சனி, 21 ஆகஸ்ட், 2010

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஒபாமாவை முஸ்லிம் என நம்புகின்றனர்

வாஷிங்டன்,ஆக20:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை முஸ்லிம் எனக்கருதும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச்சில் 11 சதவீதம் பேர் ஒபாமாவை முஸ்லிம் என நம்பினர்.ஆனால், இந்த எண்ணிக்கை தற்பொழுது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது என இவ்வாய்வை மேற்கொண்ட ஃப்யூ ரிசர்ச் சர்வே கூறுகிறது.

குடியரசுக் கட்சிக்காரர்களில் மூன்றில் ஒருவருக்கே ஒபாமா கிறிஸ்தவர் என்பது தெரியும். ஆய்வில் பங்கேற்ற 43 சதவீதம் பேர் ஒபாமா எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது தெரியாது.

ஒபாமாவின் தந்தை முஸ்லிமாக இருந்தார் என்பதன் மறைவில் அவருடைய எதிரிகள் நடத்தும் பிரச்சாரம்தான் இந்த தவறான புரிதலுக்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: