வியன்னா,ஆக17:இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்திற்கு ரகசிய ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்தவேண்டும் எனவும், இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்களை சர்வதேச பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும் எனவும் அரப் லீக் வலியுறுத்தியுள்ளது.
அணுகுண்டு இருப்பதாக கருதப்படும் மேற்கு ஆசியாவில் ஒரே அணுஆயுத நாடான இஸ்ரேலின் திட்டங்களை வெளிப்படுத்த வேண்டுமென நீண்டகாலமாக முஸ்லிம் நாடுகள் கோரி வருகின்றன.
செப்டம்பரில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி மையத்தின் கூட்டத்தில் இவ்விஷயத்திற்கு ஆதரவு தேடி அமெரிக்காவையும்,இஸ்ரேலின் நட்பு நாடுகளையும் அரப் லீக் அணுகியுள்ளது.
இஸ்ரேலை தனிப்படுத்துவது ஆபத்து என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறித்தான் அரப் லீக் இவ்விஷயத்தில் செயல்பட்டு வருகிறது.
மூன்று மாதம் முன்பு 189 நாடுகள் பங்கெடுத்த அணுசக்தி பரவல் தடைத்தொடர்பான மாநாட்டின் உத்தரவின்படியான அணு ஆயுதம் இல்லாத மேற்கு ஆசியா பேச்சுவார்த்தையை இது பாதிக்கும் என்பது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் எதிர்த்தபோதிலும், அமெரிக்காவும், அணு ஆயுத நாடுகளும் ஆதரவு தெரிவிக்கும் அணு ஆயுதம் இல்லாத மேற்கு ஆசியா பேச்சுவார்த்தை வருகிற 2012 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
இஸ்ரேலின் அணுசக்தித் திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற அரப் லீக்கின் கோரிக்கை ஈரானின் மீதான கவனத்தை திசைத்திருப்பிவிடும் என்பது அமெரிக்காவின் கவலை. அரப் லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் செப்டம்பர் மாத அணுசக்தி மையத்தின் கூட்டத்தில் அரபு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்திற்கு கவலைத் தெரிவிக்கும் தீர்மானம் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும்,சர்வதேச பரிசோதனைக்கு தயாராகவும் வலியுறுத்தும்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட இதர ஐ.நாவின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒபாமாவும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் கடந்த மாதம் வெளியிட்ட ஒருங்கிணைந்த அறிக்கையில்,ஐ.எ.இ.எ மாநாட்டில் இஸ்ரேலை தனிமைப்படுத்துவதை எதிர்ப்போம் என கூறியிருந்தனர்.
ஆனால் இஸ்ரேலைத் தவிர,மேற்காசியாவில் அனைத்து நாடுகளும் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொழுது இஸ்ரேலை தனிப்படுத்துதல் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அரப் லீக்கின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக