புதன், 14 ஜூலை, 2010

அன்சாரியை மீண்டும் கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்ய முதல்வரிடம் தமுமுக தலைவர் கோரிக்கை

தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வர் கலைஞருக்கு எழுதிய கடிதத்தின் விபரம்.

கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 13 வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன் தண்டனைக் காலத்தைக் கழித்துவந்த முஹம்மது அன்சாரி திடீரென சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடுமையான நீரழிவு நோயாலும், இருதய நோயாலும் அவதிப்பட்டு வரும் முஹம்மது அன்சாரிக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.

முஹம்மது அன்சாரியின் குடும்பத்தார் அனைவரும் கோவையில் வசித்து வரும் நிலையில், சிறைமாற்றம் செய்த காரணத்தால் அவரது குடும்பத்தாரும், குழந்தைகளும் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே முஹம்மது அன்சாரியின் உடல்நிலையையும், அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளின் சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் தங்களைக் கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

கருத்துகள் இல்லை: