புதன், 25 ஆகஸ்ட், 2010

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக தகவல்

கின்ஷாஸ,ஆக25:காங்கோ நாட்டில் முக்கிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் 200 பெண்களை கூட்டாக வன்புணர்ச்சிச் செய்ததாக உதவும் அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ.நா. சமாதான அதிகாரியின் தலைமையகத்திற்கு அருகேதான் கிளர்ச்சியாளர்கள் இத்தகைய அக்கிரமத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரியொருவரும், மருத்துவரும் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி ருவாண்டா,காங்கோ கிளர்ச்சியாளர்கள் விவசாய பகுதிகளான லுவூங்கியிலும் அருகிலிலுள்ள கிராமங்களிலும் தாக்குதல் நடத்தினர். ஆனால் திங்கள் கிழமை வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. குழுவின் அறிக்கையில் தாக்குதலைக் குறித்து குறிப்பிட்டிருந்தாலும் அச்சம்பவத்தைக் குறித்து விசாரிப்பதாக மட்டும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாதம் 4-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் வாபஸ் பெற்ற பிறகே தங்களால் ஐ.நாவின் ராணுவமுகாமிற்கு 16 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள நகருக்குச் செல்ல முடிந்தது என சர்வதேச மருத்துவக்குழுவின் வில் க்ராகின் தெரிவிக்கிறார்.

தாக்குதல் நடத்திய கிளர்ச்சியாளர்கள் எவரையும் கொல்லவில்லை என்றாலும் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சிச் செய்ததோடு கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். நான்கு வயதிற்கு வந்த ஆண்களையும் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர் என மாவட்ட மருத்துவ குழுவின் கஸிம்போ சார்ஸ் கச்சே கூறுகிறார்.

குழந்தைகள் மற்றும் கணவரின் முன்னிலையில்தான் பெண்கள் வன்புணர்வுக்கு செய்யப்பட்டுள்ளனர். காங்கோவில் 5400 பெண்கள் கடந்த ஆண்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: