ஞாயிறு, 11 ஜூலை, 2010

முஸ்லிம் பெண்களின் நிகாப் மீதான தடையை எதிர்க்கும் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்:முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவது ஃப்ரான்ஸில் சட்டவிரோதமாக்கப்படும் மசோதா இன்னும் ஓரிரு நாளில் ஃபிரான்ஸ் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்கர்கள் இத்தடையை எதிர்க்கின்றனர்.

பெவ் எனும் ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஃபிரான்ஸில் 10-ல் 8-பேர் பொது இடங்களில் நிகாப் மீதான தடையை ஆதரித்துள்ளனர். வெறும் 17% ஃபிரான்ஸ் மக்களே தடையை எதிர்க்கின்றனர். ஜெர்மனியில் 71%, பிரிட்டனில் 62%, ஸ்பெயின் 59% மக்களும் தடையை ஆதரிக்கின்றனர்.ஆனால் நிகாப் மீதான தடையை மூன்றில் இரண்டு அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர்.

ஃப்ரான்ஸின் தேசிய தினத்திற்கு முந்தய நாளான ஜூலை 13 அன்று பாராளுமன்றத்தில் பொதுயிடங்களில் நிகாபிற்கு தடை விதிப்பது குறித்து வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது.

ஒப்புதல் வேண்டி மேல்சபைக்கு(செனட்) அனுப்பி வைக்கப்படும், செப்டம்பரில் முடிவு தெரியும்.

இதன்படி பொதுயிடங்களில் முழுமுகத்திரையுடன் பெண்கள் பிடிபட்டால் 150 யூரோ (190 டாலர்) அபராதமும், ஆண்கள் மனைவியை அல்லது பிள்ளைகளை நிர்பந்தித்தால் 30,000 யூரோ அபராதமும், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

ஃப்ரான்ஸில் சிறுபான்மையாகயிருக்கும் முஸ்லிம் பெண்களை இந்த சட்டம் பெரிதும் பாதிக்கும். 1,900 பேர் மட்டுமே நிகாப் அணிவதாக அமைச்சகம் தெரிவிக்கிறது. இதேபோன்று சட்டங்கள் பெல்ஜியம், ஸ்பெயினில் நிலுவையில் உள்ளது,

ஆனால் குறிப்பாக ஐரோப்பாவின் சிறுபான்மை முஸ்லிம்களை பெரியளவில் கொண்டிருக்கும் ஃப்ரான்ஸில் மட்டுமே பெரிதும் புண்படுத்துகிறது

கருத்துகள் இல்லை: