புதுடெல்லி,ஆக19:சங்க பரிவார்களின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ்., கஷ்மீரில் பிரிவினை வாத குழுக்கள் மற்றும் அதன் அமைப்புகள் மத மாற்றத்தின் மூலம் எல்லையோரப் பகுதிகளை இஸ்லாமிய மயமாக மாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது .
"காஷ்மீரை இஸ்லாமிய மயமாக மாற்றி வருவது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு, இது இருவகையான திட்டங்கள் மூலம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது, அவர்கள் முதலில் இடங்களை குறிப்பிட முஸ்லிம் பெயர் பலகைகளை வைத்து வருகின்றனர். பின்னர் சினிமா திரை அரங்குகள், அழகு நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் நவீன அழகு சாதன கடைகள் மீது தடைகளை விதித்து வருகின்றனர்.
பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் முஸ்லிம் பெண்களை முகத்திரை அணிய பணிக்கின்றனர்." என ஆர்.எஸ்.எஸ் ன் ஆர்கனைசர் இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் நவீன அழகு ஆடைகளை அணிவதற்கும் மேலும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கும் எல்லையோர பகுதிகளில் அனுமதிப்பதில்லை என்றும் அக்கட்டுரையில் வெளிவந்துள்ளன.
சில முல்லாக்கள் பெண்களை பள்ளிகூடங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மதரசா கல்வித் திட்டத்தை பெரிய அளவில் முன்னிலை படுத்துவதாகவும், அரபிமொழி முன்னேற்றத்தினை ஊக்குவிப்பதாகவும் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பபதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விட வேண்டும் எனவும் கேட்டுள்ளனர் என்றும் நிர்வாகமும் கூட இஸ்லாமிய மயமாகி விட்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எல்லைப் பிரிவினையின் போது அங்கு வந்து வாழும் ஹிந்து குடியேற்ற வாசிகளுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறுகிறது.
கஷ்மீரின் இந்த தொடர்ந்த இஸ்லாமிய மயமானது எல்லையோரம் உள்ள நூற்றுக்கும் மேலான ஹிந்துக் கோவில்களை இடிப்பது, ஹிந்துக்களை குறிவைத்துக் கொல்வது மற்றும் அவர்களை குடியேற்றப் பகுதிகளில் இருந்து அவர்களின் வேலைகளையும் சொத்துக்களையும் மற்றும் எல்லாவற்றையும் விட்டு வெளியேற்றுவது போன்ற அவர்களின் திட்டத்தை நிறைவேற்றும் முகமாக சவால் விடுவதாக உள்ளது
இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும், 'பாகிஸ்தானுக்கு போங்க இல்லையேல் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கஷ்மீருக்குப் போங்க அல்லது எங்கு இஸ்லாமிய சட்ட திட்டங்களை சுதந்திரமாக செயல் படுத்த முடியுமோ அங்கு போங்க' என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .
அரசியல்வாதிகளிடம் இஸ்லாமிய வாதம் ஊடுருவி உள்ளதாக ஆர்கனைசர் குற்றம் சாட்டுகிறது. கஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் 370 பிரிவையும் ஆர்கனைசர் கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரிவினை வாதிகள் ஹிந்துக்களை பள்ளிகூடங்களிலும் அலுவலகங்களிலும் திட்டமிட்டு குறி வைத்து வருவதாகக் கூறுகிறது.
ஹிந்துக்கள், சீக்கியர்கள் கடைகள் குறி வைத்து தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. குடியேற்ற வேலைக்காரர்கள் தாக்குதலுக்கு இலக்காகப் படுகின்றனர். கஷ்மீரிகள் அல்லாத மற்றவர்கள் நடத்தும் நிறுவனங்கள் எல்லைப் பகுதியை விட்டு வெளியேறுமாறு மிரட்டப் படுகின்றன என்றும் ஆர்கனைசர் குற்றம் சாட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக