சனி, 21 ஜூன், 2014

மோடி அரசின் முதல் பரிசு ரயில் பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு

இன்று முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான அரசு ரயில் கட்டணத்தை மிக கடுமையாக உயர்த்தியுள்ளது
மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டீசல் விலை உயர்வு . ஆட்சிக்கு வந்து ஓரு மாதத்தில் கட்டண உயர்வு மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


காங்கிரஸ் ஆட்சியில் ரயில் கட்டண உயர்வுக்கு  கண்டணம் தெரிவித்த மோடி
தன்னுடைய ஆட்சியல் 14.2 சதவீதம்  உயர்த்தியுள்ளார்

இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு.

இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு.
========================
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில், பெயிண்டிங் தொழி லாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவ கலந்தாய் வுக்காக விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்க அவருக்கு அழைப் புக் கடிதம் வரவில்லை. 197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (21-ம் தேதி) மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.

இது குறித்து நந்தினி கூறிய தாவது: மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிதேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால், எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய் வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும், புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர்.

 
நன்றி .இந்து

வியாழன், 19 ஜூன், 2014

உறவினர்கள் அடக்கம் செய்ய மறுத்த மாற்று மத சகோதரியின் உடலை தமுமுக நல்லடக்கம் ! !




உறவினர்கள் அடக்கம் செய்ய மறுத்த மாற்று மத சகோதரியின் உடலை தமுமுக நல்லடக்கம் ! !
இன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்காலில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கலோ அல்லது அந்த பெண்னின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது லால்பேட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் எடுத்துகொன்டு போய் ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் உதவி செய்தார்கள் ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள் சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யாஅல்லா சொர்கத்தை கொடுப்பாயக ஆமின்
{குறிப்பு:- மாலை மற்றும் அனைத்து சம்பரதாயங்களும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் செய்ப்பட்டு இருந்தது}

சிறையா இல்லை பிஜேபி அலுவலகமா ?

அரசாங்க அதிகாரியை கட்டி வைத்து அடித்ததற்காக சிறைக்கு சென்ற யஸ்வந்த் சின்ஹா அத்வானி சந்திப்பின் போது சிறையினுள் நடந்த பிஜேபி கூட்டம்.

அதென்ன சிறையா இல்லை பிஜேபி அலுவலகமா ?

நன்றி: ஆம் ஆத்மி

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு - எம்.பி. கவிதா


 தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு  -  எம்.பி. கவிதா

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!

நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!

ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில் அரங்கேற விடமாட்டோம் என்கிறார், TRS எம்.பி, கவிதா.

இதற்கு முன்னர், முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த நீதிமன்றம், பின்னர் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை காரணம் காட்டி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக குறைத்தது.

தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்ற அபத்தங்களை அரங்கேற விடமாட்டோம் என உறுதிப்படக் கூறியுள்ளார், தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா.

நிசாமாபாத் பாராளுமன்ற உறுப்பினரான கல்வகுந்தலா கவிதா (K. கவிதா) எம்பி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது:

முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு:

ஆந்திராவில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே நாங்கள் படாத பாடு பட்டோமே, நீங்கள் 12% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரசோடு எங்களை ஒப்பிடாதீர்கள், காங்கிரஸ் அரசில், பெயரளவில் அமைச்சராக்கப்படும் முஸ்லிம்களுக்கு, சிறுபான்மை நலத்துறை, வக்ப் வாரியம் உள்ளிட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.

நாங்களோ, முஸ்லிமுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துள்ளதோடு, வருவாய்த்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்.

11 அமைச்சர்களைக் கொண்ட தெலுங்கானா அமைச்சரவையில், மேலும் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளது என்றார், கவிதா.

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் உச்சநீதிமனறம், தமிழகத்தில் உள்ள 69%, கர்நாடகத்தில் அமலில் உள்ள அதிகப்படியான சதவிகித இட ஒதுக்கீட்டை குறித்து வாய் திறக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் இட ஒதுக்கீடு விஷயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் "KCR" (K Chandrashekhar Rao), மிகவும் தெளிவான பார்வையோடும் தீர்க்கமான முடிவோடும் இருக்கிறார், என்றார், அவர்.

தற்போது அமலில் உள்ள (OBC 25%, SC 15%, ST 6% MUSLIM 4% = Total 50%) என்பதை மாற்றியமைத்து,

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, தெலுங்கானாவில், இட ஒதுக்கீட்டின் அளவை 64% அளவுக்கு உயர்த்தி சட்டம் இயற்றப்படும் என்றார் கவிதா எம்.பி.


நன்றி: https://www.facebook.com/maruppu.in 

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...
எனவே, மேல்முறையீட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.”
16-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த மே 16 அன்றுதான் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் இ.கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. 33 பேர் கொல் லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்பற்றிய தீர்ப்பு அது.
அக்‌ஷர்தாம் கோயில் தாக்குதல்
குஜராத் தலைநகர் காந்திநகரில் அக்‌ஷர்தாம் கோயில் மீது 24-9-2002 அன்று தாக்குதல் நடத்தத் தொடங்கிய பயங்கரவாதிகள், அடுத்த நாள் காலை வரை தாக்குதலைத் தொடர்ந்தனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் காயமடைந்தனர். இந்தக் கொலைக்கும் தாக்குதலுக்கும் காரணமான பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அவர்களோடு சேர்ந்து சதி செய்தவர்கள் என்று ஆறு பேர் மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் 1.7.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல் கயூம் முஃப்தீசாப் முகமது பாய், சந்த்கான் ஆகியோருக்கு மரண தண்டனையும், முகமது சமிம் ஹனீப் சேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல்லாமியா யாசீன்மியாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அல்ட்டாஃப் மாலீக்குக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 2010-ல் உறுதிசெய்தது. இதன் மீதான மேல்முறையீட்டின் மீதுதான் தண்டனைகளையும் குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. மாறாக, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுவித்தும், குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து தண்டனைகளை ரத்துசெய்ததற்கான பல காரணங்களை உச்ச நீதிமன்றம் தனது 281 பக்கத் தீர்ப்பில் கூறியுள்ளது. அதில், ஒரு அம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மரண தண்டனை விதித்ததற்குக் காரணமாக இருந்த வற்றில் முக்கியமானவை என்று பொடா நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவை, பயங்கரவாதிகளுக்கு ‘சதிகாரர்களால்' உருது மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு கடிதங்கள்.
இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒருவர் உடலில் 46 குண்டுகளும், மற்றொருவர் உடலில் 60 குண்டுகளும் துளைத்திருந்தன. அவர்களின் ஆடைகள் முழுவதும் ரத்தமும் சேறுமாக இருந்தது. அப்படி இருந்தபோது அவர்கள் சட்டையில் இருந்த கடிதங்கள் மட்டும் புத்தம் புதிதாக மடிப்புக் கலையாமல் இருந்திருக்கின்றன. இதிலிருந்தே அவை, குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காகப் பின்னர் சேர்க்கப்பட்டவை என்பது எளிதில் விளங்கும்.
நீதி பிழைத்தது
உச்ச நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், நிச்சயமாக மூன்று பேரும் தூக்கிலிடப் பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர்களும் உறவினர்களும் வழிவழியாக ஒதுக்கப்பட்டும், சபிக்கப்பட்டும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை கொடூரமான நிகழ்வு இது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகள் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இந்த உண்மை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
இப்படி நடப்பது முதல்முறையும் அல்ல. இதுவே, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை.
8-9-2006-ல் மகாராஷ்டிரத்தின் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் சி.பி.ஐ-யால் முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
2013 வரை ஏழு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறையில்தான் இருந்தனர். சி.பி.ஐ. விசாரித்து, இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று வழக்கைக் கொண்டுசென்ற பின்னர், எதிர்பாராதவிதமாக இந்தக் குற்றத்தைச் செய்ததாக அசீமானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னர்தான் அந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும் வெளியே வந்தனர். இல்லையேல், அவர்களில் சிலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்திருக்கக் கூடும். அவர்களது குடும்பத் தினருக்குப் பழிச்சொற்கள் பட்டமாகக் கிடைத்திருக்கும்.
மிகப் பெரிய அவமானம்
இன்னொரு முக்கியமான வழக்கு, ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர் பானது. இந்த வழக்கிலும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அசீமானந்தா. அதற்கு முன்னதாக 70 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த மூன்று வழக்குகளும் ஒன்றை வெளிப்படுத்து கின்றன. முதலாவது வழக்கு, குஜராத்தில் நடந்தது. அங்கு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மலேகான் வழக்கும் மெக்கா மசூதி வழக்கும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் நடைபெற்றன. இந்த வழக்குகளை விசாரித்ததில் மாநிலத்தில் உள்ள புலனாய்வுக் குழுக்கள் மட்டுமின்றி மத்திய புலனாய்வுக் குழுவும் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அந்தக் குற்றங்களில் தொடர்பே இல்லாத 70 பேர், ஆறு ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆளும் அரசு என்பதையும் தாண்டி, சிறுபான்மை வெறுப்பு அரசு நிறுவனங்களுக்குள்ளும் புகுந்திருப்பது ஆபத்தான அறிகுறி.
இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 25-க்கும் குறைவு. இளமைக் காலத்தின் பொன்னான காலத்தைக் குற்றமேதும் செய்யாமலேயே சிறையில் கழித்துள்ளனர். வெளியே வரும்போது குடும்பமும் சமூகமும் இவர் களைச் சந்தேகத்துடனேயே பார்க்கும். ஒருவேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியும் ‘பயங்கரவாதிகளின் சந்ததி' என்று சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் நீதி வழங்கும் முறைக்கும், ஜனநாயகத்துக்கும் இது மிகப் பெரிய அவமானம். ஆபத்தானதும்கூட. இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
க. கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் - சி.பி.ஐ.(எம்)- தொடர்புக்கு: kanagaraj@tncpim.org

நன்றி :
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article6124157.ece?homepage=true&theme=true

செவ்வாய், 17 ஜூன், 2014

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.

இன்று !

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.

வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது - இதை படித்து விட்டு விரும்பினால் ஷேர் செய்யுங்கள்

''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.''என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்?

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,

தகவல் உதவி - பரிமள ராசன்

ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது. இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது

தகவல் உதவி - kuttapusky



மனியாட்சியில் சுட்டு கொல்லப்பட்ட .....!
கலெக்டர் ஆஸ் துரையின்
நினைவாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட
நினைவு சின்னம் Aazhi Aazhi Aazhi.

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் புகைப்படங்கள்








இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை- இந்திய அரசு தலையிட திருமாவளவன் கோரிக்கை

 
 
சென்னை: இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் கொழும்பு அருகே இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அளுத்கமா, பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச் சேர்ந்த பவுத்தத் துறவிகள் இசுலாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். மசூதிகள் மீதும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிங்கள, பவுத்த ஆதிக்க வெறியர்களின் இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ‘பொதுபலசேனா' என்னும் அமைப்பைச் சேர்ந்த புத்தத் துறவிகளே இந்தக் கொடூரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இசுலாமியர்களின் புனித நூலான குர்ஆனையும் தீயில் எரித்து வெறியாட்டம் ஆடியுள்ளனர். சிங்கள, பவுத்த இனவெறிக் கும்பலின் காட்டுமிராண்டித் தனமான இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திலிருக்கும் இராஜபக்சே வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனை பவுத்தத் துறவிகளுக்கான எச்சரிக்கையாக புரிந்துகொள்ள இயலாது; இசுலாமியர்களுக்கு எதிரான எச்சரிக்கையாகத்தான் புரிந்துகொள்ள முடியும். எனவே, இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு சிங்கள அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும். இசுலாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு பவுத்தத் துறவிகளின் இந்த வெறியாட்டமே ஒரு சாட்சியமாக உள்ளது. எனவே, இலங்கையில் வாழும் தமிழர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு இந்திய அரசு உரிய வழிவகை காண வேண்டும் இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆதார் அட்டை திட்டம் கைவிடப்படுகிறது. கூடங்குளம் ?

ஆதார் அட்டை திட்டம் கைவிடப்படுகிறது. கூடங்குளம் ?

ஏறக்குறைய 50,000 ஆயிரம் கோடி செலவு செய்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் கைவிடப்படுகிறது.

இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் பலதலைமுறைகளை பாதிக்கும் கூடக்குளம் அணுஉலை திட்டத்தை கைவிடச்சொன்னால், அனைவரும் சேர்ந்து, தேசவிரோதி, அந்நிய நாட்டு கைகூலி என்கிறார்கள்.

17,000 கோடி செலவு செய்தாகி விட்டது இனி திட்டத்தை நிறுத்த முடியாது என்றவர்கள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்.

ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும்போதே அதை நிறுத்த போராட வில்லை என்று வரலாறு தெரியாமல் சொல்பவர்கள் ,சொன்னவர்கள் இப்போது ஆதார் அடையாள அட்டை திட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும்.

இரண்டுமே தேவைஇல்லாத ஆணி தான்.

அணு உலையை விட இரு மடங்கு செலவு செய்த திட்டத்தையே நிறுத்தும் போது பல தலைமுறைகளை பாதிக்கும் அணு மின் திட்டத்தை ஏன் நிறுத்தக்கூடாது ???????

நன்றி - ஜான் கிறிஸ்டோபர்

திங்கள், 16 ஜூன், 2014

சீட் வாங்கித் தர 'தரகு' வேலை பார்த்த ராம்தேவ்.. பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ வெளியிட்ட தகவல்கள்

 
டெல்லி: லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதாவில் போட்டியிட பலருக்கும் சீட் வாங்கித் தந்த தரகு வேலையில் யோகா குரு பாபா ராம்தேவ் ஈடுபட்டார் என்பதை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் பாடகருமான பாபுல் சுப்ரியோ அம்பலப்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தின் அசன்சோல் லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக நின்று வென்றவர் பாபுல் சுப்ரியா. வங்கமொழி பத்திரிகையான அனந்தபஜார் பத்திரிகாவில் நேற்று அவர், தமக்கு பாஜகவில் எப்படி சீட் கிடைத்தது என்ற திடுக்கிடும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 
இதுபற்றி பாபுல் சுப்ரியோ எழுதியுள்ளதாவது: சீட் வாங்கித் தர 'தரகு' வேலை பார்த்த ராம்தேவ்.. பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ வெளியிட்ட திடுக் தகவல்கள பிப்ரவரி 28-ந் தேதியன்று விமானத்தில் பயணம் செய்த போது எனக்கு அருகே பாபா ராம்தேவ் அமர்ந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட பலருக்கும் சீட் வாங்கிக் கொடுத்த கதையை விவரித்துக் கொண்டிருந்தார் ராம்தேவ். அப்போது யதேச்சையாக, எனக்கும் பாஜகவில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுங்கள்.. எனக்கு சீட் வாங்கித் தரவில்லையெனில் நீங்கள் சீட் வாங்கித் தரும் ரகசியத்தை பத்திரிகைகளில் சொல்லிவிடுவேன் என்று நகைச்சுவையாக மட்டும்தான் கூறினேன். பின்னர் என்னுடைய தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுமாறு அவரது உதவியாளரிடம் கூறினார். அதன் பிறகு மார்ச் 1-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் "பாபா உங்களைப் பற்றி எங்களிடம் சொல்லியிருக்கிறார். உங்களால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்? 70 லட்சம் ரூபாய் என்பது லிமிட்.. அதற்கு மேலும் சிலர் செலவு செய்கிறார்கள் என்றார். ஆனால் நானோ, மோடிஜியை நேசிக்கிறேன். அதனால்தான் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.. என்னால் பணம் எல்லாம் செலவு செய்ய முடியாது என்று கூறினேன். அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பின்னர் ராம்தேவ், என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது, உங்களுக்கு சீட் உறுதியாகி இருக்கிறது என்றார். நானோ என்னால் பணம் செலவழிக்க முடியாது என்றேன். அதற்கு சிரித்துக் கொண்டே பாபா ராம்தேவ், அதை பாரதிய ஜனதா கட்சி பார்த்துக் கொள்ளும். ஆனால் நீங்கள் என்னிடம் பவன் முக்தா ஆசனம் (வாயுவை எப்படி உடலில் இருந்து வெளியேற்றுவது) கற்றுக் கொள்வேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்றார். மார்ச் 7- ந் தேதியன்று மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் ராகுல் சின்ஹா எனக்கு போன் செய்தார். அசன்சோல் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதில் ஆட்சேபனை எதுவும் இருக்கிறதா என்றார். நான் ஏன் அசன்சோல் தொகுதி என்றேன். அதற்கு, அசன்சோல் ஹிந்தி பெல்ட். நீங்கள் அந்த மொழியை சரளமாக பேசுகிறீர்கள். நாம் கடினமாக வேலை செய்தால் அங்கு வென்றுவிட முடியும் என கருதுகிறேன் என்றார். இவ்வாறு அந்த பத்திரிகையில் பாபுல் சுப்ரியோ எழுதியுள்ளார். இந்த கட்டுரை பற்றி பாபுல் சுப்ரியோவிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட கேட்ட போது, இதன் தொடர்ச்சி அடுத்த வாரமும் வர இருக்கிறது.. அதில் இன்னமும் சுவாரசிய தகவல்கள் இடம் பெறும் எனக் கூறி கொளுத்திப் போட்டிருக்கிறார்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

இலங்கையில் ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் எரிப்பு; பள்ளிவாசல் மீதும் தாக்குதல்!



அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் பல பேரின வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு உள்ளிட்ட சில கடைகள் மீது தீ வைக்கப்பட்டள்ளதாகவும் மற்றும் சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கம நகரில் இன்று மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டமொன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தர்கா நகர் பிரதேசத்தினை நோக்கி பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தியதுடன் பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் மீது கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
இதனால் அங்கு கைகலப்பு மற்றும் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு அனைவரையும் கலைத்ததுடன் அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களிலுள்ள சில முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பெண்னின் கணவர் உள்பட 10 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்




மத்தியப் பிரதேசத்தில் பெண்னின்  கணவர் உள்பட 10 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

பலாத்காரத்துடன் தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட பெண்னிடம் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்கள்

இந்தியா எதை நோக்கி செல்லுகிறது

கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள்?

கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள்?
[1] 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி நடந்துவிட்டது, அது அங்கேப் போயிற்று, இங்கேப் போயிற்று என்கிறீர்கள். ஏன் ஒரு மாநில முதல்வர் கூட எங்கள் மாநிலத்துக்கு இவ்வளவு கூடங்குளம் மின்சாரம் வருகிறது என்று இதுவரை சொல்லவில்லை?
[2] சூப்பர் டூப்பர் அணுமின் நிலையத்தை இதுவரை தேசத்துக்கு அர்ப்பணிக்கவில்லை ஏன்?
[3] பிரதமர் மோடி கூடங்குளம் வந்து அணுமின் நிலையத்தை திறந்து வைத்து, இங்கே எந்தக் குளறுபடிகளும் நடக்கவில்லை, கோளாறுகளும் இல்லை, பரிபூரண பாதுகாப்புடன் இருக்கிறது என்று உத்தரவாதமளித்துச் செல்வாரா?
[4] இதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரித்த மின்சாரத்தால் எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது?
[5] கடந்த 17 மாதங்களில் சுமார் 5.25 கோடி ரூபாயை உங்கள் ஊழியர்களின் மருத்துவப் பிரச்சினைகளுக்கு செலவு செய்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் கண் மருத்துவத்துக்கென நாகர்கோவிலிலுள்ள ஒரு கண் மருத்துவமனையில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உங்கள் ஊழியர்களின் கண் பிரச்சினைக்கு காரணம் என்ன? அருகாமையிலுள்ள பொதுமக்களின் கண்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
யூன் 15, 2014

சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் லீலைகள் -பட்டுக்கோட்டை டாக்டரின் காம வெறியாட்டம் !!ஓர் அதிர்ச்சி ரிபோர்ட் !!!


சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் லீலைகள் -பட்டுக்கோட்டை டாக்டரின் காம வெறியாட்டம் !!ஓர் அதிர்ச்சி ரிபோர்ட் !!!

பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள்' என்ற தலைப்பில் இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தி.

பெண்களே உசார்... உசார்..

இரு நாள் இலவச ஊடகவியல் பயிற்சிமுகாம்




ஊடகத்துறையை விரும்பும் மாணவர்கள், இளைஞர்களுக்கு
ஆகஸ்ட் 2-3, 2014 இல் சென்னையில் இரு நாள் இலவச ஊடகவியல் பயிற்சிமுகாம்: அச்சு, தொலைக்காட்சி. இணைய ஊடகங்களுக்காக.

*

மக்கள் இணையம் கட்சியின் புதிய முன்னணி அமைப்புகளான தமிழ்நாடு மாணவர் இணையம், தமிழ்நாடு இளைஞர் இணையம் ஆகியவை சார்பாக வெளிவரவுள்ள இதழ், இணைய தளம் மற்றும் யூட்யூப் அலைவரிசைகளுக்காக தமிழ்த் தேசிய ஆர்வம் கொண்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு இலவச ஊடகப் பயிற்சியை அளிக்கவுள்ளோம். சிறந்த ஊடகவியலாளர்களும் நிபுணர்களும் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். 20 இருக்கைகள் மட்டுமே.

ஆர்வம் இருந்தும் திறமையை வளர்க்காத ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட பணி வாழ்க்கையிலும் மிளிரமுடியாது, சமூகத்துக்கும் பயனுடையதாக பணியாற்றமுடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். எனவே தமிழக நலனில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் இணைந்து இந்தப் பயிற்சியை அளிக்கவுள்ளோம். பயிற்சிபெறும் இளம் தலைமுறையினருக்கு தமிழ்நாடு மாணவர் இணையம், தமிழ்நாடு இளைஞர் இணையம் நடத்தவுள்ள அச்சு இதழ், இணையதளம் மற்றும் YouTube அலைவரிசையில் பங்களிக்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.

ஆர்வம் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை zsenthil@gmail.com இல் தொடர்புகொள்ளவும்.


நன்றி : Senthil Nathan

சனி, 14 ஜூன், 2014

உவைசியின் 11.06.2014 அன்றைய பாராளுமன்ற உரை கவனிக்கப்படவேண்டியவை:

 

உவைசியின் 11.06.2014 அன்றைய பாராளுமன்ற உரை கவனிக்கப்படவேண்டியவை:

ஓட்டு மொத்த பாராளுமன்றமே பேசவிடாமல் கூச்சல் இடும் போதும், தனி மனிதனாக, நிதானமாக, சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விட்டார்.. முஸ்லிம் தலைவர்கள், பேச்சாளர்கள் இதில் இருந்து படிப்பினை பெற வேண்டும். குறிப்பிட்ட மாநிலத்தின், தொகுதியின் உறுப்பினராக இருந்தாலும், ஆந்திர, குஜராத், புனே, காஷ்மீர் பண்டிட், முஸ்லிம்கள் போன்ற அனைவரின் பிரச்சனைகளையும் கொடுத்த நேரத்தில் பேசிவிட்டார். BJPயினர் கூச்சலிட்டபோது, கோபப்படாமல் மோடியை வாழ்த்தினார். அவர் கூறிய சில விஷயங்கள்:
 1) இங்கே முஸ்லிம் வோட் பங்க் என்ற குற்றச்சாட்டை வைத்த நீங்கள், அதை உடைத்து ஹிந்து வோட் பங்க் என்ற ஒன்று இருப்பதை இந்த தேர்தலில் நிருபித்து உள்ளீர். அதற்காக மோடியை பாராட்டி கொள்கிறேன்.
2) பஸ்வான் குஜராத் கரை மறக்க படவேண்டும் என்று கூறினார். இந்த நாட்டை உலுக்கிய 4 துயர சம்பவம்: காந்தி படுகொலை, சீக்கியர் படுகொலை, பாப்ரி மஸ்ஜித் உடைப்பு, குஜராத் சம்பவம்.
3) இதை செய்தவர்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வரும் போது, விரைவில் கோட்சேக்கு பாரத ரத்னா கொடுக்க படலாம்.
 4) இந்த நாட்டின் சிறப்பு மத சார்பின்மை.. அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக புனே போன்ற நகரங்களில் கலவரம் துவக்க பட்டுள்ளது. (காஷ்மீர் பண்டிட்டுகள் பற்றி கூச்சல் வந்த போது) அவர்களும் வெளியேறிய காஷ்மீர் முஸ்லிம்களும் நாட்டுக்கு திரும்பி அனுப்ப பட வேண்டும்.
5) தெலுங்கானாவில் உள்ள சில பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த போது அவையில் உள்ள சிலர் கை தட்டினார்.
 6) INCLUSIVE POLITICS பற்றி அரசு பேசிவருகிறது.. அது உண்மை என்றால் ஏன் 21 முஸ்லிம் MP மட்டுமே இருக்க வேண்டும்... சிறுபான்மயினருக்கான 4.5 சதவித இட ஒதிக்கீடு என்ன ஆச்சு.. நான் முஸ்லிம்களை பற்றி பேச வில்லை.. சிறுபான்மையனர் என்பது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்த மத மக்கள்.
8) குஜராத் அக்ஷர்தாம் கைதிகளை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. 11 வருடம் வாழ்க்கையை துளைத்து விட்ட தனது ஆட்சியில் கைது செய்யப்பட்ட இந்த அப்பாவிகளை பார்த்து மோடி மணிப்பு கேட்பாரா?
 9) இறுதியாக நான் ஜாஃப்ரியின் மகனாக நிற்கிறேன், இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கிறேன், எனக்கு குஜராத் படுகொலைக்கு நீதி வேண்டும்.
----------------------------------------------------------------------------------------


“#Pyrrhic_victory அப்படின்னா என்னன்னா.
கிரேக்க மன்னர் பிர்ரஸ், ரோமானியப் பேரரசின்மீது போர் தொடுக்க நினைத்து, மதியூகம் மிக்க ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கவர், “இப்போரில், உன்னால் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்திவிட முடியும்” என்றார். மகிழ்ந்துபோன மன்னன், ரோம் மீது படையெடுத்து வெற்றியும் கண்டான். ஆனால் வீழ்ச்சியோ அவனுக்குத்தான்!!

ஆம், அந்த அளவு இழப்பு அந்த போரில் பிர்ரசுக்கு. தலைசிறந்த தளபதிகளும், வீரர்களும் மடிந்துவிட்டனர். தோல்வியடைந்த ரோமப் பேரரசிலோ, தோல்வியே பெரும் எழுச்சியைத் தந்ததில், மீண்டும் வலிமையான படையைத் திரட்ட முடிந்தது.

இதுதான், “பிர்ரிக் வெற்றி” என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இப்படியும் சொல்லலாம்: “ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷண்ட் டெட்!”
_______

பார்லிமெண்டில் அசாதுத்தீன் உவைஸி “#Pyrrhic_victory" என்று மோடியின் வெற்றியை வர்ணித்தார்
___________________________________________________________________
Pyrrhic_victory பதிவுக்கு நன்றி .Hussain Amma

வியாழன், 12 ஜூன், 2014

பாலைவனமாகும் காவேரி டெல்டா:மீத்தேன் ஆவணப்படம் வெளியீடு.

பாலைவனமாகும் காவேரி டெல்டா:மீத்தேன் ஆவணப்படம் வெளியீடு.

இப்படம்மே பதினேழு இயக்கத்தின் ”நிமிர்” வெளியீடாக தோழர்களின் பல மாத கால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் (ஜீன் 15 ம் தேதி) திருப்பூர் ஹோட்டல் அரோமா வில் மாலை 5.30க்கு இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் திரையிடலும், அறிமுக நிகழ்வும் நடைபெற உள்ளது..

மீத்தேன் பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் இப்படமும் ஒரு ஆயுதமாகப் பயன்படும் என்று நம்புகிறோம்.

இந்த அறிமுக நிகழ்வில் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் அயோக்கியத் திட்டத்தினை அம்பலப்படுத்துவோம்.

செவ்வாய், 10 ஜூன், 2014

புனே முஸ்லிம் இளைஞர் படுகொலை இந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள்



கடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.
இந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
மேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.
கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.
காவிக்கயவர்கள் நம் தாய் திரு நாட்டில் இந்து முஸ்லிம் மக்கள் இடையே குழப்பங்களை விளைவித்து கலவரங்களை ஏற்ப்படுத்தி,பல உயிர்களை அதற்க்கு இரையாக்கி அதன் மூலம் குளிர்க் காய நினைக்கின்றனர்.ஆனால் இது போன்ற சமபவங்கள் மூலம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் சகோதரத்துவத்தையும்,அமைதியையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கொருவர் இணக்கத்தையும் விரும்புவதையே நமக்கு உறுதிப் படுத்துகிறது.
மேலும் நம் இரு சமூகம்திர்க்கு இடையே ஒரு மிகப் பெரிய புரிந்துணர்வை இது போன்ற சம்பவங்கள் ஏற்ப்படுதுவிடுகின்றனர்
வாழ்க சகோதரத்துவம்!! வளர்க இந்தியா !!

மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துவரும் என எச்சரிக்கிறார் நடிகை நந்திதா தாஸ்...!!



நரேந்திரமோடி ஆட்சியின் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அஞ்சுவதாக பிரபல நடிகையும் இயக்குநரும் எழுத்தாளருமான நந்திதா தாஸ் கூறினார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் இதை கூறுவதாகவும் நந்திதா தாஸ்“அவுட் லுக்’’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். “நான் உடனே எதிர்பார்ப்பதும் மிகவும் பயப்படுவதும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் தான். மக்களின் மனதைமாற்றவும் அரசுகளை மாற்றவும் முடிகின்ற வகையில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் ஜனநாயக ரீதியிலும் கண்ணியத்துடனும் குரல் எழுப்பவும் வாய்ப்புஇருப்பதால் தான் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது.

அருவெறுக்க தக்க தணிக்கைமூலமும் விஷமத் தனமான நடவடிக்கைகளின் மூலமும் விமர்சகர்களின் வாயை அடைக்கவே பாஜகவும் அவர்களை ஆதரிக்கின்றவர்களும் எப்போது முயன்று வந்துள்ளனர்’’. என்றும் நந்திதா தாஸ் சுட்டிக் காட்டுகிறார்.ஃபயர் திரைப்பட வெளியீட்டு விழாவின் போதும் வாட்டர் திரைப்பட படப்பிடிப்பின் போதும் இத்தகைய பிரச்சனைகளை நானே சந்திக்க வேண்டியதாயிற்று என்று அவர் தனது கட்டுரையில் நினைவு கூர்கிறார்.மதச்சார்பற்ற கட்சிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தான் தெரிவித்த கருத்துகூட மோடி ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “குழந்தையை தூக்கிக் கொண்டு பாகிஸ்தானுக்கு செல்’’ என்று அவர்கள் டுவிட்டர் மூலம் தன்னை மிரட்டினார்கள் என்றும் நத்திதா தாஸ் கூறுகிறார்.குஜராத் கலவரத்தை அடிப்படையாக வைத்து தான் தயாரித்த ஃபிராக் என்ற திரைப்பட விஷயத்திலும் இத்தகைய மிரட்டல்கள் வந்தன.

“ ஒரு கலைஞர் என்ற முறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்கப்படலாம் அச்சுறுத்தப்படலாம், என்ற நிலைமை தான் இப்போது எனக்கு உள்ளது என்றுதோன்றுகிறது. ஊடகங்கள் தங்களுக்கு தாங்களே தணிக்கையை ஆரம்பித்து விட்டதாகவும் தோன்றுகிறது. பிரச்சனை எதுவும் வந்துவிட க் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

இது என்ன நேரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். கூடாது என்று சொல்கின்றவர்கள் குறைந்து வருகிறார்கள்’’. என்றும் நந்திதா தாஸ் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.குஜராத் மாடல் வளர்ச்சி குறித்த பிரச்சாரத்தின் போலித்தனத்தையும் நந்திதா தாஸ் சுட்டிக் காட்டுகிறார். சாதாரண பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலின் படி கூட மகாராஷ்டிராவும், பீகாரும், தமிழ்நாடும், குஜராத்தை மிஞ்சி நிற்கின்றன. வெற்றியின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல “வளர்ச்சி’’ முழக்கத்தின் பின்னணியில் பிளவுவாத அரசியல் மறைந்திருப்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது பாஜக வின் தேர்தல் பிரச்சாரம்.அமித்ஷா, பிரவீன் தொகாடியா போன்றவர்களின் பேச்சுக்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற எல்லா தலைப்பாகைகளையும் அணிந்து கொண்ட மோடி, முஸ்லிம் தொப்பியை அணிய மறுத்ததும் இதைத் தெளிவாக்குகிறது என்றும் நந்திதா தாஸ் கூறுகிறார்.


நன்றி :Theekkathir Tamil Daily

திங்கள், 9 ஜூன், 2014

புனே கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


கடந்த வாரம் புனேயில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் முஃஸின் ஷேக் 30 க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பலால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் இன்னும் 2 முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டது. காலையில் தொடங்கிய இந்த வன்முறை மறுநாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
தற்போது அந்த கலவரத்தை ஆராய்ந்த குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது, அதில் சம்பவம் நடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ம் தேதிகளில் குறிப்பிட்ட சில பேக்கரி மற்றும் முடி திருத்தும் கடைகள் சரியாக கலவரம் நடக்கும் நேரத்தில் மூடி இருந்தது, அவர்களுக்கு எப்படி தெரியும் அது மட்டுமல்லாது மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்த கடைகளின் பெயர்கள் உள்ளன, அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
ஆனால் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து கடைகளும் உருது மொழியில் எழுதப்பட்ட முஸ்லிம்கள் கடைகளாகும், ஆகவே, முன் கூட்டியே இந்துக்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கியதாக, திட்டமிட்ட செயலாகவே உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது
Sources:- 

http://timesofindia.indiatimes.com/india/Violence-that-killed-Pune-techie-planned/articleshow/36268460.cms

http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31805&articlexml=Violence-against-Pune-Muslims-appears-planned-09062014007028

சனி, 7 ஜூன், 2014

சிறுபான்மை சகோதர்கள் மீது அக்கறை கொண்டு என் அருமை நண்பர்களே..சகோதர்களே ஒரு முக்கிய செய்தி ஒரு நிமிடம் இங்கு வாருங்கள் சகோ

சிறுபான்மை சகோதர்கள் மீது அக்கறை கொண்டு என் அருமை நண்பர்களே..சகோதர்களே.. கீழே கொடுக்கப்பட்ட அறிக்கையை காப்பி செய்து அதன் இறுதியில் உங்கள் பெயர் குறிப்பிட்டு CM Cellக்கு மெயில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.. மெயில் முகவரி கீழே உள்ளது.

--------------------------------------------
மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களே , மரியாதையை குரிய உள்துறை செயலாளர் அவர்களே,நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் என்ற கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்ததும் அங்கு ஜனநாயக முறைப்படி கருப்புக்கொடி காண்பித்ததும் அங்கு உள்ள ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்...

அதற்க்கு காரணம் அவரது கடந்த காலத்தில் மதமோதல் பேசும் அதன் மூலம் அவர்மீது வழக்கு 18க்கு மேல் இருப்பதினாலும் தான்...மேலும் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வந்தால் மதமோதல்கள் மற்றும் மல்லிபட்டினம் இந்து முஸ்லிம் நல்ல ஒழுக்கமுள்ள நட்பு கெட்டுவிடும் என்று முன் எச்சரிக்கை கொண்டு ஊர் மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை பொறுத்து கொள்ள முடியாத தஞ்சை பாரதிய ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அவர்கள் கட்சிசார்ந்த தொண்டர்கள் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.... பின்னர் இது வழக்காக்க காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது....

தற்போது இதற்காக சமாதான கூட்டமைப்பு ஒன்று நடந்துள்ளது... நாளையும் ஆர் டி ஒ அலுவலகத்தில் சமாதான கூட்டம் இருதரப்பில் நடை பெற உள்ளது....

தமிழகம் அமைதி பூங்காவாக இருந்துவரும் நேரத்தில் இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மல்லிபட்டினம் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டியமைக்கு பழிவாங்கும் எண்ணம் கொண்டு மல்லிபட்டினத்தில் மத மோதல்கள் நிகழ்த்தி அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று தீய எண்ணத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு சில பயங்கரவாதிகள் மல்லிபட்டினம் கடைவீதிகளில் வந்து நான்கு நபர்களை வெட்டிவிட்டு சென்று உள்ளனர். .. இதில் வெட்டப்பட்டதில் ஒருவர் ஊனமுற்றவர்.இதை தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்....

மற்றும் சில நாட்கள் கழித்து அடையாளம் தெரியாத சில நபர்களால் ரங்கசாமி என்ற நபர் புதுபட்டினத்தில் வெட்டபட்டார்... அவர் தான் வெட்டப்பட்ட காரணம் தன குடும்ப சொத்து தகராறு என்று தெளிவாக கூறியும் இருக்கிறார்....

ஆனால் காவல்துறை திட்டமிட்டு இதை திசை திருப்பும் வகையில் மல்லிபட்டினத்தில் நடந்த சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் பழிவாங்கி உள்ளதாக ஊகத்தின் அடிப்படைகளில் எந்தவித ஆதாரம் இல்லாமல் அப்பாவிகளை கைது செய்தவண்ணம் உள்ளனர்...இதை யாரோ தூண்டுதலில் மூலம்தான் காவல்துறை அப்பாவிகளை கைது செய்து சித்தரவதை செய்கின்றனர்....

இது சம்மந்தமாக 10 அப்பாவி இஸ்லாமியர்கள் மீது எப் ஐ ஆர் போட்டும் உள்ளனர். சம்மந்தப்பட்ட நபரோ சொத்து தகராறு என்று தெளிவாக கூறியபின்பும் கூட காவல்துறை அப்பாவிகள் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் நிலவுக்கூடிய அமைதி சீர்குலைக்க நோக்கம் மற்றும் மத மோதல்கள் வழிவகுக்கும் விதமாக காவல்துறை போக்கும் மிகுந்த கவலையையும் தருகிறது... உங்களிடம் நீதி வேண்டி இது சம்மந்தமாக சரியான அணுகுமுறைக்கு உத்தரவு விடும்படி கேட்டுகொள்கிறோம்.

பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட அப்பாவிகள் அனைவரும் விடுவிக்க தாங்கள் உத்தரவு விடவேண்டும். இது குறித்து தாங்கள் விரைந்து நடவடிக்க எடுக்கவேண்டும்.

இது சம்மந்தமாக அதிராம்பட்டினம் - மல்லிபட்டினம், உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் அமைதி திரும்ப தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.

இந்த பகுதி காவல்துறையினர் வேண்டும் என்றே சில சமூகவிரோதிகள் தூண்டுதலினால் இன்னமும் ஊருக்குள்ளேயே இருந்துகொண்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்....இது குறித்து தாங்கள் விரைந்து செயல்பட்டு அமைதி நிலவ செய்யும்படி வேண்டிகேட்டுகொள்கிறோம் .

இப்படி தமிழக குடிமகன்.

--- பெயர் ---

Contact us : Chief Minister's Special Cell ,
Secretariat,
Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

---------------------------------------------------------------------------------------

நம் சமுதாய சகோதர்களே...வெட்டு குத்து கூச்சல் என்று இல்லாமல் இதை காப்பி செய்து தாங்களும் தாங்களுடிய கடமை செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்......

வெள்ளி, 6 ஜூன், 2014

திட்டமிடப்பட்ட வன்முறை இசுலாமியர்கள் மீது நடத்தப்படுகிறது.




பூனா நகரில் 24 வயது இசுலாமிய பணியாளர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் கொலை செய்யப்பட்ட செய்தியை இந்து ராஸ்ட்ர சேனா என்கிற அமைப்பினர் “ முதல் விக்கெட் விழுந்திருக்கிறது” என்று குறுஞ்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட மோசினின் தந்தை,” கொலை செய்யப்பட்ட தினத்தின் மதியத்தில் கூட அவனிடம் பேசினேன். எங்களுக்கு மதக்கலவரம் பற்றிய அச்சம் இல்லை. ஏனெனில் பூனா பாதுகாப்பானது என்றே நாங்கள் நம்பினோம். அவன் ஒருவன் மட்டுமே எங்கள் குடும்பத்தினருக்கான வருமானத்தினை ஈட்டுபவன்” என்று சொல்லுகிறார். முகநூலில் ஏற்றப்பட்ட படங்களுக்கு எந்தவகையிலும் சம்பந்தப்படாத மோசின் கொலை செய்யப்பட்டது , மதவெறியின் உக்கிரத்தினை காட்டுகிறது.

பூனாவில் 500க்கும் அதிகமானோர் இசுலாமிய வீடுகளை தாக்கி அழித்திருக்கிறார்கள். பல வணிக கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. பல மசூதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இசுலாமிய மத குருமார் மீதும், மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. இசுலாமியருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. 20க்கும் மேற்பட்ட பேக்கரிகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அழிவுகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இசுலாமியர் குடியிருப்புப் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கி இருக்கிறார்கள். இப்படியாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதைப்பற்றிய பெரிய விவரங்களை, விவாதங்களை ஊடகங்களில் காணமுடிவதில்லை. மோடியின் வெற்றியின் கொண்டாட்ட மனநிலையை கலைத்துவிட விருப்பமில்லாமல் ஊடகங்கள் செயல்படுகின்றனவோ என அய்யம் எழுகிறது.

பூனே நகரில் இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறையை கண்டிப்போம். மனிதநேயமற்ற மதவெறிபிடித்த அரசியல் உடனடியாக எதிர்க்கப்படவேண்டியது. அப்பாவிகளை பலியிட்டு வளர்த்தப்படும் மதவெறி அரசியல் தடுத்து நிறுத்த ஒன்றாக குரல் கொடுப்போம்.

எக்காலத்திலும், மதவெறி மனிதர்களை வேட்டையாட அனுமதிக்கக் கூடாது.

http://caravandaily.com/portal/muslim-homes-mosques-madrassas-vandalized-in-pune-by-hindu-radicals/

(via) Thirumurugan Gandhi

நன்றி: https://www.facebook.com/palani.periaswamy


வியாழன், 5 ஜூன், 2014

மகாராஷ்டிரா புனேவில் ஓர் அப்பாவி இளம் முஸ்லிம் பொறியாளர் ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளால் அடித்தே கொலை

நிகில் திகோன் எனும் சமூக விரோதி, '#நிஹால்_கான்' என்ற போலி முகநூல் ஐடியில், முஸ்லிம் போல தம்மை காட்டிக்கொண்டு...

(ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் படி) மும்பை கலவர கொலைகார ரவுடி பால் தாக்கரே பற்றியும் போர்-ஒப்பந்த விதிமுறை மீறல் செய்து நயவஞ்சகமாக அப்சல் கானை கொலை செய்த மராட்டிய கோழை சிவாஜி பற்றியும் மற்றும் சில இந்து கடவுள்கள் பற்றியும் படம் போட்டதால்...

மகாராஷ்டிரா புனே வில் வன்முறை கலவரம் எல்லாம் நடந்து அதில் எவ்வித தொடபும் இல்லாத முஹ்ஸின் ஸாதிக் சேக் என்ற ஓர் அப்பாவி இளம் முஸ்லிம் பொறியாளர் ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளால் அடித்தே கொலை செய்யப்பட்டார். இன்னாலில்லாஹி...

அந்த மாதிரி தப்பான போட்டோக்கள் உருவாக்கி முகநூல் & வாட்ஸ்அப்பில் புனைப்பெயரில் போட்ட அந்த ஆள் மாறாட்ட நய வஞ்சகன் நிகில் திகோன் கைது செய்யப்பட்டு விட்டான்.

தொழுது விட்டு தொப்பியுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த தாடி வைத்திருந்த ஓர் இளம் பொறியாளரை கலவரம் நிகழ்த்தி கொலை செய்த 13 ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இதுபோன்ற மதக்கலவரம் நிகழ்த்தி கொலை செய்வோருக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்காமல் அதில் ஈடுபடுவோர் மீது மிகக்கடுமையான தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே எனக்கு கூசுகிறது..!


போட்டோ : நிகில் திகோன் & முஹ்ஸின் ஸாதிக் சேக்
நன்றி:
https://www.facebook.com/photo.php?fbid=703680953000559&set=a.217678638267462.52731.100000759817071&type=1&theater 

புதன், 4 ஜூன், 2014

வேலூரில் பதற்றம்! பள்ளிவாசலுக்குள் புகுந்து முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

 
 
வேலூர் மாவட்டம் கே.கே.நகர்பகுதியில் உள்ள ஆர்.என்.பாளையம் மஸ்ஜிதே சுபானியா “03-06-2014 இன்று மாலை மக்ரீஃப் தொழுகைக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி.பாசிச சக்திகள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தீடீரென பள்ளிவாசலுக்குள் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்


இந்த திடீர் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் மோதினார் பலத்த காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் .

பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள வீடுகள் என பயங்கரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். முஸ்லீம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தவுடன் தாங்கள் வந்த
பைக்கை விட்டுவிட்டு வன்முறையாளர்கள் தப்பி ஓடினர் ..

கயவர்கள் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர் (அந்த பைக்கை மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்). காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின் வந்த போலிசார் ஓன்று கூடியிருந்த மக்களை விரட்டி அடித்தனர்.

மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!





ஹெச்.ராசிக்  ராஜா
படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல் 

மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க, பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே. இத்தகைய சூழலில்.... சென்னை, சைதாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், இதில் பங்கேற்று கலக்கலான வெற்றி கண்டிருப்பது... பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
சென்னையைச் சேர்ந்த ஃபாத்திமா ஷபானா மற்றும் பவித்ரா இந்த இருவருரையும் சந்தித்தோம்.
''ஒன்பதாவது படிச்சப்போ, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஃபிட்ஜி அகாடமி’, எங்க பள்ளியில இருந்து ஒரு தேர்வு மூலமா எட்டு பேரை தேர்ந்தெடுத்தாங்க. வாரத்துல மூணு கிளாஸ் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் கொடுத்தாங்க. சாயந்திரம் 5 - 8 மணி வரை வகுப்பு நடக்கும். அப்புறம் வீட்டுக்கு வர 9 மணி ஆகிடும். சாப்பிட்டு, அங்க நடத்தின படங்களைப் படிப்பேன். காலையில 5 மணிக்கு எழுந்து, ஸ்கூல்ல நடத்தின பாடங்களைப் படிப்பேன். ரெண்டு பாடங்கள்லயும் கவனம் செலுத்த கஷ்டமாதான் இருக்கும். ஆனாலும் நல்ல காலேஜ்ல சேரணும்னு நம்பிக்கையோட படிச்சேன்!'' எனும் ஃபாத்திமா ஷபானாவின் அப்பா, இரவு நேர 'டிபன்’ கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.
''ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதில் குடும்பச் செலவுகளைப் பூர்த்தி செய்றதே கஷ்டம். நல்லா படிக்கிற பிள்ளைய, எப்படி மேல படிக்க வைக்கிறதுனு அவங்களுக்கு கலக்கம்தான். ஆனாலும், முயற்சியைக் கைவிடாம படிச்சேன். இப்போ ஐ.ஐ.டி தேர்வுல 83 மார்க் வாங்கிட்டேன். இதுல 74 மார்க் எடுத்தாலே பாஸ்தான். அதேமாதிரி ப்ளஸ் டூ பொதுத்தேர்வுலயும் 1109 மார்க் வாங்கிருக்கேன்'' என்ற ஃபாத்திமா, தன் அம்மாவை அருகில் அழைத்து,
''எங்கம்மா முகத்துல எவ்வளவு சந்தோஷம் பாருங்க. டீச்சர்ஸ், ஹெட்மாஸ்டர் எல்லாரும் என் படிப்புக்கு உதவி பண்றது, நேரத்துக்கு கோச்சிங் கிளாஸுக்கு அனுப்புறதுனு ரொம்ப ஊக்கப்படுத்தினாங்க. இப்போ நிறைய பேர் எனக்கு பண உதவி செய்றதாவும், நிறைய வங்கிகள் படிப்புக்கு லோன் உதவி செய்றதாவும் போன் மூலமா தெரிவிச்சிருக்காங்க. எங்கப்பாவுக்கு சுமை கொடுக்கலைங்கறது, எனக்கு நிம்மதியா இருக்கு.
இன்னும் ஒரு தேர்வு பாக்கியிருக்கு. அதில் வெற்றிபெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுப்பதுதான் என் விருப்பம். படிப்புதான் உண்மையான செல்வம்னு, எங்களைப் போன்ற ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு எல்லாம் நம்பிக்கை வர, நானும் உதாரணமா இருப்பேன்!''
- அழகாகச் சிரித்தார் பாத்திமா.

ன்னொரு மாணவியான பவித்ராவின் ஐ.ஐ.டி மதிப்பெண்... 78. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 1129. கண்களில் துள்ளல் பவித்ராவுக்கு.
''கோச்சிங் கிளாஸ்ல சொல்லிக்கொடுத்த நிறைய விஷயங்கள் எனக்கு படிப்புலயும் உதவியா இருந்துச்சு. தினமும் நைட் தூங்க 12 மணிக்கு மேல ஆகிடும். திரும்ப காலையில 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு படிக்க ஆரம்பிச்சுருவேன். அப்பாவும் அம்மாவும் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தாங்க.
அடுத்து எழுதப்போற எக்ஸாம் இன்னும் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் விடாம படிச்சுக்கிட்டே இருக்கேன். எப்படியாவது ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்துல சேர்ந்தாகணும். கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சாலும் ஐ.ஐ.டி-யில படிக்கலாம்னு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தணும்... எங்க பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுக்கணும்!'' எனும் பவித்ராவுக்கு பிடித்த சப்ஜெக்ட், ஃபிசிக்ஸ்.
''அதனாலதான்... ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிச்சு சயின்டிஸ்ட் ஆகுறதை லட்சியமா வெச்சிருக்கேன்!'' என்று பவித்ரா சொல்ல,
''பத்தாவது பரீட்சையில 486 மார்க் வாங்கி, சென்னை அளவில் மூன்றாம் இடம் பிடிச்சி, அப்துல் கலாம் கையால விருது வாங்கினதையும் சேர்த்து சொல்லு!'' என்கிறார் பவித்ராவின் அப்பா பெருமிதத்துடன்.
இந்த இருவரும், இப்போது தேர்வில் பெற்றிருக்கும் வெற்றியின் மூலமாக என்.ஐ.டி, சி.எஃப்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ- அட்வான்ஸ்) பாக்கியிருக்கிறது. இதில் வெற்றி பெற்றால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்துவிடும்.
பள்ளிக்குப் பெருமையையும், பெற்றவர்களுக்கு சந்தோஷத்தையும், எளிய குடும்பத்து மாணவர் களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ள இந்த வெற்றிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்!

http://news.vikatan.com/article.php?module=news&aid=28572