
சி.பி.ஐ விசாரணை உத்தரவிடுவது குறித்து, ஜூலை 5ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யுமாறு அனைத்து தரப்புகளுக்கும் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
முன்னதாக,இஸ்ரத் ஜஹான் மற்றும் மற்ற மூவரின் போலி என்கவுண்டர்களை நியாயப்படுத்தி மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவை திருத்தவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே பதில் மனுவில் தான், சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இப்போது இதை மாற்றும் வகையில் பெரிய பல்டி அடித்துள்ளது.
முன்னதாக இஸ்ரத் ஜஹான்,ஜாவித் ஷேய்க் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீஷான் ஜோகர் ஆகியோர் லஷ்கர்-எ-தொய்பாவை சார்ந்தவர்கள் என்றும், மோடியை கொள்ளவந்தவர்கள் என்றும் கூறி குஜராத் போலீசார் போலி என்கவுண்டரில் கொலைச் செய்தனர்.
இஸ்ரத் தயார் ஷமீமா கவுசர் மற்றும் பிரனேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் ஆகியோர், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து இவ்வழக்கின் முன்னேற்றங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
Timesofindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக