ஆந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 பிப்ரவரி, 2010

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான இடஒதுக்கீடு நமது டெல்லி பிரகடனமே தீர்வு!


ஆந்திர உயர்நீதிமன்றம் முஸ்லிம்களுக்கான 4 சதவீதம் தனிஇட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தெலுங்கானா பிரச்சினையில் பற்றி எரிந்து வரும் ஆந்திராவுக்கு, உயர்நீதி (?) மன்றம் தன்னால் இயன்ற அளவுக்கு எண்ணை ஊற்றியுள்ளது. இந்த சமூக அநீதியால் ஆந்திர மக்கள் கொந்தளித்தெழுந்துள்ளனர்.

ஆந்திர மக்களின் அன்புத்தலைவர் மறைந்த டாக்டர் ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு எனத் தேர்தலில் வாக்களித்தார். முஸ்லிம்களின் பேராதரவோடு வென்றார்.முதல்வர் பதவியேற்றதும், காலங்கடத்தாமல் முஸ்லிம் அமைப்புகளைக் கெஞ்ச வைக்காமல், முஸ்லிம்கள் விரக்தியின் விளிம்புக்கே போய் போராட்ட அறிவிப்பு செய்யாமல், சொன்னதைத் செய்து காட்டினார் ஆந்திர முதல்வர் மறைந்த Y.S.R. அவர்கள்.

சமூக அநீதியாளர்கள், நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டனர். ஆந்திர அரசு ஆணையம் அமைத்துப் பரிந்துரை பெறாமல் வழங்கிய இந்த இடஒதுக்கீடு செல்லாது என்றது நீதிமன்றம் உழ்.வ.ந.த. அசரவில்லை. நான் கொடுத்தேன் நீதிமன்றம் தடுத்துவிட்டது. நான் என்ன செய்வேன் என்று பசப்பி முஸ்லிம்களை ஏமாற்றவில்லை.உடனே, ஆந்திராவின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திலிருந்து பரிந்துரையைப் பெற்றார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம் களுக்குத் தனி இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கினார் Y.S.R..

கே.கொண்டால ராவ் என்ற வழக்கறிஞர் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனில்ரமேஷ் தவே தலைமையிலான நீதிபதிகள் குழு இச்சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதன் மூலம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்துக்கும் சிக்கல் ஏற்படுத்தியுள்ள னர் இந்த நீதி மான்கள்(?) ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு. அது சட்டங்களை இயற்றும். நீதிமன்றம் என்பது சட்டத்தை இயற்றுகிற அமைப்பல்ல. மாறாக இயற்றப்பட்ட சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்துகிற அமைப்பு. சட்டமன்றத்தின் அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கிடுவது ஜனநாயகத்தைக் காயப்படுத்தும் செயலாகும்.ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, மாநில முதல்வர் ரோசையா, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார். முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு சட்டத்திற்குச் சிறப்பு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு மாநிலத் தலைமை வழக்குறைஞருக்கு ஆணையிட்டுள்ளார்.

ஆந்திர உயர்நதிமன்றதின் தீர்ப்பு அனைவருக்கும் புதிய சிந்தனையை தோற்றுவிக்க வழிகோலியிருக்கிறது. அதாவது, நீதிமன்றங்களின் சமூக நீதிககு எதிரான சேட்டைகளை நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமெனில், அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்வது ஒன்றுதான் சரியான தீர்வு. த.மு.மு.க. மார்ச்லி7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் இதைத்தான் முதன்மைப்படுத்தி அதை டெல்லி பிரகடனம் என முழங்கியது. அந்த டெல்லி பிரகடனம் செயல்படுத்தப்பட வேண்டுமெனில் நாம் மாபெரும் பரப்புரை இயக்கத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

அரசியல் நிர்ணய அவையில் விவாதங்கள் நடந்த காலத்தில், Backward Class, அதாவது பிற்படுத்தப்பட்டோர் சமூக சமத்துவம் பெற, கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி என அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு, அது ஏற்கப்பட்டது. ஈப்ஹள்ள் என்பது சிறுபான்மை முஸ்லிம்களையும் உள்ளடக்கும் (Class in cludes minorities) என்ற வாக்கியத்தை அரசியல் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டார். தமிழகப் பிரதிநிதியான கண்ணியமிகு காயிதே மில்லத்.
Class என்பது சிறுபான்மையினரையும் உள்ளடக்கியது தான் என்று பதிலளிக்கப்பட்டது. அதைத் தெளிவுபடுத்தி, Class என்பது சிறுபான்மையினரையும் உள்ளடக்கும் என்ற வாசகத்தை அரசியல் சாசனத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். என காயிதே மில்லத் மீண்டும் மீண்டும் வாதாட, எதிர்காலத்தில் Class என்பதில் சிறுபான்னையினர் சேரமாட்டார்கள் என எந்த அறிவாளியும் (?) சொல்லமாட்டார் என கேலியாக பதிலளித்தாராம் வல்லபாய் பட்டேல்.

துருபிடித்த மனங்கொண்ட அந்த இரும்பு மனிதரின் கேலிதான், இன்று வார்த்தை விளையாட்டு நடத்தி, வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளையாடும், வன்னெஞ்சர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. டி.ஏ.பாய் ஃபவுண்டேஷன் வழக்கில், Class என்பதில் சிறுபான்மையினரும் சேர்க்கப்படுவது தான் அரசியல் சாசன வடிவமைப்பாளர்களின் எண்ணமாக இருந்தது.

ஞாயிறு, 31 மே, 2009

பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது.


தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ்.


தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரசேகர ராவின் செயல்பாடுகள் பிடிக்காமல் இக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ், கட்சியிலிருந்து விலகினார். இக்கட்சியின் மற்றொரு ததலவரான திலீப் குமார், சந்திரசேகர ராவ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்து தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வற்புறுத்தப் போவதாக திலீப் குமார் தெரிவித்துள்ளார்.


தெலுங்கானா தனி மாநில கோரிக்கையில் தீவிரம் காட்டும் ககாதியா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜெயக்குமார், மக்கள் போர்ப்படை நக்சல் இயக்கத்தின் தலைவராக இருந்த பல்லதீர் கட்டார் ஆகியோர் இவரது புதிய கட்சி யில் இணைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 28 மே, 2009

அசத்தும் அசதுத்தீன் உவைசி!


ஹைதராபாத் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியுள்ளது மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இக்கட்சியின் தலை வரான அசதுத்தீன் உவைசி வெற்றி பெற்றார். ஹைதராபாத்மக்களவைத் தொகுதியை மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கைப்பற்றியிருப்பது எட்டாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. அசதுத்தீன் உவைசி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றிருக்கிறார்.


ஆறுதடவை அசதுத்தீனின் தந்தை சலாஹுதீன் உவைசி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


2009 மக்களவைத் தேர்தலில் உவைசி தன்னை எதிர்த்துக் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் ஜாகித் அலிகானை தோற்கடித்தார். இவர் சியாசத் என்ற உர்து செய்தி ஏட்டின் ஆசிரியராவார். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் போட்டியிட்டார். இவரை அசதுத்தீன் உவைசி ஒருலட்சத்து 13 ஆயிரத்து 865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 50லிருந்து 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த காலத்தில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா போட்டியிட்டது. பாஜக வின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவை 1996ல் அசதுத்தீன் தோற்கடித்திருக்கிறார்.


தற்போதைய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் அசதுத்தீன் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து சட்டமன்ற தொகுதி களைக் கைப்பற்றிவந்த மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தற்போது ஏழு சட்டமன்ற தொகுதிகளை கைப் பற்றியுள்ளது.


அசதுத்தீனின் தம்பியான அக்பருத்தீன் உவைசி சந்திராயன் குட்டா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு அக்பருத்தீன் மூன்றாவது முறை யாக வெற்றி பெற்றிருக்கிறார்.


கட்சியின் செல்வாக்கு மிகுந்த சார் மினார் தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டது. யாகுத், புரா மற்றும் கர்வான் சட்டமன்ற தொகுதிகள் புதிதாக உருவாக்கப் பட்ட பஹதூர்புரா மற்றும் நம்பள்ள தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.


10 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள ஆந்திரப்பிரதேசத்தில் 294 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் பதினொரு பேரே முஸ்லிம்களாவார். இதில் ஏழு பேர் மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியிலிருந்தும், மூவர் காங்கிரஸிலிருந்தும் ஒருவர் தெலுங்கு தேசத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸின் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், முஹம்மது அலி ஷப்பீரும், முஹம்மது பரீத்தீனும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாக குறைந்தது. அசதுத்தீன் மட்டுமே ஒரே முஸ்லிம் மக்களவை உறுப்பினர்.