வாஷிங்டன்,ஆக16:நான்கில் மூன்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் மீது நம்பிக்கையில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரபல அமெரிக்க தனியார் நிறுவனமான கால்லப் 16 துறைகளில் மக்களுக்கான நம்பிக்கை ஆராய்வதற்காக நடத்திய சர்வேயில்தான் இது தெரியவந்துள்ளது.
1020 பேர் பங்கேற்ற இந்த சர்வேயில், 75 சதவீத அமெரிக்கர்களும், அமெரிக்க பத்திரிகைகள் மீதும், தொலைக்காட்சி சானல்கள் மீது நம்பிக்கையின்மையை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்காவில் ஊடகங்கள் மீதான நம்பிக்கை மக்களிடம் பெருமளவில் குறைந்துவருவதாக இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது. 16 துறைகளில் ராணுவம் தான் நம்பிக்கையில் முன்னிலையில் உள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உள்ளது.
18 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களிடம் 49 சதவீதம் பேருக்கு பத்திரிகைகள் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் 30 வயதிற்கும், 49 வயதிற்குமிடையேயுள்ள நபர்களிடம் 19 சதவீதம் மட்டுமே பத்திரிகைகள் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வாய்வு செய்தி ஊடகங்கள் அமெரிக்காவில் லாபகரமாக செயல்படுவதற்கு பெரும் சவால்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக