புதன், 7 ஜூலை, 2010

இஸ்ரத்தின் மீதான குற்றச்சாட்டிற்கு குடும்பத்தினர் மறுப்பு- உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்த கோரிக்கை

மும்பை:மோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என்று கூறி 2004ம் ஆண்டு 3 பேருடன் கொல்லப்பட்ட இஸ்ரத், லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்தவர் என்ற டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை இஸ்ரத் ஜஹானின் குடும்பத்தார் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். "என் மகள் ஒரு அப்பாவி, அவள் இதை செய்திருக்கவேமாட்டாள், எப்பொழுதும் நாட்டை விரும்பவே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கிறோம், இந்த அறிக்கை தவறானது" என்கிறார் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா கவுஸர்.

தானே நகரின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரத். இவரை லஷ்கர்-இ-தொய்பாவின் இந்தியப் பிரிவு தலைவராக கூறப்படும் முஸமில் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதப் பணிகளுக்காக தேர்வு செய்திருந்தார் என்றும், முஸமில் 2007 வரை இந்தியப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார் எனவும் அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய விசாரணைக் குழுவிடம் ஹெட்லி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

ஹெட்லியின் பணி இந்தியாவில் 2006ல் தான் தொடங்கியது ஆனால் இஸ்ரத் உட்பட நான்குபேர் ஜூன் 15 2004ல் கொல்லப்பட்டனர் என்று அதே அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் இஸ்ரத்தின் தாயார் ஒரு மனுதாக்கல் செய்து அதில், தனது மகள் ஒரு சேல்ஸ்பெண். ஜாவேத் ஷேக்குக்காக நருமணப் பொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்று கோரியிருந்தார்.

அஹமதாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி S.P.தமாங்க்,இது ஒரு போலி என்கவுண்டர் என்று தீர்ப்பளித்திருந்தார்.252 பக்க அறிக்கையில் இது ஒரு கொலை வெறித்தாக்குதல் என்று என்கவுண்டர் நடத்திய போலீஸ் டி.ஜி.பி., வன்சாராவை சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: