செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

தினமும் திருந்செந்தூர் ரயில் சேவை கோரி ம.ம.க ரயில் மறியல்

திருச்செந்தூர்-சென்னை இடையில் இயங்கும் வாராந்திர செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி இயக்க வலியுறுத்தி நேற்று புதன்கிழமை மாலை தொடர்வண்டியை மறிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியினர் உள்பட 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.


செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி இயக்கவும், முன்பு சென்று கொண்டிருந்த அதே கார்டு லைன் வழித்தடத்தில் இயக்கவும் வலியுறுத்தி புதன்கிழமை மாலை காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி மறியல் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்பட்டி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக காயல்பட்டினம் - ஆறுமுகனேரி நெடுஞ்சாலையில் மனித நேய மக்கள் கட்சியினர் மாலை 4 மணியளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மனித நேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி தலைமை வகித்தார்.



மாவட்ட செயலாளர் எச்.பீரப்பா, பொருளாளர் ஏ.வி.எஸ்.ஹாஜா மெய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.முஹம்மது நெய்னா, செயலாளர் ஆஸாத், நகர தலைவர் ஜாஹீர், மாவட்ட துணைச் செயலாளர் ஜே.அப்துல் சமது, துணைத் தலைவர் நவாஸ், மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் எம்.அப்துல்லாஹ், மூலக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் ஐ.குமரேசன், திருச்செந்தூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெ.தியாகராஜன், செயலாளர் அ.துரைசிங், பொருளாளர் செ.சுடலை, யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் வள்ளி நாயகம், பொருளாளர் நட்டார், நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து தொடர்வண்டி நிலையத்திற்கு தொடர்வண்டி மறியல் செய்ய புறப்பட்ட அவர்களை திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்பாத்துரை கைது செய்தார். தொடர்வண்டி மறியல் போராட்டத்தினையொட்டி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் முழுவதும் பலத்த காவல் போடப்பட்டிருநதது.


ஆய்வாளர்கள் பார்த்தீபன் (ஆறுமுகனேரி), ஜெயப்பிரகாஷ் (திருச்செந்தூர்), ராஜாமணி (அனைத்து மகளிர்), உதவி ஆய்வாளர்கள் வில்சன், சபீதா, சங்கரேஸ்வரி, வைகுண்டம் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருச்செந்தூர் - திருநெல்வேலி பாஸஞ்சர் தொடர்வண்டி சென்ற பின் நூற்றுக்கணக்கானோர் கைது செய்து அருகிலுள்ள ரத்னா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: