ஞாயிறு, 18 ஜூலை, 2010

2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்' பாவனையை விட்டு விலகுவதாக எச்சரிக்கை

அகற்றப்பட்ட 4 இஸ்லாமிய பக்கங்களை மீண்டும் கொண்டுவரப்படாதவிடத்து 2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்'கிலிருந்து விலகிவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல 'பேஸ்புக்' பக்கங்களில் ஒரே மாதிரியான விளம்பரங்களை இவர்கள் விடுத்திருக்கிறார்கள். அவ்விளம்பரத்தில், 'பேஸ்புக்' நிறுவுனரான மார்க் ஸக்கர்பேக் மற்றும் 'பேஸ்புக்'கின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஆகியோர், 2.5 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வை உதாசீனம் செய்வதாக குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.


மிகப் பிரபலமான இஸ்லாமிய பக்கங்கள் நான்கு அகற்றப்பட்டதையிட்டு இஸ்லாமிய சமுதாயம் கோபமாக உள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாதவிடத்து பேஸ்புக்கினை பயன்படுத்தும் முஸ்லிம்கள், இஸ்லாமிய மாற்று வலையமைப்புகளுக்கு மாறிவிடுவர் எனவும் அவர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.


இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களை 'பேஸ்புக்'கில் பதிவிடுவது 'பேஸ்புக்' சட்டங்களுக்கு எதிரானது என விதிக்க வேண்டும் என்பதும் இக்கடிதத்தில் உள்ள இன்னொரு கோரிக்கையாகும்.


கருத்துகள் இல்லை: