வாஷிங்டன்,ஆக11:சீனாவுக்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை விற்றதாகக் குற்றஞ்சாட்டி இந்திய வம்சாவழியைச் சார்ந்த என்ஜீனியர் மீது ஹவாய் நீதிமன்றம் குற்றத்தை சுமத்தியுள்ளது.
பி-2 குண்டுவீச்சின் ஃப்ரொப்பல்சன் உருவாக்குவதற்கு உதவிய நொஷிர் கொவாடியாவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சதித்திட்டம், கள்ளப்பணம் மாற்றியது உள்ளிட்டவைகளும் அடங்கும். இவ்வழக்கில் கொவாடியாவுக்கு ஆயுள்தண்டனை கிடைக்கலாம்.
இன்ஃப்ரா ரெட் ரேடார்களையும், அமெரிக்காவின் காலநிலை கிரகண ஏவுகணைகளையும், ஏமாற்றும் திறன்கொண்ட க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்க கொவாடியா சீனாவிற்கு உதவியுள்ளார் என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஏவுகணையை உருவாக்குவதற்கு இடையே கொவாடியா சீனாவுக்கு 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ளார். ரகசியங்களை சீனாவுக்கு அளித்ததால் கொவாடியாவுக்கு 110000 அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. இதனை மாவு தீவில் ஆடம்பர வீடு ஒன்று வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளார் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கு ஏவுகணை உருவாக்க மாதிரி செய்துக் கொடுத்தது உண்மை என்றாலும், அது ரகசிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
நான்கு ஆண்டுகளாக சிறையிலிருக்கும் கொவாடியாவுக்கு தீர்ப்பு வருகிற நவம்பரில் அளிக்கப்படும். தேசிய பாதுகாப்பு தகவல்களை வெளிநாட்டிற்கு அளித்ததான குற்றச்சாட்டில் கொவாடியா குற்றவாளி அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக