அளவினை பல வ்ருடங்களாக மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை சம்பவம் மிகைப்படுத்திக் காட்டப்படுவது தங்கள் நாட்டிற்கு எதிராக உலக நாடுகள் செய்யும் அரசியல் சதி என்று நம்புகின்றனர்.

ஆனால் மார்ச் மாதம் செர்பிய நாடாளுமன்றம் இந்த இனப்படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இறந்தவர்கள் மற்றும் அவர்களும் குடும்பதினர்களிடம் மன்னிப்பு கேட்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஜெனரல் ராட்கோ மலாடிக் இந்த இனப்படுகொலைக்கு சூத்திரதாரியகவும்,முக்கியமான காரணகர்தாவாகவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளான். இவன் இன்னும் செர்பியாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக நம்பபடுகிறது. செர்பிய மக்கள் இவனை ஒரு ஹீரோ போன்று காண்கின்றனர்.

மற்றொரு குற்றவாளியான ராடோவன் கராட்சிட் 2008ம் ஆண்டு பெல்கிராத் என்ற இடத்தில கைது செய்யப்பட்டான். தற்போது இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றம் ஆகிய வழக்குகளில் குற்றம் சாடடப்பட்டு இண்டர்நேஷனல் கிரிமினல் ட்ரிபியூனல் ஃபார் தி ஃபார்மர் யுகோஸ்லாவிய (ICTY ) நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருகிறான். அவன் தோற்றுவித்த அரசியல் கட்சியான செர்பிய டெமோக்ரடிக் பார்ட்டி அவனை கவுரவிக்கும் விதமாக பதக்கம் கொடுக்க முடிவு செய்துள்ளது.

மேலும் அக்கட்சி கடந்த கால நிகழ்சிகளுக்காக பற்றி தான் வெட்கப் படவில்லை என்றும் கூறுகிறது.

இந்த இனப்படுகொலையை அனுமதித்தற்காக ஐக்கிய நாடுகளின் அமைதிக் காப்பாளர்கள், பெரிய அளவில் தீவிரமான கண்டனத்திற்கு உள்ளானர்.

டச்சுப் படைகள் 'ஸ்ரெப்ரெனிக்கா' முஸ்லிம்கள் பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது ஆனால் அதற்கான தயாரிப்புகள் இயந்திரங்கள் மற்றும் எந்த விதமான கட்டளைகளும் இல்லை.

போஸ்னிய முஸ்லிம்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று செர்பிய இராணுவ வீரர்கள் உறுதி அளித்த பின்புதான் போஸ்னிய முஸ்லிம் ஆண்களையும் சிறுவர்களையும் அழைத்துச் செல்ல அனுமதித்ததாக டச்சுப் படைகள் தெரிவித்துள்ளது.

source:Aljazeera

புதன், 28 ஜூலை, 2010

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும்

ஏர்வாடிகாவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்
ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.
அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.
12.07.2010 அன்று வழக்கம் போல்
கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்த
பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனை
சரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.
பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்ற
கண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.
13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்
அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்
கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரை
கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த
சமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடி
மறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்
துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்
மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.
-களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ்

அமெரிக்காவின் இரகசிய உளவுத்தகவல்கள் இணையத்தில் வெளியிட்ட விக்கி லீக்ஸ்

ஜுலை28:ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமெரிக்க உளவுப்படையினரால் ரகசியமாக சேகரிக்கப்பட்ட போர் தகவல்கள் மற்றும் உளவுத் தகவல்கள் அடங்கிய பெரும் தொகையான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கி லீக்ஸ் எனும் இணையத்தளம்.

விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் சுமார் 92ஆயிரம் ஆவணங்களை The New York Times, The Guardian, Der Spiegel என்ற பிரபல பத்திரிகைகளுக்கு வழங்கியது.

அவை குறிப்பிட்ட ஆவணங்களை அலசி அதில் முக்கியமான தகவல்களை தொகுத்து முதலில் வெளியிட்டன.அதேவேளை விக்கிலீக்ஸ் இணையதளத்திலும் அனைத்து ஆவனங்களும் வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்களால் உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட விபரங்கள் எதுவும் உண்மையில்லை என பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை குலைக்கும் ஒரு சதியாக இந்த ஆவணக் கசிவுகள் இருக்கலாம் என பாகிஸ்தானின் அதிபரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் ராய்டர் செய்தியாளர்கள் இருவரை பொதுமக்களுடன் சேர்த்து விமானத்தாக்குதல் மூலம் அமெரிக்க படைகள் சுட்டுக்கொல்வதாக கூறப்படும் படங்களும் இருக்கின்றன.

இருக்கும் ஆவணங்களை பகுதிபகுதியாக வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

லண்டன்,ஜுலை27:22 வயது மதிக்கத்தக்க இரண்டு முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் முகத்திரை அணிந்த காரணத்திற்காக பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணை செய்வதாக லண்டன் பேருந்து நிறுவனமான மெட்ரோலைன் கூறியுள்ளது.

இரண்டு மாணவிகளில் யாஸ்மின் என்ற மாணவி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும்,மற்றொருவர் அதூஃபா கண்கள் மட்டும் தெரியும்படி முகத்திரை அணிந்திருந்தனர்.

அவ்விரு மாணவிகளும் பேருந்தில் ஏற முற்படும்போது அப்பேருந்தின் ஓட்டுநர், "நான் உங்களை பேருந்தில் ஏற்ற முடியாது, நீங்கள் இருவரும் அச்சுறுத்தும்படி இருக்கிறீர்கள்" என்று கூறி பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்.

"நாங்கள் இந்த விவகாரத்தை அக்கறையுடன் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்களின் நிறுவன ஊழியர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஏனெனில் நாங்கள் சமத்துவம், வேற்றுமை எல்லோருக்கும் உண்டு என்பதை மதித்து உறுதி செய்திருக்கிறோம்." என்று மெட்ரோலைன் கூறியிருக்கிறது.

"இதுகுறித்து மூன்று ஓட்டுநர்களை விசாரித்து வருகிறோம், எங்கள் நிறுவன ஓட்டுநர் அனுமதி மறுத்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தனிநபர் வழக்கிற்காக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

9/11 நினைவு தினத்தில் திருக்குர்ஆனை எரிக்க திட்டமிட்டுள்ள அமெரிக்க தேவாலயம்

ஃப்ளோரிடா,ஜூலை27:"நோ ஹோமோ மேயர்" என்ற போராட்டத்தை நடத்திய ஃப்ளோரிடா மேற்கு போரோ பாபிஸ்ட் தேவாலயம், தற்போது 'சர்வதேச குர்ஆன் எரிப்பு தினம்’ (நவூதுபில்லாஹ்) என்ற பெயரில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 9ம் ஆண்டை அனுசரிக்க திட்டமிட்டுள்ளது.

அத்தேவாலய பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறுகையில் "இஸ்லாம் மதம் தீங்கானது, வன்முறைகளை தூண்டும் கொடுங்கோன்மையுடையது, எனினும் தன்னை அமைதியான மதம் என்ற முகமூடியுடன்,சமுதாயத்திற்கு தவறான வழியை காட்டுகிறது" என்று கூறினார்.

தேவாலய மைதானத்தில் இஸ்லாம் மதம் பிசாசுகளால் ஆனது என்றும் சர்ச்சைக்குறிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

"நியூயார்க் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும், இஸ்லாத்தின் தீங்கை எதிர்க்கும் விதத்திலும்,இஸ்லாமிய சமயத்தின் புனித குர்ஆனை 9/11 அன்று மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை எரிக்க திட்டமிட்டுள்ளோம்." என்றும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாதிரியார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;"இப்போதுள்ள சூழலில் இஸ்லாத்தின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமாக உள்ளது,அதனாலயே நாங்கள் இத்திட்டத்தை வெளியிட்டோம்" என்பதாகத் தெரிவித்தார்.

"இஸ்லாம் ஒரு வன்முறையான, கொடுமையான மதம், பைபிளில் உள்ள உண்மைக்கு முன் அதனால் எதுவும் செய்ய முடியாது! இயேசுவே ஒரே வழி என்ற செய்தியை இதன் மூலம் நாங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.

இதற்காக ஃபேஸ்புக்கில் ஒரு குழுமம் அமைக்கப்பட்டு பலரும் ஆதரித்த வண்ணம் இயங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

முன்னதாக இதே ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்ட "எல்லோரும் முஹம்மதை வரைவோம்." என்ற திட்டம் உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பை சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி

புதுடெல்லி,ஜூலை28:மத்திய புதிய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி(63) நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் நவீன் சாவ்லா, வியாழக்கிழமையுடன் (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதனால் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷியை தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி உயர்த்தி நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.

இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. குரேஷி தலைமை தேர்தல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார்.

1971-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற குரேஷி, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2006-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நம்பிக்கைக்கு வலுசேர்ப்பேன்
தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கூறிய குரேஷி, "முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதை நான் கெüரவமாக நினைக்கிறேன். நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் எனது செயல்பாடு அமையும்" என்றார்.

கேரள முதலமைச்சரின் அறிக்கை ஒருதலைபட்சமானது: எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி

கோட்டயம்,ஜுலை27:கேரளாவில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் அச்சுதானந்தன் பேசும்போது, 20 ௦ஆண்டுகளுக்குள் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அர்த்தமற்ற பேச்சுக்கு மாநிலம் மட்டுமின்றி நாடுமுழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுகுறித்து கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உம்மன்சாண்டி கூறும்போது; "குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாத நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இப்படி பொறுப்பற்ற கருத்துக்களை,மாநிலத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறுவது தகுதியானதல்ல.

மேலும் ஒட்டு மொத்த நாடும் ஒரே அணியாக இணைந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் நேரத்தில் முதலமைச்சரின் அறிக்கை,மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது." என்றார்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் குறித்த இராணுவ இரகசியங்கள் கடந்த திங்கள் கிழமையன்று பெரும் அளவில் வெளியிடப்பட்டது.

அமெரிக்க இராணுவ வரலாற்றில் வெளியான கசிவுகளிலேயே மிகப்பெரிய இராணுவ இரகசியக் கசிவாகக் கருதப்படும் இந்த இரகசியங்களை விக்கிலீக்ஸ் என்ற அமைப்பு தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், பிரிட்டன் நாளிதழான கார்டியன் மற்றும் ஜெர்மனிய வார இதழான டெர் ஸ்பீஜெல் ஆகியவை தங்களுடைய இணையதளத்திலும் இவற்றை வெளியிட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சந்தித்து வரும் அடுக்கடுக்கான தோல்விகளை இந்த இரகசிய ஆவணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

320 பிரிட்டனர் வீரர்களையும் ஆயிரத்துக்கும் அதிமான அமெரிக்க வீரர்களையும் பலி வாங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மீதான போர் குறித்த சுமார் 90 ஆயிரம் நிகழ்வுகளுக்கான பதிவுகள், ஆய்வறிக்கைகள் இந்த இரகசியத் தகவல்களில் அடங்கியுள்ளன.

திங்களன்று கசிந்த இரகசியங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் வருமாறு:

தாலிபான் தலைவர்களை எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கருப்புப் படை எவ்வாறு இயங்கும் விதம்.

தாலிபான்கள் வசம் உள்ள தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணையை அமெரிக்கா எதிர்கொள்ளும் விதம்.

தாலிபான் நிலைகள் மீது மிகவும் ஆபத்தான ரீப்பர் என்ற ஆயுதங்களை அமெரிக்காவும் கூட்டுப் படையினரும் அதிக அளவில் பயன்படுத்தும் விவரம்.

அமெரிக்க நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்கள். இத்தகைய சுமார் 144 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. சிலவேளைகளில் இச்செயலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுவரை ஊடகங்களில் வெளிவராத படையினரின் துப்பாக்கிச் சூடுகள், தற்கொலைத் தாக்குதல்கள்.

2008ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் முழுவதும் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது.

பேருந்து ஒன்றின் மீது அமெரிக்கப் படையினர் இயந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டு 15 பேரைக் கொலை செய்தது.

2007ஆம் ஆண்டு போலந்து நாட்டுப் படையினர் கிராமம் ஒன்றில் நடைபெற்ற திருமண வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, கர்ப்பினிப் பெண் உள்ளிட்டோரை கொலை செய்ததும் அதற்கு கிராமத்தினர் பதில் அடி கொடுத்ததும் என இதுபோன்று ஏராளமான தகவல்களையும் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெற்ற இடங்களையும் ரகசியத் தகவல்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. "இராணுவ இரகசியங்களை வெளியிட்டமைக்கு நாங்கள் கடுமையான கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வெளியிட்டமை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆவணங்கள் குறித்த தகவல்களைக் கேட்க விக்கிலீக்ஸ் அமைப்பு அமெரிக்க அரசைத் தொடர்பு கொள்ளவில்லை. இந்த தகவல்கள் அமெரிக்கர் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

காஸா மீதான தடை நீக்கக் கோரும் குழுவுடன் சேரும் இந்தியக் கப்பல்!

காஸா மீதான இஸ்ரேலின் தடைகளை நீக்க வலியுறுத்தி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டுக் குழுவுடன் இந்தியக் கப்பல் ஒன்றும் இணைகிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் விதித்துள்ள சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று உலக நாடுகள் முழுவதும் பரவலாக எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் "விடுதலை அணிக்கப்பல்" என்ற பெயரில் உணவு மருந்தும் மருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு காஸாவை நோக்கி கப்பல் ஒன்று சென்றது. இதில் சென்ற ஊழியர்கள் 9 பேரை இஸ்ரேல் தாக்கிக் கொலை செய்தது.

இந்நிலையில் காஸா மீதான தடைகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய புத்தகமான “The Audacity of Hope” (உறுதியான நம்பிக்கை) என்ற பெயரில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள கடல் மார்க்கத் தடைகளை தகர்க்கும் விதமாக ஐரோப்பா, கனடா, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் காஸா கடற்கரையைச் சென்றடைய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் இந்த முயற்சிக்கு ஆதரவு பெருகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையிலிருந்து புறப்பட்ட சவுதி விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை,ஜுலை27 :சென்னையில் இருந்து சவுதியின் ஜித்தா செல்ல இருந்த சவுதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் டேக்-ஆப் செய்வதை விமானி தவிர்த்துவிட்டதால் விபத்திலிருந்து தப்பியது.180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு சவுதி ஏர்வேஸ் எஸ்.சி-769 விமானம் இன்று காலை புறப்படத் தயாரானது.அதி்ல் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.

விமானம் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டு புகை பரவியது.இதைக் கண்ட விமானி உடனடியாக விமானம் டேக்-ஆப் ஆவதைத் தவிர்த்துவிட்டு ரன்வேயிலேயே நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் அவசர.அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் சோதனையிடப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்ட பின் 3 மணி நேரம் தாமதமாக மீண்டும் கிளம்பிச் சென்றது.

ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் வழக்கு: அப்ரூவராகும் போலீஸ் அதிகாரி, அமீத்ஷாவுக்கு வாதாடும் ராம்ஜெத்மலானி

அகமதாபாத்,ஜூலை27:ஷொராஹ்ப்தீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி என்.கே.அமீன், அரசு தரப்பு சாட்சியாக உள்ளார்.

இது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போலி என்கெளண்டர் வழக்கில் கைதாகியுள்ளவர் அகமதாபாத் முன்னாள் துணை காவல் துறை கண்காணிப்பாளர் என்.கே.அமீன். கடந்த 2007-ல் கைது செய்யப்பட்ட அமீன், இப்போது அமித் ஷா அடைக்கப்பட்டுள்ள சபர்மதி சிறையில்தான் உள்ளார். இந்நிலையில் அவர் அப்ரூவராக இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் அகமதாபாத்தில் நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.

இது தொடர்பாக கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அப்போது பாதுகாப்பு கருதி அமீனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர். அவருக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் மனு ஆகஸ்ட் 2-ல் விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே அமித் ஷாவை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி பெற்றுள்ளது. இதன்படி ஜூலை 28 மற்றும் 30-ம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் அமித் ஷா சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜராக இருக்கிறார்.

கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்

ஆழப்புழா:கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.
அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.

மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.

பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15க்கு பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு

பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அனைத்து விசாரணைகளும் வழக்குறைஞர்களின் விவாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு செப்டம்பர் 15க்கு பிறகு எந்த தேதியிலும் வழங்கப்படலாம் என்ற அறிவிப்புடன் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவில் 1960 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. 1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதிற்குள் சில பயங்கரவாதிகள் புகுந்து ராமர் லட்சுமணர் சீதை மற்றும் அனுமாரின் சிலைகளை வைத்து விட்டனர். அப்போது அந்த மாவட்ட ஆட்சியர் பாபரி மஸ்ஜிதை பூட்டுவதற்கு உத்தரவிட்டார். இரண்டு பூஜாரிகள் மட்டும் பள்ளிவாசலுக்குள் சென்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டடிருக்கும் சிலைகளுக்கு பூஜை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு கீழ்நிலை நீதிமன்றங்களிலிருந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருந்தது. இச்சூழலில் 1986 பிப்ரவரி 2ம் நாள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் உமேசு சந்திர பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் பாபரி மஸ்ஜித் பூட்டை உடைத்து ராம பக்தர்கள் உள்ளே செல்வதற்கு மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் முனைந்தன. இறுதியில் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மஸ்ஜித் இருந்த இடம் கூகுள் வரைப்படம்


பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து லக்னோ பிரிவில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வழக்குறைஞர்களை நியமித்து நடத்தி வந்தது. வழக்கு நிதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ரூ7.5 லட்சம் வழங்கப்பட்டது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமுமுக ஆண்டு தோறும் போராட்டம் நடத்தி வந்தது. 2004 டிசம்பர் 6 அன்று டெல்லியில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம். ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அன்று மாலை பிரதமரை சந்தித்த தமுமுக குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

டிசம்பர் 6 2004ல் பாபரி மஸ்ஜித் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை வைத்த போது எடுத்த படம்

டிசம்பர் 6 2004ல் பாபரி மஸ்ஜித் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தமுமுக குழு கோரிக்கை வைத்த போது எடுத்த படம்

இதன் பிறகு அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால் மற்றும் தரம்வீர் சர்மா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தார்கள். சுன்னத்தி மத்திய வக்ப் வாரியம் எதிர் விசாரத் சர்மா என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜுலை 26 அன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நீடித்தது. நீதிபதிகள் விசாரணைக்கு சமர்பிக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டனர். இரு தரப்பு வழக்குறைஞர்களின் இறுதி வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இறுதியில் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் செப்டம்பர் 15க்கு பிறகு எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கில் ஹிந்துக்கள் சார்பாக 54 சாட்சிகளும் முஸ்லிம்கள் சார்பாக 33 சாட்சிகளும் நீதிமன்றம் முன்பு முன்னிலையாகி சாட்சியம் கூறினர். முஸ்லிம்கள் தரப்பு சாட்சிகளில் பெருமாபாலனவர்கள் இந்துக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்குறைஞர் ஜபர்யாப் ஜீலானி செய்தியாளர்களிடம் பேசிய போது: நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கின்றது. எங்கள் தரப்பு வாதம் மிக வலுவாக உள்ளது. பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கிடைக்க இறைவனிடம் நாமும் கையேந்துவோம்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்


இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூடஆம்புலன்ஸ் சேவைகளுக்கு
இடையூறு செய்யக் கூடாது என்
பது சர்வதேச விதியாகும்.
ஆனால், கற்ப்பிணிகளின்
வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தங்களது இருப்பை
வெளிகாட்டுவதற்காக சமீபகால
மாக, இந்து மாணவர்களுக்கு
கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
கடந்த ஜுலை 24 அன்று
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே
கோரிக்கைக்காக மாநில தலைவர்
பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது தமுமுகவின்
ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து
ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த
குடும்பத்தினரிடமிருந்து தொலை
பேசி அழைப்பு வந்திருக்கிறது.
ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்
என்றும், வேகமாக வருமாறு
அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்
தாஜுதீன் வேகமாக ஹனீபா
மருத்துவமனையை நோக்கி திருப்பினார்.
வரும் வழியில், பாஜகவினர்
ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்
டிருந்ததால், அவர் வண்டியை
மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.
அப்போது காவல்
துறையும் கூட்டத்தை
விலக்கி, ஆம்புலன்ஸ்
செல்ல வழி ஏற்படுத்
தியுள்ளனர். பாஜக
தலைவர் பொன். ராதா
கிருஷ்ணன் தனது
ª த £ண்ட ர் களிட ம்
ஆம்புலன்ஸுக்கு வழி
விடுமாறு அறிவித்திருக்கிறார்.
எந்த விதி மீறலும்
யாருக்கும் இடையூறு
இல்லாமலும் ஹனீபா
மருத்துவமனையை நோக்கி ஆம்பு
லன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.
மருத்துவமனை வாசலில் வண்
டியை நிறுத்திவிட்டு நோயாளி
யை பார்க்க டிரைவர் சென்று
விட்டார்.
அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட
பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,
ஆம்புலன்ஸை கட்டைகளால்
உடைத்து, டிரைவரை கொலை
வெறியுடன் தேடி உள்ளனர்.
டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்
டேங்கை உடைத்து, வண்டியை
துவம்சம் செய்ய, இதைப் பார்த்த
பொதுமக்கள் சப்தம் போட,
அதற்குள் ஓடிவந்த காவல்
துறையினர் பாஜகவினர் மீது
தடியடி நடத்தியதும், வன்முறை
கும்பல் ஓடத் தொடங்கியது.
அதற்குள் பாஜகவினர் தங்களின்
அயோக்கியத்தனத்தை மறைக்க,
ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்
விதமாக வந்தது என வதந்திகளை
பரப்பினர்.
ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முகாமிட்டு இருந்ததால், அவர்

தலைமையிலான போலிசார்
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.
போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை
போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.
தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்
பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மாவட்ட தலைவர் தாஜுதீன்,
ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,
யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்
சாலை மறியலில் தமுமுகவினர்
இறங்க, பிறகு வழக்கு தொடுத்து
விட்டு அடுத்தகட்டமாக போராட்
டம் நடத்தலாம் என முடிவு
செய்யப்பட்டது.
செய் தியறிந்து திருவாரூர்
மாவட்ட தமுமுகவினர் திருத்து
றைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.
திருத்துறைப் பூண்டி நகரெங்கும்
பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்
கொண்டிருந்தனர்.
இதே, ஆம்புலன்ஸை பலமுறை
பாஜகவினர் அவசரத்துக்கு பயன்
படுத்தியது திருத்துறைப் பூண்டி
மக்களுக்கு நன்கு தெரியும்.
அப்போது கூட ஒரு இந்து சமுதாய
குடும்பத்துக்குத்தான் உதவ அந்த
ஆம்புலன்ஸ் சென்றதும். திருத்து
றைப்பூண்டி மக்களால் மூலைக்கு
மூலை பேசப்பட்டது.
காவல்துறை பாஜகவினரை
பிடிக்க வேண்டும் என பொது
மக்கள் தரப்பிலிருந்தே அழுத்த
ங்களும அதிகரிக்க, அனைத்துக்
கட்சியினரும் இந்த அராஜகத்தை
கண்டித்து, தமுமுகவினருக்கு
ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
அடுத்த நாள் மமக துணைப்
பொதுச் செயலாளர் எம். தமிமுன்
அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு
வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.
குற்றவாளிகள் பிடிக்கப்படாத
தை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர்
அலுவலகம் நோக்கி கருப்புக்கொடி
ஊர்வலம் நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டது.
டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்
செயலாளர் ஹைதர் அலியிடமும்,
மற்ற அதிகாரிகள் மமக துணைப்
பொதுச்செயலாளர் எம். தமிமுன்
அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு
வரும் தினத்தில் கருப்புக் கொடி
ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,
ஜுலை 30க்குள் குற்றவாளிகளை
பிடிக்கிறோம் என்று கூறியதால்,
ஜுலை 31 அன்று கருப்புக் கொடி
ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈவு, இரக்கமற்ற பாஜக
வன்முறை கும்பலின் செயல்
பொதுமக்களையே கோபப்படுத்தி
யது எனில், தமுமுகவினரை
தமிழகமெங்கும் கொந்தளிக்க
வைத்துள்ளது.
தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறை
தனது கடமையை வாக்களித்தப்படி
செய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்
பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்
டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது
விழுந்த தாக்குதல், எங்களின் P நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

திங்கள், 26 ஜூலை, 2010

உண்மையில் யார் தீவிரவாதிகள்?

இசுலாமியர்கள் மத அடிப்படைவாதிகள் என்ற கருத்தை ஒரு குற்றசாட்டாக வைப்பது சங்பரிவார கூட்டங்களின் பொழுதுபோக்கு. உண்மையில் இசுலாமியர்கள் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை! எப்படியும் வாழலாம் என்ற இந்த கலி உலகத்தில் இப்படிதான் வாழவேண்டும் என்பது தான் இசுலாமியர்களின் அடிப்படை. மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை மத அடிப்படைவாதி என்று கூறி கொள்வதில் பெருமிதம் அடைகிறார்கள்.

பெரும்பாலான அச்சி மற்றும் சில காட்சி ஊடகங்களால் இசுலாமியர்கள் தீவிரவாதியாக சித்தரிக்கபட்டாலும், ஊடகங்களின் கண்மூடித்தனமான இந்த கருத்தை எதிர்கொள்ள முடியாமல் இசுலாமிய சமுதாயம் தினறிக்கொண்டு இருக்கும் அதே வேளையில் தமுமுக போன்ற மனிதாபிமானம் நிறைந்த இயக்கங்களால், குருதி (இரத்தம்) தானம், சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர் நேரங்களில் ராணுவத்தை விட முதலாய் வந்து நிவாரண உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை ஆகியவைகள் தன்னலம் பாராது செய்யபடுகிறது.

இப்படியாக சேவைகளின் மூலம் இந்து நடுநிலைவாதிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் நன் மதிப்பை பெறுவதுடன், உண்மையில் இசுலாமியர்கள் அனைவரும் ஊடகங்கள் சித்தரிப்பது போல தீவிரவாதிகள் அல்ல என உணர்த்துகிறது தமுமுக போன்ற இயக்கங்கள்.

கல்நெஞ்சம் கொண்ட குருமதி காவிக்கூட்டம் (சங்பரிவார கூட்டங்கள்) தமுமுக தன்னலம் பாராது செய்யும் தொண்டுகளை கண்டு விரக்தி அடைந்து, நேற்று தமுமுக-வின் அம்புலன்சுகளில் ஒன்றை திருத்துறைபூண்டியில் நாசப்படுத்தி இருக்கிறார்கள்!

உண்மையில் யார் தீவிரவாதிகள்? பொதுமக்கள் சேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கிட பல இசுலாமிய சகோதரர்கள் பணம் கொடுத்தார்களே, அவர்கள் தீவிரவாதிகளா? அதை அடித்து நொறுக்கியவர்கள் தீவிரவாதிகளா?

உயர் அமைச்சர் பதவில் அமர்ந்துள்ள தேச துரோகிகள், என்கவுன்ட்டர் என்ற பெயரில் குஜராத்திலும், காஷ்மீரிலும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பவர்கள் தீவிரவாதிகளா? செத்து மடிபவர்கள் தீவிரவாதிகளா?

thanks to :

மாலேகான் குண்டு வெடிப்பு: பெண் தீவிரவாதி ஜாமீன் மனு

மும்பை,ஜூலை.26:மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தீவிரவாதி பிரக்யா சிங் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் மீது மகாராஷ்டிரா திட்ட மிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின்(MCOCA) கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இதற்கு எதிரான பிரக்யா சிங்கின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம்,பிரக்யா சிங் மீது MCOCA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து போலீசார் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,கீழ்க்கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தததோடு, பிரக்யா சிங் மீது MCOCA சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் பிரக்யாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரது வழக்கறிஞர் சுசில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து நேற்று சுசில் கூறுகையில்,"பிரக்யாவின் ஜாமீன் மனு நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சல் மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு வருகிறது. இரண்டு வாரத்துக்கு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றத்தை கோருவேன்" என்றார்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

வீராங்கனைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்-பளு தூக்கும் அணி பயிற்சியாளர் நீக்கம்


டெல்லி: இந்திய பளு தூக்கும் அணிக்கான பயிற்சியாளர் ரமேஷ் மல்ஹோத்ரா, செக்ஸ் புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கெளசிக் செக்ஸ் புகாரில் சிக்கிய நிலையல் தற்போது பளுதூக்கும் அணியின் பயிற்சியாளரும் செக்ஸ் புகாரில் சிக்கியிருப்பதால் பரபரப்பு கூடியுள்ளது.

இந்திய பளு தூக்கும் சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரபல பளு தூக்கும் வீராங்கனையான மல்லேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மல்லேஸ்வரி.

ஜூனியர் பிரிவு வீராங்கனைகளுக்கு மல்ஹோத்ரா தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் கூறியிருந்தார் மல்லேஸ்வரி. கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த பயிற்சியாளருக்கான துரோணச்சாரியா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர் மல்ஹோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய பளு தூக்கும் சம்மேளன பொதுச் செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறுகையில், உடனடியாக மல்ஹோத்ரா நீக்கப்பட்டுள்ளார். பெங்களூர் சாய் மையத்தில் தற்போது பயிற்சியாளராக இருந்து வருகிறார் மல்ஹோத்ரா.

முன்னதாக மல்லேஸ்வரி கொடுத்த புகாரில், கடந்த பத்து வருடங்களாகவே ஜூனியர் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார் மல்ஹோத்ரா என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து துணைத் தலைவர் கும்பாசி சுப்ரமணியா, பயிற்சியாளர் பால் சிங் சந்து, இணைச் செயலாளர் மதன் லால் சால்வி தலைமையிலான குழு விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை கொடுக்கவுள்ளதாம்.

மல்லேஸ்வரி தற்போது இந்திய பளு தூக்கும் சம்மேளனத் துணைத் தலைவராக இருக்கிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடூரன்!படுபாவி!இவனை என்ன செய்யலாம்!

நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது: கைதான மந்திரவாதி வாக்குமூலம்
ராமநாதபுரம், ஜூலை. 25-மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவரது மனைவி பெயர் சிரின் பாத்திமா. இவர்களுக்கு காதர் யூசுப் என்று 1 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுஸ்பாட்சா விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் கணவனை இழந்து மனநிம்மதி இன்றி தவித்து வந்த சிரின் பாத்திமா ஆறுதலுக்காக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவுக்கு குழந்தையுடன் வந்து தங்கி இருந்தார்.

அந்த தர்காவில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திரவாதி தனது இரண்டாவது மனைவி ரமலாபீவியுடன் தங்கி இருந்தார். அப்போது சிரின் பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரது கதையை தெரிந்து கொண்டு ஆறுதல் கூறுவதுபோல் நடித்தார்.

காதர் யூசுப்பை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென இந்த குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்து விட்டால் தனது மந்திர சக்தி அதிகரிக்கும் என்று நம்பினான்.

எனவே காதர் யூசுப்பை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தான். தர்காவில் அனைவரும் அசந்து தூங்கி கொண்டிருக்கும்போது அப்துல்கபூரும், ரமலா பீவியும் சேர்ந்து குழந்தை காதர் யூசுப்பை நைசாக கடத்தி சென்று விட்டனர். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்த சிரின் பாத்திமா தனது குழந்தை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னுடன் பழகிய காயல் பட்டிணம் அப்துல் கபூர், அவரது மனைவி ரமலா பீவி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். தல்லாகுளம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்துல் கபூரும், ரமலாபீவியும் சேர்ந்து குழந்தையை கடத்தி நரபலி கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காயல்பட்டிணம் சென்ற போலீசார் அப்துல் கபூரையும், ரமலாபீவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து குழந்தையை எப்படி கொலை செய்தோம்? உடலை எங்கு புதைத்தோம்? என்பதையும் அவர்கள் கூறினர்.

குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்தால் மந்திரசக்தி அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையில் இந்த கொலையை செய்து விட்டதாக அப்துல்கபூர் போலீசாரிடம் தெரிவித்தான். அதாவது குழந்தையை கடத்தி கொண்டு முதலில் ஏரல் கிராமத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அதை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து ஒரு பெரிய தூக்கு வாளியில் அடைத்து உள்ளனர்.

பின்னர் குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத்தையும், தலை பகுதியையும் குலசேகரன்பட்டிணம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அப்துல்கபூர் அங்கு அந்த குழந்தையின் ரத்தத்தை குடித்து விட்டு தலையை கல்லாமொழி கடற்கரையில் புதைத்துள்ளான். உடல் பாகங்களை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளியில் கொண்டு வந்து புதைத்தான். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தல்லாகுளம் போலீசார் குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அப்துல்கபூரையும், ரமலா பீவியையும் கொண்டு வந்தனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். இதைத் தொடர்ந்து போலீசார் கல்லாமொழி கிராமத்திற்கு சென்று அங்கு புதைக்கப்பட்டுள்ள தலையை தோண்டி எடுக்கிறார்கள்.

அதன் பிறகு ஏர்வாடிக்கு வந்து உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து உடல்களை மீட்கிறார்கள். அதன் பிறகு பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள். கடலாடி தாசில்தார் காளிமுத்து, கீழக்கரை போலீஸ்டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர் சங்கு ஆகியோர் முன்னிலையில் ஏர்வாடியில் இன்று குழந்தை காதர் யூசுப்பின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.

அப்துல்கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் தான் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ரமலா பீவியுடன் அப்துல்கபூருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது மனைவியாக்கி கொண்டார். இவர்கள் இருவரும் ஊர் ஊராக தர்காவுக்கு சென்று அடிக்கடி மொட்டை போட்டு மாந்திரீக வேலைகளை செய்து வந்துள்ளனர். மந்திர சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த கொடூர கொலையை செய்திருக்கிறார்கள்.

சனி, 24 ஜூலை, 2010

இந்தியாவில் 62.13 கோடி பேரிடம் செல்போன்!

மும்பை: கடந்த ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் மேலும் 5.90 கோடி பேர் செல்போன் சேவை பெற்றுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் செல்போன்கள் வைத்துள்ள மக்கள் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நாட்டில் தொலைத் தொடர்பு அடர்த்தி 52.74 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 120 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 24.29 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் லேண்ட் லைன் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவில் 3.70 கோடி லேண்ட் லைன் வாடிக்கையாளர்கள்தான் உள்ளனர்.

செல்போன்கள் பயன்பாட்டை அதிகரிப்பதில், உலகிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையிலான கட்டணக் குறைப்பு போட்டியால், ஒரு வாடிக்கையாளர் மூலமாக இந்த நிறுவனங்களுக்குக் கிடைத்து வந்த சராசரி மாத வருவாய் 8.7 சதவீதம் (ஜி.எஸ்.எம். செல்போன் பயன்படுத்துவோரில்) குறைந்துள்ளது.

சி.டி.எம்.ஏ. செல்போன்களை பயன்படுத்துவோர் மூலம் வரும் வருவாயில் 3.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் இந்தியாவி்ல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 87.10 லட்சமாக உயர்ந்துள்ளதும் குறி்ப்பிடத்தக்கது.

8ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது- தமிழக அரசு உத்தரவு

ஜுலை.24:எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,

தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது.

எந்த மாணவரையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது".

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல அமெரிக்கா'- பராக் ஒபாமா

ஜுலை.24:'உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல அமெரிக்கா' என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளரும் பொருளாதாரத்திற்கு ஒரு மாற்றத்தை உலக நாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உடன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

"அமெரிக்கா வாங்கும், பயன்படுத்தும், இறக்குமதி செய்யும் என்ற அடிப்படையிலான பொருளாதார மாதிரியை நீங்கள் சார்ந்திருக்க முடியாது என்று கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் முதன் முறையாக நான் கலந்து கொண்டபோதே இதை திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.

பங்குகள் மீது கடன் பெற்றுச் செல்கிறோம்,கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறோம், உலகெங்கிலும் சென்று பொருட்களை வாங்குகிறோம். இந்த நிலை மாற வேண்டும்,அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளர்ச்சி காணும் பொருளாதாரத்திற்கு மாற்றமாக வேறொரு பொருளாதார மாதிரியை உலகின் மற்ற நாடுகள் உருவாக்க வேண்டும்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளும் இயந்திரமாக அமெரிக்க இருக்க முடியாது" என்று ஒபாமா கூறியுள்ளார்.

ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் வழக்கு- குஜராத் அமைச்சர் தலைமறைவு- சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ஜுலை.24:ஷொராஹ்ப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீவி போலி என்கெளண்டர் வழக்கு தொடர்பாக நேற்று சிபிஐ முன் நேரில் ஆஜராகியிருக்க வேண்டிய குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா தனக்கு கூடுதல் கால அவகாசம் கோரினார். ஆனால், அதை சிபிஐ நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

மேலும் சிபிஐயால் கைது செய்யப்படாமல் இருக்க அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமான இவர் தான் இந்த என்கெளண்டரை திட்டமிட்டு நடத்தியதாக சிபிஐ கருதுகிறது.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்ட, இந்த தம்பதியை தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி கொலை செய்துள்ளனர் குஜராத் போலீஸ் அதிகாரிகள் என்கிறது சிபிஐ.

இதில் அமித் ஷாவுக்கு நேரடியாக தொடர்பு இருந்துள்ளது. யார் சொல்லி இவர் இந்த என்கெளண்டரை நடத்தினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொலையை பார்த்த சாட்சியும் என்கெளண்டர்:
மேலும் இந்தக் கொலையை நேரில் பார்த்த துள்சிராம் பிரஜாபதி என்ற வாலிபரையும் என்கெளண்டரில் குஜராத் போலீஸ் அதிகாரிகள் கொன்றனர். அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இவர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் கூறினாலும் நேரில் பார்த்த சாட்சியை ஒழித்துக் கட்டவே இவர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பி்ன்னணியிலும் அமித் ஷா இருந்துள்ளார்.

இந் நிலையில் ஷொராஹ்ப்தீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை மதியம் 1 மணிக்குள் காந்திநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அமீத் ஷாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று மதியத்துக்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரின் வீட்டு கதவில் சிபிஐயின் சம்மன் ஒட்டப்பட்டது.

ஆனால், நேற்றும் அவர் ஆஜராகவில்லை. தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் என்னென்ன கேள்விகளை கேட்கப் போகிறீர்கள் என்றும் சிபிஐயிடம் அமித் ஷாவின் வழக்கறிஞர்கள் கேட்டனர். கேள்விகள் பட்டியல் எல்லாம் தரமுடியாது என்று அந்த வழக்கறிஞர்களிடம் சிபிஐ கூறிவிட்டது. இதையடுத்து அமித் ஷா தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி சிபிஐ பல்வேறு இடங்களுக்கு படைகளை அனுப்பியுள்ளது. அவரது அலுவலகத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரது உதவியாளரிடம் விசாரணை நடத்தினர்.

பகல் 1 மணி வரை அவர் விசாரணைக்கு வராததால் அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார்.

எந்த நேரமும் கைதாவார்:
இந் நிலையில் அமித் ஷா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதையடுத்து அமித் ஷாவை கைது செய்ய சிபிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது.

முன்னதாக 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அகமதாபாத் அருகே பயங்கரவாதி என்று கூறி ஷொராஹ்ப்தீன் ஷேக் போலீஸ் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா தான் என்கெண்ட்டர் நடத்தி கொல்ல போலீஸாருக்கு உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சியாக இருந்த அவரது மனைவி கவுசர் பீவியும் 2006ம் ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்டார்.

இந்த என்கெண்ட்டர்களை நடத்திய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், அமித் ஷாவையும் போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற குஜராத் அரசு முயன்றதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சரின் தொலைபேசி உரையாடல் பட்டியல்:
இதையடுத்து இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த என்கெளண்ட்டர் தொடர்பான அமைச்சர் அமித் ஷாவின் தொலைபேசி உரையாடல்களையும் சிபிஐ பதிவு செய்துள்ளது.

அதில்,ஷொராஹ்ப்தீன், அவரது மனைவி, சாட்சியான பிரஜாபதி ஆகியோரின் கொலைகளுக்கு முன்பும் பின்னும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் அமித் ஷா நேரில் பலமுறை தொடர்ந்து தொலைபேசியில் பேசியது உறுதியாகியுள்ளது.

இந்தக் கொலைகள் நடந்த அடுத்த நிமிடமே அமைச்சரின் செல்போனை இந்த 4 அதிகாரிகளும் அடுத்தடுத்து தொடர்பு கொண்டுள்ளனர். அவரும் இவர்களை தொடர்பு கொண்டுள்ளார் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த என்கெளண்டர்களை நடத்திய 4 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியதில் இந்த கொலைகளின் பின்னணியில் அமித் ஷா இருப்பதை உறுதி செய்துள்ளனர். அவர் தான் இந்த என்கெளண்டர்களை நேரடியாகவே மேற்பார்வையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

துள்சிராம் பிரஜாபதி தப்பியோடிபோது அவர் தங்களை சுட்டதாகவும் பதிலுக்கு தாங்கள் சுட்டபோது தான் அவர் இறந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறுவதும் பொய் என்று தெரியவந்துள்ளது.

பிரஜாபதியின் சட்டையில் குண்டு துளைத்துள்ளதை பார்க்கும்போது அவர் மிக மிக அருகில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டதாவும், ஓடும்போது சுடப்பட்டதாக தெரியவில்லை என்றும் பிரதேப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டரே சுட்டு்க் கொண்டாரா?:
மேலும் பிரஜாபதி சுட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட இன்ஸ்பெக்டரின் கையில் உள்ள காயம் தூரத்தி்ல் உள்ள நபர் சுட்டதால் ஏற்படவில்லை, அது மிக அருகி்ல் வைத்து சுடப்பட்ட குண்டு, ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டரே அந்த காயத்தை உருவாக்கியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இன்ஸ்பெக்டர் எக்ஸ்-ரே எடுக்கவோ, மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகவோ மறுத்துவிட்டார் என்றும் மருத்துவர்கள கூறியுள்ளனர்.

அமைச்சர் உத்தரவால் கொல்லப்பட்ட ஷொராஹ்ப்தீன் மனைவி:
இதற்கிடையே இந்த போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் என்.வி.செளஹான் இந்த என்கெளண்டர்கள் குறித்து சிபிஐயிடம் ஏராளமான தகவல்களைத் தந்துள்ளார்.

ஷொராஹ்ப்தீன் கொல்லப்பட்ட பிறகு அவரது மனைவி கவுசர் பீவியின் பாதுகாப்புக்கு இருந்த அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

கவுசர் பீவி ஒரு பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா அங்கு வந்தார். அவருக்கு அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரிடம் கவுசர் பீவி பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். ஆனால், எதிர்முனையில் இருந்த அமித் ஷா தொடர்ந்து ஏதோ சொல்ல வன்சாரா அமைதியாகிவிட்டார்.

இந்த தொலைபேசி அழைப்பு முடிந்தவுடன் என்னிடம் திரும்பிய வன்சாரா, கவுசர் பீவியை உயிருடன் விட்டு வைப்பது நமக்கு ஆபத்து. எனவே அவரை கொன்று உடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி அழித்துவிடுமாறு அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார் என்றார்.

இதையடுத்து கவுசர் பீவியை குஜராத் போலீஸ் அதிகாரிகள் கொன்று உடலை எரித்துவிட்டு, அவர் காணாமல் போய்விட்டதாக வழக்குப் பதிவு செய்தனர்.

அறிக்கையை மாற்ற மறுத்த விசாரணை அதிகாரி:
அதே போல குஜராத் சிஐடி பிரிவு இன்ஸ்பெக்டரான சோலன்கியும் இதே போல சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரும் இந்தக் கொலைகளில் அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் தான் ஷொராஹ்ப்தீன் என்கெளண்டர் வழக்கை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது விசாரணை அறிக்கையில், ஷொராஹ்ப்தீன் தீவிரவாதி அல்ல, அவர் போலி என்கெண்டரில் தான் கொல்லப்பட்டுள்ளார். அவரையும் அவரது மனைவியையும் துள்சிராமையும் போலீசார் கடத்திச் சென்றே கொலை செய்தனர். பின்னர் அதை என்கெளண்டர் போல காட்டி உலகை ஏமாற்றினர் என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த விசாரணை அறிக்கையை பார்த்து டென்சனான அமைச்சர் அமித் ஷா அதை அழித்துவிடுமாறு தனக்கு உத்தரவிட்டதாக சிஐடி பிரிவின் ஐஜி கீதா ஜோகிரி தன்னிடம் கூறியதாகவும் சோலன்கி சிபிஐயிடம் கூறியுள்ளார்.

அறிக்கையை என்கெளண்டர் நடத்திய அதிகாரிகளுக்கு ஆதரவாக மாற்றி எழுதித் தருமாறு தன்னிடம் கீதா கூறியதாகவும் ஆனால், அதை ஏற்க தான் மறுத்துவிட்டதாகவும் சோலன்கி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதலில் கீதா ஜோகிரி தான் விசாரணை அதிகாரியாக இருந்தார். ஆனால், விசாரணையை இவர் மிக மிக மெதுவாக நடத்தியதால் அவரை சுப்ரீம் கோர்ட் நீக்கியது நினைவுகூறத்தக்கது.

மேலும் ராஜஸ்தானில் இருந்த இந்த என்கெளண்டரை நேரில் பார்த்த சாட்சியான பிரஜாபதியை சந்திக்க சோலன்கி அனுமதி கோரி கடிதம் எழுதியபோது அதைத் தர கீதா மறுத்துள்ளார். இது குறித்து சோலன்கி கேட்டபோது, அனுமதி தர வேண்டாம் என்று தனக்கு உத்தரவு வந்துள்ளதாக கீதா கூறியுள்ளார்.

இந் நிலையில் பிரஜாபதியும் என்கெளண்டரில் கொல்லப்பட்டுவிட, கீதாவுக்கு சோலன்கி எழுதிய கடிதமும் மாயமாகிவி்ட்டது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாட்டிவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள்:
இத்தோடு அமித் ஷாவுக்கு சிக்கலைத் தந்துள்ள இன்னொரு விஷயம் இரு ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிபிஐயிடம் தந்துள்ள வாக்குமூலம். அதில், தங்களிடம் பணம் கேட்டு ஷொராஹ்ப்தீன் மிரட்டி வந்ததாக வாக்குமூலம் தருமாறு தங்களை அமித் ஷாவும் போலீஸ் அதிகாரி வன்சாராவும் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஷொராஹ்ப்தீன் ஒரு தாதா கும்பலைச் சேர்ந்த தீவிரவாதி என்பதைப் போல காட்ட இந்த ரியல் எஸ்டேட் அதிபர்களை அமித் ஷாவும் போலீசாரும் பயன்படுத்தியதும் உறுதியாகியுள்ளது.

ராமன் படேல், தசரத் படேல் என்ற இந்த இரு ரியல் எஸ்டேட் அதிபர்களான சகோதரர்கள் அமித் ஷாவுக்கு ரூ.70 லட்சம் வரை பாதுகாப்பு பணம் தந்து வந்ததாகவும் சிபிஐயிடம் கூறியுள்ளனர்.

அஜய் படேல் என்பவர் மூலம் அமைச்சருக்கு இந்தப் பணத்தைத் தந்து தங்கள் தொழிலுக்கு தொல்லை வராமல் பார்த்துக் கொண்டதாகவும், அந்த வகையில் அமைச்சர் தங்களுக்கு நெருக்கமானதாகவும் கூறியுள்ளனர்.

இத்தனை ஆதாரங்களுடன் இந்த போலி என்கெளண்டர் வழக்கில் வசமாக சிக்கியுள்ளார் குஜராத் உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா. சிபிஐ முன் ஆஜராகும்போது இந்த ஆதரங்களை வைத்து அவர் விசாரணைக்குப் பின் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர் அமீத் ஷா. குஜராத்தில் 2002ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியில் அமர்ந்தபோது காவல்துறைக்கு பொறுப்பு வகி்க்கும் உள்துறை இவரிடம் தரப்பட்டது.

இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதும் அதே துறையை அமீத் ஷாவுக்கு வழங்கினார் மோடி. 45 வயதாகும் அமீத் ஷா, நரேந்திர மோடிக்கு மிக மிக நெருக்கமானவர் என்பதோடு, இணையமைச்சராக இருந்தாலும் மாநில அமைச்சரவையில் நம்பர் டூ அந்தஸ்தில் இருப்பவர் ஆவார்.

இவர் இப்போது இவ்வாறு நேரடியாக சிக்கியிருப்பது நரேந்திர மோடிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

வியாழன், 22 ஜூலை, 2010

பிஜேபி-யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

கோழிக்கோடு:அரசியல் ஆதாயங்களுக்காக இன உணர்வுகளைத் தூண்டி, வரும் பஞ்சாயத் தேர்தல்களில் ஓட்டுக்களை பறிக்க பி.ஜே.பி.யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து,செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் கமிட்டி நிர்வாகி பி.அப்துல் ஷரிப் கூறுகையில்; பி.ஜே.பி.யின் முஸ்லிம் மற்றும் தலித் இனத்தவர்களின் மீதான விரோத கொள்கையை தற்போது சி.பி.ஐ.(எம்). கையில் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாகவே, பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளுக்கெதிராக சி.பி.ஐ.(எம்). பல அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்தனர்.

யு.டி.எஃப்பின் ஆதரவாளராக எங்கள் இயக்கங்களை சித்தரிப்பது சரியான முடிவுகளை தராது என்று குறிப்பிட்ட அவர்கள், சமுதாயத்தில் தலித், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

கேரளத்தில் சிறுபான்மையினர்கள் அனைவரும் சி.பி.ஐ.(எம்) க்கு எதிராக மாறி உள்ள நிலையில், உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுக்களை பறிக்கவே இச்சதித் திட்டங்கள் அரங்கேருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணத்தினாலேயே,எஸ்.டி.பி.ஐ. கூட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் போலீசார் தடைவிதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எர்ணாகுளத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கூட்டத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்தது மட்டும்மல்லாமல் போலீஸ் முன்னிலையிலே அச்சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதை நாங்கள் ஏற்று நடந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீசார் இப்படி கலந்து கொண்டது உண்டா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீஸ் பங்கேற்றது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போலீசின் இந்த அராஜகங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துக் கூறிய மாநிலத் தலைவர் முஹம்மது ஷரீப், போலீசார்களை பயன்படுத்தி தங்கள் கட்சியின் உறுப்பினர்களை அரசு சித்திரவதைக்குள்ளாக்குவதாக தெரிவித்தார்.

இது குறித்து கடுமையாக அரசை எச்சரித்த அவர்,மக்கள் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய வங்கிகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சமா?

இந்தியாவில்,வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக,தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதவீதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதவீதமும், கேரளத்தில் சுமார் 7 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 17 சதவீதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம் பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.

குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம்,பீகார்,ஆந்திரம்,கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது

மிதித்து ஆசிர்வதிக்கும் சாமியார்!


சர்ச்சைகளுக்கும் சாமியார் களுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ..... பீர் குடித்து மப்பில் அருள்வாக்கு சொல்வது, கெட்ட வார்த்தைகளாலேயே பக்தர்களுக்குக் குறி சொல்வது என்ற விநோத சாமியார்களின் வரிசையில், கடந்த வாரம் நமது ஆக்ஷன் செல்லில் (044---42890005) பதிவாகி இருந்த ஒரு சாமியார் சமாசாரம் இது!

''ஹலோ... சார், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் 'சாக்லேட் சாமி'னு ஒருத்தர் அருள்வாக்கு சொல்றார். 'அம்மன் அவதாரமே நான்தான்'னு சொல்லிட்டு இவர் பண்ற சேட்டைகள் தாங்கலை. பெண் பக்தைகளுக்கு தன் கையாலேயே தலையில் பூ, நெத்தியில் குங்குமம் வெச்சுவிடுறதோட... வாயிலே சாக்லெட்டையும் திணிச்சு அனுப்புறார். எல்லாத்துக்கும் உச்ச கட்டமா பக்தர்கள் முதுகில் தன் கால்களால் ஒரு மிதி மிதிச்சு ஸ்பெஷல் ஆசீர்வாதமும்(!) பண்ணித் தொலைக்கிறார்!'' என்று அதிரவைத்தது ஒரு பெண் குரல்!வீடியோ நன்றி ஜூவி.

'அடடே... இப்படியும் ஓர் பக்தியானந்தாவா?!' என்று 'சாக்லேட் சாமி'க்கு தரிசனம் கொடுக்க (என்னவொரு மெதப்பு!) கிளம்பினோம். கபாலீஸ்வரர் கோயிலுக்கும் சித்திரக் குளத்துக்கும் இடைப்பட்ட வீதி ஒன்றின் மாடி வீடுதான் (ஆ)சாமியின் ஆசிரமம். இரவு 8.30 மணிக்குமேல்தான் பக்தர்கள் சந்திப்பு. வாசலில் பூ விற்கும் பாட்டி, ''சாமி கால் நம்ம உடம்பில் படுறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும்... இந்தா பூ வாங்கிட்டுப்போய் சாமிய பாருய்யா...'' என்று கூவிக்கொண்டு இருந்தார்!

வரிசையாக ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒட்டப்பட்டு (அதாவது, இங்கே வந்து போனாலே ஐஸ்வர்யம் கொட்டுமாம்!) இருந்த மாடிப்படிகளைக் கடந்து சந்நிதானம்(!) சென்றோம். ஆங்காங்கே ஐந்து தலை நாகம், அசுரர் முகங்கள்கொண்ட பயமுறுத் தும் சிலைகளைத் தாண்டிச் சென்றால்... 'பளிச்' மூக்குத்தியோடு கருவறைக்குள் அம்மன் சிலை! சுவர் எங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் ஆன்மிகத் தத்துவ நோட்டீஸ்களுக்கு மத்தியில்... 'சாக்லெட் பெருமை' பேசும் பிட் நோட்டீஸ்களும் அடக்கம். மல்லிகைப் பூ, கலர் கலர் சாக்லெட் பாக்கெட்டுகளோடு சாமியின் தரிசனத்துக்கு காத்துக்கிடந்த பக்தர் ஒருவரிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்.

''நானும் என் பொஞ்சாதியும் ரெண்டு மாசமாத்தான் சாமியைக் கும்புட வர்றோம். சாமி பேர் வெங்கட்ரமணா. பாரீஸில் (அட, பாரீஸ் கார்னர்!) இருக்குற ஒரு தேசிய வங்கியிலதான் வேலை பார்க்கிறார். பகலில் பேங்க் வேலை; ராத்திரியில் மட்டும் பூஜை. வெள்ளி, செவ்வாய் மாதிரி விசேஷ நாட்களில் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட பூஜை நடக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் 'சாமியோட காலால் ஒரே ஒரு மிதி வாங்கிட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோடதான் வர்றோம் (எல்லாம் இந்த நாட்டைப் புடிச்ச கெரகம்!). இந்த முறை நிச்சயம் எனக்கு சாமி கருணை காட்டும்...'' என்று காத்துக்கிடந்தார் அந்த அப்புராணி பக்தர்.

சிறிது நேரத்திலேயே 'ஜல்ஜல்'லென்ற கொலுசு ஒலியோடு கம்பீரமாக அறைக்குள் நடந்து வந்தார் 'சாக்லெட் சாமி' என்ற 'அம்மன் சாமி!' காதில் வளையக் கம்மல், காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி.... என்று விநோத வில்லனுக்குத் தேவையான கெட்-அப்பில் ஆஜரானவர், அம்மன் சிலை அருகில் உள்ள சொகுசு நாற்காலிக்குள் உடம்பைப் புதைத்துக்கொண்டார்.

தளும்பி நிற்கும் தீர்த்தம் (தப்பா யோசிக்கப்படாது!), குவித்துவைக்கப்பட்ட குங்குமம், விதம்விதமான சாக்லெட் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து எதையோ மென்றுகொண்டே ஜரூராக அருள் வாக்குக்கு சைகை காட்டினார்.

அவ்வளவுதான்... 'ஆசீர்வாத மிதி' வாங்கக் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாண் கிடையாகத் தொப்பென்று சாமியின் பாதத்தில் விழுந்து வணங்கு கிறது கூட்டம். பக்தியின் உச்சத்தில், சிலர் சாமியின் பாதங்களைத் தொட்டு... முத்தமிட்டு உருகுவதோடு, 'சாமியின் காலால் மிதி வாங்காமல் எழும்பவே மாட் டேன்!' என்ற பிடிவாதத்துடன் படுத்த நிலையிலேயே நேரம் கடத்துகின்றனர். இன்னும் சிலர், கீழே கிடக்கும் பூச்சிதறல்களை சுத்தம் செய்யும் சாக்கில் 'மிதி' வாங்க 'விடா முயற்சி' செய்கின்றனர்!

பெண் பக்தைகளும்கூட சாஷ்டாங்கமாக சாமியின் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தயக்கமும் இன்றி பாந்த மாக மல்லிகைப் பூவைச் சூடி அழகு பார்க்கிறார் சாக்லெட் சாமி. உச்சி குளிர்ந்து நிற்கும் அந்தப் பெண் பக்தைகளின் நெற்றியில் அடுத்த கட்டமாக உரிமையோடு குங்குமத் திலகமும் இடுகிறார். கூடவே, மறக்காமல் அவர்களது தாலியை தன் கைகளுக்குள் பொத்தி அழுத்தியவாறு சில நொடிகள் முணு முணுக்கிறார் சாமி! இது தவிர, சொந்த வாழ்க்கைக் குறையைச் சொல்லி அழும் சில பெண் பக்தைகளின் வாய்க்குள் சட்டென்று ஓர் ஒற்றைச் சாக்லெட்டைப் பிரித்துத் திணிக்கிறார். கசப்புகள் கரைந்து இனிப்பாகிவிடுமாம்! அத்தனையையும் பக்கத்தில் இருந்து பார்த்து பூரிப்போடு பரவசமாகிறார்கள் அவரவர் கணவன்மார்கள்!

பக்தர்கள் எல்லோருக்கும் 'கால் மிதி' பாக்கியம் கிடைத்துவிடாது. அதற்கும் ஒரு முதுகு யோகம் வேண்டும். தம்பதி சகிதமாக வந்து விழுந்து வணங்கிக்கொண்டு இருந்தவர்களில், ஓர் ஆண் பக்தரின் முதுகில் திடீரென தனது இரு கால்களையும் படாரென்று தூக்கி மிதித்து சாமி 'ஆசீர்வாதம்' செய்ததில், பதறிபோனோம். மிதி வாங்கிய வலி நமக்குப் புரியவில்லை. அடுத்தடுத்து மிதி வாங்கும் ஆவலோடு கூட்டமும் முண்டியடித்துத் திணறியது.

'கடவுள்களின் உணவான சாக்லெட்டை(?) சாப்பிட்டால் முதுமையைத் தடுக்கலாம்!' என்ற 'பிராண்ட் நியூ' தத்துவத்தை விளக்கிச் சொல்கிறது பிட் நோட்டீஸ் ஒன்று. ஊருக்கே சாக்லெட் கொடுக்கும் சாமியோ தனது முதுமையை மறைக்க தலைமுடி, தாடிக்கு பளிச்சென்று 'டை' பூசி இளமையைக் காப்பாற்றுகிறார். நமது முறை வந்ததும் சாமியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச எத்தனித்தோம். சட்டென்று டென்ஷனாகி, ''ஆன்மிகத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜூ.வி-யில் என்ன பக்தியைப் பற்றியா எழுதறீங்க...?'' என்று திடீர் 'அருள்' வந்து ஆட ஆரம்பித்தார். ரொம்ப நேரம் கழித்து சமாதானமாகிப் பேச ஆரம்பித்தார்.

''இந்த அம்மன் வழிபாட்டை 26 வருஷமா செய்துட்டு வர்றேன். இதுவரையிலும் எந்தக் கெட்ட பெயரும் எனக்குக் கிடையாது. ஒரு மனுஷாளைப் பாத்த மாத்திரத்திலேயே இவர் டாக்டர், இன்ஜீனீயர்னு யாராலும் சொல்லிட முடியுமா? உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்டே போறோம். அவர் ஆம்பளை டாக்டரா... பொம்பளை டாக்டரான்னு பார்த்துக்கிட்டாப் போறோம்? யாராயிருந்தா என்ன... நமக்கு உடம்பு சரியானாப் போதும்னு நினைச்சு சிகிச்சை எடுக்குறோம்! அதே மாதிரிதான் என்னை நம்பி நிறைய பேர் பிரச்னைகளோட வர்றாங்க. அம்மன் கருணையால் அவங்களுக்கு பூ, பொட்டு வெச்சு ஆசீர்வாதம் கொடுக்குறேன். எல்லாம் சுபமாகிடுது. இதெல்லாமே ஒரு ஹீலிங் தெரபிதான்!'' என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார்.

நன்றி: ஜூவி.

- த.கதிரவன்
படம்: என்.விவேக்

சைவ உணவா..! அப்படின்னா..?!
சைவ உணவு என்றால் என்ன?

எவை எல்லாம் சைவ உணவுகள் ?

புலால் உணவு/மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவு என்பதும்.

தாவரங்கள் சார்ந்த, செடிகளில் இருந்து கிடைக்கும் தாணியங்கள், காய் கறிகள், பழங்கள், மர வகை உணவுகள், பால், வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள் என்பதும் பொதுவான கருத்தாகும்.

இது சரிதானா?

o ஐஸ் க்ரீம்கள், சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவை குளிர் சாதனப் பெட்டிக்குள் இல்லாத சமயங்களில் அதன் திடத் தன்மையை நீடிக்க ஜெலாட்டின் என்ற மிருகக் கொழுப்பு வகையும்,முட்டையும் சேர்க்கப்படுகிறது.

o பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அப்படியே சாப்பிடும் உணவு வகைகள்(ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போன்றவை) பெருப்பாலும் மாட்டுக் கொழுப்பு கலந்த எண்ணையில் தான் பொறித்து எடுக்கப் படுகிறது.

o துரித உணவு வகைகளின் (பாஸ்ட் புட்) அடிப்படையான சீஸில் கன்று குட்டியின் குடலிலிருந்து எடுக்கப்படும் என்சைம்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

o பால் சார்ந்த இனிப்பு வகைகளின் (மில்க் ஸ்வீட்) மேல் ஒட்டப்பட்டிருக்கும் பளபளப்பான வெள்ளி இழைகள் (சில்வர் லேயர்) மெல்லியதாக தயாரிக்க மாட்டின் குடல் உபயோகப்படுத்தப் படுகிறது. மாட்டின் சூடான இரண்டு குடல் தட்டுகளுக்கு இடையே வெள்ளி மூலப்பொருள் வைக்கப்பட்டு அழுத்தம் கொடுத்து மெல்லிய இழைகளாக மாற்றப்படுகிறது

o ஆப்பிள் போன்ற பழங்கள் நீண்ட நாள் வாடாமல் இருக்க மெழுகும்,கொழுப்பும் கலந்த கலவை பூசப்படுகிறது

o தாணியங்கள், காய்கறிகள் நல்ல விளைச்சலைத் கொடுக்கவும் நெடு நாள் கெடாமல் இருக்கவும் அவற்றின் விதைகளில் மரபணுச் சோதனைகள் மூலம் மிருக மூலக்கூறுகள், அணுக்கள் (டி என் ஏ) சேர்க்கப்படுகின்றன.

இப்பொழுது சொல்லுங்கள்; சைவ உணவு என்று ஒன்று உள்ளதா என்ன?!!

உண்மையைச் சொல்லவேண்டுமானால் உலகில் உள்ள அனைவரும் அசைவமே.

நன்றி: source: http://duraipathivukal.blogspot.com