ஆசிரியர்,
தினத்தந்தி,
சென்னை.
பொருள்:மறுப்புக் கடிதம் சிரியாவில் பல்கலைகழகங்களில் முகத்திரைக்கே தடை. பர்தாவிற்கு அல்ல
அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
ஜூலை 21,2010 அன்று வெளியிட்ட உங்களது தினப் பத்திரிக்கையில் பக்கம் 23ல் வெளிநாட்டு விநோதங்கள் என்ற பகுதியில் வெளிவந்த செய்தி எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அச்செய்தி இதுதான் "சிரியா நாட்டு பல்கலை கழகங்களில் பர்தா அணிய தடை" அதுமட்டுமின்றி அத்தடைக்குரிய காரணமாக தாங்களே வெளியிட்ட செய்தி என்னவெனில் "பர்தா அணிவது சிரியா பல்கலை கழகங்களின் பாரம்பரியத்திற்கும், கல்விச் சூழலுக்கும் எதிராக இருப்பதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது."
உங்களுடைய செய்தி உண்மைச் செய்தியை திரித்து வெளியிட்டு உள்ளதை நாங்கள் காண்கிறோம்.எதார்த்தத்தில் இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள நேரிடலாம். 'என்னப்பா முஸ்லிம் நாட்டிலேயே பர்தாவுக்கு தடையாம்!, அதுவும் கல்விச் சூழலுக்கு எதிரானதாம் பர்தா" என்று பொதுமக்கள் எண்ணவைப்பதாக உங்கள் செய்தி வெளியாகி இருக்கிறது.
தயவு செய்து செய்தியினை முழுமையாகப் படிக்க வேண்டும்.மிகவும் பிரசித்திப் பெற்ற 'அரப் நியூஸ்' என்ற பத்திரிக்கை வெளிட்ட இந்த செய்தியை உங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன்.
சிரியா அரசாங்கம் பல்கலைக் கழகங்களில் 'முகத்திரை ('Niqab' அல்லது 'Face veil') அணிவதை தடை செய்து இருப்பதாகத்தான் உள்ளதே தவிர நீங்கள் எழுதியிருப்பது போல் 'பர்தா' அணியத் தடை இல்லை.
மேலும் நீங்கள் செதுக்கியிருக்கும் விதம் 'பர்தா கல்விச் சூழலுக்கு எதிரானதாகும்'. எந்த ஒரு 'செய்தி நிறுவனமும்' இது போன்று பிரசுரித்ததாகத் தெரியவில்லை.
'அசோசியேட் பிரஸ்ஸாக' இருக்கட்டும் 'REUTERS' ஆக இருக்கட்டும். சிரியா அரசு பல்கலை கழகங்களில் 'முகத்திரை' அணிவதை தடை செய்துள்ளதற்கு காரணம் அது 'சிரியாவின் சமயச் சார்பற்ற அடையாளத்தை பாதுகாப்பதற்காக' என்பது மட்டுமே.
ஆக மொத்தத்தில் உங்கள் பத்திரிக்கை செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகிறது.
முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தைப் பற்றி எழுதும்பொழுது அந்த மதத்தைப் பற்றிய அறிவு எழுதுபவர்க்கு நிச்சயம் அவசியம். ஒரு தவறான கருத்தை பரப்பியிருக்கிறீர்கள்.இதற்கு மாற்றுப் பரிகாரம் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
என்றும் உண்மையே நாடும்
முஹம்மது இஸ்மாயீல்
ஷார்ஜா, யு.ஏ.இ.
thanks to : முஹம்மது இஸ்மாயீல் & பாலைவனத் தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக