வியாழன், 22 ஜூலை, 2010

நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்

நான்கு வாரமாக ஜம்மு காஷ்மீர் மாநில தலை நகரான ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் தொழுகை நடை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீநகர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள முக்கிய பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

பள்ளிவாசல்களை நோக்கி செல்லும் சாலைகள் சி.ஆர்.பி.எஃப் காவல்துறையினரால் மூடி வைக்கப்பட்டிருப்பதாக ஏஜென்சி இந்தியா பிரஸ் கூறியிருக்கிறது.

ஆனால் காவல்துறை இதனை மறுத்திருக்கிறது. பள்ளிவாசல் பகுதிகளில் ராணுவம் நிலைநிறுத் தப்படவில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் ஷவுகத் ஹூஸைக் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு 100 மீட்டருக்கு இடையிலும் வாகனத்தடையை சி.ஆர்.பி.எப் காவல்துறையினர் ஏற்படுத்தியிருப்பதாக காஷ்மீர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


ஜம்முகாஷ்மீர் மக்களின் வழி பாட்டு உரிமை நான்காவது வார மாக மறுக்கப்பட்டிருக்கிறது இது தொடர்வது நல்லதல்ல என சமூகநல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: