திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கொச்சியில் சர்வதேச இஸ்லாமிய நிதியியல் கருத்தரங்கம்

கொச்சி,ஆக9:கேரள மாநிலம் கொச்சியில் வருகிற அக்டோபர் 4,5 மற்றும் 6 ஆகிய தினங்களில் இஸ்லாமிய ஆய்வு மற்றும் பயிற்சி இன்ஸ்டிட்யூட் சார்பாக சர்வதேச இஸ்லாமிய நிதியியல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்நிறுவனம் இஸ்லாமிய வளர்ச்சி வங்கி மற்றும் அல் ஜாமியா அல் இஸ்லாமியா (இஸ்லாமிய பல்கலைக்கழகம்) கேரளாவைச் சார்ந்ததாகும்.

இக்கருத்தரங்கில் ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு அமைப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவிற்கு முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமை பேட்டர்னாகவும், பிரபல வெளிநாட்டுவாழ் இந்தியர்களான டாக்டர்.பி.முஹம்மது அலி குல்ஃபார் மற்றும் பி.வி.அப்துல் வஹ்ஹாப் ஆகியோர் பேட்டர்ன்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 15, 2010.

தலைப்பு: "Islamic Finance in India:Products, Institutions and Regulations".

ஆய்வறிக்கை, சொந்தமாக திரட்டிய தகவல்களாகவும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஷரீஆ பிரச்சனைகள், அமைப்பு பிரச்சனைகள், பொருட்கள், மாதிரிகள் மற்றும் கட்டமைப்புகள், ஒழுங்குமுறை மற்றும் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிதிகள், வணிக நிதி வழங்குவோர், சிறுகடன் வழங்குவோர், ஜக்காத் மற்றும் வக்ஃப் நிறுவனங்கள், பங்குசந்தை உள்ளிட்டவைக் குறித்ததாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆய்வறிக்கை இந்தியாவை ஃபோகஸ் பண்ணுவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊக்கமூட்டும் விதத்தில் இஸ்லாமிய நிதியியலின் உலகளாவிய அனுபவங்களை குறிப்பிட வேண்டும்.

போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை நிகழ்ச்சியை நடத்துவோர் ஏற்றுக்கொள்வர்.

ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க
Dr.Mohammed Obaidullah, of the Islamic Research and Training Institute,
தொடர்பிற்கு rdivision@isdb.org or 966 2 6378927 (fax) மற்றும்
Dr.Abdussalam M, Director of the Al Jamia al Islamiya Kerala, தொடர்பிற்கு mail@aljamia.net or 91 4933 270565 (fax).

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சிறப்பு விருந்தினர்களாக எதிர்பார்க்கப்படுவோர் டாக்டர்.உமர் சாப்ரா(சவூதி அரேபியா), டாக்டர்.முஹம்மது உபைதுல்லாஹ் (IDB) ,டாக்டர்.பம்பாங் ப்ரோட்ஜெனிகோரோ, டாக்டர்.மொன்சிர் காஃப்(அமெரிக்கா), டாக்டர்.நாஸிம் அலி(ஹார்வர்ட்), டாக்டர்.அலி குரதாகி(கத்தார்), டாக்டர்.ஹுசைன் ஹாமித் ஹஸ்ஸன்(ஐக்கிய அரபு அமீரகம்), டாக்டர்.நிஸாம் யாக்கூபி(பஹ்ரைன்) மற்றும் டாக்டர் அவ்ஸஃப் அஹ்மத்(டெல்லி).

கட்டுரைப் போட்டியில் இந்தியக் குடிமகன்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.
தலைப்பு: 'Islamic Finance in India:Prospects and Challenges' கட்டுரைகள் அனுப்ப கடைசித்தேதி செப்டம்பர் 10, 2010.
முகவரி:Essay@ISIFK, Al Jamia Al Islamiya Santhapuram,
P.O. Pattikkad – 679 325,
Malappuram District Kerala – India.


கட்டுரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
முகவரி: essay@isifk.com

இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கியியல் உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கியியல் நடைமுறைப்படுத்தாவிட்டாலும் கூட, அதுத்தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இஸ்லாமிய வங்கியலுக்கு ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் சட்டத்திருத்தங்கள் தேவைப்படுகிறது. கேரள அரசு இஸ்லாமிய நிதியியல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய வங்கிப்போன்ற வங்கியில்லாத நிதியியல் நிறுவனம் ஒன்றைத் துவங்குவதற்கான நடவடிக்கையை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:twocircles.net

கருத்துகள் இல்லை: