மனித நேய மக்கள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித நேய மக்கள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2011

இராமநாதபுரம் – ஆம்பூர் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனைத் தோற்கடித்தார்.

இராமநாதபுரம் தொகுதியில் மமகவின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 15, 655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சேப்பாக்கத்தில் திமுகவின் சார்பில் ஜெ அன்பழகனும், அதிமுக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தமீமுன் அன்சாரியும் போட்டியிட்டனர். இதில் அன்பழகன் வெற்றி பெற்று,

சகோ.தமிமுன் அன்சாரி வெற்றி பெறவேண்டிய வேட்பாளர் அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதுதான் நடத்துள்ளது… தேர்தல் பயணத்தில் வெற்றி தோல்வி என்பது ஏற்புடையதே… சகோ.அன்சாரி அவர்கள் ஒரு வேளை வெற்றி வாய்ப்பை பெற்றிருந்தாள் சமுதாயம் நல்ல திறமையான வீரியமாக காரியம் சாதிக்கக்கூடிய முன்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும்…இன்ஷாஅல்லாஹ் எதிர்காலம் எங்கும் போய்விடாது…இறையவன் நாடினால் சகோ.அன்சாரியின் குரலும் சட்டப்பேரவையில் ஒலிக்கும்…

ஞாயிறு, 13 மார்ச், 2011

சிறுபான்மையினரின் காவலனா தி.மு.க.?-சீறுகிறார் ஜவாஹிருல்லா -ஜீனியர் விகடனில் பிரசுரமான பேட்டி

ஜவாஹிருல்லா

'2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க.அணியில், இரண்டு எம்.பி. ஸீட் தரவில்லை’ என த.மு.மு.க-வின் மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டனர். இந்த முறை அ.தி.மு.க. அணியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பெற்று த.மு.மு.க-வின் 'ம.ம.க.’ போட்டியிடுகிறது. ஏன் இந்த மனமாற்றம்? தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம்.

''அ.தி.மு.க. அணியில் லட்சியம் 12, நிச்சயம் 6 பெறு​வோம் என சொன்னீர்கள். கடைசியில் மூன்று தொகுதிகள்தானே பெற முடிந்தது?''

''துடிப்புமிக்க, ஆற்றல்மிகு தொண்டர் பலம்​கொண்ட கட்சியான ம.ம.க-வுக்கு கூடுதல் இடம் பெற முயற்சித்தோம். கிடைக்கவில்லைதான். ஆனால், ஊழல் மலிந்த, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளோம். சிறுபான்மை அரசியலில் இது முக்கியமான சாதனையாகச் சொல்லலாம்.91-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று தொகுதிகளுடன் தனிச் சின்னம் பெற்றுள்ளோம். 2001-ல் அ.தி.மு.க. அணியில் தேசிய லீக் லத்தீஃப் ஒரு தொகுதி பெற்று 'பஸ்’ சின்னத்தில் நின்றார். அதே அணியில், 2006-ல் இரண்டு இடங்கள். ஆனால், இரட்டை இலை சின்னம்தான். தி.மு.க. அணியிலோ முஸ்லிம் லீக்குக்கு இரண்டு இடங்கள், ஆனால் போட்டியிட்டது உதயசூரியன் சின்னத்தில்தான். எனவே, முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ம.ம.க-வுக்கு, தனி சின்னத்தில் மூன்று தொகுதிகள் என்பது நல்ல நிலைதானே!''

''சிறுபான்மையினரின் பாதுகாவலன் என தி.மு.க-வைப்பற்றி சொல்லப்படுகிறதே?''

''இது ஒரு மாயை. முஸ்லிம்கள் தனி அரசியல் பலம் பெற்றுவிடாமல் தடுக்கும் பணியை தி.மு.க. நாசூக்காகவே செய்கிறது. அங்கு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். சாதிக் பாட்சாவுக்குப் பிறகு, அங்கு தலைமை நிர்வாகிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. வேலூர் முகமது சகியும், நீலகிரி முபாரக்கும் மாவட்டச் செயலாளர்களாக இருந்தார்கள். இப்போது, தி.மு.க-வில் ஒரு மாவட்டச் செயலாளர்கூட முஸ்லிம் இல்லை.

இன்னொன்று... முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் அவர்களில் ஒருவரை மக்கள் பிரதிநிதி ஆக்காமல், 'அந்தப் பகுதி தி.மு.க. தலைவர்​களுக்குப் பாதுகாப்பானது’ என அந்தக் கட்சித் தலைவர்கள் பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்​றனர். சென்னை துறைமுகம் தொகுதியில் திருப்பூர் மொய்தீனுக்குப் பிறகு, செல்வராஜ் வந்தார். அடுத்து கலைஞரும், அன்பழகனும் போட்டி​யிட்டார்கள். சேப்பாக்கத்தில் லத்தீஃபுக்கு அடுத்து, ரகுமான்கானை தி.மு.க. நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கலைஞரே போட்டியிட்டு எளிதாக வென்றார். ரகுமான்கானோ, பூங்காநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

சிறுபான்மைக் கட்சிகள் தனி அரசியல் அடையாளம் பெற்று​விடக் கூடாது என்பதில் தி.மு.க. கவனமாக இருக்கிறது. தங்களுடன் ஒரு பச்சைக் கொடி வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் லீக்கை சிறுபான்மை அணியைப்போல வைத்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில்கூட முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், 'காதர் மொய்தீனை ஏணிச் சின்னத்தில் நிறுத்துவது’ என அந்தக் கட்சியின் பொதுக் குழு முடிவு செய்தது. தி.மு.க. தலைமை இதில் தலையிட்டு, துபாயில் இருந்து அப்துர் ரஹ்மான் என்பவரை வேலூர் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தினர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக், உதயசூரியன் சின்னத்தில்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போதும், தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்கள், உதயசூரியன் சின்னம் என அறிவித்தார்கள். அந்த மூன்று இடங்கள்கூட கடைசியில் இரண்டாகிவிட்டது.''

''முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்றது தி.மு.க. ஆட்சியில்​​தானே... அது தவிர, காங்கிரஸ் கட்சியையும் எதிர்ப்பது ஏன்?''

''கேரளத்தில் 71-ம் ஆண்டிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வந்துவிட்டது. 67-ல் இருந்தே தி.மு.க-வுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு அளித்துவந்தனர். மறைந்த அப்துல் லத்தீஃப் 99-லேயே கருணாநிதியிடம் ஒரு சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டார். ஆனால், அவர் தரவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நாங்கள் போராடிய பிறகு, தேர்தல் ஆதாயம் கருதியே, தி.மு.க. ஆட்சி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. அதைச் செயல்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள். இதுபற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம். அதை வெளியிடுவதற்குத் தயங்குகிறார்கள்.

உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முஸ்லிம்கள் சமச்சீர் கல்வியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய நேரத்தில் உரிய திருத்தம் செய்யப்படவில்லை. கட்டாய 'திருமணப் பதிவு’ச் சட்டத்தில்... பள்ளிவாசல், ஜமாத்துகள் பதிவுசெய்து தரும் ஆவணங்களை ஏற்பதாக சட்ட அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார். ஆனால், இந்துக் கோயில்களில் வழங்கப்​படும் சான்றிதழ்களை மட்டும் ஏற்றுக்கொள்ள உத்தர​விட்டுவிட்டு, முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றவே இல்லை.

மேலும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கு​மாறு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு 2007-ல் பரிந்துரைத்தது. இதுவரை, மத்திய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு அதைச் செயல்படுத்தவே இல்லை. தேர்தல் அறிக்கை​யில் இதைச் செயல்படுத்த நடவடிக்​கை எடுப்பதாக உறுதியளித்த தி.மு.க-வும், கண்டுகொள்ளவே இல்லை. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு​வெடிப்புகள் தொடர்பாக, ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்​பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன. எனவே, சிறுபான்மையினரின் காவலன் தி.மு.க. என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.''

''பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறு எனக் கூறிவிட்டு, பிறகு அந்தக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருடன் சேர்ந்திருப்​பதன் மூலம் கொள்கையைவிட தேர்தல் ஆதாயம்தான் முக்கியம் என நீங்களும் மாறிவிட்டீர்களே?''

''99-ம் ஆண்டு சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்தான், ஜெயலலிதா அம்மையார், 'பி.ஜே.பி-யுடன் இனி கூட்டணிவைக்க மாட்டேன்’ என உறுதிமொழி அளித்தார். ஆனால், 2004 மக்களவைத் தேர்தலில் அவர்​களோடு கூட்டணிவைத்தார். அது உண்மைதான். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக நிற்கிறோம். அம்மையார் இனியும் பி.ஜே.பி-யுடன் கூட்டுவைக்க மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!''

நன்றி - ஜீனியர் விகடன் -16-மார்ச் -2011

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

அரசியல் தொழில் அல்ல, சேவை - ஜவாஹிருல்லாஹ்

அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யப்படும் சேவை என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அந்தக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் 25.01.2011 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மனித நேய மக்கள் கட்சியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவி்த்தார்.


தங்களது கூட்டணியில் தேமுதிக இணைவது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்தார்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

தினமும் திருந்செந்தூர் ரயில் சேவை கோரி ம.ம.க ரயில் மறியல்

திருச்செந்தூர்-சென்னை இடையில் இயங்கும் வாராந்திர செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி இயக்க வலியுறுத்தி நேற்று புதன்கிழமை மாலை தொடர்வண்டியை மறிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியினர் உள்பட 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.


செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி இயக்கவும், முன்பு சென்று கொண்டிருந்த அதே கார்டு லைன் வழித்தடத்தில் இயக்கவும் வலியுறுத்தி புதன்கிழமை மாலை காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி மறியல் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்பட்டி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக காயல்பட்டினம் - ஆறுமுகனேரி நெடுஞ்சாலையில் மனித நேய மக்கள் கட்சியினர் மாலை 4 மணியளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மனித நேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி தலைமை வகித்தார்.



மாவட்ட செயலாளர் எச்.பீரப்பா, பொருளாளர் ஏ.வி.எஸ்.ஹாஜா மெய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.முஹம்மது நெய்னா, செயலாளர் ஆஸாத், நகர தலைவர் ஜாஹீர், மாவட்ட துணைச் செயலாளர் ஜே.அப்துல் சமது, துணைத் தலைவர் நவாஸ், மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் எம்.அப்துல்லாஹ், மூலக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் ஐ.குமரேசன், திருச்செந்தூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெ.தியாகராஜன், செயலாளர் அ.துரைசிங், பொருளாளர் செ.சுடலை, யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் வள்ளி நாயகம், பொருளாளர் நட்டார், நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து தொடர்வண்டி நிலையத்திற்கு தொடர்வண்டி மறியல் செய்ய புறப்பட்ட அவர்களை திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்பாத்துரை கைது செய்தார். தொடர்வண்டி மறியல் போராட்டத்தினையொட்டி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் முழுவதும் பலத்த காவல் போடப்பட்டிருநதது.


ஆய்வாளர்கள் பார்த்தீபன் (ஆறுமுகனேரி), ஜெயப்பிரகாஷ் (திருச்செந்தூர்), ராஜாமணி (அனைத்து மகளிர்), உதவி ஆய்வாளர்கள் வில்சன், சபீதா, சங்கரேஸ்வரி, வைகுண்டம் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருச்செந்தூர் - திருநெல்வேலி பாஸஞ்சர் தொடர்வண்டி சென்ற பின் நூற்றுக்கணக்கானோர் கைது செய்து அருகிலுள்ள ரத்னா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

சனி, 5 ஜூன், 2010

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கூடாது மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்



கோவை,ஜீன் 4
1937 ஆண்டுகளின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சுதந்திர ஒரு பங்காக சீமை சாராய ஒழிப்பு போராட்டதை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சி மத்தியிலும் , மதுவிலக்குகொள்கையாய் வைத்திருந்த தந்தை பெரியார், அண்ணா வழியையும், கொள்கையையும் பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மது ஆறாக தமிழகத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. மதுவின் வருமானத்தில் தான் ஆட்சியை நடக்கிறது என்று கூறும் கேவலமான சூழ்நிலையை மனித நேய மக்கள் கட்சி வண்மையாக கண்டிப்பதுடன், மாநிலத்தில் உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் 46 சதவிதம் மக்கள் மது நோயாளிகள் ஆகிவிட்ட நிலையில், உழைக்கும் மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சுயமரியாதையை பறிக்கு நோக்கத்தில், மக்களை மது நோயாளிகளாக ஆக்கும் நோக்கத்தில் கள் இறக்க அனுமதி கோருவதையும் வன்மையாக கண்டித்தும்.

கோவையில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் இடையூராக உள்ள உக்கடம், பொருமாள் கோவில் வீதி, செல்வபுரம் தெற்கு மற்றும் போத்துனூர் ஆட்டுதொட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட துனைச்செயலாளர் ஷாஜகான், தலைமை தாங்கினர். தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது கண்டன உரை ஆற்றினார், சமத்துவ முன்னணி நிர்வாகி தோழர் கார்க்கி , மாவட்ட தமுமுக தலைவர் அப்துல் பஷிர், மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர் டிஎம்எஸ் அப்பபாஸ், மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட பொருளாளர் கபிர், ஜபார், கவிஞர் ஹக், ஜபார்சாதிக், இளைஞர் அபு, நிஷார், காஜா, மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள், தமுமுக, மமக, கிளை,நகரம்.மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

Posted By Mohamed Safair (A) Kovai Thangappa

சனி, 10 அக்டோபர், 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தமிழக ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

1. தென்காசி நகராட்சி 16ஆவது வார்டில் முகமது அலி (மமக) வென்றார்.

2. லால்பேட்டை பேரூராட்சி 3ஆவது வார்டில் யாசிர் அரபாத் (மமக) வென்றார்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.


வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எமது வாழ்த்துக்கள்.




-----------------------------
வாக்குகள் விவரம்:

தென்காசி நகராட்சி:

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (மமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)

லால்பேட்டை பேரூராட்சி :

மொத்த வாக்குகள் :
187
எஸ்.ஏ.யாசிர் அரஃபாத்(மமக) : 102
சிராஜுத்தீன் :85

ஞாயிறு, 7 ஜூன், 2009

ம.ம.க.வினர் மீது தொடரும் பழிவாங்கும் போக்கு!

-இப்பி பக்கீர்


மனிதநேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது தி.மு.க.வினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ம.ம.க.வினரின் பிரச்சார வேகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த தி.மு.க.வினர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிரச்சார களத்தில் முன் நின்ற ம.ம.க. மற்றும் த.மு.மு.க. வினரை பழிவாங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னை எழும்பூர் பெண்கள் பிரசவ மருத்துவமனை வெளியே கடந்த 42 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் உணவுக் கடைகள் நடத்தி வருகிறார் ஷாஹுல் ஹமீது இவரது தந்தையார் காலத்திலிருந்து நடத்தப்பட்டு வரும் இக்கடையை மாநகராட்சி அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. சுமார் 40 பேர் இவரது கடைகளில் பணி புரிகின்றனர்.


இவர் மனிதநேய மக்கள் கட்சியின் சேப்பாக்கம் பகுதி பொருளாளராகவும் இருக்கிறார். மத்திய சென்னை நாடாளு மன்ற தொகுதியில் ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலிக்காக இவர் ஆற்றிய கடுமையான களப்பணிகள் அந்தப் பகுதி தி.மு.க.வினர் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதனிடையே கடந்த 25.05.2009 அன்று மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் புடை சூழ வந்து ஷாஹுல் ஹமீதின் உணவுக் கடையை உடனே அகற்ற வேண்டும் என மிரட்டினர். தகவலறிந்த த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வினர் உடனடியாக அங்கு குவிந்தனர். ம.ம.க. வினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கடையை எந்த உத்தரவும் இல்லாமல் தங்கள் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவை ஏற்று அகற்றுவதில் அதிகாரிகள் குறியாய் இருந்தனர். கடைசியாக பல்வேறு சால்ஜாப்புகளை சொல்லி கடையை காலி செய்து விட்டனர். அந்தப் பகுதியில் இருந்த மற்றும் சில பிளாட்பார கடைக்களும் அகற்றப் பட்டன.


இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் உட்பட பலரிடம் த.மு.மு.க. நிர்வாகிகள் பேசிய போதும் மேலிடத்து உத்தரவு என ஒதுங்கி கொண்டனர். ஒரு சில நாட்களுக்கு முன்பே அருகிலிருக் கும் மற்ற கடைகாரர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வந்து திங்களன்று உங்கள் கடைகளை அகற்ற சொல்வோம், அந்த நேரத்தில் எடுத்து விட்டு பிறகு நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். ஒரு சில நாட்களில் மற்ற நபர்கள் மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைத்து விட்டனர். இதை தடுக்காத
அதிகாரிகள் ஷாஹுல் ஹமீது கடை போட முயன்றால் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுகின்றனர். கடையில் பணிபுரியும் வேலையாட்களை காவல் துறையினர் அழைத்துச் சென்று மிரட்டி யுள்ளனர். இதனால் வேலையாட்கள் ஊருக்கு சென்று விட்டனர்.


இது குறித்து ம.ம.க. நிர்வாகிகள் உரிய அரசு அதிகாரிகளிடம் கோரிக்கைகள் அளிக்க உள்ளனர். தகுந்த நடவடிக்கை இல்லையெனில் கடை அகற்றிய பின்னணியில் உள்ள ஆளும் கட்சி பிரமுகர்களை அடையாளப்படுத்தி போராட்டங்களில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல்களை கை விட்டு விட்டு ஆளும் கட்சி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முன்வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

திட்டச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்று விழா

நாகப்பட்டிணம், ஏப். 11: நாகை மாவட்டம், திட்டச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்டத் தலைவர் ஏ.எம்.ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பரகத் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் செய்யது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தமுமுக மாநிலத் துணைச் செயலர் ஜெ.ஹாஜாகனி, மாவட்டப் பொருளாளர் கவுஸ், துணைச் செயலர் அஸ்ரப் அலி, மாவட்ட வர்த்தகர் அணி செயலர் முகமது ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் ஹமீது ஜெகபர், கட்சியின் மாவட்டப் பொருளாளர் சுலைமான், திட்டச்சேரி கிளை பொறுப்பாளர்கள் ரியாஸ், ரித்தாவுதீன், அஸ்ரப், அமீன், சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி

திங்கள், 13 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற சமுதாய அமைப்பு சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை உருவாக்கியது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்த கட்சி 2 தொகுதிகளை கேட்டது. ஆனால் ஒரு தொகுதி மட்டும் தான் தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அ.தி. மு.க. தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புதிய தமிழகத்துடன் இணைந்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது.

முதல் கட்டமாக மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது.

மத்திய சென்னையில் ஹைதர் அலியும், மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜவா கிருல்லாவும், ராமநாதபுரத்தில் சலிமுல்லாகானும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஹைதர் அலி விலகினார்.

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களை மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவா கிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் ஹைதர்அலி ஆகியோர் வரவேற்றனர். அப்போது டாக்டர் ராமதாஸ் அவர்களிடம் உங்கள் நட்பு நீடித்த நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

பின்னர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் தனியாக பேசினார். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தருமாறு அவர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சனி, 11 ஏப்ரல், 2009

இறைவனுக்கே புகழ் அனைத்தும்..!

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

திங்கள், 6 ஏப்ரல், 2009

மனித நேயக் கட்சி அதிமுகவில் இணையலாம்

சென்னை: திமுகவால் கைவிடப்பட்ட மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் சேரும் எனத் தெரிகிறது.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, திமுக கூட்டணியில்தான் இருந்தது.

திமுக, அக்கட்சிக்கு ஒரு சீட் தருவதாக கூறியது. ஆனால் 2 சீட் வேண்டும். அந்த 2 சீட்டிலும் நாங்கள் தனியான சின்னத்தில்தான் நிற்போம் என மனித நேய கட்சி கூறியது.

இதை திமுக ஏற்கவி்ல்லை. ஒரு சீட் தான் தருவோம். அங்கும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கூறி விட்டது.

இதுகுறித்து மனித நேயக் கட்சி யோசித்துக் கொண்டிருந்த நிலையில் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை கருணாநிதி அறிவித்து, மனித நேயக் கட்சிக்கு கதவைச் சாத்தி விட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அக்கட்சியின் தலைவர்கள் ஆலோசனைகளைத் தொடர்ந்தனர். அது இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு முயற்சித்து வருகிறு மனித நேயக் கட்சி. 2 தொகுதிகள் கொடுத்தால் வரத் தயார் என அதிமுகவுக்கு தூது அனுப்பியுள்ளனராம். அதிலும் மத்திய சென்னை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளை அவர்கள் கேட்பதாக கூறப்படுகிறது.

இதில் மத்திய சென்னை தொகுதியைத்தான் மதிமுகவுக்கு ஒதுக்கி வைத்துள்ளது அதிமுக.

ஆனால் இத்தொகுதியை மதிமுக ஏற்க மறுத்து விட்டது. எனவே மனித நேய கட்சியை உள்ளே இழுத்து அவர்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா முன்வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் மனித நேயக் கட்சி அதிமுகவில் இணையுமா, இல்லையா என்பது தெரிந்து விடும்.

சனி, 4 ஏப்ரல், 2009

ஒற்றைக்காலில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் : நெல்லை உஸ்மான்

புதன், 1 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்

தமிழக அரசியலில் அதிர்வு களை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர். அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.