இந்தியாவில் 62.13 கோடி பேரிடம் செல்போன்!
மும்பை: கடந்த ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் மேலும் 5.90 கோடி பேர் செல்போன் சேவை பெற்றுள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் செல்போன்கள் வைத்துள்ள மக்கள் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் நாட்டில் தொலைத் தொடர்பு அடர்த்தி 52.74 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 120 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 24.29 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் லேண்ட் லைன் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவில் 3.70 கோடி லேண்ட் லைன் வாடிக்கையாளர்கள்தான் உள்ளனர்.
செல்போன்கள் பயன்பாட்டை அதிகரிப்பதில், உலகிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையிலான கட்டணக் குறைப்பு போட்டியால், ஒரு வாடிக்கையாளர் மூலமாக இந்த நிறுவனங்களுக்குக் கிடைத்து வந்த சராசரி மாத வருவாய் 8.7 சதவீதம் (ஜி.எஸ்.எம். செல்போன் பயன்படுத்துவோரில்) குறைந்துள்ளது.
சி.டி.எம்.ஏ. செல்போன்களை பயன்படுத்துவோர் மூலம் வரும் வருவாயில் 3.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் இந்தியாவி்ல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 87.10 லட்சமாக உயர்ந்துள்ளதும் குறி்ப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக