வியாழன், 8 ஜூலை, 2010

இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக கட்டுரை வெளியிட்ட டைம் பத்திரிகை மன்னிப்பு கேட்டது

அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரபலமான டைம் பத்திரிகை வெளியிட்ட கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அப்பத்திரிகை அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அண்மையில் டைம் பத்திரிகையில் நகைச்சுவை கட்டுரை எழுதி வரும் ஜோயல் ஸ்டீன் ஜூலை 5ம் தேதியன்று அமெரிக்க இந்தியர்களை மூடர்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் கடுமையாக தாக்கி எழுதியிருந்தார்.

'மை ஓன் பிரைவேட் இந்தியா' என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த அந்த கட்டுரையில், "அனைத்து இந்தியர்களும் அறிவுஜீவிகள் என்று நாங்கள் நம்பினோம் ஆனால் இந்திய டாக்டர்கள், என்ஜினியர்களை தொடர்ந்து இங்கே வந்த மற்றையவர்கள் வந்த போது தான் அவர்கள் புத்தி குறைந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது" என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து இதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனவும் டைம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: