புதன், 11 ஆகஸ்ட், 2010

கேரள உள்துறை அமைச்சர் இல்லம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தியது எஸ்.டி.பி.ஐ

திருவனந்தபுரம்,ஆக11:கேரள மாநிலம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.யின் உறுப்பினர்கள் வீடுகளில் எவ்வித காரணமுமின்றி ரெய்டு நடத்தியதையும், அரசியல் சுதந்திரம் மறுக்கப்படுவதையும் கண்டித்து கேரள மாநில உள்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கண்டனப் பேரணியை நடத்தியது.

எஸ்.டி.பி.ஐ.யின் வளர்ச்சி பிரபல அரசியல் தலைவர்களின் தூக்கத்தை கெடுப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.கே.மனோஜ் குமார் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார்.

மேலும் அவர் கூறியதாவது,"ஆதிவாசி-தலித்-முஸ்லிம்கள் ஆகியோர் அரசியலில் வலுப்பெறுவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பது அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். தனிநபர்களையும், இயக்கங்களையும் மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்த மிகவும் எளிதான வழி தீவிரவாத மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளாகும்.நூற்றாண்டுகளாய் இதனை சில சமூகங்களுக்கு எதிராக இங்குள்ள மனுவாதிகள் உறுதியான நோக்கத்துடன் செயல்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

தற்பொழுது எஸ்.டி.பி.ஐ.யையும் இப்பட்டியலில் இடம்பெறச் செய்ய சதித்திட்டங்கள் ரகசியமாக தீட்டப்பட்டு வருகின்றன.இதனை ஜனநாயகரீதியில் தடுத்து தோற்கடிப்போம் என மனோஜ்குமார் தெரிவித்தார். இப்பேரணியில் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: