பாரிஸ்:பொது இடங்களில் முகங்களில் திரையிடுவதற்கு தடையிடும் தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கியது ஃபிரான்ஸ் பாராளுமன்றம். முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடை குறித்தே இந்த ஆட்சேபனைக்குரிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமானால் முகத்திரையிடும் பெண்கள் 150 யூரோ ($184) அபராதம் கட்டவேண்டும். அல்லது குடியுரிமையில் தரம்பிரிக்கப்படுவர் அல்லது இரண்டும் செய்ய வேண்டும்.
யாரும் நிர்ப்பந்தித்தால் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், 30,000 யூரோ அபராதமும் கட்டவேண்டும். குழந்தைகள் முகத்திரையிட நிர்ப்பந்திக்கப்பட்டால் பெற்றோருக்கோ அல்லது நிர்ப்பந்தித்தவருக்கோ 60000 யூரோ அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்.
ஆளுங்கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் இதை ஆதரிப்பதால் இந்த மசோதா நிறைவேரும் என்றே தெரிகிறது.
ஆனால் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தனிமனிதன் தன் விருப்பத்திற்கேற்ப வாழ்கையை அமைக்க உரிமை தந்துள்ளது. அதனால் முகத்திரையை பெண்கள் விரும்பிப் போடும்போது அது அவர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துகின்றது என்ற வாதம் கடுமையானதாகும்.
இதேபோன்று முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடுக்கும் சட்டம் பெல்ஜியத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெயினிலும் இச்சட்டம் நிலுவையில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக