புதன், 25 ஆகஸ்ட், 2010

சோமாலியாவில் தாக்குதல்: எம்.பி உள்பட 32 பேர் மரணம்

மொகாதிஷு,ஆக25:அதிபர் மாளிகைக்கு சமீபத்திலிலுள்ள ஹோட்டலில் போராளிகள் நடத்திய தாக்குதலில் 6 எம்.பிக்கள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.

ராணுவ வேடத்தில் வந்து இவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக துணை பிரதமர் அப்துற்றஹ்மான் இப்பி பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.

முன்னா என்ற ஹோட்டலுக்கு வந்த போராளிகள் முதலில் பாதுகாவலரைக் கொலைச் செய்துவிட்டு பின்னர் 6 எம்.பிக்கள் உள்ளிட்டவர்களை கொன்றுள்ளனர்.

தங்களின் சிறப்புப் பிரிவுதான் இத்தாக்குதலை நடத்தியதாக போராளி இயக்கமான அல்ஸபாபின் செய்தித் தொடர்பாளர் ஷேக் அலி முஹம்மதை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராளிகளுக்கெதிராக ஆப்பிரிக்க யூனியன் மற்றும் மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு மறுதினம் தான் இத்தகையதொரு கடும் பதிலடி ஏற்பட்டுள்ளது.

கடும் பாதுகாப்பு நிறைந்தபகுதியில் முன்னா ஹோட்டல் அமைந்துள்ளது. அரசு அதிகாரிகள் எப்பொழுதும் இங்கு வருவதால்தான் இந்த ஹோட்டலை போராளிகள் தாக்குதல் நடத்த தேர்ந்தெடுத்துள்ளனர். ஆறு எம்.பிக்கள், ஐந்து அரசு பணியாளர்கள், 21 சாதாரண மக்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அப்துற்றஹ்மான் இப்பி தெரிவிக்கிறார்.

ஆப்பிரிக்க யூனியனின் 6000 ராணுவத்தினர் சோமாலியாவில் உள்ளனர். மேலும் கூடுதல் படைகளை போராளிகளை எதிர்கொள்ள அனுப்பப்போவதாக ஆப்பிரிக்க யூனியன் அறிவித்துள்ளது.

அதேவேளையில், போராளிகளின் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 130 பேருக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

ஆப்பிரிக்க யூனியனின் உறுப்பு நாடான உகாண்டா சமீபத்தில் தனது நாட்டு ராணுவத்தினரை அனுப்பியிருந்தது. இதற்கு பதிலடியாக உகாண்டாவில் நடத்திய குண்டுவெடிப்பில் 78 பேர் கொல்லப்ப்பட்டனர் எனக்கூறப்படுகிறது.

1991 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு ஸ்திரமில்லாத சோமாலியாவில் பெரும்பாலான பகுதிகளும் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: