செவ்வாய், 27 ஜூலை, 2010

சென்னையிலிருந்து புறப்பட்ட சவுதி விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை,ஜுலை27 :சென்னையில் இருந்து சவுதியின் ஜித்தா செல்ல இருந்த சவுதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் டேக்-ஆப் செய்வதை விமானி தவிர்த்துவிட்டதால் விபத்திலிருந்து தப்பியது.180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு சவுதி ஏர்வேஸ் எஸ்.சி-769 விமானம் இன்று காலை புறப்படத் தயாரானது.அதி்ல் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.

விமானம் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டு புகை பரவியது.இதைக் கண்ட விமானி உடனடியாக விமானம் டேக்-ஆப் ஆவதைத் தவிர்த்துவிட்டு ரன்வேயிலேயே நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் அவசர.அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் சோதனையிடப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்ட பின் 3 மணி நேரம் தாமதமாக மீண்டும் கிளம்பிச் சென்றது.

கருத்துகள் இல்லை: