உவைசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உவைசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூன், 2014

உவைசியின் 11.06.2014 அன்றைய பாராளுமன்ற உரை கவனிக்கப்படவேண்டியவை:

 

உவைசியின் 11.06.2014 அன்றைய பாராளுமன்ற உரை கவனிக்கப்படவேண்டியவை:

ஓட்டு மொத்த பாராளுமன்றமே பேசவிடாமல் கூச்சல் இடும் போதும், தனி மனிதனாக, நிதானமாக, சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விட்டார்.. முஸ்லிம் தலைவர்கள், பேச்சாளர்கள் இதில் இருந்து படிப்பினை பெற வேண்டும். குறிப்பிட்ட மாநிலத்தின், தொகுதியின் உறுப்பினராக இருந்தாலும், ஆந்திர, குஜராத், புனே, காஷ்மீர் பண்டிட், முஸ்லிம்கள் போன்ற அனைவரின் பிரச்சனைகளையும் கொடுத்த நேரத்தில் பேசிவிட்டார். BJPயினர் கூச்சலிட்டபோது, கோபப்படாமல் மோடியை வாழ்த்தினார். அவர் கூறிய சில விஷயங்கள்:
 1) இங்கே முஸ்லிம் வோட் பங்க் என்ற குற்றச்சாட்டை வைத்த நீங்கள், அதை உடைத்து ஹிந்து வோட் பங்க் என்ற ஒன்று இருப்பதை இந்த தேர்தலில் நிருபித்து உள்ளீர். அதற்காக மோடியை பாராட்டி கொள்கிறேன்.
2) பஸ்வான் குஜராத் கரை மறக்க படவேண்டும் என்று கூறினார். இந்த நாட்டை உலுக்கிய 4 துயர சம்பவம்: காந்தி படுகொலை, சீக்கியர் படுகொலை, பாப்ரி மஸ்ஜித் உடைப்பு, குஜராத் சம்பவம்.
3) இதை செய்தவர்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வரும் போது, விரைவில் கோட்சேக்கு பாரத ரத்னா கொடுக்க படலாம்.
 4) இந்த நாட்டின் சிறப்பு மத சார்பின்மை.. அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக புனே போன்ற நகரங்களில் கலவரம் துவக்க பட்டுள்ளது. (காஷ்மீர் பண்டிட்டுகள் பற்றி கூச்சல் வந்த போது) அவர்களும் வெளியேறிய காஷ்மீர் முஸ்லிம்களும் நாட்டுக்கு திரும்பி அனுப்ப பட வேண்டும்.
5) தெலுங்கானாவில் உள்ள சில பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த போது அவையில் உள்ள சிலர் கை தட்டினார்.
 6) INCLUSIVE POLITICS பற்றி அரசு பேசிவருகிறது.. அது உண்மை என்றால் ஏன் 21 முஸ்லிம் MP மட்டுமே இருக்க வேண்டும்... சிறுபான்மயினருக்கான 4.5 சதவித இட ஒதிக்கீடு என்ன ஆச்சு.. நான் முஸ்லிம்களை பற்றி பேச வில்லை.. சிறுபான்மையனர் என்பது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்த மத மக்கள்.
8) குஜராத் அக்ஷர்தாம் கைதிகளை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. 11 வருடம் வாழ்க்கையை துளைத்து விட்ட தனது ஆட்சியில் கைது செய்யப்பட்ட இந்த அப்பாவிகளை பார்த்து மோடி மணிப்பு கேட்பாரா?
 9) இறுதியாக நான் ஜாஃப்ரியின் மகனாக நிற்கிறேன், இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கிறேன், எனக்கு குஜராத் படுகொலைக்கு நீதி வேண்டும்.
----------------------------------------------------------------------------------------


“#Pyrrhic_victory அப்படின்னா என்னன்னா.
கிரேக்க மன்னர் பிர்ரஸ், ரோமானியப் பேரரசின்மீது போர் தொடுக்க நினைத்து, மதியூகம் மிக்க ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கவர், “இப்போரில், உன்னால் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்திவிட முடியும்” என்றார். மகிழ்ந்துபோன மன்னன், ரோம் மீது படையெடுத்து வெற்றியும் கண்டான். ஆனால் வீழ்ச்சியோ அவனுக்குத்தான்!!

ஆம், அந்த அளவு இழப்பு அந்த போரில் பிர்ரசுக்கு. தலைசிறந்த தளபதிகளும், வீரர்களும் மடிந்துவிட்டனர். தோல்வியடைந்த ரோமப் பேரரசிலோ, தோல்வியே பெரும் எழுச்சியைத் தந்ததில், மீண்டும் வலிமையான படையைத் திரட்ட முடிந்தது.

இதுதான், “பிர்ரிக் வெற்றி” என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இப்படியும் சொல்லலாம்: “ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷண்ட் டெட்!”
_______

பார்லிமெண்டில் அசாதுத்தீன் உவைஸி “#Pyrrhic_victory" என்று மோடியின் வெற்றியை வர்ணித்தார்
___________________________________________________________________
Pyrrhic_victory பதிவுக்கு நன்றி .Hussain Amma

வியாழன், 28 மே, 2009

அசத்தும் அசதுத்தீன் உவைசி!


ஹைதராபாத் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியுள்ளது மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இக்கட்சியின் தலை வரான அசதுத்தீன் உவைசி வெற்றி பெற்றார். ஹைதராபாத்மக்களவைத் தொகுதியை மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கைப்பற்றியிருப்பது எட்டாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. அசதுத்தீன் உவைசி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றிருக்கிறார்.


ஆறுதடவை அசதுத்தீனின் தந்தை சலாஹுதீன் உவைசி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


2009 மக்களவைத் தேர்தலில் உவைசி தன்னை எதிர்த்துக் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் ஜாகித் அலிகானை தோற்கடித்தார். இவர் சியாசத் என்ற உர்து செய்தி ஏட்டின் ஆசிரியராவார். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் போட்டியிட்டார். இவரை அசதுத்தீன் உவைசி ஒருலட்சத்து 13 ஆயிரத்து 865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 50லிருந்து 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த காலத்தில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா போட்டியிட்டது. பாஜக வின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவை 1996ல் அசதுத்தீன் தோற்கடித்திருக்கிறார்.


தற்போதைய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் அசதுத்தீன் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து சட்டமன்ற தொகுதி களைக் கைப்பற்றிவந்த மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தற்போது ஏழு சட்டமன்ற தொகுதிகளை கைப் பற்றியுள்ளது.


அசதுத்தீனின் தம்பியான அக்பருத்தீன் உவைசி சந்திராயன் குட்டா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு அக்பருத்தீன் மூன்றாவது முறை யாக வெற்றி பெற்றிருக்கிறார்.


கட்சியின் செல்வாக்கு மிகுந்த சார் மினார் தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டது. யாகுத், புரா மற்றும் கர்வான் சட்டமன்ற தொகுதிகள் புதிதாக உருவாக்கப் பட்ட பஹதூர்புரா மற்றும் நம்பள்ள தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.


10 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள ஆந்திரப்பிரதேசத்தில் 294 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் பதினொரு பேரே முஸ்லிம்களாவார். இதில் ஏழு பேர் மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியிலிருந்தும், மூவர் காங்கிரஸிலிருந்தும் ஒருவர் தெலுங்கு தேசத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸின் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், முஹம்மது அலி ஷப்பீரும், முஹம்மது பரீத்தீனும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாக குறைந்தது. அசதுத்தீன் மட்டுமே ஒரே முஸ்லிம் மக்களவை உறுப்பினர்.