செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜிதை அனுமதிக்க முடியாது: பா.ஜ.க

புதுடெல்லி,ஆக31:பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்தமாதம் தீர்ப்பு வழங்கவிருக்கவே அயோத்தியாவில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என்ற மிரட்டலுடன் பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக திரும்பினால் அங்கீகரிக்க இயலாது என்று நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமே இது.

அயோத்திப் பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாது என்ற பழைய பல்லவியை தொடர்கின்றன பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள்.

62 வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளிவரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என சங்க்பரிவார்களின் அறிவிப்பு அயோத்திப் பிரச்சனையின் மூலம் தேசத்தில் மீண்டும் கலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் ரீதியாக செல்வாக்கு இழந்துள்ள பா.ஜ.க மீண்டும் பாப்ரி மஸ்ஜித் அஜண்டாவை கையிலெடுத்து கரையேற முடிவெடுத்துள்ளது.

ஒன்று அரசு சட்டமியற்றி ராமர் கோவிலைக் கட்டவேண்டும் அல்லது அனைவரின் சம்மதத்தின் மூலம் ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்க வேண்டும் என பா.ஜ.கவின் வினய் கத்தியார் கோரியுள்ளார்.

அரசுதான் தேசிய மனோநிலையை கருத்தில் கொண்டு சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும், கோவில் நிர்மாணம் சமாதான வழிகளின் மூலமா? அல்லது போராட்டத்தின் மூலமா என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்திருந்தார்.

கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியும் அறிவித்திருந்தார்.

எல்லா பா.ஜ.க, சிவசேனா எம்.பிக்கள் கையெழுத்திட்ட இதுத்தொடர்பான மனு ஒன்றை பிரதமருக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுவதற்கு அரசு சட்ட இயற்றவேண்டும் எனக்கோரி வி.ஹெச்.பி தேசமுழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. காசி,மதுரா ஆகிய இடங்களிலிலுள்ள மஸ்ஜிதுகளும் ஹிந்துக்களுக்கே என வி.ஹெச்.பி கோரும். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே அறிக்கை விடுவது முட்டாள்தனமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறியுள்ளார்.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.டிக்கள் அயோத்தியில் சி.டி.கடைகளிலும், அங்காடிகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இத்தகைய சி.டி க்களை தடைச்செய்ய வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் உ.பி.மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மேற்குவங்காளத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ்

கொல்கத்தா,ஆக31:முஸ்லிம் சமுதாயத்தில் ஏழ்மை நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்கு மேற்குவங்காள அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு சட்டத்தின்படி அம்மாநிலத்தின் ஒன்றரைகோடி அளவிலான முஸ்லிம்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ் வழங்கப்படும்.

இதுத்தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவை அடுத்த மாதம் 22 ஆம் தேதி மேற்கொள்ளும். இவ்விஷயத்தில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

கொல்கத்தாவில் ஹஜ் ஹவுஸை திறந்துவைத்து உரைநிகழ்த்திய அவர். அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவினர்களை இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவரும்பொழுது முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை பிரிவினரை ஏன் கொண்டுவரக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லெபனானில் உயிர் தியாகிகளுக்கு தீம் பார்க்கை உருவாக்கிய ஹிஸ்புல்லாஹ்

பெய்ரூட்,ஆக31:தெற்கு லெபனானில் இஸ்ரேலின் எல்லையோடு இணைந்த மிலீத்தாவில் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் உயிர்தியாகிகளை நினைவுக்கூறும் தீம் பார்க்கை திறந்துள்ளது. 'பூமி சுவனத்தோடு பேசுகிறது' என்பது இரண்டுகோடி டாலர் செலவில் உருவாகியிருக்கும் தீம் பார்க்கிற்கு அழைப்புவிடுக்கும் போர்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்களாகும்.

இஸ்லாமிய தற்காப்பு போருக்கு குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது பார்க்கின் நிர்மாணம்.ஹிஸ்புல்லாஹ்வின் செயல்பாடுகளைக் குறித்தும், இஸ்ரேலுக்கெதிரான தற்காப்புப் போரைக் குறித்தும் ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகள் பார்க்கில் இடம்பிடித்துள்ளன.

'வழி' என்று பெயரிடப்பட்டுள்ள பகுதியின் வழியாக பயணிக்கும் பொழுது ஒரு போர்க்களத்திற்கு சென்ற அனுபவம் ஏற்படும். சுவரில் அழகான வர்ணங்களில் தீட்டப்பட்டுள்ள போர்க்களக் காட்சிகள். அத்துடன் போர்க்களத்தில் மருத்துவமனையும், ராக்கெட் லாஞ்சிங் மையமும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுடனான போரின் பொழுது ரகசிய பங்க்கராக செயல்பட்ட குகையை கடந்து சென்றால் ஏழாயிரம் போராளிகள் பயன்படுத்திய இடங்களின் விவரங்களைக் காணலாம்.

'கர்த்தம்' என்று பெயரிடப்பட்டுள்ள இடத்தில் ஒரு தனியான குழி ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து கைப்பற்றிய இயந்திரத் துப்பாக்கிகளும், ராக்கெட்டுகளும், டேங்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நம்முடைய வீடுகளை தகர்க்க பயன்பட்டவை இவை. தற்பொழுது நமது காலடியில் வந்துள்ளது என வழிகாட்டியொருவர் பார்க்கை காணவரும் பார்வையாளர்களிடம் விளக்குகிறார்.

அங்கு காணப்படும் ஹெல்மெட்டுகளெல்லாம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினருடையது.

"இந்த சாதனைகளை காணும்பொழுது மகனை இழந்த சோகத்தை நான் மறக்கிறேன்" எனக் கூறுகிறார் 13 பிள்ளைகளின் தந்தையும், விவசாயியுமான அஹ்மத் ஸலீம். ஸலீமின் அனைத்து பிள்ளைகளும் ஹிஸ்புல்லாஹ்வின் உறுப்பினர்களாவர். 1992 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த மோதலில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

டெஹ்ரான்,ஆக31:இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

டெஹ்ரான்,ஆக31:இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு ஏற்றுக்கொள்வோம் - ஜமாஅத்தே இஸ்லாமி

நாங்கள் உன்னை மறக்கவில்லை!

புதுடெல்லி,ஆக31:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு என்னவெனினும் முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பு கூறியுள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பொறுமையை கையாள்பவர்கள். இந்த அணுகுமுறை பாப்ரி மஸ்ஜித் வழக்கிலும் அமையும் என அவ்வமைப்பின் தலைவர் செய்யத் ஜலாலுதீன் உமரி கூறுகிறார்.

ஊடகங்கள் இந்திய முஸ்லிம்களின் பாராட்டப்பட வேண்டிய இந்த அணுகுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என கோரியுள்ளார் அவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பீகாரில் முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தர தயார்- பாஸ்வான்

பாட்னா,ஆக30:பீகாரில் அடுத்த தேர்தலில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.

பாஸ்வான்,தனது சகோதரர் பசுபதி குமார் பரஸை துணை முதல்வர் பதவியில் அமர்த்தப் பார்க்கிறார்.தங்களது கூட்டணி வென்றால் முஸ்லிமுக்கு முதல்வர் பதவி என அறிவித்த பாஸ்வான் இப்போது அதுபற்றியே பேசாமல், துணைமுதல்வர் பதவியையும் தனது சகோதரருக்கே கொடுத்திட போராடிவருகிறார் என ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன.

இந்நிலையில் நிருபர்களிடம் சனிக்கிழமை பாஸ்வான் கூறியதாவது: "எங்களது கூட்டணி தேர்தலில் வென்றால் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது பற்றி பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். பீகாரிலும் பிற இடங்களிலும் உள்ள முஸ்லிம்கள் முன்னேற்றம் காண எங்களது கூட்டணி அயராது பாடுபடுகிறது என்றார்" பாஸ்வான்.

தமுமுக மாணவரணியின் மாநில செயலாளர் காஞ்சி ஜைனுல் ஆபிதீனின் எழுச்சி உரை - தாம்பரம்

மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளது- வி.டி.ராஜசேகர்

கொச்சி,ஆக30:கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு ஈழவர் (தாழ்த்தப்பட்ட சமூகம்). அதனால் அவரால் ஒன்றும் செய்யவியலாது.கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும் ஒரு ஈழவர்தான் என்றாலும் அவர் ஒரு தனிரகம். பார்ப்பணீயம்தான் சி.பி.எம்மை கட்டுப்படுத்துகிறது.

அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஆபத்தானவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தி ஆல் இந்தியா பேக்வார்ட் (எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி) அண்ட் மைனாரிட்டீ கம்யூனிட்டி எம்ப்ளாயீஸ் ஃபெடரேசனின் ஆறாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் கூறியதாவது:"ஜாதி வழக்கமுறை வலுவாக நிலைப்பெற்றிருக்கும் மாநிலம் தான் கேரளா. கேரளாவில் மார்க்சிஸ்டுகளா? ஆட்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால், அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஜாதி வழக்க முறையை நிலைநாட்டுகின்றனர்.

காங்கிரசில் பெரும்பாலோரும் ஹிந்துத்துவாவாதிகள்தான். நேற்று முன்தினம் காவி பயங்கரவாதத்தைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார். ஆனால், தற்பொழுது காங்கிரஸ் தலைமை, காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகக்குறைந்த சதவீதமே மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர்களின் விவகாரத்தில் கவலைக் கொள்கிறது?.

85 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் பிரிவினரை ஏன் கண்டுகாணாமல் நடிக்கின்றனர்? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் என்ன நடக்கிறது? என்பது எவருக்கும் தெரியாது.

ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு அமைச்சரானது சிரியன் கிறிஸ்தவர் என்ற ஒரேக்காரணத்தினால் தான். சிரியன் கிறிஸ்தவர்கள் பார்ப்பணீயர்களை விட ஆபத்தானவர்கள். கேரள மாநிலத்தில் ஆறு சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். கேரளத்தில் மீன் பிடித் தொழிலாளிகளான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலிலுள்ள நல்ல உறவை கெடுப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் மாதா அமிர்தானந்தாயி என்ற மீனவப்பெண்ணை பயன்படுத்துகிறது.

ஜாதீய வழக்கமுறை என்பது ஒரு விஷமாகும். ஜாதீய வழக்க முறையைக் குறித்து பேசுவதைவிட சிறந்தது ஹிந்துயிஷத்தைக் குறித்து பேசுவதாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய உருவாக்கமான அபினவ் பாரத்தான் காவி பயங்கரவாதத்தின் அடிப்படை. அவர்கள் இந்த தேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமாக உள்ளது.

அபினவ் பாரத்தும், யூதர்களும் உறவினர்களாவர். அபினவ் பாரத்தின் வளர்ச்சியின் பின்னணியில் யூத லாபியாகும். அபினவ் பாரத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் புரோகித் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் யூதர்களின் இத்தகைய அசுத்தமான உறவைக் காணலாம். அமெரிக்காவையும், பிரிட்டனையும் கட்டுப்படுத்துவது யூதர்கள்தான்.

வெறும் 15 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட மேல்ஜாதியினர் எவ்வாறு அரசை கட்டுப்படுத்துகின்றனர்? அவர்கள் தலித் உள்ளிட்ட மக்களை பிரிக்கின்றனர். எல்லாவித பொருளாதார ஆதாரங்களும், வங்கிகளும் கைவசப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட 85 சதவீத மக்களின் பகுஜன் சமாஜ் உருவாக வேண்டியுள்ளது. அவ்வாறு உருவானால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இங்கு அதிகாரவர்க்கமாக இயலும்." இவ்வாறு வி.டி.ராஜசேகர் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நியூயார்க்கில் கத்தி குத்துப்பட்ட முஸ்லிம் வாகன ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள்

வாஷிங்டன்,ஆக29:மதம் என்ன? என்பதைக் கேட்டறிந்துவிட்டு முஸ்லிம் என்பது உறுதியானவுடன் வாகன ஓட்டுநர் ஒருவரை கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள் களமிறங்கியுள்ளனர்.

பங்களாதேஷைச் சார்ந்த அஹ்மத் ஷெரீஃப் (வயது43) என்பவர்தான் கத்திக்குத்துப்பட்ட வாகன ஓட்டுநராவார்.

இச்சம்பவம் நடைபெற்றவுடனேயே மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஷெரீஃபையும் அவருடைய குடும்பத்தினரையு அழைத்து நலம் விசாரித்துள்ளார். எல்லா உதவியையும் வாக்களித்த மேயர், ஷெரீஃபிற்கும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஷெரீஃப் கூறியுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் தாக்குதல்களை அதிகரிக்கவே உதவும் என வாகன ஓட்டுநர்கள் அமைப்பின் தலைவர் பைரவி தேசாய் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தை அச்சுறுத்தவே இத்தாக்குதலை நடத்தியவர்கள் முயற்சிக்கிறார்கள் எனவும், இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் எனவும் இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் இமாம் ஷம்ஸி அலி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஷெரீஃபின் காரில் ஏறிய மைக்கேல் என்ரைட் என்பவர் ஷெரீஃபிடம் முஸ்லிமா? நோன்பாளியா? எனக் கேட்டுவிட்டு கத்தியால் குத்தியுள்ளார். இவரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

2001 செப்டம்பர் 11 தாக்குதலில் தகர்ந்துபோன உலகவர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான பணிகள் நடந்துவருகையில் அமெரிக்காவில் முஸ்லிம் விரோத மனப்பாண்மை அதிகரித்துள்ளது. ஆனால், நியூயார்க் மேயர், கவர்னர், அதிபர் ஒபாமா ஆகியோர் மஸ்ஜித் நிர்மாணத்திற்கு பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

எட்டுலட்சம் முஸ்லிம்கள் நியூயார்க்கில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு -டி.ஆர்.எஸ்

ஹைதராபாத்,ஆக29:தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் கெ.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு அவசியமாகும்.தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டுமென்பதே டி.ஆர்.எஸ்ஸின் லட்சியம். தெலுங்கானா பகுதியில் உண்மையான மதசார்பற்றத் தன்மையை மீண்டும் கொண்டுவருவோம். என சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்யவேண்டும்- லாலு,பஸ்வான் கோரிக்கை

பாட்னா,ஆக29:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை தடைச் செய்யவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவருடையை கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார்.

இதுக்குறித்து பஸ்வான் கூறியுள்ளதாவது:"காவிபயங்கரவாதத்தைக் குறித்து உள்துறை அமைச்சகத்தின் வசமிருக்கும் ஆதாரங்களை வெளியிடவேண்டும். இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மிக விரைவில் பிரதமர் கட்டளைப் பிறப்பிக்க வேண்டும்.

தேசத்தில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களான சந்தீப் தாங்கே, ராமி ஜீ ஆகியோரை கைதுச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2007 மே 18 ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர்.

2007 ஆம் ஆண்டு அஜ்மீர் ஷெரீஃப் தர்கா குண்டுவெடிப்பு, 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தானேயில் சினிமா தியேட்டர் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் காவிபயங்கரவாதத்தைக் குறித்த ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு சரியாகும்." இவ்வாறு பஸ்வான் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மதுரையில் சாகடித்த ஆடு மாடுகளை அறுக்கும் முயற்சி முறியடிப்பு- தமுமுக போராட்ட அறிவிப்பு வெற்றி

மதுரையில் புதிதாக மின்சார முறையில் ஆடு மாடுகளை அறுக்கும் நவீன ஆடு அறுக்கும் தொட்டி சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நவீன ஆடு தொட்டியில் ஆடுகளுக்கு மின் அதிர்ச்சி அளித்து அவை பாதி உயிரை இழந்த நிலையில் அறுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இது மதுரை வாழ் முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரை அனுப்பானடியில் திறக்கப்பட்டது. இந்த ஆடு தொட்டியில் எவ்வாறு பிராணிகள் அறுக்கப்படுகின்றன என்பதை காண்பதற்காக மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை. இச்செய்தி மதுரையில் முஸ்லிம்களிடையே பரவி பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது.

மதுரை நவீன ஆடு தொட்டியில் பிராணிகளை அறுக்கும் முறை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. பிராணியை அறுக்கும் போது அதன் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற வேண்டும். ஆனால் மின் அதிர்ச்சி கொடுத்து பிராணி மயங்கிய நிலையில் அறுக்கும் போது ரத்தம் வெளியேறத நிலையில் அதனை ஹலால் முறை அறுப்பு என்று சொல்ல இயலாது. இச்சூழலில் மதுரை நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் தான் ஆடு அறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 27 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிடுவது என்று அறிவிக்கப்பட்டது.


ம.ம.க அமைப்புச் செயலாளர் மதுரை கௌஸ் உரையாற்றுகிறார்.


முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை காலை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். தமுமுக மதுரை மாவட்ட தலைவர் கே. முஹம்மது கவுஸ் தலைமையில் தமுமுகவினர் பேச்சு வார்த்தையில் பங்குக் கொண்டனர்.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், பொருளாளர் எம்.ஹெச். சிக்கந்தர், தமுமுக மாவட்ட குழு உறுப்பினர்கள் அஜ்மீர், அப்பாஸ் உள்ளிட்டோரும் பங்குக் கொண்டனர். தமுமுகவின் கோரிக்கையை ஏற்பதாகவும் போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இது குறித்த அரசு உத்தரவை எழுத்துப்பூர்வமாக தராத வரையில் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று தமுமுக நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மதுரை அனுப்பனடி நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் ஆடுகள் அறுக்கப்படும் என்ற உத்தரவை சுற்றறிக்கையாக வெளியிட்டு அதன் பிரதியை தமுமுக நிர்வாகிகளிடம் அளித்தனர்;.

 மதுரை டவுன் ஹாஜி உரையாற்றுகிறார்.

மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிட மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசலில் இருந்து ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக புறப்பட பெரும் மக்கள் திரள் கூடிவிட்டது. போராட்டம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி ஹலால் முறையிpல் இனி ஆடுகளை ஆறுப்போம் என்று உத்தரவு பிறப்பித்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டதால் திரண்டிருந்த மக்களிடையே மதுரை மாநகர அரசு காஜியார் காஜா முயினுத்தீன் மற்றும் மதுரை மாவட்ட தமுமுக தலைவர் கே. முஹம்மது கவுஸ் ஆகியோர் விபரங்களை எடுத்துக் கூறினர். கோரிக்கை வெற்றிப் பெற்றதால் போராட்டம் கைவிடப்பட்டது.


ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது எப்படி?

இறுதியில் மத்திய உள்துறை அமைச்சரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தேசத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏராளமான குண்டுவெடிப்புகள் தேசத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கான உறுதியான உதாரணம் இதற்கெதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் ப.சிதம்பரம் டெல்லியில் 3 நாட்கள் நடைபெறும் போலீஸ்-உளவுத்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் உரைநிகழ்த்தினார்.

இவ்வுரையில் 'காவிப்பயங்கரவாதம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஹிந்துத்துவா அரசியல் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தைக் குறித்த முழுமையான புரிந்துணர்வோடுதான் இவ்வுரையை ப.சிதம்பரம் நிகழ்த்தினார் என்றால், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் இதனை பிரதிபலிக்கவேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பொழுது தேசம் புதியதொரு திசையை பயணிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படும்.

ஆனால் அவ்வாறு நிகழ்கிறதா? என்றால் நமது பொதுவாழ்க்கையில் ஹிந்துத்துவா சக்திகள் பெற்றுள்ள செல்வாக்கை கவனத்தில் கொண்டால் எதிர்மறையான பதில்தான் கிடைக்கும்.

'பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாட்டில் முஸ்லிம்களும், ஆதிவாசிகளும் நடத்தும் போராட்டத்திற்கு மட்டுமே சூட்டப்படுவதாகும். இஸ்லாமியத் தீவிரவாதமும், மாவோயிஷ தீவிரவாதமும் தான் நமது தீவிரவாத வேட்டையின் முக்கிய இலக்குகளாக மாறிவிட்டன.

சமீபக்காலத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவோரின் மீது இட்டுக்கட்டி சுமத்தப்பட்ட ஏராளமான குண்டுவெடிப்புகளின் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் என்ற உண்மை வெளியான பிறகும் அவர்கள் மீது எவ்வித பயன்தரத்தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்ல, காவி பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கெதிராக தீவிர எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஆவேசத்துடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பா.ஜ.கவின் தலைவர் அத்வானிக்கூட இத்தகைய பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஒருபுறம் காவிபயங்கரவாதம் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதேவேளையில், மறுபுறம் தீவிரவாத எதிர்ப்புப்பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த முகமூடியைத்தான் திறந்துக்காட்ட வேண்டியுள்ளது. காவி பயங்கரவாதத்தைக் குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து உள்ளார்ந்த நேர்மையுடனிருக்குமெனில் மத்திய அரசு துணிந்து ஒரு போராட்டத்திற்கு தயாராகவேண்டும். அது ஏற்படுமா? என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

காவி பயங்கரவாதம் சாதாரணமானது அல்ல.தேசத்தின் அதிகாரப்பூர்வ புலனாய்வு ஏஜன்சிகளிலும், ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலுமையாக காலூன்ற முடிந்துள்ள சூழலில், குறிப்பாக போலீஸ், ஐ.பி, என்.ஐ.ஏ, எஸ்.ஐ.டி உள்ளிட்ட கட்டமைப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் ஆதிக்கத்தின் விளைவாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இடதுசாரி அரசியல் கூட மிதமான ஹிந்துத்துவா பாணியை கையாளும் வேளையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தங்களுடைய அஜண்டாக்களை செயல்படுத்த எளிதாகிறது. ஆகவே உள்துறை அமைச்சர், ஒரு மாநாட்டில் சும்மா பெயரளவில் 'காவி பயங்கரவாதம்' என்று கூறினால் மட்டும் போதாது, தான் கூறியவற்றில் உண்மை உண்டு என்பதை நிரூபிக்க அவர் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை புனர் நிர்மாணிக்கவேண்டும்.

விமர்சகன்

தாக்குதல் சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரை நீதிமன்றம் விடுதலைச் செய்தது

அஹ்மதாபாத்,ஆக29:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பழிவாங்க தீவிரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றஞ்சாட்டி 9 கைதுச் செய்யப்பட்ட வழக்கில் அவர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுவித்துள்ளது.

இதில் 5 பேர் ஹைதராபாத்தைச் சார்ந்தவர்கள். பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் தாக்குதலை நடத்த திட்டமிட்டார்கள் என்பதுதான் இவர்கள் மீதான வழக்கு.

குற்றம் சுமத்தப்பட்டோர்களுக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பினால் இயலவில்லை என நீதிபதி எ.ஹெச்.ஷா தெரிவித்தார்.

சதித்திட்டம், தேசத்திற்கு எதிரான போர் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரத்தைக்கூட சமர்ப்பிக்க அரசுத் தரப்பால் இயலவில்லை என வழக்கறிஞர் இல்யாஸ் கான் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 28 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதம் குறித்த உள்துறை அமைச்சரின் பேச்சு: அமளியில் காவிக்கட்சிகள்

புதுடெல்லி,ஆக.27:'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்தியதற்கு மக்களவையில் வியாழக்கிழமை காவிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுவதோடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சிவசேனை மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்தப் பிரச்னையில் சிவசேனை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது உள்துறை அமைசச்ர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்தப் பிரச்னை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.மக்களவையில் சிதம்பரத்தின் கருத்தைக் கண்டித்து முதலில் சிவசேனை உறுப்பினர்கள் சந்திரிகாந்த் கைரே, சுபாஷ் வாங்கடே, கணேஷ் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து, அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சிதம்பரம் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனை கட்சிப் பத்திரிகை சமனாவில் எழுதப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பினர்.

சிவசேனை உறுப்பினர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் குரல் கொடுத்தனர். பாஜக உறுப்பினர்கள், அனந்தகுமார் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

பாஜக மூத்த உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி சிதம்பரம் கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். காவி என்பது அமைதியின் அடையாளம். அதை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது என்று கூறினார். இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் தக்க பதிலடி கிடைக்கும். பதிலுக்கு நாங்களும் சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறு சொல்லுங்கள் என்றார் அவர்.

அமைச்சர் சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி சிவசேனை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

மாநிலங்களவையில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது.அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கோரினார். அவருக்கு ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். எனவே அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு பாஸ்வான் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு குற்றம்சாட்டினார். ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசினர். அப்போது அவையில் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இப் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்ற பாஸ்வானின் கோரிக்கையை அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார்.

டெல்லியில் மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
ஹைதராபாத், அஜ்மீர், கோவா, மாலேகான், மோதாசா (குஜராத்) ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்,ஆக27:அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில்,டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை பல அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாடலில் மத்திய பிரதேசத்திலும் போலிஎன்கவுண்டரில் 4 இளைஞர்கள் சுட்டுக் கொலை

போபால்,ஆக26:பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறல் போன்றக் காரணங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 அப்பாவி இளைஞர்களை கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி குஜராத் மாடலில் போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளனர்.

பீத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்து இளைஞர்களை தவறானக் காரணங்களைக் கூறி அழைத்துச் சென்ற பிறகு கொள்ளைக்காரர்கள் என்ற பீதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் போலீஸ் வேடமணியச் செய்து கொலைச் செய்துள்ளது போலீஸ் குழு ஒன்று.

போலி என்கவுண்டரைக் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்க போலீசால் இயலவில்லை. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அம்ஜத்கான் என்ற ஃபவ்ஜியின் உறவினர்கள் போலீஸ் கூறும் காரணங்களுக்கெதிராக கூறுகின்றனர்.

ராஜு பன்ஸரா, உதல் படாய், ரவீந்திர உதைனியா ஆகியோர் கொல்லப்பட்ட இதர இளைஞர்கள். இளைஞர்களை கடத்திச் சென்று ராணுவ உடையை அணியவைத்ததை நிரூபிப்பதாக உள்ளது போலீசார் வெளியிட்ட புகைப்படம்.

அணியவைக்கப்பட்ட உடை எவருக்கும் பொருந்தாதது மட்டுமல்ல, ஒருவருடைய கால்ச்சட்டை அவருடைய இடுப்பின் கீழ் பெல்டினால் முறுக்கி கட்டப்பட்ட நிலையில் உள்ளது.

அம்ஜத்கான் காலுறை அணியாமல் ஷூ அணிய மாட்டார் என அவருடைய மனைவி கூறுகிறார். ஆனால் கொல்லப்பட்ட மூவருமே காலுறை அணியாமல்தான் ஷூ அணிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தோரி காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்டதுதான் போலி என்கவுண்டர் கொலைநடந்த பக்னாஸ கிராமத்தின் ஆஸான் நதிக்கரை. இங்குள்ள டவுண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எஸ்.ஸிகார்வர்(T.I) கடந்த ஓர் ஆண்டிற்கிடையில் கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி என்கவுண்டரில் கொன்றது 16 நபர்களை.

சாதாரண கான்ஸ்டபிளான இவர் T.I பதவிக்கு உயர்வுப் பெற்றதற்கு காரணம் இந்த என்கவுண்டர் கொலைகள்தான் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான பீந்த் எஸ்.பி.சஞ்சல் சேகர் மற்றும் போலீஸ் குழுக்கெதிராக கொலைக் குற்றத்திற்கு வழக்குப் பதிவுச்செய்ய போலீஸ் காரரும், அம்ஜத்கானின் சகோதரனுமான ஃபெரோஸ்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை

புதுடெல்லி,ஆக26:இளைஞர்கள் கூட்டமாக ஷாகாக்களிலிருந்து வெளியேறுவது ஆர்.எஸ்.எஸ் தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சங்க்கின் கொள்கைகளோடு புதிய தலைமுறையின் ஆர்வமின்மையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் தலைமை. இதற்கான ‘ஜாக்ரன்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை துவக்க ஆர்.எஸ்.எஸ் ஆலோசித்து வருகிறது. முடியுமென்றால், இந்த மாதத்திலேயே இப்பிரச்சாரத்தை துவக்க சர் சங்க் சாலக் மோகன் பாகவத் உத்தரவிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் சங்க் கடுமையான பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னரே ஆர்.எஸ்.எஸ்ஸை கைகழுகும் வேலை ஆரம்பித்திருந்தாலும் தற்போது தேசத்தில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்தத்துவா இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து இது வேகத்தில் நடைபெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்த பொழுதிலும் ராமர்கோவில் நிர்மாணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றும் செய்யவியலாதது ஒரு பிரிவினரை நிராசைக்குள்ளாக்கி ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேறத் தூண்டியது.

அதேவேளையில்,ஆர்.எஸ்.எஸ் வெளியேக்கூறும் போலிக் கோஷங்களான சமூக சேவை, தேசபக்தி ஆகியவற்றை நம்பி சங்க்கில் இணைந்தவர்கள்களுக்கு தற்பொழுது வெளிவந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதத் தொடர்பு அங்கலாய்க்க வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல அதன் முன்னணி அமைப்புகளான பா.ஜ.க, வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத்தின் பங்கினை, மும்பைத்தாக்குதலின் பொழுது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே கண்டுபிடித்த பொழுது சங்க்பரிவாரின் பயங்கரவாதத் தொடர்பு வெட்டவெளிச்சமானது.குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர்களுடனான தொடர்பு தெளிவான பிறகும் ஆர்.எஸ்.எஸ் அதனை மறுத்து வந்தது.

ஆனால் அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த தலைவர்கள் கைதானதும்,குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்ததும் பயங்கரவாதச் செயலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை மறுக்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

தங்கள் உறுப்பினர்களின் பயங்கரவாதத் தொடர்பை ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்த சூழலில்தான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க புதிய திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ் தலைமை சோதனையில் இறங்கியுள்ளது.

தேசிய அளவில் ஐம்பதினாயிரம் ஷாகாக்கள் இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய புள்ளிவிபரப்படி 40 ஆயிரத்திற்கு அருகிலாகும். டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரம் ஷாகாக்கள் செயல்பட்டுவந்தன. தற்பொழுது 1500 ஆக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ விபரம் தெரிவிக்கிறது.

ஆனால் புதிய தலைமுறை இளைஞர்கள் ஷாகாக்களுக்கு வராததன் காரணம் வேலை நெருக்கடி என சப்புக்கட்டுகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சட்ட மேற்படிப்புத் தேர்வில் காப்பியடித்த 5 நீதிபதிகள் இடைநீக்கம்

ஹைதராபாத்,ஆக27:சட்ட மேற்படிப்புக்காண தேர்வில் காப்பி அடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட நீதிபதிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆந்திரத்தில் எல்எல்எம் (சட்ட மேல்படிப்பு) படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு கடந்த 24-ம் தேதி பல மையங்களில் நடைபெற்றது.

இதில் வாரங்கலில் உள்ள காகதீய பல்கலைக்கழக அரசினர் கல்லூரியிலும் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆந்திர மாநிலத்தில் கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் சிலரும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக சட்ட மேல்படிப்புத் தேர்வை எழுதினர்.

அப்போது பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஒரு நீதிபதி, தனது விடைத்தாளின் கீழே சட்டப் புத்தகத்தை வைத்து காப்பியடித்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அந்த அறையில் தேர்வு எழுதிய நீதிபதிகள் சிலரிடம் சோதனையிட்டபோது ஏராளமான "பிட்' பேப்பர்கள் (புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட பக்கங்கள்) கைப்பற்றப்பட்டன. மேலும் வழக்கறிஞர்கள் இருவர் காப்பியடித்தபோது பிடிபட்டனர்.


இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கலவரம் இரண்டாவது ஆண்டு நிறைவு.

புதுடெல்லி,ஆக25:ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது சங்க்பரிவார் நடத்திய கலவரம் திட்டமிடப்பட்டது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டு வருடம் கழிந்த பிறகும் தெளிவான விசாரணை நடத்தவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கிடைக்க வழிவகுக்காதது நீதித்துறைக்கு வெட்ககரமானது என டெல்லி கான்ஸ்ட்டிட்யூசன் க்ளப்பில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த நேசன்ல் பீப்பிள்ஸ் ட்ரிப்யூனல் கூறியுள்ளது.

குடியுரிமை மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான நேசனல் சோலிடாரிட்டி ஃபாரம்(என்.எஸ்.எஃப்) ஏற்பாடுச்செய்த மக்கள் நீதிமன்றத்தில் கந்தமால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 43 பேர் தங்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவங்களை விவரித்தனர்.கலவரம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்லமுடியாத பீதியான சூழலில் தான் கந்தமாலில் உள்ளது.

மக்களுக்கு நிம்மதியான வாழ்வும்,தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும்,பூரணமான விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும், மன்றம் வலியுறுத்தியுள்ளது.கந்தமால் நினைவுத்தினமான இன்று பாராளுமன்றத்தின் முன்னால் கண்டனப் பேரணி நடத்தி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், பா.ஜ.கவினர்கள்தான் கலவரத்தை நடத்தியது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது.கந்தமால் மாவட்டத்தில் மட்டும் 600 கிராமங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டன. 5600 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 30 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஏராளமானோருக்கு காயமும் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். 295 சர்ச்சுகளும், 13 பள்ளிக்கூடங்களும் தகர்க்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் படிப்பிற்கு தடை ஏற்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எ.பி.ஷா மக்கள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். ஹர்ஷ் மந்தர், மகேஷ் பட், மிலூன் கோத்தோரி, அட்மிரல் விஷ்ணு பாகவத், பி.எஸ்.கிருஷ்ணன், ரபிதாஸ், ரூத் மனோரமா, சுகுமார் முரளீதரன், ஸயீதா ஹமீத், வாஹிதா நைநார், ப்ருந்தா க்ரோவர் ஆகியோர் நீதிபதி அங்கங்களாக அமர்ந்திருந்தனர். சட்டவல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட 250 பேர் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றனர்.

நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக்கிய போலீஸ்…!!

புனித ரமதான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம் சிறைக்கைதிகளை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
Bhobal Muslim
போபால் மாவட்ட கோர்ட் வளாகத்திலிருக்கும் சப்-ஜெயிலில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. நோன்பு திறக்கவும்,தொழுகைக்காக ஒழுச் செய்யவும் தண்ணீர் கேட்ட நோன்பாளிகளைத்தான் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

ரமதான் நோன்பையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் கேவலமாக பேசியவாறு தாக்கியுள்ளனர் போலீசார். விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த சிறைக்கைதிகளை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட சப்-ஜெயிலில் வைத்துதான் போலீசார் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் லத்தியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்துள்ளது. தண்ணீர் கேட்ட சிறைக்கைதிகளிடம் தண்ணீர் தரமுடியாது எனக்கூறியதுடன் அவர்களின் நம்பிக்கைக் குறித்தும் கேவலமாக பேசியபொழுது அவர்கள் கோபமடைந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களை லாக்கப்பில் அடைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர் போலீசார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களல்லாத சிறைக்கைதிகள் உள்பட 130 பேர் போலீசாரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டனர்.பத்திரிகையாளர்களை அழைக்கவும், போலீசின் தாக்குதலைக் குறித்து பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிதான் இந்த தர்ணா.

அருண் மாலிக், அமர்சிங் இரண்டு போலீஸ்காரர்கள் ரமதான் நோன்பைக் குறித்தும், இஸ்லாத்தைக் குறித்தும் மோசமாக பேசி கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சிறைக்கைதிகள் தலையை சுவரில் மோதி இரத்தம் வரவழைத்தனர் என போலீசார் கூறுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பாக போபால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை போலீஸ் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.

செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ்.

பரவிவரும் காவிப் பயங்கரவாதம்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

புதுடில்லி,ஆக26:டில்லியில் மாநில போலீஸ் டி.ஜி.பி., க்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடங்கி வைத்து பேசும்போது நாட்டில் காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநாட்டில் துவக்க உரையாற்றிய சிதம்பரம்,இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் பயங்கரவாத ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க போலீஸ் படை பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய‌ மாவோயிஸ்டுகள் அதன் பிறகு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.


கஷ்மீரில் கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடந்து வந்த வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. கஷ்மீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் உல்பா பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளனர்.

கடந்த 21 மாதங்களில் இந்தியாவில் பெரிய அளவில் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை என்பது இந்தியா பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வைத்திருப்பதற்கு ஒரு சான்று என்றார்.

ஆனால் தற்போது நாட்டில் புதிதாக காவி பயங்கரவாதம் பரவி வருகிறது. இது குறித்து மிகுந்த எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார்.

நேற்று முதல் 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் 2ம் நாளான இன்று பிரத‌மர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். தமிழகம் சார்பில் டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பெய்ஜிங் நகரே ஸ்தம்பிக்கும் டிராபிக் ஜாம்

பெய்ஜிங்,ஆக26:சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஜாங்ஜியாகோ இடையிலான நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்த இடியாப்பச் சிக்கல் தீர இன்னும் சில வாரங்களாகுமாம்.

இந்த நெடுஞ்சாலையில் சுமார் 60 மைல் நீளத்திற்கு வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன. பெய்ஜிங்கில் நடந்து வரும் சாலை அமைப்புப் பணி காரணமாக ஏற்பட்ட நெரிசல் இது. கடந்த பத்து நாட்களாக இந்த நெரிசல் நீடித்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டுனர்கள் வண்டியை விட்டுவிட்டும் போக முடியாமல், வண்டியிலும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர். டிரைவர்களை மாற்றி மாற்றி கார்களையும் வாகனங்களையும் நகர்த்திக் கொண்டுள்ளனர்.

டிரைவர்கள் தங்கள் வாகனத்திலேயே தூங்கி,வெளியே குழாய்களில் தண்ணீரைப் பிடித்து குளித்து, சீட்டு விளையாட்டு, லாரிகளுக்கு அடியில் சமைத்து சாப்பிட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர்.

அடுத்த மாத மத்தி வரை இந்த நெரிசலை சரி செய்ய முடியாது என்கிறார்கள். அவ்வளவு வண்டிகள் தேங்கிக் கிடக்கின்றனவாம். நத்தையை விட மிக மிக மெதுவாக வாகனங்கள் நகர்ந்து வருகின்றனவாம்.

கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த நெரிசல் காணப்படுகிறது. கார்கள், லாரிகள் என சகல வாகனங்களும் மாட்டிக் கொண்டு முழிக்கின்றன. ஒன்றையொன்று இடிப்பது போல வாகனங்கள் நிற்பதால் மிக மிக மெதுவாக வாகனங்களை நகர்த்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் அளவுக்குத்தான் வாகனங்கள் நகர முடிகிறதாம். ஆனால் இது இந்த வாரமாம், போன வாரம் இதை விட மோசமாக நகர்ந்தோம் என்கிறார்கள் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட வாகனதாரிகள்.

ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கிய இந்த போக்குவரத்து நெரிசல் புதிதல்லவாம். ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு சம்பவம்தானாம். திடீரென 40 சதவீத அளவுக்கு வாகனங்கள் பெருத்துப் போனதுதான் இந்த நெரிசலுக்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும், மங்கோலியாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து இப்பகுதியில் பெருமளவில் அதிகரித்து விட்டதும் போக்குவரத்து நெரிசல் இப்படி மாறிப் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.

அயோத்தி:பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு: பாதுகாப்பு குறித்து பிரதமர் ஆலோசனை


புதுடெல்லி,ஆக.26:அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதனால் மாநிலத்தில் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக 50 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்களை அனுப்ப வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து பரிசீலிப்பதற்காக மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். எனினும் இதுகுறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. தீர்ப்பு வெளியாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு படைகளை அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதி

ஹூஸ்டன்,ஆக.26:கைத்துப்பாக்கி மற்றும் ஆயூதங்களுடன் அமெரிக்க விமான நிலையத்தில் விஜய குமார் (40) என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரையாற்ற விஜய குமாருக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் பாசிச பயங்கரவாத ஹிந்து அமைப்புகள் அழைத்ததின் பெயரில் இவன் அங்கு சென்றதாக சொல்லிருகிறான். அவன் கைகளில் ஜிஹாத் பற்றியும் முஸ்லிம்கள் பற்றி அவதூறு பரப்பும் நோட்டீஸ்கள் வைத்திருந்திருக்கிறான். இவன் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முழுநேர உழியன் என்பதும், இவன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு ஆயூத பயிற்சி எடுத்தவன் என்பதும், இவன் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்து பயங்கரவாத அமைபினருக்கு பயிற்சி கொடுக்க போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இவனை அங்குள்ள ஹிந்து பயங்கரவாத அமைப்பினர் ஜாமீனில் எடுத்துள்ளனர். 5000 அமெரிக்க டாலருக்கான உறுதி பத்திரத்தை அளித்த பின்னர் விஜய குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. விசாரணை அன்று விஜய குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதனால் அவன் ஹூஸ்டன் நகரைவிட்டு செல்லக்கூடாது என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததாக விஜய குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் என்று பொய் சொல்லி போலியான ஆவணங்கள் தயாரித்து அமெரிக்கா வந்துள்ளான். மும்பையில் இவனைப் பற்றி விசாரித்ததில் இதுபோல் ஒரு ஆவணப்படம் தயாரிப்பாளர் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இவன் அமெரிக்காவில் வாழும் ஹிந்துகள் அனைவரையும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின் உறுப்பினர்களாக மாற்ற மூளைசலவை செய்ய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 25 ஆகஸ்ட், 2010

சோமாலியாவில் தாக்குதல்: எம்.பி உள்பட 32 பேர் மரணம்

மொகாதிஷு,ஆக25:அதிபர் மாளிகைக்கு சமீபத்திலிலுள்ள ஹோட்டலில் போராளிகள் நடத்திய தாக்குதலில் 6 எம்.பிக்கள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.

ராணுவ வேடத்தில் வந்து இவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக துணை பிரதமர் அப்துற்றஹ்மான் இப்பி பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.

முன்னா என்ற ஹோட்டலுக்கு வந்த போராளிகள் முதலில் பாதுகாவலரைக் கொலைச் செய்துவிட்டு பின்னர் 6 எம்.பிக்கள் உள்ளிட்டவர்களை கொன்றுள்ளனர்.

தங்களின் சிறப்புப் பிரிவுதான் இத்தாக்குதலை நடத்தியதாக போராளி இயக்கமான அல்ஸபாபின் செய்தித் தொடர்பாளர் ஷேக் அலி முஹம்மதை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராளிகளுக்கெதிராக ஆப்பிரிக்க யூனியன் மற்றும் மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு மறுதினம் தான் இத்தகையதொரு கடும் பதிலடி ஏற்பட்டுள்ளது.

கடும் பாதுகாப்பு நிறைந்தபகுதியில் முன்னா ஹோட்டல் அமைந்துள்ளது. அரசு அதிகாரிகள் எப்பொழுதும் இங்கு வருவதால்தான் இந்த ஹோட்டலை போராளிகள் தாக்குதல் நடத்த தேர்ந்தெடுத்துள்ளனர். ஆறு எம்.பிக்கள், ஐந்து அரசு பணியாளர்கள், 21 சாதாரண மக்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அப்துற்றஹ்மான் இப்பி தெரிவிக்கிறார்.

ஆப்பிரிக்க யூனியனின் 6000 ராணுவத்தினர் சோமாலியாவில் உள்ளனர். மேலும் கூடுதல் படைகளை போராளிகளை எதிர்கொள்ள அனுப்பப்போவதாக ஆப்பிரிக்க யூனியன் அறிவித்துள்ளது.

அதேவேளையில், போராளிகளின் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 130 பேருக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

ஆப்பிரிக்க யூனியனின் உறுப்பு நாடான உகாண்டா சமீபத்தில் தனது நாட்டு ராணுவத்தினரை அனுப்பியிருந்தது. இதற்கு பதிலடியாக உகாண்டாவில் நடத்திய குண்டுவெடிப்பில் 78 பேர் கொல்லப்ப்பட்டனர் எனக்கூறப்படுகிறது.

1991 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு ஸ்திரமில்லாத சோமாலியாவில் பெரும்பாலான பகுதிகளும் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஹிட்லர் யூதக்குலத்தைச் சார்ந்தவர்- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

லண்டன்,ஆக25:யூதர்களை கொல்ல களமிறங்கி பணியாற்றிய ஜெர்மனியின் நாசி இயக்கத் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் யூத பரம்பரயைச் சார்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹிட்லரின் உறவினர்களிடம் நடத்திய டி.என்.ஏ பரிசோதனையில் ஹிட்லரின் முன்னோர்கள் யூதக்குலத்தைச் சார்ந்த வட ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

லண்டனில் டெய்லி எக்ஸ்ப்ரஸ் என்ற பத்திரிகைதான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. நாசி இயக்கத் தலைவரின் மருமகன்களின் ஒருவரான அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் பயன்படுத்திய டவலை பத்திரிகையாளர் லாங்க் பால் மர்டேர்ஸ் என்பவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

ஹிட்லரின் ஆஸ்திரியாவைச் சார்ந்த இன்னொரு உறவினர் நோர்பர்ட் ஹெச் என்ற விவசாயிடமிருந்து பெறப்பட்ட மாதிரியையும் இவர் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

ஜெர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பாவில் காணப்படாத வகையான ஒய் குரோமோசோம்கள்தான் இரண்டு மாதிரிகளையும் பரிசோதித்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. யூதர்களிடம்தான் இவ்வகையான குரோமோசோம்கள் காணப்படும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.

ஹிட்லரின் முன்னோர்கள் ஜெர்மனியில் குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.மொராக்கோ,அல்ஜீரியா,துனீசியா ஆகிய நாடுகளிலிலுள்ள மக்களிடமும்,அஷ்கெனாஸி,ஸெஃபால்டிக் யூதப் பிரிவினர்களிடமும்தான் இந்தவகையான குரோமோசோம்கள் காணப்படுகிறது என மர்டேர்ஸ் கூறுகிறார்.

"நாங்கள் சுத்தமான ஆரிய இரத்தத்தில் பிறந்தவர்கள்" என ஹிட்லரும், சில நாசித் தலைவர்களும் பெருமை அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக தகவல்

கின்ஷாஸ,ஆக25:காங்கோ நாட்டில் முக்கிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் 200 பெண்களை கூட்டாக வன்புணர்ச்சிச் செய்ததாக உதவும் அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ.நா. சமாதான அதிகாரியின் தலைமையகத்திற்கு அருகேதான் கிளர்ச்சியாளர்கள் இத்தகைய அக்கிரமத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரியொருவரும், மருத்துவரும் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி ருவாண்டா,காங்கோ கிளர்ச்சியாளர்கள் விவசாய பகுதிகளான லுவூங்கியிலும் அருகிலிலுள்ள கிராமங்களிலும் தாக்குதல் நடத்தினர். ஆனால் திங்கள் கிழமை வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. குழுவின் அறிக்கையில் தாக்குதலைக் குறித்து குறிப்பிட்டிருந்தாலும் அச்சம்பவத்தைக் குறித்து விசாரிப்பதாக மட்டும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாதம் 4-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் வாபஸ் பெற்ற பிறகே தங்களால் ஐ.நாவின் ராணுவமுகாமிற்கு 16 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள நகருக்குச் செல்ல முடிந்தது என சர்வதேச மருத்துவக்குழுவின் வில் க்ராகின் தெரிவிக்கிறார்.

தாக்குதல் நடத்திய கிளர்ச்சியாளர்கள் எவரையும் கொல்லவில்லை என்றாலும் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சிச் செய்ததோடு கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். நான்கு வயதிற்கு வந்த ஆண்களையும் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர் என மாவட்ட மருத்துவ குழுவின் கஸிம்போ சார்ஸ் கச்சே கூறுகிறார்.

குழந்தைகள் மற்றும் கணவரின் முன்னிலையில்தான் பெண்கள் வன்புணர்வுக்கு செய்யப்பட்டுள்ளனர். காங்கோவில் 5400 பெண்கள் கடந்த ஆண்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஈரானின் புதிய ஆளில்லா விமானம் அறிமுகம்

டெஹ்ரான்,ஆக23:ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானத்தை(ட்ரோன்) அறிமுகம் செய்தார் அந்நாட்டு அதிபர் அஹ்மத் நிஜாத். ஈரானின் எதிரிகளுக்கு மரணத்தின் தூதர்தான் இது என அறிமுக விழாவில் உரை நிகழ்த்தினார் நிஜாத்.

பாதுகாப்புத்துறையின் தேசிய தினத்தில்தான் கர்ரார்(முன் சென்று தாக்குவது) என்ற பெயரிடப்பட்ட நான்கு மீட்டர் நீளமுடைய இந்த குண்டுவீச்சு விமானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணம் செய்ய இயலக்கூடிய இவ்விமானம் 250 பவுண்ட் எடையுள்ள இரண்டு குண்டுகளை தாங்கும் சக்திக் கொண்டது.

ராணுவத்தை பாராட்டிய நிஜாத், எதிரிகளுக்கு ஈரானை தாக்குவதற்கான ஆர்வம் முடியும் வரை இது தொடரும் என அறிவித்தார்.

ஈரான் தங்களின் முதல் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை துவக்கிய மறுநாள்தான் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கியாம்-1 கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் சோதித்தது. 1980 களின் இறுதியிலேயே பைலட் இல்லாத கண்காணிப்பு விமானங்களை ஈரான் தயாரித்திருந்தது.

1992 ஆம் ஆண்டு முதல் சுயமாக டாங்குகளும், கவச வாகனங்களும், ஏவுகணைகளும், டார்பிடோக்களும் ஈரான் தயாரித்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஓட்டு: கோவா கிருஸ்துவ தலைர்களுக்கு பாஜக வலைவீச்சு

Arti Mehra
பனாஜி,ஆக23:கோவா மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதரவு முக்கியம் என்பதால் அந்த மதத் தலைவர்களுடன் பேசுவது என்று பாரதிய ஜனதா தலைமை முடிவு செய்திருக்கிறது.

இதற்கான முதல் கட்டப் பேச்சுகளை மேற்கொள்ளும் பொறுப்பு கட்சியின் தேசியச் செயலரும் டெல்லி மாநகரின் முன்னாள் மேயருமான ஆர்த்தி மெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக பனாஜி வந்துள்ள ஆரத்தி மெஹ்ரா,கத்தோலிக்க மதத் தலைவர்களிடம் இது குறித்து முதலில் குறிப்பிட்டபோது அவர்களும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் திங்கள்கிழமை பேச வரலாம் என்று அனுமதி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.தேவைப்பட்டால் தலைமை மறை மாவட்ட ஆயரையும் சந்திக்க கோவா மாநில பாஜக தலைவர்கள் தயார் என்றும் கத்தோலிக்கத் தலைமை விரும்பினால் கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரியும் கோவா வந்து பேச்சில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.

கோவாவைப் பொறுத்தவரையில் பாஜக அணிக்கு இன்னமும் 4% முதல் 7% வரையிலான வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்.கிறிஸ்தவர்களிடம் காங்கிரஸ் கட்சி செய்யும் பிரசாரம் காரணமாகவே பாஜகவை நெருங்க கிறிஸ்தவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதால் அவர்களிடமே நேரடியாகப் பேசுவது என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்திருப்பதாக ஆரத்தி தெரிவித்தார்.

கோவாவில் ஊழல் அதிகரித்துவிட்டது.இந்த அரசியல் ஊழல் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி வெகுவாக பாதித்து வருகிறது. தங்களுடைய அரசை அகற்றும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்பதாலேயே காங்கிரஸார் இறுமாப்போடு செயல்படுகின்றனர்.இந்த ஊழல் விவகாரங்கள் மாநில மக்களை அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களை மிகவும் மனம் நோகச் செய்துள்ளது.எனவே பாரதிய ஜனதா என்பது அரசியல் கட்சிதானே தவிர அது மதவெறிக் கட்சி அல்ல,நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும்தான் அதன் குறிக்கோளே தவிர எந்த சிறுபான்மை இனத்துக்கும் அது எதிரியல்ல என்று கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே இந்த முயற்சியைத் தாங்கள் மேற்கொண்டிருப்பதாக ஆர்த்தி மெஹ்ரா தெரிவித்தார்.

ராமர்கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிடவில்லை: பாஜக

சிம்லா,ஆக23:ராமர் கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிடவில்லை. அதை மீண்டும் கையில் எடுப்போம். ராமர் கோவிலை கட்டுவோம் என்று பாஜக பொதுச் செயலாளர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் கல்ராஜ் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எங்கள் கொள்கை. இது தொடர்பாக மக்களுக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம். ராமர்கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிட வில்லை.அதை மீண்டும் கையில் எடுப்போம். ராமர் கோவிலை கட்டுவோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கையில் எடுப்போம்.

கஷ்மீரில் நடக்கும் வன்முறைக்கு பின்னால் சதி இருக்கிறது. கஷ்மீருக்கு சுயஆட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.அப்படி செய்தால் அது நாட்டுக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்." இவ்வாறு அவர் கூறினார்.

ஃபலஸ்தீனில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் கிறிஸ்தவர்கள்

பெத்லஹேம்,ஆக23:ஃபலஸ்தீனில் உள்ள வெஸ்ட் பேங்க்'கில் பெத்லஹேம் (ஈஸா நபி பிறந்த) நகரில் ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கிறிஸ்துவர்களும் நோன்பு நோற்கிறார்களாம்.

பாரம்பரியமாக இஸ்லாமியர்களுடன் வாழ்ந்துவரும் அங்குள்ள கிறிஸ்தவர்களும் இந்த ஒரு மாதம் நோன்பு இருந்து தங்களின் மரியாதையை காட்டுகிறார்களாம்.

இது போன்று நோன்பு இருப்பதினால் அவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கருத்துக்கணிப்பில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் தொண்ணூறு சதவீதம் பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தாம்பரம்: மதவெறியைத் தூண்டும் திமுக எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...


ஜாதி மதங்கள் கடந்து சமத்துவத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
கடந்த 09.08.2010 அன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் கூட்டம் நிறைந்த சண்முகம் சாலை அதனருகில் உள்ள அப்துல் ரசாக் சாலையில் தாம்பரம் ரெங்கனாதபுரத்தை சார்ந்த அசனார் (வயது 25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வருகிறார். எதிர்புறம் பத்மநாபன் என்பவர் ஆட்டோவில் வருகிறார். தாம்பரம் பெரிய மசூதிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்னால் இரு வாகனமும் மோதி கொள்கின்றனர். இரு வாகன ஓட்டிகளும் வாய்த் தகராறில் துவங்கி கை கலப்பு வரை செல்கிறது. இதனிடையே பீட்டர் இங்லேண்ட் துணிக்கடை ஊழியர் வினோத் என்பவரும் உரிமையாளர் கே.பி. ஜெகதீசன் என்பவரும் பத்மநாபனுக்கு ஆதர வாக அசனாரை சரமாரியாகத் தாக்குகின்றனர். இதனைக் கண்ட சண்முகம் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் சில முஸ்லிம்களும் தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து அசனாரை மீட்க வருகிறார்கள். உடனே கடை உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் வாகனத்தில் வந்தவர் அசனார் முஸ்லிம் என்பதற்காகவும் அவரை மீட்க வந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவும் தன்னையும் தன் கடையின் கண்ணாடியையும் தமுமுகவினர் தாக்கி விட்டனர் என்று தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் டி.காமராஜ் (எம்.எல்.ஏ.வின் மைத்துனர்) என்பவருக்கும் தகவல்தர, ஏற்கனவே தமுமுக மீதும் இஸ்லாமிய சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நகரமன்ற துணைத்தலைவர் காமராஜர் மூலம் தனது குண்டர் படையை ஏவி 9.8.2010 அன்று இரவு பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் வகையில் 150&க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்துக் கொண்டு அராஜகம் செய்தார். மேலும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தனது அதிகார பலத்தை பயன்ப டுத்தி, தமுமுகவினர் மீது காவல் துறையை ஏவி விட்டார். இதிலும் மதவெறி அடங்காத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. போலிசை தூண்டிவிட்டு தமுமுக சகோதரர்கள் எம்.பயாஸ், எம். அப்பாஸ், சதாம் உசேன், ஷாஜமான், முகமது அலி, ஹமிது, அசனார் உள்ளிட்டவர்களை கே.பி.ஜெகதீசன்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றப்பிரிவு எண் 307ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்தார். கைதானோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதிலும் திருப்தி கொள்ளாத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. 10.08.2010 அன்று, தான் ஒரு திராவிட இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து ஜாதி சங்க உறுப்பினராக மாறி, மதவெறி கும்பலோடு கைகோர்த்து தமுமுகவினரை கண்டிக்கிறோம் என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி கட்டாய கடை அடைப்பு நடத்தினார். இதனை கேள்விப்பட்ட தமுமுகவினர் தாம்பரத்தில் ஒன்றுகூடினர். எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவி டக்கூடாது என்பதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாக்கூப் தலைமையில் மிகவும் கட்டுப்பாடுடன் பொறுமை காத்தனர்.

காவல் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். 10.08.2010 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்கள் நேரடியாக களத்திற்கு வந்தார். முன்னதாக தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது, மாவட்ட மமக செயலாளர் எம். யாக்கூப், துணைச் செயலாளர் ம.ஹைதர் அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. 2006&ல் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் எஸ்.ஆர். ராஜாவை அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்த தமுமுகவினரை துச் சமாக மதித்து தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை காட்டிக்கொண்டே இருந்தார். வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் தரப்புக்கும் எம்.எல்.ஏ. தரப்புக்கும் அடிதடி தகராறு நடந்தபோது த.வெள்ளை யனைக் காப்பாற்றியது தமுமுக வினர்தான். சென்னையின் பெருநக ரமான தாம்பரத்தில் சிறுகடை வியாபாரிகளின் நலன் காக்க நாள்தோறும் போராடிக் கொண்டி ருக்கும் தமுமுகவை அழித்துவிட வேண்டும் என எம்.எல்.ஏ. கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்.

மக்களின் பிரச்சனையை உடனுக் குடன் முடித்துக் கொடுத்து மக்களின் நன் மதிப்பை பெற்று தமுமுகவினர் வளர்ந்து வரும் இச்சூழலில் இந்து முன்னணியுடன் கைகோர்த்துக் கொண்டு மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயல்கிறார். இதனிடையே விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சியின் மு.அக்பர், கம்யூனிஸ்ட் லோகநாதன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் முகம்மது சித்திக், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள், வணிகர் சங்கம் ஹாஜி சலீம், சேவியர் அருள்தாஸ் ஆகியோர் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.

 எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...

எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...


வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கம் கடையை திறக்கச் சொல்ல, எம்.எல்.ஏ. ராஜாவின் தூண்டுதலின் பேரில் குண்டர் படை வியாபாரிகளை மிரட்டி கடை களை அடைத்தனர். தமுமுக வினரை மதவெறியை தூண்டுபவர் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டு தாம்பரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., வெற்றிகொண்டான் போன்ற திமுக முக்கியப் பிரமுகர்கள் முஸ்லிம்களிடத்தில் நல்லுறவை ஏற்படுத்துவது போன்று தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசி சென்றாலும் எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நீடித்துக்கொண்டே இருக்கிறது. மதமோதலைத் தூண்டி விடும் எஸ்.ஆர்.ராஜாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், வணிகர் சங்கமும் சுவரொட்டிகளை ஒட்டின. ஆனால் எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் சுவரொ ட்டிகளை கிழித்து எறிந்தனர்.

திராவிட இயக்கத்தில் மத வெறியைத் தூண்டும் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மீது திமுக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.

தோழர் ஜீவா, என்.ஆர்.ராசமாணிக்கம், முனு ஆதி போன்ற சமூக சிந்தனைவாதிகள் வாழ்ந்த தாம்பரத்தில் மதவெறி சிந்தனையுடன் செயல்படும் ராஜாவால் திமுக அரசுக்கு தீராக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

வன்னிஅரசு - மாநில செய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தை கட்சி


தாம்பரத்தில் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது.

மூ. அக்பர், காங்கிரஸ் கட்சி


எனது அரசியல் வாழ்வில் இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இரு வாகன மோதலை மத மோதலாக கையா ண்ட தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கண்டனத்திற் குரியவர்.

வணிகர்சங்க பிரமுகர்-ஹாஜி சலிம்

தாம்பரத்தில் ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் தான் கடை அடைப்பு நடைபெறுகிறது. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

-மாயவரம் அமீன்

ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்புதல் துவங்கியது

டெஹ்ரான்,ஆக22:ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையான புஷஹரில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது.

தெற்கு ஈரானில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ரஷ்ய அதிகாரிகளின் முன்னிலையில் இப்பணித் துவங்கியது. ரஷ்யாவின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத்திட்டத்திற்கு எரிபொருள் அளிப்பதும், கழிவுகளை சேகரிப்பதும் ரஷ்யாவாகும்.

அணுசக்தி செறிவூட்டுதல் திட்டத்தின் பெயரால் ஐ.நா நான்குமுறை ஈரானின் மீது தடையை ஏற்படுத்தியுள்ளது.பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் செலவிட்டு புஷஹர் அணுசக்தி நிலைய நிர்மாணம் பூர்த்தியானது.

எல்லாவித நிர்பந்தங்களையும், தடைகளையும் தாங்கிக் கொண்டு ஈரானின் அமைதியான அணுசக்தித்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்திப்பிரிவு தலைவர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்தார்.

இஸ்லாமிக் குடியரசின் எதிரிகளுக்கெதிரான வெற்றியாக சிறப்பிக்கப்படும் இத்திட்டத்தின் துவக்கத்தை தேசிய திருவிழாவாகக் கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்திற்குள் அணுசக்தி நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ள ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதனை பயன்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேலைநாடுகள் பிரச்சாரம் செய்துவருகின்றன.

ஆனால், புஷஹரில் யுரேனியம் மூன்று சதவீதம் மட்டுமே செறிவூட்டப்படுகிறது.

மருத்துவ ஆராய்ச்சி ரியாக்டருக்காக 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தையும் ஈரான் துவக்கியுள்ளது.நதான்ஸ் ப்ளாண்டில் தேவையான செண்ட்ரிஃப்யூஜ்கள் நிறுவிவிட்டால் 30 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்திச் செய்யலாம் என ஸாலிஹி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நிவாரணக்கப்பல்:இஸ்ரேலின் மிரட்டலை புறக்கணித்தது லெபனான்

பெய்ரூத்,ஆக22:இஸ்ரேலின் அராஜகத் தடைகளால் அவதியுற்றுவரும் காஸ்ஸா மக்களுக்கு உதவி புரிவதற்காக வடக்கு லெபனான் துறைமுகத்திலிருந்து இன்று புறப்படும் மரியம் என்ற பெயரிலான நிவாரணக் கப்பலை தடுப்போம் என இஸ்ரேலிய அமைச்சர் யஹூத் பாரக்கின் மிரட்டலை லெபனான் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

நிவாரணக்கப்பலை எகிப்திய துறைமுகத்திலோ அல்லது இஸ்ரேலிலோ அனுமதிக்கலாம் என பாரக் தெரிவிக்கிறார். லெபனானுடன் மோதல் போக்கை இஸ்ரேல் கையாண்டுவருவதால் நிவாரணக்கப்பல் காஸ்ஸாவிற்குள் பிரவேசிக்க முடியாது. அதற்கு பதிலாக சைப்ரஸ் வழி செல்லவேண்டிவரும். அதேவேளையில் நிவாரணக் கப்பலை தடுக்கப் போவதாக சைப்ரஸ் அறிவித்துள்ளது.

பொலிவியன் கொடியைக் கொண்ட சரக்குக்கப்பலில் 60 லெபனான், ஐரோப்பா, அமெரிக்காவைச் சார்ந்த பெண் சேவைத் தொண்டர்கள் உள்ளனர். புற்றுநோய் மருந்துகளை ஏற்றி வருகிறது இக்கப்பல்.

துருக்கியின் நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய அக்கிரம தாக்குதலில் ஒன்பது துருக்கி சேவைத் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது துருக்கி இஸ்ரேலுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கஷ்மீரிகள் கல்வீச்சில் ஈடுபடுவது தற்காப்பிற்காக: தேஜஸ் நிருபருடன் செய்யத் அலிஷா கிலானி பேட்டி.

ஸ்ரீநகர்,ஆக21:கஷ்மீரில் அதிக மக்கள் ஆதரவுப் பெற்றத் தலைவர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி. விட்டுக் கொடுக்காத மனப்பான்மைதான் கிலானியை பிறர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. கிலானி முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்தால் எந்தவொரு கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் கஷ்மீர் ஸ்தம்பிக்கும்.
கஷ்மீரில் மிக அதிகமாக கைதுச் செய்யப்பட்டவர் கிலானியாவார். கிலானியுடன் தேஜஸ் மலையாள நாளிதழின் பிரதிநிதி நடத்திய நேர்முக பேட்டி கீழே.

தேஜஸ்:பேச்சுவார்த்தைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்த அழைப்பை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். தற்பொழுது பிரதமர் அளித்த சுயாட்சி வாக்குறுதியையும் நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். எந்தவொரு சமரசத்திற்கும் இடங்கொடாத கண்டிப்பானவர் கிலானி எனக் குற்றஞ்சுமத்த இது காரணமாகுமே?

கிலானி:பேச்சுவார்த்தைகள் நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் அந்த பேச்சுவார்த்தை பயன்தரத்தக்கதாக மாறவேண்டும்.எது அடிப்படை பிரச்சனை என்பதுதான் முக்கியம். அதுதான் பேச்சுவார்த்தையின் ஒரேயொரு அஜண்டாவாக இருக்கவேண்டும்.கஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் என்பதை அங்கீகரிப்பதுதான் இந்தியா முதலில் செய்யவேண்டியது. தொடர்ந்து இங்கு நடைமுறையில் உள்ள கொடிய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும்.

இந்தியா,பாகிஸ்தான்,கஷ்மீரிகள் ஆகியோருடன் தொடர்புடையதுதான் கஷ்மீர் பிரச்சனை.பேச்சுவார்த்தையில் எல்லோரும் கலந்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று தரப்பினரும் முன்வைக்கும் ஃபார்முலாவின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்துவதும், தீர்வு காண்பதுமாகும். இத்தகையதொரு பேச்சுவார்த்தையை விரும்பினால், நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். இந்தியா இவ்விஷயத்தை அங்கீகரிக்காதவரை கஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பயனற்று போகும்.

தேஜஸ்:தங்களை பலவீனப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து முயல்வதாக நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் தங்களுடைய செல்வாக்கை இந்திய அரசு அங்கீகரிக்கிறதல்லவா? இதனை நல்லதொரு மாற்றமாக அல்லவா நீங்கள் காணவேண்டும்?

கிலானி:அவ்வாறில்லை,இந்தியாவிற்கு உள்ளார்ந்த நேர்மை உண்டெனில் அவர்கள் கஷ்மீர் மக்களுக்காக எதனையாவது செய்யவேண்டும். முன்னர் மீர்வாய்ஸ் பிரிவினருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதனால் எவ்வித பயனும் விளையவில்லை என மீர்வாய்ஸ் ஃபாரூக்கே கூறியுள்ளார். மக்களுக்கிடையே கஷ்மீர் தலைவர்களின் இமேஜை குலைப்பதே இந்தியாவின் நோக்கம்.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவிற்கு எவ்வித கஷ்டமுமில்லை. ஆனால், ராணுவ சக்தியைத்தான் இந்தியா எப்பொழுதும் நம்பியுள்ளது.

தேஜஸ்:தேசிய மாநாட்டுக் கட்சி அரசை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கின்றீர்கள்?

கிலானி:தேசிய மாநாட்டுக் கட்சியானாலும் சரி பி.டி.பி அல்லது காங்கிரஸ் என்னச் செய்தார்கள்? என்னச் செய்யவில்லை? என்பதை நாங்கள் ஒரு பிரச்சனையாக கருதவில்லை.
இந்தியா நேரடியாக கஷ்மீரை ஆளுகிறது.வேறு எவருக்கும் இங்கு அதிகாரமில்லை. சில வாரங்களுக்கு முன்பு கஷ்மீர் மாநில அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் முஹம்மத் ஸாஹரே, சி.ஆர்.பி.எஃப் எங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவது இல்லை என்று கூறியிருந்தார். அவர்கள் பரிபூரணமாகவே கட்டுப்பாடு இல்லாதவர்கள். நாங்கள் பல் இல்லாத சிறுத்தை என்பதை அமைச்சரவையின் அங்கத்தினரே ஒப்புக்கொள்கிறார்.

தேஜஸ்:கடந்த சில மாதங்களாக கஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை பல வேளைகளில் வன்முறையில் முடிகிறது. மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசுகிறார்கள்.மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தூண்டுவது இதுதானே?

கிலானி:பாதுகாப்புப் படையினர்தான் மக்களை அவர்கள் மீது கல்லெறியத் தூண்டுகின்றனர்.அமைதியான போராட்டங்களைக் கூட இங்கு அனுமதிப்பதில்லை.
பாதுகாப்புப்படையினர் 52 பேரைக் கொன்ற பொழுது அதில் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் இளைஞர்களாவர். மக்களால் கல்லெறியப்பட்ட எந்தவொரு பாதுகாப்புப் படையினரும் இதுவரை இறந்ததில்லை. கல்லெறிவதற்கு மக்கள் தூண்டப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் தற்காப்பிற்காகவே கல்வீச்சில் ஈடுபடுகின்றார்கள். அமைதியாக செல்லும் கண்டனப் பேரணியின் மீது கண்ணீர்க் குண்டு வீசுவதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதும் நிகழும் பொழுது மக்கள் கல்வீச்சில் ஈடுபடுகின்றார்கள்.

தேஜஸ்:கஷ்மீர் விவகாரத்தில் இந்தியா என்னச் செய்யவேண்டும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

கிலானி:கஷ்மீருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரமாகிவிட்டது என சமீபத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ளார்ந்த நேர்மை உண்டெனில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே துவங்க வேண்டும். இந்தியா கஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்பதை அங்கீகரிக்க வேண்டும். கஷ்மீர் தொடர்பாக ஐ.நா நிறைவேற்றிய, இந்தியா அங்கீகரித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறுதான், தீர்விற்கு சூழலை உருவாக்க வேண்டும். துரதிர்ஷ்டவசத்தால், அது உருவாகவில்லை. இந்தியா உள்ளார்ந்த நேர்மையுடன் பேசவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

கடந்த காலங்களுக்கிடையே கஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆறு லட்சம் பேர் இங்குக் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் வரையிலான மக்கள் ஜம்முவில் கொல்லப்பட்டனர். பிரிவினையின் பொழுது, பாகிஸ்தானுக்கு போவதற்குரிய வசதியை ஏற்படுத்தி தருவதாக வாக்களித்து ஒரு இடத்தில் முஸ்லிம்களை ஒன்றுக்கூட்டி தோக்ரா ராணுவம் கூட்டுப்படு கொலைச் செய்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கிடையே ஒரு லட்சம் வரையிலான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கஷ்மீர் பள்ளத்தாக்கில் 1000 ரகசிய பிண சமாதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதான் இந்தியாவின் அணுகுமுறை.

தேஜஸ்:கஷ்மீரின் தற்பொழுதைய பிரச்சனையின் பின்னணியில் லஷ்கர்-இ-தய்யிபா என உள்துறை அமைச்சர் கூறுகிறார்?

கிலானி:நிச்சயமாக இல்லை. இது பிரச்சனையை திசைத் திருப்புவதற்காக கூறப்படும் குற்றச்சாட்டாகும். பாகிஸ்தான் கஷ்மீரி இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட பண உதவிச் செய்கிறது என்பதெல்லாம் இந்தியா உருவாக்கும் பொய்களாகும். எவரும் இங்கு வந்து இங்குள்ள பிரச்சனை என்ன? என்பதை புரிந்துக் கொள்ளலாம். இங்கு ஒரு லஷ்கரும் இல்லை. வெள்ளப்பெருக்கு போன்ற சொந்த பிரச்சனைகளால் அல்லாடுகிறது பாகிஸ்தான். அவர்களுக்கு எங்களுடைய பிரச்சனைக்கு தார்மீக ஆதரவு அளிக்கக்கூட இயலவில்லை.

நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்