செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மப்ஹூஹ் கொலை:யு.ஏ.இ ஜெர்மனியிடம் விளக்கம் கேட்கிறது

அபுதாபி,ஆக15:ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் யு.ஏ.இயில் வைத்து கொல்லப்பட்டதுத் தொடர்பாக ஜெர்மனியிடம் அந்நாடு விளக்கம் கேட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கைதுச் செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளி யூரி ப்ரோட்ஸ்கி போலி ஜெர்மனி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி குற்றத்தில் ஈடுபட்டுள்ளது உறுதியான நிலையில்தான் இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

யூரி போலந்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டு ஜெர்மனியிடம் ஒப்படைத்த பிறகு இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல ஜெர்மனி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு கவலைத் தெரிவித்துள்ளது.

யு.ஏ.இ. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சட்டப்பிரிவு இணை அமைச்சர் டாக்டர்.அப்துற்றஹ்மான் அல் அவாதிதான் ஜெர்மனியிடம் விளக்கம் கேட்பதுத் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மப்ஹூஹ் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்துக் கொல்லப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: