உலகக் கால்பந்து போட்டி ஒரு வழியாக முடிவடைந்தது, தென் ஆப்பிரிக்கா என்ற கறுப்பர் பூமியில் நடந்ததால் அது பெருமிதத்துக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இருந்தும் ஆப்பி ரிக்க நாடு ஒன்று வாகை சூடியிருக்குமானால் நிச்சயம் அது பெருமைக்குரியதாக மாறியிருக்கும்.
மேற்கத்திய நாட்டில் ஒன்றான ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து உலக ஜாம்பவான்களான பிரேசில், அர்ஜெண்டினா போன்ற லத்தீன் அமெரிக்காவின் மிரட்டும் அணிகள் இந்த போட்டிகளில் மொக்கை பீஸாக போனது ஒரு வகையில் சோகமே. இறுதியில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மிஞ்சின.
இந்த விளையாட்டுப் போட்டியில் மூட நம்பிக்கை கொடி கட்டிப் பறந்தது. எந்த அணி ஜெயிக்கும்? எந்த அணி அரைஇறுதிவரை வரும்? என்பது போன்ற ஆரூட ங்களை ஆக்டோபஸ், கிளி, முதலை, குருவி, உள்ளிட்ட பல் வேறு உயிரினங்களும் ஆருடம் சொல்லி ரணகளப்படுத்தின.
பால் என்ற ஆக்டோபஸ் இதுவரை ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆருடம் கூறியது. ஆனால் அரை இறுதியில் ஜெர்மனி ஜெயிக்காது ஸ்பெயினே வெல் லும் என அந்த ஆக்டோபஸ் ஆருடம் தெரிவித்ததாம். குருவி உட்கார பணம் பழம் விழுந்த கதையாக ஜெர்மனி அரை இறுதியில் தேறவில்லை. உடனே கடுப்பான ஜெர்மனி ரசிகர்கள் ஆக்டோபஸை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆக்டோ பஸை வறுத்து தின்பேன் என்று மிரட்டினார். மற்றொருவர் சூப் வைத்து குடிப்பேன் என்றார். இந்த மிரட்டலினால் இந்த ஆக் டோபஸுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் நாங்கள் பாதுகாப்பு வழங்கத் தயார் என ஸ்பெயின் பிரதமர் வேறு உணர்ச்சி வசப்பட்டு உறுதி அளித்தார். இந்தக் கூத்து ஒரு வழியாக முடிந்தது.
இறுதிப் போட்டி குறித்தும் ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. இப்போது இறுதிஆட்டம் குறித்து நாய், பன்றி, கன்று குட்டியைத் தவிர அனைத்து மிருகங்களையும் வைத்து ஆரூடங்கள் புறப்பட்டன.
ஸ்பெயின் வெற்றி பெறும் என ஆக்டோபஸ் பால் கூறியது என் றால் நெதர்லாந்து தான் வெல்லும் என சிங்கப்பூரைச் சேர்ந்த கிளி சீட்டு எடுத்துக் கொடுத்தது.
ஸ்பெயினுக்கு வெள்ளைக்கார ஆக்டோபஸ் ஆதரவு கொடுத்தது என்றால் நெதர்லாந்துக்கு கல் தோன்றி முன் தோன்றா காலத்து மூத்தகுடியைச் சேர்ந்த கிளியின் ஆதரவு கிடைத்தது. ஆம் கிளியின் பெயர் மணி. அது தமிழ்க்கிளி.
இந்த ஆரூடங்களை நம்பியவர்கள் நம்பாமல் சிரித்தவர்கள் என ஒரு வழியாக காமெடிக் காட்சிகள் அரங்கேறி முடித்தன. ஸ்பெயின் வாகை சூடிவிட்டது. கால்பந்து ரசிகர்களும் அடுத்த கால்பந்துக்காக காத்திருக்கலாம்.
ஆனால் கடந்த கால்பந்தாட்ட இறுதியில் நடந்த நிகழ்வை யாராலும் மறந்திருக்க முடியாது. பிரான்ஸ் அணி தலைவரான ஜைனுதீன் ஜிடேனை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது சகோதரியை இழிவாகப்பேசியும், தீவிரவாதி என் றும் இத்தாலிய வீரர் மாட்ரெஸி பேச, தலையால் முட்டினார் ஜிடேன். இந்த செயலுக்காக ஜிடேன் போட்டியிலிருந்து நீக்கப்ப ட்டார். ஒருவேளை ஜிடேன் நீக்க ப்படாமல் இருந்திருந்தால் பிரா ன்ஸ் அணி வென்றிருக்கும். அல் ஜீரியா வம்சா வளியைச் சேர் ந்த முஸ்லிம் ஒருவருக்கு அந்த பெருமை சென்று விடக்கூடாது என் பதற்காக இத்தாலி மாட்ரெஸி, ஜிடேனை ஆவேசப்படுத்தியதாக சொல்லப்பட்டது. எப்போதுமே ஆவேசப்படுபவர்கள் இவர்களாக வும், ஆவேசப்படுத்தி காரியம் சாதிப் பவர்கள் மேற்குலகைச் சார்ந்த அவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தக் காட்சி அமைந்தது.
எத்தனை உலகக்கோப்பை கால் பந்து போட்டிகள் நடந்து முடிந் தாலும் ஜைனுதீன் ஜிடேனை மறக்க முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக