வியாழன், 29 ஜூலை, 2010

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க திட்டம்

புதுடெல்லி,ஜுலை29:முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க அரசு தீவிரமாக கருதி உள்ளது என சிறுபான்மை நல வாரியத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

"நாங்கள் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். காங்கிரஸ் அதன் செயல் திட்டத்தில் இதை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. நான் இதற்காக தொடர்ந்து வலயுறுத்தி வருகிறேன். காங்கிரசின் தலைமை இதை செயல்படுத்தும் அதில் சிறிதளவேனும் சந்தேகம் இல்லை." இவ்வாறு PTI க்கு கொடுத்த ஒரு பேட்டியல் அவர் கூறினார்.

காங்கிரஸ் அரசு ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கையின் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டுப் பரிந்துரையை செயல்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்; "ரங்கநாத மிஸ்ரா கமிசன் அறிக்கை சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் பார்லிமென்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு 10 சதவிகிதமும் பிற பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
மேலும் இந்த கமிசன் சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளது.

மண்டல் கமிசன் அறிக்கையில் கூறியுள்ளவாறு பிற்ப்ப்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 8.4 சதவிகிதம் சிறுபான்மையினர் விரிவாக்கத்திற்காக உள்ளது. ஓபிசி பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள மொத்த 27 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் 8.4 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதில் 6 சதவிகிதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்காக கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா கமிசன் 15 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் 27 சதவிகிதம் ஓபிசி யிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இதில் இரண்டாவதாக உள்ளதை நாங்கள் தேர்வு செய்துள்ளோம் இது ரங்கநாத மிஸ்ரா கமிசன் அறிக்கையில் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது." என்றார். மேலும் தான் தனிப்பட்ட முறையில் இதில் ஈடுபாட்டோடு செயல்படுவதாகும் அவர் கூறினார்

கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அதன் பங்கீடு மற்றும் வரையறுப்பது சம்பந்தமாக சில விசயங்களை காங்கிரஸ் தெரிந்துள்ளது.

தமிழ்நாடு 3.5 சதவிகிதம் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகிதத்தில் இருந்து வழங்கி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி புரியும் ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி இருந்தது பின்னர் இது உச்சநீதி மன்றத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

கருத்துகள் இல்லை: