செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கொளத்தூர் மணி உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்ளூர் மக்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அனுமதியை மீறி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 59 பேரையும் தமிழக அரசு கைது செய்து வேலூர் மற்றும் புழல் சிறைகளில் அடைத்துள்ளது.

ஜனநாயக ரீதியில் போராடம் நடத்த அனுமதி கேட்டும் அனுமதி வழங்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யுமாறு தமுமுக வலியுறுத்துகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: