இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் 'சி.ஐ.ஏ.' உளவாளிகளும், சவுதி அரேபியாவின் உளவுத்துறை ஏஜெண்டுகளும் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்தார்.
இதற்கிடையே ஈரான் அரசின் முயற்சியின் பேரில் அவர் நேற்று டெஹ்ரான் திரும்பினார்.
இமாம் கொமேனி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீருடன் வரவேற்றனர்.
முன்னதாக அவர் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
"என்னை கடத்தி சென்ற அமெரிக்க உளவாளிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தினர்.ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வெளியிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் எனது தாய் நாட்டு பற்றின் காரணமாக அவற்றை வெளியிட மறுத்து விட்டேன்.
அணுசக்தி ரகசியங்களை பெற எனக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை லஞ்சம் தர முன்வந்தனர். மேலும், அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரிந்தால் 50 மில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக ஆசைவார்த்தை கூறி பேரம் பேசினர். அதற்கும் நான் பணிய்வில்லை" என்று தெரிவித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக