சனி, 7 ஆகஸ்ட், 2010

மாணவர்களிடையே மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,ஆக7:தனது சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்திய சுதந்திரபோரில் இரத்தம் சிந்திய முஸ்லிம் சமுதாயம் தியாகம் செய்தது உயிரையும், பொருளையும் மட்டுமல்ல, தமது எதிர்கால சந்ததியினரின் கல்வியையும்தான்.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்பதையும், அவர்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சச்சார், மிஷ்ரா உள்ளிட்ட கமிஷன்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே சிறுபான்மையினர் கல்வியில் மேம்படுவதற்காக உதவித்தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களூம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகின்றன. இந்த நிதியுதவி அவர்களுடைய தேவையை முழுமையாக பூர்த்திச் செய்யாது என்பது வேறு விஷயம்.

இந்நிலையில்,தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் மக்களால் மறக்கடிக்கப்பட்டு செல்வாக்கை இழந்து புறம்போக்கு கட்சியாக மாறியுள்ள பா.ஜ.க குறுகிய வழியில் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு தனது வழக்கமான ஆயுதமான மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் பெறவிரும்புகிறது.

வருகிற 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது ஒரு சில இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தற்பொழுது சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கிவரும் கல்வி உதவித்தொகையை ஏதோ தமிழக அரசு வழங்குவதுபோல் ஒரு மாயை ஏற்படுத்தி,கல்வியில் இந்து என்பதால் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தை ஜூலைப் போராட்டம் என்றபெயரில் நடத்தி வருகின்றனர்.

உதவித்தொகையைப் பொறுத்தவரை அதில் ஆதாயம் பெறுவோர் ஏராளமாக உள்ளனர்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவித்தொகை, ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர்,தியாகிகள் என பல உதவித்தொகைகளில் ஹிந்துக்களே ஆதாயம் பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகையில் பார்ப்பணர்களுக்குத்தான் பங்கில்லை.ஆகவே பார்ப்பணர்களுக்கு உதவும் நோக்கிலேயே பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட பா.ஜ.க ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை இல்லை என்ற கோஷத்தை எழுப்பி சிறுபான்மையினருக்கு கிடைக்கும் உதவித்தொகையை தடுக்க விரும்புகிறது. மேலும் மாணவர்களிடையே ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி கல்வி வளாகங்களை கலவர பூமியாக மாற்ற தமிழகத்தில் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் செயலாற்றி வருகிறது.

பா.ஜ.கவின் மதவெறியைத் தூண்டும் போக்கை கண்டித்து மக்கள் நல்வாழ்வில் நாட்டங்கொண்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(06/08/2010) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐயின் மாவட்டத்தலைவர் எ.செய்யது அலி தலைமைத் தாங்கினார். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் லீனஸ் ராஜ் கருத்துரை வழங்கினார். எஸ்.டி.பி.ஐயின் மாநிலப்பேச்சாளர் செய்யத் இப்ராஹிம் கலந்துக் கொண்டு பா.ஜ.கவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: