செவ்வாய், 30 ஜூன், 2009

பலஸ்தீன் சிறுவர்கள் மீது நடத்தப்படும் சித்திரவதைகளுக்கு மனித உரிமை ஆணையங்கள் கடும் கண்டனம்

மேற்குக்கரையில் 14 வயது நிரம்பிய இரு சிறுவர்களைத் தாக்கி, அவர்களின் கண்களை குருடாக்கியதாக இஸ் ரேலிய சிப்பாய்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேற்குக்கரை வீடொன்றை சுற்றிவளைத்த போது இச்சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். ்இங்கு 10 மணி நேரம் நின்று கொண்டு எதை யும் செய்யாமல் இருப்பது சோர்வைத் தரு கிறது. எனவே நீங்கள் பலஸ்தீனர்களை அடித்துத் தாக்குங்கள் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் கூறியுள்ளதை சர்வதேச மனித உரிமை நிறுவனம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.

சென்ற மாதம் 14 வயது நிரம்பிய சிறுவர் கள் உட்பட 150 பலஸ்தீனர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலியப் படையினர் இவர்களை துஷ் பிரயோகம் செய்து தாக்கி, சித்திரவதை செய்தது நிரூபிக்கப் ப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களைச் சித்திரவதை செய்வதே மத்திய கிழக்கிலுள்ள ஒரே ஒரு ஜனநாயக நாடு எனக் கருதப்படும் இஸ்ரேலியப் படை வீரர்களின் செயல்பாடாக மாறியுள்ளமை கண்டிக்கத்தக்கது என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கழிவறைக்கு தங்களை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறிய கைதிகள் பலர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். சில கைதிகள் கண்கள் கட்டப்பட்டு கழி வறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இத னால் காயமடைந்து அவ்விடத்திலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளனர். பதின் வயதினரே இவ்வாறு அடித்துத் துன் புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படு கிறது. இவ்வாறு இஸ்ரேலியப் படைகள் சிலர் அடித்துத் துன்புறுத்தும்போது ஏனையவர்கள் பார்த்து கேளிக்கையாக சிரிக்கும் காட்சி தனது நெஞ்சை உறுத்திய தாக இஹாப் சம்ஷலாவி என்ற பல் கலைக்கழக மாணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Thanks:Meelparvai.net

கும்பகர்ண தூக்கம் கலைத்து; 17 ஆண்டுகளுக்குப் பின் அறிக்கை கொடுத்த லிபரகான்!

பொதுவாக நாட்டில் ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டால், அந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வேகத்தை குறைக்கவும், நாட்களை கடத்தி மற்ற மக்களும் அந்த சம்பவத்தை மறக்க அமைக்கப்படுவதுதான் விசாரணை கமிஷன்கள். இந்த கமிஷன்கள் முஸ்லிம்களின் விஷயத்தில் மிக தாராளமாக அமுல்படுத்தப்படும். பெரும்பாலும் அந்த கமிஷன்கள் அரசுக்கு/அநீதியாளர்களுக்கு ஆதரவான அறிக்கையையே சமர்ப்பிக்கும். விதிவிலக்காக மும்பை கலவரத்தை விசாரித்த ஸ்ரீ கிரிஷ்ணா கமிஷன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் உள்ளிட்ட சில கமிஷன்கள் விசாரணைகள் நியாயமான முறையில் நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து ஆண்டுகள் பல கடந்தபின்னும் அவை கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் நிலையில்,
சிரிக்கவே தெரியாத ஒருவர் பிரதமராக இருந்தபோது உலக நாடுகள் இந்தியாவை பார்த்து கைகொட்டி சிரித்த நிகழ்வுதான் இந்துத்துவா பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் சம்பவம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவயில்லை என்பதை போன்று சுமார் 450 ஆண்டுகளாக அந்த இடத்தில் பள்ளிவாசல் இருந்ததும், அதை பயங்கரவாதிகள் இடித்ததும், இடித்த பயங்கரவாதிகள் யார் யார் என்று சிறு பிள்ளையும் அறிந்த நிலையில், லிபரகான்எனும் நீதிபதி தலைமையில் கண்துடைப்பு கமிஷனை அமைத்து, அக்கமிஷன் தனது அறிக்கையை 1993 மார்ச் 16 அன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு பணித்தது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு.

பின்பு தினத்தந்தி சிந்துபாத் கதைபோன்று, 48 முறை கால நீட்டிப்பு செய்து ஒரு வழியாக இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் லிபரகான். அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அறிக்கையில் என்ன இருந்தாலும் முஸ்லிம்களுக்கு கவலையில்லை. பாபர் மஸ்ஜித் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமெனில், பாபர் மஸ்ஜித் இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும். இந்த இரண்டுதான் முஸ்லிம்களின் லட்சியம்.இதற்கிடையில், பாபர் மஸ்ஜிதை பயங்கரவாதிகள் இடித்ததை போன்று, தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்கு முன் அதிகார வர்க்கத்தால் ஒரு பள்ளிவாசல் இடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் தாங்கள் நினைத்த இடத்தில்[ அது அரசு இடமாக இருந்தாலும்] நினைத்த நேரத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புகிறார்கள். அவ்வாறு எழுப்பப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் லட்சக்கணக்கில் நாட்டில் உள்ளன. ஆனால் அவைகளை கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம், 400 அஆண்டு பழமைவாய்ந்த பள்ளிவாசல் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளாதாக கூறி, எவ்வித முன்னறிவிப்புமின்றி இடித்து மீண்டும் ஒரு பாபர் மஸ்ஜிதாக அப்பள்ளியை மாற்றியுள்ளது. பாபர் மஸ்ஜித் போன்று ஒவ்வொரு டிச. 6 அன்று கத்திவிட்டு முஸ்லிம்கள் கலைந்து விடுவார்கள் என்று அரசு தப்புக்கணக்கு போடவேண்டாம். காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் மற்றும் டெல்லியில் இடிக்கப்பட்ட மஸ்ஜித் ஆகியவற்றை உரிய முறையில் முஸ்லிம்களிடம் திருப்பித்தர ஆவன செய்யவேண்டும். இல்லையேல், அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க, தங்கள் இன்னுயிரையும் இழக்க முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் எனபதை அதிகார வர்க்கம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திங்கள், 29 ஜூன், 2009

ஓரினசேர்க்கை;ஓலமிடும் நரிகளும், ஒத்து ஊதும் அரசும்!

மேற்க்கத்திய நாட்டின் புதிய வரவான பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் எகிறி, நம்மை 'பல்ஸ்' பார்த்துக்கொண்டிருக்க அதே மேற்க்கத்திய நாட்டின் மற்றொரு பயங்கரமான நோயை வரவேற்க சிவப்பு கம்பளமும் இந்தியாவில் விரிக்கப்பட்டுள்ளது. ஆம்! கற்பையும்-கலாச்சாரத்தையும் உயிரென மதிக்கும் தமிழகத்தில் நேற்று, கலாச்சாரம் கிலோ என்னவிலை? என கேட்கும் ஓரின சேர்க்கையாளர்கள், அரவாணிகள் அடங்கிய கூட்டம் மாபெரும் பேரணியை தமிழக தலைநகர் சென்னையில் நடத்தியுள்ளது. இந்த பேரணியில் ஆபாச/கவர்ச்சி உடையில் கலக்கியவர்கள் வைத்த கோரிக்கை என்னதெரியுமா? ஓரின சேர்க்கை குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்பதே!

கலாச்சார சீரழிவை விதைக்கும் இந்த பேரணிக்கு அரசு அனுமதியளித்தது பெரும் வியப்பாக உள்ளது . இன்று ஓரின சேர்க்கையை அனுமதிக்கவேண்டும் என்று கூறும் கும்பலுக்கு அனுமதியளித்தால் நாளை விபச்சாரத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்கவேண்டும் என்று ஒரு கும்பலும், மது- சூதாட்டம் உள்ளிட்ட வேறுபல தீமைகளை தடை செய்யும் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வேறு சில கும்பலும் பேரணி நடத்த முன்வந்தால், அதை அனுமத்தித்தால் நாடு என்னவாகும் என்பதை சிந்திக்க மறந்துவிட்டது தமிழக அரசு.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், இது போன்ற கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அறிவிக்கவேண்டிய மத்திய நடுவன் அரசின் அமைச்சர் வீரப்பமொய்லி, ஓரின சேர்க்கைக்கு தடையை நீக்குவது பற்றி மதத்தலைவர்கள் உட்பட அனைவரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்கிறார். விரைவில் ஓரின சேர்க்கையை அனுமதிப்போம் என்பதை வேறு வார்த்தையில் அமைச்சர் சொல்வதாகவே அறிவுடையவர்கள் விளங்கிக்கொள்வர்.

மேலும், இறைவனின் படைப்பில் மனிதர்களில் சிலர் அரவாணிகளாக பிறப்பதுண்டு. அந்த அரவாணிகளை ஆண்களாக கருத வேண்டுமா? அல்லது பெண்களாக கருதவேண்டுமா என்ற கேள்விக்கும் இஸ்லாம் விடையளிக்கிறது. உடல் கூற்றில் பெரும்பாலும் பெண்களுக்கு ஒப்பாக இருந்தாலும் அவர்கள் ஆண்களாகவே கருதப்பட வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் தீர்ப்பாகும்.


(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள்.[புஹாரி 4324 ]


பெண்கள் இருக்கும் இடங்களில் இந்த அரவாணிகள் வரக்கூடாது என்று நபி[ஸல்]தடுப்பதில் இருந்து அரவாணிகளை ஆண்களாகவே கருதவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், இன்று அரவாணிகள் தங்களை முழுக்க-முழுக்க பெண்களாகவே அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். பெண்கள் போன்றே நடை-உடை-பாவனைகளை மாற்றிக்கொண்டு, அதன் மூலம் பெரும்பாலான அரவாணிகள் பாலியல் ரீதியாய தொழிலில் தங்களை ஐக்கியப்படுத்தி அதன் மூலம் சமூகத்தின் கலாச்சார சீரழிவிற்கு வழிவகுப்பதை யாரும் மறுக்கமுடியாது.


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துu கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!' என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.[புஹாரி 6834 ]


தமிழக அரசு அரவாணிகளை மூன்றாவது பாலினமாக அறிவித்து அவர்களுக்கென தனியாக நலவாரியமும் அமைத்துள்ளது. இந்த நல வாரியம் மூலம் அரவாணிகளை பாலியல் ரீதியான தொழில் செய்வதில் இருந்து மீட்டெடுத்து கவுரவமான தொழில் செய்து பிழைப்பவர்களாக மாற்ற அரசு முன்வரவேண்டும் . மேலும் அரவாணிகளுக்கு பெண்களாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்வதை தடை செய்யவேன்டும். விரும்பினால் ஆண்களாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கலாம்.

அடுத்து, ஓரின சேர்க்கையாளர்களை எடுத்துக்கொண்டால், இவர்கள் வருங்கால சந்ததியை அஸ்தமிக்க செய்பவர்கள். ஆணுக்கு பெண்ணின் தேட்டத்தையும்- பெண்ணுக்கு ஆணின் தேட்டத்தையும் ஏற்படுத்தி அவ்விருவர் திருமணம் என்ற உறவு மூலம் இணைந்து இல்லற வாழ்வின் மூலம் சந்ததிகளை பெற்றெடுத்து அதன் மூலம் மனித சமூகத்தை இறைவன் தழைத்தோங்க வகை செய்திருக்கும் நிலையில், ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் இணைவதால் ஏற்படும் விளைவு என்ன? இந்த ஓரின சேர்க்கையாளர்கள் செய்யும் விபச்சாரத்தால் பல்வேறு நோய்கள் பரவுவதோடு, இந்த ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் என்ற கேலிக்கூத்தில் ஈடுபட்டு அதன் மூலம் சந்ததி அற்ற மனித குலத்திற்கு வழிவகை செய்கிறார்கள். ஓரின சேர்க்கையாளர்களில் திருமணம் செய்வதற்காக இருவரில் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும், பின்பு அவ்விருவருக்கிடையில் பிணக்கு ஏற்படும்போது, தம்பதிகள் சம்மந்தப்பட்ட விவாகரத்து- ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்த சட்டமும் பயனளிக்காமல் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் பாதிக்கப்பட்டுவதை பார்க்கிறோம்.

எனவே, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக அரசு இருக்காமல் விபச்சாரம் - ஓரின சேர்க்கை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க முன்வரவேண்டும். நாகரீகம், சம உரிமை என்ற பெயரில் அரசு இதை கண்டு கொள்ளாமல் இருக்குமானானால் இந்தியாவின் தனித்துவ அடையாளமான கலாச்சாரம் அடிபட்டு, பண்பாடற்ற வருங்கால சமுதாயம் உருவாக வழி வகுத்துவிடும்.ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

ஜனாதிபதி மாளிகை மின் கட்டணம் ரூ.6.7 கோடி

டெல்லி: ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த ஆண்டு ரூ.6.70 கோடி மின்சாரம் செலவாகியுள்ளது.

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசி வரும் நிலையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும், மின் தட்டுப்பாடும் நிலவுகிறது.

பஞ்சாபில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக அரசு அலுவலகங்களில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியிருக்க டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.6.70 கோடி மின்சாரம் செலவாகியுள்ளதாம்.

அதற்கு அடுத்தப்படியாக நாடாளுமன்றத்துக்கு ரூ.6.25 கோடியும், பிரதமரின் இல்லத்துக்கு ரூ.50.35 லட்சமும் மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மும்பையைச் சேர்ந்த சேத்தன் கோத்தாரி என்பவர் இந்த விவரங்களைப் பெற்றுள்ளார்.

கருணை கொலை கோரும் விவசாயிகள்..

இந் நிலையில் பருவமழை பெய்யாததால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் பழமா மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் பகுதி விவசாயிகள் எங்களை கருணை கொலை செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு முதல் மழையையே பார்த்திராத இந்தப் பூமியில் விவசாயிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப் பகுதி விவசாயிகள் அனுப்பியுள்ள கடிதத்தில்,

நாங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருகிறோம். உணவு, குடிநீர் இல்லாமல் உழவு மாடுகள், வண்டிகளை விற்றுவிட்டோம். நிலத்தையும் நகைகளையும் விற்றுவிட்டோம். இனி விற்க எங்களிடம் ஏதுமில்லை.

இதனால் கெளரவத்துடன் சாக அனுமதிக்க வேண்டும். வறட்சியால் போராடும் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

உலக சித்திரவதை தினத்தையொட்டி NCHRO வெளியிட்ட பத்திரிகை செய்தி

செய்தியைப் பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.

மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க.-ம.ம.க. சார்பில் 50 ஆயிரம் - மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழை – எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் செலவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்-புக் வழக்கும் விழா நேற்று முன்தினம் வேதாளையில் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் 50 ஆயிரம் ரூ. மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட, கல்வி உதவித்தொகை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், மரைக்காயர்பட்டிணம், வேதாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 100 ஏழை-எளிய மாணவ – மாணவிகள் பயன் அடைந்தனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவிற்கு த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் மாயுன்கபீர், மண்டபம் ஒன்றிய ரசூல்கான், வேதாளை கிளை தலைவர் சேக் ஜமாலுதீன், ஹபிபுரகுமான் உள்பட தங்கச்சிமடம், ராமேசுவரம் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினத்தந்தி

சிறுபான்மையினருக்கு 2 மாத இலவச கம்பியூட்டர் பயிற்சி

நன்றி: தினகரன் 26.06.2009

முஸ்லிம்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?

சுதந்திர இந்தியாவில் 1992 டிசம்பர் 6 ல் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. 800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு, அல்லாஹ்வின் இல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக ஆக்கப்பட்டு விட்டது.

சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருக்கு எதிராக ஒரு கயவாளிக் கூட்டம் எப்படி இப்படிப்பட்ட அராஜகங்களை செய்ய முடிகிறது. அதற்கு எப்படி ஆளும் கட்சி முதற்கொண்டு அரசாங்கமும் ராணுவமும் அரசாங்க ஊழியர்களில் பலரும் எப்படி துணை போகிறார்கள் (அ) துணை போனார்கள்.

எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம் இந்தியாவிற்கு தேவை என்பதை இவை காட்டுகின்றது. அதாவது காந்தியடிகள் சொன்னது போன்று ஓர் உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. உண்மையான நேர்மையான ஊழலற்ற ஓர் ஆட்சியை இஸ்லாமியர்களால் மட்டுமே தர முடியும். அது வரை பாபர் மஸ்ஜித் தகர்ப்பு போன்று இன்னும் இது போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு போதவே போதாது.

இடிக்கப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. எத்தனையோ அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூராக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கே ஆலமரம் இருக்கிறதோ அங்கெல்லாம், அது அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அங்கே நிரந்தர கோவில் கட்டப்படும், அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பவர்கள் இந்த நாட்டின் மத சார்பற்ற தன்மையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

இந்திய நாடு மத சார்பற்ற நாடா? மத சார்புள்ள நாடா? என்று கேள்வி கேட்கக் கூடிய அளவிற்கு சட்ட புத்தகத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இருப்பது தான் நமது நாட்டின் மதசார்பற்ற தன்மை. இதற்கு சட்ட ஒழுங்கை பேணும் நீதிமன்றங்களின் வளாகமும் விதி விலக்கில்லை.

பாபரி மஸ்ஜிதின் வழக்கு கும்பகர்ணனின் உறக்கதில் இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உள்ளங்களை டில்லி காவல் துறையும் டில்லி விரிவாக்கத் துறையும் இடித்து நொறுக்கி இருக்கிறது. டில்லியில் ஒரு பள்ளிவாசலை இடிக்க கனரக வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று அந்த பள்ளியின் ஒரு பகுதியை இடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.

டில்லியில் மொஹ்ருலி என்ற இடத்தில் இருக்கும் திபியாவாலி பள்ளி வாசலை இடிப்பதற்காக 22 ஜுன் 2009 மாலை 4 மணிக்கு எந்த வித முன்அறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக காவல் துறையின் துணையோடு டில்லி விரிவாக்கத் துறை அங்கே சென்றது.

வந்தவர்கள், பள்ளியின் மேற்கூறையையும் சுவரையும் மளமளவென்று இடிக்க ஆரம்பித்தார்கள், இடித்து தள்ளி விட்டார்கள்.

400 ஆண்டு கால பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறதாம். இவர்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றம் தானே முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வழக்கு நீதிமன்றம் சென்றும், பள்ளி இருந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் ஏன் இவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

ஒரு வாதத்திற்கு, அந்த பள்ளி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் கூட வழிபாட்டுத்தலங்கள் என்பது மிகவும் உணர்வுபூர்வமான இடங்களாகும், குடியிருக்கும் வீடுகளை விட வழிபாட்டுத்தலங்களை இடிப்பது என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் எப்படி துணிந்து வந்தார்கள்.

அங்கிருந்த பெரியவர்கள் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு விரிவாக்கத் துறை அதிகாரிகள் எந்த பதிலும் சொல்ல வில்லை. என்ன திமிறு இருந்திருக்க வேண்டும்.

அதனால் தான் அங்கு கூடி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து எறிந்திருக்கிறார்கள். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

மக்களின் எதிர்ப்பு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள்.

இதுதான் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையாக இருந்தால், முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் எஞ்சியிருக்கிறது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை மீட்பதற்காக தமுமுக நடத்திய போராட்டத்தை அரசாங்கம் தனது பலத்தால் தடுத்து நிறுத்தியது, இரவோடு இரவாக எப்படி இந்துக்கள் அந்த கோட்டைக்குள் சென்று அங்குள்ள கோவிலை மீட்டார்களோ அதே போன்று அறிவிக்கப்படாத பள்ளிவாசல் மீட்பு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்தப் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

அப்போது இந்துக்களிடம் அரசு எப்படி நடந்து கொண்டதோ, அதே போன்று முஸ்லிம்களிடம் நடந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

தேனி பாமக சிறுபான்மை பிரமுகர் மாயம்-ஐகோர்டில் மனு

மதுரை: தேனியில் மாயமான பாமக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஷேக் அப்துல்லாவை இரு வாரங்களுக்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தேனி அருகே கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த ரியாசூதீன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியுள்ளதாவது,

என் சகோதரர் ஷேக் அப்துல்லா ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறார். பாமக சிறுபான்மை பிரிவு செயலாளராக உள்ளார். இவரின் மகள் கஜீரா. வேறு பள்ளியில் பயின்ற இவரை தேனி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் சேர்க்க சேக் அப்துல்லா திட்டமிட்டார்.

அப்பள்ளியின் செயலாளர் வெங்கடேசன் கூறியபடி ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழையும் வாங்கி விட்டார். தற்போது கஜீராவை பள்ளியில் சேர்க்காமல் பள்ளி செயலாளர் இழுத்தடித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் கஜீராவின் மாற்று சான்றிதழை பள்ளி செயலாளர் கிழித்து விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லா தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேனி மாவட்ட பாமகவினர் பள்ளி நிர்வாகம் குறித்து போஸ்டர் அச்சிட்டு ஒட்டினர்.

இதனால் ஷே அப்துல்லாவை வெங்கடேசன் மிரட்டினார். இந்த நிலையில், கடந்த 20ம் தேதி வெளியே சென்ற ஷேக் அப்துல்லா இதுவரை வீடு திரும்பவில்லை.

பள்ளி செயலாளர், தலைவர் ஜெயசீலன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் திருப்பதி ஆகியோர் இதற்கு பின்னணியில் உள்ளனர். அவரை போலீசார் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பானுமதி, மாலா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஷேக் அப்துல்லாவை இரு வாரங்களுக்குள் போலீசார் கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர்.

நூதன மோசடி: விபச்சாரத்திற்கு ஆண்கள் தேவை! சி.பி.சி.ஐ.டி., தீவிர விசாரணை

"ஆண் விபசாரம்' தொடர்பாக, கோவை மற்றும் சென்னையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "பெண்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தேவை' என "எஸ்.எம்.எஸ்' அனுப்பி, எண்ணற்ற இளைஞர்களிடம் உறுப்பினர் கட்டணம் வசூலித்த ஆசாமிகள் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கேளிக்கை விடுதிகளும், ஆபாச நடன "பார்'களும், நூதன விபசாரமும் போலீசாரின் கண்காணிப்பை மீறி கலாசாரச் சீரழிவை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த அழிவுக் கலாசாரம் மெல்ல, மெல்ல தமிழகத்திலும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. சென்னை, கோவை நகரங்களிலுள்ள சில பிரபல ஓட்டல்களில் "ஆபாச நடன பார்கள்' செயல்படுகின்றன. அரசியல், அதிகார உயர்பீட தலையீடுகள் காரணமாக, நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்கும் கலாசாரச் சீரழிவு கூத்துகள் போதாது எனக்கூறி, ஆண்களை விபசாரத்துக்கு அனுப்பும் நூதன தொழிலையிலும் சிலர் துவக்கியுள்ளனர். "Mச்டூஞு ஞுண்ஞிணிணூtண் ண்ஞுணூதிடிஞிஞு' என்ற பெயரில் சென்னை, கோவை நகரிலுள்ள நபர்களின் மொபைல் போ னுக்கு தொடர்ச்சியாக "எஸ்.எம்.எஸ்'கள் வருகின்றன.அதில், "வசதி படைத்த பெண்கள் கணவரை பிரிந்தும், இழந்தும் தவித்து வருகின்றனர்; அவர்களுக்கு "சேவை' செய்ய நீங்கள் தயாரா? "ஆம்' என்றால் உடனடியாக இந்த மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளுங்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த எண்களை தொடர்பு கொண்டதும், எதிர் முனையில் பேசுபவர் "நீங்கள் எந்த மாநிலம்?' ஆங்கிலத்தில் கேட்கிறார்."தமிழகம்' என்றதும், தமிழில் சரளமாக பேசும் அந்நபர், "மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை, நீங்கள் "சேவை' செய்ய வேண்டியிருக்கும்; நீங்கள் வசிக்கும் நகர் எது?' என கேட்கிறார். "கோவை' என்றதும், இங்குள்ள பிரபல ஓட்டல்களின் பெயர்களை வாசிக்கும் அவர், "உங்களது மொபைல் போன் எண்களை, எங்களிடம் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்திருக்கும் சில பெண்களிடம் கொடுப்போம்; அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு ஓட்டலுக்கு "பிக்-அப்' செய்து அழைத்துச் செல்வர்; மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சேவைக்கு ஏற்ப நீங்கள் சம்பாதிக்கலாம்; அதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது; உறுப்பினர் சேவைக் கட்டணமாக வங்கி கணக்கில் (தனியார் வங்கி பெயர், கணக்கு எண் விவரம் தெரிவித்து) 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என்கிறார். "பணம் செலுத்திய விவரம் எமக்கு கிடைத்ததும், உங்களுக்கான "பணி' துவங்கும்' என்கிறார். இந்நபர்களின் பேச்சை உண்மையென நம்பி, கோவையைச் சேர்ந்த சிலர், தனியார் வங்கியில் பணம் செலுத்தி இழந்தனர்.

"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக் கருதி, போலீசில் புகார் செய்யாமல் தவிர்த்து விட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும், போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட "எஸ்.எம்.எஸ்' அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் "சிம்கார்டு' உரிமையாளரின் முகவரி, வங்கிக் கணக்கு துவக்கியவரின் முகவரியை சேகரித்தபோது, மகாராஷ்டிர மாநிலம், மும்பை, தாதர் பகுதியில் மோசடி நபர்கள் செயல்படுவது அம்பலமானது. மேலும், தனியார் வங்கியில் பலரும் செலுத்திய பணம், தாதரிலுள்ள ஏ.டி.எம்., மையத்தில் எடுக்கப் பட்டதும் தெரியவந்தது. எனினும், யாரும் புகார் தராததால், நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் தவிர்த்து விட்டனர்.தமிழகத்தில் இதுபோன்ற மோசடி அதிகரித்து வருவதை அறிந்த உள்துறை செயலகம், ரகசிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டுள்ளது. மோசடி நபர்களின் மொபைல் போன் எண்கள், வங்கி கணக்குகளை சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், சென்னை மற்றும் கோவையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் செயல்படும் மோசடி கும்பலுடன், தமிழக நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

'த‌த்கல்' திட்டத்தில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளரும், முதன்மை கடவு‌சீ‌ட்டு அதிகாரியுமான ஏ.மாணிக்கம் சென்னையில் உள்ள மண்டல கடவு‌சீ‌ட்டு அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, கடவு‌சீ‌ட்டு அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு சேவை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாதாரண முறையில் கடவு‌சீ‌ட்டவிண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக தரை தளத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய அறை அமைக்கப்பட்டது. கடவு‌சீ‌ட்டவழங்குவதற்கான கால அளவை குறைக்கவும், அலுவலகத்தில் உள்ள குறைபாடுடைய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மண்டல கடவு‌சீ‌ட்டு அலுவலகம் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலுவைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மாதம் 20ஆ‌ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நிலுவைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் பயனாக ஒரு மாதத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 1,100 கடவு‌சீ‌ட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்க தயார் செய்யப்பட்டன. இன்னும் சில மாதங்களில் மண்டல கடவு‌சீ‌ட்டஅலுவலகத்தில் தேங்கி இருக்கும் கடவு‌சீ‌ட்டு விண்ணங்கள் கணிசமாக குறைக்கப்படும்.

கடவு‌சீ‌ட்டு இணைய தளத்தில் (http:// passport.gov.in) தட்கல் ஆன்லைன் முறையில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக ூன் 20ஆ‌ம் தேதி முதல் த‌த்கலுக்கான புதிய ஆன்லைன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. த‌த்கல் விண்ணப்பங்களுக்காக உள்ள தனியான மெனுவில் த‌த்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

தமுமுக சாதித்ததா?

Vizhippunarvu Logo



1999ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டுவரை த.மு.மு.க. செயல்பட்டிருக்கிறது. அதன் தலைவராகவும் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் துவங்கும்போது திட்டமிட்ட பணிகளைச் செய்து முடித்திருக்கிறீர்களா?


Dr,MH. ஜவாஹிருல்லாஹ்:
பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டும் இந்த இயக்கத்தை துவங்கினாலும் காலப் போக்கில் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் குரல் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. உதாரணமாக அதே வருடத்தில் கொடியங்குளம் பகுதியில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்து செப். 15ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தோம்.


தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் முஸ்லீம் மக்கள் இடையே அரசியல் விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறோம்.



காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி, சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அஞ்சி நடுங்கிய சமுதாயம், காவல்துறையைப் பார்த்தாலே பயந்த சமுதாயம், சமூகச் செயல்பாட்டை அச்சம் கலந்த செயலாக நினைத்துக் கொண்டிருந்த சமுதாயம் இன்று எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்றால் எங்கேனும் ஒரு மனித உரிமை மீறல் நடக்கிறது என்று தெரியவந்தால் அந்தப் பகுதி தமுமுக பொறுப்பாளர் காவல் துறை ஆய்வாளரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் அளவிற்கு முஸ்லீம்களை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றியிருக்கிறது.


Jawahirulla

கல்வி விழிப்புணர்வையும் த.மு.மு.க. அதிக அளவிற்கு முஸ்லீம் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரணமாக முஸ்லீம்கள் உரிய வயதை அடைந்தவுடன் பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மலேசியா, சிங்கப்பூருக்கு தொழில் நிமித்தமாக சென்றுவிடுவார்கள். படிப்புக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காத சமுதாயம் இது.


இன்றைக்கும் வெளிநாட்டிற்கு வேலை தேடிப் போகிறார்கள். ஆனால் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்தாரிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அளவிற்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் இது போக சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறோம். சுனாமி போன்ற பேரிடர் வந்தபோது பெருமளவு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.



தமிழ்நாடு முழுவதும் ரத்த தானத்தை இயக்கமாக ஆக்கி அனைவருக்கும் இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். சுவாரஸ்யமான செய்தி ஒன்று சொல்ல வேண்டுமானால், காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்பொழுது மருத்துவர் எங்களை அனுகினார். நாங்களும் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அவருக்கு ரத்தம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினோம்.



அவர் உயிர் பிழைத்தவுடன் மருத்துவர் அவரிடம், நீங்கள் யாரை இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு ரத்தம் அளித்து காப்பாற்றினார்கள் என்று கூறினார். இது எங்களால் மறக்க முடியாத ஒன்று.
சமூகவிழிப்புணர்வு:

அமெரிக்க கொலைக்காரன் குற்றவாளிக் கூண்டிலல்ல... நீதிபதியாய் நிமிர்ந்து நிற்கிறான்.


மிர் ஹுஸைன் மூஸவியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்தபோது சுட்டுக்ககொல்லப்பட்ட நிதா அகா சுல்தான் என்ற இளம் ஈரானிய பெண்ணி்ன் கொலையில் சீ.ஐ.ஏ. தொடர்பு பட்டிருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப்பெண் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்துசென்றுக்கொண்டிருந்த போது அவரின் முதுகுப்புறத்திலிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த காட்சியை ஊடகவியலாளர்கள் படம் பிடித்திருப்பது இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறாத இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தை எப்படி முன் கூட்டியே இவ்ர்கள் படம் எடுத்தார்கள் என்ற விடயம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நிதா அகா சுல்தானின் மரணத்தை மிகவும் கவலையுடன் ஒளிபரப்பிய அமெரிக்க ஊடகங்கள் இணைய தளங்களில் பலதரப்பட்ட பிரசாரங்களை செய்தும் வருகின்றன.

இது உலகிலேயே இடம்பெற்ற முதலாவது கொலைபோன்றும், பட்டப்பலில் படுகொலை செய்த இந்த இஸ்லாமிய நாட்டை சும்மா விடக் கூடாது என்பது போன்றும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

இந்தக் கொலை இடம் பெற்ற முறையும் இந்த கொலைக்கு அமெரிக்க ஊடகங்கள் கொடுக்கின்ற தந்திரமான பிரசார மும் கொலையாளி யாராக இருக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தக் கொலையை அமெரிக்க சீ.ஐ.ஏ. செய்து விடடு பழியை இரான் மீது போடுவதற்கு முயற்சி செய்வதை இந்த செய்தியை பார்க்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்வர்.

ஈரான்தான் இந்தக்கொலையை செய்திருக்கிறது என்று வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் கொலையைப்பற்றி கண்டணம் தெரிவிப்பதற்கும், கண்ணீர் வடிப்பதற்கும் அமெரிக்காவிற்கு என்ன அருகதை இருக்கிறது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் சிறுவர்கள் பெண்கள் முதியவர் என்று பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் கொன்று இரத்தத்தைக் குடித்து ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு ஈரானில் கொல்லப்பட்ட ஒரு நிதா ஒரு பொருட்டல்லவே!

அமெரிக்க கொலைக்காரன் குற்றவாளிக் கூண்டிலல்ல... நீதிபதியாய் நிமிர்ந்து நிற்கிறான். நிதா!... நீ... இரத்தம் குடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரையாகிப் போன ஆயிரமாயிரம் பேர்களில் ஒருத்தி மட்டுமே!

உனக்கு குறுக்கு வழி காட்டிய மூஸவி எதிரிகளோடு கைகோர்த்து நடு வீதியில் நிற்கிறார். .குற்றுயிராய்.... நீ...வீதியில் வீழ்ந்து கிடக்கிறாய்!

சனி, 27 ஜூன், 2009

டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதி இடிப்பு!

புது டில்லி: இந்திய தலைநகரமான டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மெஹ்ரோளியிலுள்ள திபியாவாலி என்ற பெயரில் அறியப்படும் மசூதியை டெல்லி விரிவாக்க துறையும் காவல்துறையும் இணைந்து இடித்தது.
நேற்று மாலை நான்கு மணியளவில் மசூதியை இடிப்பதற்கான எஸ்கவேட்டரும் மற்ற உபகரணங்களுமாக அப்பகுதிக்கு வந்த டெல்லி விரிவாக்கத் துறையினர், மசூதியின் மேற்பகுதியையும் சுவர்களையும் இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்படும் செய்தியறிந்து அப்பகுதியில் கூடிய முசுலிம்கள், மசூதியை இடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையின் உதவியுடன் மசூதி இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரிவாக்கத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக காவல்துறை லத்திசார்ஜ் நடத்திக் கூட்டத்தை விரட்டியது.
சட்ட விரோதமான ஆக்ரமிப்பு என்ற பெயர் கூறி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்திலேயே இம்மசூதியினை இடிப்பதற்கு முயற்சி நடந்தது. அதனை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தடுத்து நிறுத்தியிருந்தார். இப்பிரச்சனையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. மசூதி இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இம்மசூதி புராதன கட்டிடங்களின் பட்டியலில் உள்ளதாகும்.
மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லி விரிவாக்கத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்படும் என வக்ஃப் போர்ட் செயலர் சவுதரி மதீன் அஹமது கூறினார். அதிகாரிகளின் அத்துமீறிய இச்செயல் சட்ட விரோதமானது என மசூதியின் நிர்வாக கமிட்டி தலைவர் மவுலானா முஹம்மது தல்கா கருத்து கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

நன்றி;இந்நேரம்.காம்

இஸ்லாம் மதத்துக்கு நான் எதிரானவளா? திலகவதி ஐபிஎஸ் விளக்கம்

அண்மைக்காலத்தில் நடந்துவரும் சில கொலைகளின் பின்னணி சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன. சென்னையில் பள்ளிப்பருவத்தில் காதலில் ஈடுபட்ட யாஸ்மின் என்ற பெண்ணை அவரது தந்தை சலீமே குத்திக் கொன்றார். அதுபோலவே சேலம் மாவட்டத்தில், மகன் விஜயகுமார் சம்பாதித்து வருவதை அவரது அப்பா நடேசன் குடிப்பதற்காக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் நடேசனை விஜயகுமார் கொன்று போட்டார். இச்செய்திகளை "மகளைக் கொன்ற அப்பன் அப்பனைக் கொன்ற மகன்'’என்ற தலைப்பில் ஜூன் 6 தேதியிட்ட நக்கீரனில் வெளியிட்டிருந்தோம்.

ரத்த உறவுகளுக்குள்ளேயே கொலை வெறி தாண்டவமாடுவது தொடர்பான சமுதாயக் காரணங்கள் மற்றும் உளவியல் காரணங்கள் பற்றி கருத்து தெரிவித்த திலகவதி ஐ.பி.எஸ், "பெற்றோர் முடிவுக்கு எதிராக காதலில் ஈடுபடும்போது, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக பெற்றோரே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்த சம்பவம் புதிதானதல்ல' என்று சொல்லியிருந்ததை வெளியிட்டிருந்தோம்.

திலகவதியின் கருத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடமிருந்து கடிதங்கள், தொலை நகல்கள், மின்னஞ்சல் வாயிலாக எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. அன்பையும் அமைதியையும் வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தில் கொலைக்கு இடமேயில்லை என வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களையும் தொலை நகல்களையும் அனுப்பியுள்ளனர்.

""எந்த உயிரையும் அநியாயமாகக் கொல்லுமாறு இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. ஒரு ஆத்மாவின் ரத்தம் எப்போது பூமியில் சிந்தப்படவேண்டும் என்பதை படைத்த இறைவன் தெளிவாகச் சொல்லியுள்ளான். "எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ (ஒரு கொலையைத் தடுக்கும் விதத்தில்), அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்' என்கிறது திருமறை. யாரோ ஒரு தனி மனிதன் செய்ததை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாம் மீதும் பழி சுமத்துவதா?''’என கேட்டிருக்கிறார் ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் பி.எஸ்.சாதிக்.

""அரபு நாடுகளில் இத்தகையக் கருணைக் கொலைகள் சர்வசாதாரணமானது எனக் கூறியிருப்பது உண்மையெனில், கடந்த ஓராண்டில் குடும்ப கவுரவத்திற்காக கருணைக் கொலை செய்த அரபுகளின் எண்ணிக்கையைத் தந்திருக்க வேண்டும். மேலும், அரபுநாடுகள் இஸ்லாத்தின் குத்தகைதாரர்கள் அல்ல. அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் இஸ்லாமியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதுமில்லை. அரபு நாடுகளில் நடப்பவை அனைத்துமே இஸ்லாமிய செயல்பாடுகள் என ஒருவர் கருதுவாரேயானால் அவர் தவறான புரிந்து கொள்ளலில் இருக்கிறார் என்றே அர்த்தம்.'' என்கிறார் மின்னஞ்சலில் கருத்தைப் பதிவு செய்திருக்கும் அபுசுமைய்யா.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) மாநிலத் துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, ""அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகம் காலத்திற்கு முந்தைய அறியாமைக்கால அரபுகள் பெண் குழந்தைகளைச் சாபக்கேடாக நினைத்து உயிருடன் புதைத்து வந்தார்கள். இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு, பெண் குழந்தைகளை இறையருளின் அடையாளமாய் போதித்தார்கள். இரு பெண் குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்தவர்களுக்கு சுவர்க்கம் உறுதி என்று நவின்றார்கள். உண்மை இவ்வாறிருக்க, பெற்ற பிள்ளையைக் கொல்வது அந்த மதத்திற்குப் புதிதானதல்ல என்ற திலகவதியின் கருத்து கண்டனத்திற்குரியது.

இரண்டு கொலைகள் நடந்திருக்க, அதில் ஒன்றை மட்டும் மதத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது அறிவுநாணயமுள்ள செயலா? தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருந்தாலும் அவர்களைக் கொல்வது ஒரு ஷத்ரியனின் கடமை என கிருஷ்ண பரமாத்மா போதித்தது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது. 19 வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையைக் கொன்றது இந்து மதத்திற்குப் புதிதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சமூக ஒற்றுமைக்கு உதவும்'' என விரிவாக கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் எதிர் வினைகள் குறித்து திலகவதி ஐ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்...

""சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் மனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கட்டுப்பாடு உடைய ஒரு தந்தையாக இருந்திருப்பார். தான் மிகவும் அன்பு வைத்திருக்கும், பாசம் வைத்திருக்கும் தன் மகள், குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு வரும்படி நடந்துவிட்டாளே என்கிற வேகத்தில் யாஸ்மினை கொலை செய்திருக்கலாம்.

சலீமை பொறுத்தவரை அவர் மனநலம் பாதிக்கப் பட்டவரோ, சைக்கோவோ, கொலைவெறி கொண்ட மிருகமோ அல்ல. தன் மகள் யாஸ்மின் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கிறார். இவ்வளவு பாசமானவர் கொஞ்சம் அமைதியாக, அன்பாக பேசி தன் மகளுக்கு புரிய வைத்திருந்தால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்காது'' என்பதுதான் என் கருத்து.

அரபு நாடுகள் மற்றும் சில மேற்கத்திய நாடுகளில் ஐர்ய்ர்ன்ழ் ஃண்ப்ப்ண்ய்ஞ் (கௌரவக் கொலைகள்) நடந்திருப்பதை ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகளின் அறிக்கைகள் வெளிப்படுத்தி யிருக்கின்றன. அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பது என் சொந்தக் கருத்தல்ல, அது நான் படித்த விஷயம் அவ்வளவுதான்.

பாசத்துக்குரிய மகளைக் கொன்று குற்றவாளியாக நிற்கும் தனிப்பட்ட சலீமை பற்றி நான் சொன்ன கருத்துகள் மத ரீதியாக தொடர்புபடுத்தப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. நான் சொன்ன கருத்தை மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய தில்லை. நான் இஸ்லாம் மதத்திற்கு எதிராக இல்லை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்கிறார் திலகவதி ஐ.பி.எஸ்.

சில வருடங்களுக்கு முன்பு, ""நபிகள் நமக்குச் சொன்னவை'' என்ற தலைப்பில் நபிகள் நாயகத் தின் கருத்துகளை.... எளிமையான மொழியில் நூலாக்கியிருக்கிறார் திலகவதி ஐ.பி.எஸ். என்பதையும் இங்கே குறிப்பிடுகிறார்கள் அவரின் நண்பர்கள்.

-சகா
படம் : ஸ்டாலின்

நேபாளத்தில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள்!

நேபாளப் பிரதமர் மாதவ் குமார் தனது அமைச் சரவையை விரிவுபடுத்தியுள்ளார். தனது அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களை கூடுதலாக சேர்த்துள்ளார். இதில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் களும் அடங்குவர்.
முஹம்மது அஃப்தாப் ஆலம், நேபாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். இவர் ரவுதாஹத் மாவட்டத்தில் உள்ள தேராய் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தொழிலாளர் நலத்துறை மற்றும் கட்டுமானத் துறையின் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள் ளார். ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஸ்வான் அன்சாரி உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நேபாளத்தில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு முதன் முறையாக இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்களாக தற்போதுதான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி...)


உலகின் பிரபல பாப் இசை பாடகரான மைக்கேல் ஜாக்ஸன் (50) இன்று அதிகாலை 4 மணியளவில் இதய துடிப்பு திடீரென தடைப்பட்டதைத்தொடர்ந்து(Cardiac arrest) மரணமடைந்தார்.வீட்டில் நினைவற்று கீழே விழுந்ததைத்தொடர்ந்து யு.சி.எல்.எ மருத்துவமனையில் இரவு 12.30 மணிக்கு சிகிட்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜாக்ஸன் தொடர்ந்து நினைவற்ற நிலையிலேயே இருந்தார்.


1958 ஆகஸ்ட் 29 இல் சிக்காகோவில் இந்தியானா காரியில் ஜாக்ஸன் பிறந்தார்.த்ரில்லர்,டேஞ்சரஸ்,பாட்,ஹிஸ்டரி என்பவை இவருடைய புகழ்ப்பெற்ற பாப் இசை ஆல்பங்களாகும்.இதற்கிடையில் ஜாக்ஸனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.இதயம் திடீரென செயலிழந்ததைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபிறகும் நினைவில்லமல் இருந்ததுதான் சந்தேகத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் ஜாக்ஸன் இஸ்லாத்தை தழுவினார்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் ஜாக்ஸன் தனது பெயரை மீக்காயீல் என்று மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(மைக்கேல் என்பதன் அரபுச்சொல்).அல்லாஹ் அவருடைய பிழைகளை பொறுத்து மறுமையில் நற்பாக்கி யத்தை வழங்குவானாக!

வியாழன், 25 ஜூன், 2009

முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு தர மார்க்சிஸ்ட் தயார் : இழந்த ஓட்டுக்களை மீட்க முயற்சி


கோல்கட்டா : முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு அளிக்க மேற்கு வங்கத்தில் உள்ள புத்ததேவ் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், படுதோல்வி அடைந்ததற்கு, மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்கள் ஓட்டுக்களை இழந்தது தான் காரணம். அதனால், இனியாவது முஸ்லிம்கள் ஓட்டுக்களை மீட்டாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம் உணர்ந்துள்ளது.

முப்பதாண்டு மார்க்சிஸ்ட் கோட்டை தகர்ந்து போவதை தடுக்க பல வழிகளில் நடவடிக்கை எடுத்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி, முதல் கட்டமாக முஸ்லிம்களை ஈர்க்க அவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளது. பணக்காரர்களை தவிர்த்து, ஏழை முஸ்லிம்கள் எல்லாருக்கும் ஒதுக்கீடு தருவது என்றும், அவர்களை உட்பிரிவு அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என்றும் திட்டமிட்டுள்ளது மேற்கு வங்க அரசு. தென் மாநிலங்களில் தான், முதன் முதலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. கர்நாடகாவில், முஸ்லிம்களுக்கு உட்பிரிவின் அடிப்படையில் ஒதுக்கீடு உள்ளது. தமிழகத்தில் தான் முதன் முதலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது பிரச்னையின்றி செயல்படுத்தப்பட்டது. மத அடிப்படையில் தந்தால் பிரச்னை வரும் என்பதை அறிந்து, அவர்களில் உட்பிரிவுகளை கணக்கிட்டு, இதர பிற்படுத்தப்பட் டோரில் சேர்த்து ஒதுக்கீடு தர முடிவு செய்தது.

ஆந்திர அரசு நேரடியாக ஒதுக்கீடு தர முடிவு செய்த போது, அதை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. தமிழ்நாடு பாணியில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு தருவது பற்றி இப்போது ஆந்திரா பரிசீலித்துவருகிறது. இந்த வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்களை கணக்கெடுத்து, அவர்களில் பெரும்பாலோரை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டு வந்து, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து ஒதுக்கீடு அளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் உட்பட மொத்த ஒதுக்கீடும் 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், 27 சதவீதத்துக்குள் முஸ்லிம்களுக்கும் ஒதுக்கீடு அளிப்பது சாத்தியமல்ல. அதனால், மொத்த ஒதுக்கீட்டை 50 சதவீத்துக்கு மேல் உயர்த்துவது என்றும் மார்க்சிஸ்ட் அரசு பரிசீலித்து வருகிறது. அப்படி செய்தால், கோர்ட் தலையீட்டுக்கு வழி வகுத்து விடும் என்றும் தெரிந்தும், தைரியமாக மார்க்சிஸ்ட் அரசு செயல்படுத்த உள்ளது.

நன்றி: தினமலர்

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-ன் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-ன் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்

சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.


முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

குவாண்டனமோ ,அபுகிரைப் சிறைச்சாலையையடுத்து ஆப்கானிஸ்தானிலும் கைதிகள் சித்திரவதை:அதிர்ச்சித் தகவல்!



சற்று காலத்துக்கு முன் கியுபாவிலுள்ள குவாண்டனாமோ சிறையிலும், ஈராக்கிலுள்ள அபுகிரைப் சிறையிலும் ஐயத்திற்கிடமான கைதிகளை அடைத்து மனிதத் தன்மையில்லாமல் சித்திரவதை செய்ததாக அமெரிக்கா மீது புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பல மனித உரிமை ஆர்வல இயக்கங்கள் அமெரிக்காவுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இக்கைதிகளுக்கான சட்ட உரிமை குறித்த சாதகமான தீர்ப்பு வர உதவியாய் இருந்தன.

தற்போது ஆப்கானிஸ்தானிலும் இதே போன்று சிறைகளில் கைதிகளை அடைத்து அமெரிக்கா சித்திரவதை செய்துவருவது வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. BBC நிறுவனம் ஆப்கனின் பக்ராம் சிறையில் அமெரிக்காவால் ஐயத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட 27 பேருடன் தனித்தனியாக நடத்திய ஆய்வில் மனித நேயம் சற்றும் இல்லாமல் மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு இக்கைதிகள் ஆட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தாம் எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பது தமக்குத் தெரிவிக்கப்படவேயில்லை என்று கூறினர். தம்மை எவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.
அதிகப் பிரகாசம் உள்ள விளக்குகளைச் சிறையறையில் எரியவிட்டும், நீண்டநேரம் நிற்கவைக்கப்பட்டும், நாய்களை ஏவியும், குடிபானங்களில் தூக்கம் கெடுக்கும் மருந்துகளைக் கலந்து அளித்தும், நெற்றிப் பொட்டில் துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தியும், குளிர்காலங்களில் கடுங்குளிரான நீரையும், கோடையில் கடும் சூடான நீரையும் வெற்றுடலில் ஊற்றியும் இன்னும் பலவாறும் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக இந்த முன்னாள் 'கைதி'கள் தெரிவித்தனர். இக்கைதிகளுக்கு எவ்விதமான சட்ட உதவியும் கிடைக்காதவாறு இவர்கள் வைக்கப்பட்டனர் என்றும் இப்பேட்டியில் தெளிவானது.

ஆனால், இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பென்டகன் மறுத்துள்ளது. கைதிகள் மனிதத் தன்மையுடனேயே நடத்தப்பட்டதாக அது அறிவித்துள்ளது.

புதன், 24 ஜூன், 2009

இயக்குனர் சக்தி சிதம்பரத்திற்கு சென்னை சுன்னத் வல் ஜமாஅத் கண்டனம்


சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மக்கா மதினா படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது. நபிகள் நாயகத்துக்கும், சினிமா துறைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இச்செயல், இசுலாமியர்களின் மார்க்கத்தை இழிவுபடுத்துகின்ற செயலாகவும் இருக்கின்றது.

ஆகவே இச்செயலை செய்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

இயக்குனர் சக்தி சிதம்பரம் பத்திரிகை வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறினால், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்றும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை சுன்னத் வல் ஜமாஅத் மசூதி கூட்டமைப்புத் தலைவர் எம்.முகம்மது சிக்கந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் சக்தி சிதம்பரம் உடனடியாக இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாம் பர்தா - கொக்கரிக்கிறார் சார்கோஷி



பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி பிரான்சு நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா உடை, பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பர்தா உடை பெண்களை அடிமைப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.முகத்திரை அணிவது பிரான்சின் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பர்தா அணியத் தடை செய்யும் சட்டம் இயற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அவர் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரைகளுக்குப் பின்னே இருக்கும் கைதிகளாக, அடையாளம் இல்லாதவர்களாக, தமக்கென ஒரு கண்ணியம் இல்லாதவர்களாகப் பெண்கள் இருப்பதை பிரெஞ்சு சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றும், பர்தா என்பதை மத அடையாளமாகத் தன்னால் சரிகாண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்கோசியின் இப்பேச்சு, பிரெஞ்சு சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் ஆதரவின்றி மலராது தாமரை!

'இரும்பு மனிதர்' இவர்தான் இந்தியாவின் அடுத்தபிரதமர் என்று அத்வானியை முன்னிலைப்படுத்தி, அமர்க்களமாக தேர்தலை சந்தித்து இறுதியில் அடங்கிபோய் மூலையில் எதிர்கட்சியாய் அமர்ந்து விட்ட பா.ஜ.க. தேர்தல் முடிவு பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்த நேரத்தில், தேர்தலில் பா.ஜ .க வின் தோல்விக்கு தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரலுடன் ராஜினாமா செய்தார் மூத்ததலைவர் யஸ்வந்த் சின்கா.அவரை தொடர்ந்து மேலும் சில தலைவர்கள் ராஜினாமா செய்ய வேறு வழியின்றி, தேர்தல் தோல்வி பற்றி ஆராய இரு நாட்கள் தேசிய செயற்குழுவை கூட்டியது பா.ஜ.க தலைமை .

பலத்த எதிர்பார்ப்புடன் கூடிய செயற்குழுவில் கட்சியின் தோல்விக்கு பிரதானமான காரணம் முஸ்லிம்களின் ஆதரவின்மைதான் என்ற கருத்து பரவலாக எழுப்பப்பட்டுள்ளது. ஆச்சர்யப்படும் வகையில், காவியில் கரைந்து விட்ட முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோர்தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 'கசாப்பு கடைக்காரன்' ரேஞ்சுக்கு பேசிய வருணின் பேச்சை சுட்டிக்காட்டி, வருணின் இப்பேச்சு முஸ்லிம்களின் வாக்கு வங்கிமுழுவதுமாக காங்கிரஸ் பக்கம் திருப்பிவிட்டது என்று கூறியுள்ளனர். அப்போது வருன் பேசியது சரிதான் என்று எந்த தலைவரும் வக்காலத்து வாங்க தயாரில்லை வருணின் தாயார் மேனகாவை தவிர. தன் பிள்ளையின் மானம் காக்க சீறி எழுந்த மேனகா காந்தி, முஸ்லிம்கள் எப்போதும் பி.ஜே.பியின் வாங்கு வங்கியாக இருந்ததில்லை எனவே உ.பி.யில் கட்சியின் தோல்விக்கு வருனின் பேச்சு காரணமல்ல, பிரச்சார வியூகம் சரியில்லாததுதான் காரணம் என்று கூறி தன் மகனை காப்பாற்றியுள்ளார். தன் மீதான திடீர் தாக்குதலையும் , தனக்கு ஆதரவான குரல் இல்லாத நிலையையும் கண்ட வருன் செயற்குழுவின் இரண்டாம் நாள் 'ஆப்சென்ட்' ஆகிவிட்டார்.

மேலும், முஸ்லிம் தலைவர்கள் மட்டுமன்றி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், பீகார் துணை முதல்வர் சுசீல்குமார் மோடி, மகாராஸ்டிரா பி.ஜே.பி. தலைவர் கோபிநாத் முண்டே ஆகியோர், முஸ்லிம்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பதில்லை எனவே அவர்களின் ஆதரவு நமக்கு தேவையில்லை அவர்களுக்கு எதிராக பேசலாம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கலாம் என்றெல்லாம் செயல்படாமல் முஸ்லிம்களையும் அரவணைத்து அவர்களிடத்திலும் கட்சிக்கு ஆதரவை பெருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளனர்.

ஆக தேர்தல் தோல்வி மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு விஷயத்தில் பா.ஜ.க பாடம் படித்துள்ளதைத்தான் செயற்குழு உணர்த்துகிறது. வருங்காலங்களில் முஸ்லிம்களின் ஆதரவை பெறுவது பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவாக்களால் கருவறுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நியாயம் கிடைக்க செய்வது, இனிவரும் காலங்களில் இந்துத்துவா கொள்கையை விட்டு விட்டு வெகு ஜன இயக்கமாக நடந்து கொள்வது இவைதான் பா.ஜ.க. எதிர்பார்க்கும் ஆதரவை முஸ்லிம்களிடம் இருந்து பெற்றுத்தரும். இல்லையேல், முஸ்லிம்களுக்கும்- பா.ஜ.க.விற்கும் உள்ள உறவு 'தாமரை இலை தண்ணீர்' ஆகத்தான் இருக்கும். அத்வானியின் பிரதமர் கனவு கனவாகவே இருக்கும்.

செவ்வாய், 23 ஜூன், 2009

தாழ்வாக பறக்கும் விமானங்களால் குதுப் மினாருக்கு ஆபத்து


டெல்லி: இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான குதுப் மினாருக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து தாழ்வாக பறந்து செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படலாம் என தொல்பொருள் ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

பல நூற்றாண்டுகளை கடந்து டெல்லியி்ன் பெருமையை பறைசாற்றும் விதமாக கம்பீரமாக நிற்கும் குதுப்மினாரின் வரலாறு கிபி 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. குப்துதீன் அய்பெக் என்ற முகலாய மன்னரால் கிபி 1173ல் இதுகட்டப்பட்டது.

முழுவதும் செங்கற்களால் ஆன இந்த கட்டிடம் சுமார் 72.5 மீட்டர் உயரம் கொண்டது. டெல்லியின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பழம்பெருமை வாய்ந்த குதுப் மினார் கட்டிடம் நீர் கசிவு காரணமாக தென்மேற்காக சுமார் 25 அங்குலம் சாய்த்திருப்பது நகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதி முழுவதையும் சிமெண்ட்டால் பூசி, 10 அடி வரைக்கும் தண்ணீர் புகாத வண்ணம் பார்த்து கொண்டனர்.

காலத்தை வென்று நிற்கும் இந்த கட்டிடத்துக்கு தற்போது டெல்லி விமானங்கள் மூலம் புதிய சோதனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் இணை பொது இயக்குனர் பி.ஆர். மணி கூறுகையில்,

இப்பகுதியில் தாழ்வாக பறக்கும் விமானங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விமானங்கள் செல்லும் பாதையை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமான நிலையத்தில் புதிய ஓடுதளம் ஒன்று அமைக்கப்படும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது என்றார் அவர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சுமார் 4.4 கிமீ., தூரம் கொண்ட இந்த ஓடுதளம் நாட்டின் மிகப்பெரிய ஓடுதளமாகும். இதில் தான் ஏர்பஸ் ஏ 380, ஆன்டனப் அன் 225 உள்ளிட்ட சொகுசு விமானங்கள் பறக்கின்றன. இது துவக்கப்பட்ட பின் டெல்லி விமான நிலையம் ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 65 முதல் 70 விமானங்களை இயக்கும் திறன் பெற்றுள்ளது.

இதன் பின்னர் அனைத்து விமானங்களும் சுமார் 2.5 கிமீ., தூரம் கூடுதலாக குதுப் மினாரை விட்டு விலகி செல்கின்றன என்றார்.

இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமான போக்குவரத்துக்கான நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், இது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. அப்படி எதுவும் பாதிப்பு ஏற்படும் என்றால் தேவையான ஆய்வு செய்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

நக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

நக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின்
முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமுமுக அறிவிப்பு!

முஸ்லிம்களுக்கு எதிரான விஷமக் கருத்தை வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சென்டரல் மெமோரியல் ஹால் எதிர் புறம் இன்ஷா அல்லாஹ் (24-06-09 புதன்கிழமை மாலை 4.மணியளவில்) நடைபெறுகிறது.

மார்க்க உரிமைகளுக்காக போராடும் போலந்து முஸ்லிம்கள்


இஸ்லாமிய பெருநாட்களை கொண்டாடுவது, இஸ்லாமியச்சட்டப்படி திருமணம் செய்வது உள்ளிட்ட மார்க்க உரிமைகளை பெறுவதற்காக போலந்து நாட்டு முஸ்லிம்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் இத்தகைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் 1936-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ள போலந்தில் சட்டப்படி கழுத்தில் தாலிப்போன்ற ஒன்றை கட்டித்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.முஸ்லிம்களின் பெருநாள்தினங்களான ஈகைப்பெருநாள்,தியாகப்பெருநாள்களில் கட்டாயம் பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும் வந்தாகவேண்டும்.இது சுதந்திரத்தின் சுவர்க்கபூமி என்றழைக்கப்படும் ஐரோப்பாவுக்கு நாணக்கேடு என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

போலந்தில் 30 ஆயிரம் முஸ்லிம்கள் உள்ளனர்.இது போலந்தின் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதம்.முஸ்லிம்களில் பெரும்பாலோர் துருக்கி வம்சா வழியைச்சார்ந்தவர்கள்.பழைய யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.மீதமுள்ள மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள்.14-ம் நூற்றாண்டில்தான் இஸ்லாம் போலந்தில் அறிமுகமானது.அதே சமயம்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்.இதற்காக அரசு அதிகாரிகள் முஸ்லிம் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளை சாப்ப்பிடும் உரிமை,ஹலாலான பொருள்கள் எது என்று அறிவிப்புச்செய்யும் உரிமை ஆகியவை புதிய சட்டத்தின் வழி பெற வாய்ப்பு இருக்கிறது.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.

ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியை மாற்றக் கோரிக்கை!

மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்புப் படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரகுவன்ஷியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு மாலேகானில் இந்து சாமியாரிணி தலைமையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கை அதிவேக நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலேகானிலுள்ள குல் ஜமாத்தி தன்ஸிம் ஆஃப் மாலேகான் என்ற இஸ்லாமிய அமைப்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாலேகானில் பேரணி நடத்தியது. இவ்வழக்கை விசாரிக்கும் ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியை 15 நாட்களுக்குள் மாற்ற வேண்டும் என்று கெடுவும் விதித்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர்கள் நாளை மகாராஷ்டிரா முதல்வரையும் உள்துறை அமைச்சரையும் நேரில் கண்டு தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் உள்ளனர்.

மேலும் கடுமையான போராட்டங்கள் மூலம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்போம் என இந்த அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் கூறினார். ஜமாத்தே அஹ்லெ ஹதீஸ், ஜமாத்தே உலேமா, ஜமாத்தே இஸ்லாமி, ஷியா இஸ்னா, அஸ்ஹரி, அஷ்ரஃபி பவுண்டேசன், போக்ரா கம்யூனிட்டி, போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவை ஹிந்துத்துவ நாடாக மாற்ற முயற்சித்த அபினவ் பாரத் மற்றும் ஹிமானி சவார்க்கருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு ரகுவன்ஷி தயங்குவது ஏன்? என்று அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர். மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய சாமியாரிணி ப்ரக்யா சிங் தாக்கூர், அபிநவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் மாலேகான் குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளுக்கான தொடர்பை வெளிக்கொண்டு வந்த, முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் கார்கரே மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், ஏ.டி.எஸின் தலைவராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று பரவலாக அறியப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 22 ஜூன், 2009

1 லட்சம் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் குவைத்!


ஏஜென்டுகளை நம்பி முறைகேடாக தங்கள் நாட்டுக்கு வந்துவிட்ட 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்புகிறது குவைத் அரசு.

குவைத்தில் மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் பலருக்கு முறையான விசா கிடையாது.

துபாயில் சொந்தமாக நிறுவனம், கடை அல்லது சிறிய அளவில்கூட வர்த்தக நிறுவனம் இல்லாத மோசடிக்காரர்கள் சிலர், பணம் பறிக்க போலியான வேலை அனுமதிக் கடிதத்தைக் கொடுத்து தொழிலாளர்களை ஏமாற்றி குவைத்துக்கு வரவைக்கிறார்கள்.

ஆனால் வந்தபிறகு அவர்களுக்கு சொன்னபடி வேலை தராமல் மிக மோசமாக நடித்துவதும், ஒட்டகப் பராமரிப்பு, ஓட்டல்களில் கிடைத்த வேலையைச் செய்து சரியான வருமானமில்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இப்படி தொழிலாளர்களை வரவழைக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக குவைத் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் பாதில் சபர் கூறுகையில், முறைகேடான வழியில் குவைத்துக்கு வந்துள்ளவர்களில் 1 லட்சம் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் போகிறோம்.

மேலும் இப்படி மோசடியாக அவர்களை குவைத்துக்கு வரவழைத்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றார்.

பீஸ் டீவி (Peace TV)யின் இலவச உருது மொழிச் சேவை தொடக்கம்

மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24 மணிநேர ஆங்கில ஒளிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது.

கடந்த மூன்றாண்டு காலம் தன் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இயங்கிய பீஸ் டீவி (Peace TV)யின் ஆங்கில ஒளிபரப்புச் சேவைக்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களும் பிறமதச் சகோதரர்களும் வழங்கிய அமோக ஆதரவுவைத் தொடர்ந்து, பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) எனும் தனது புதுச் சேவையைக் கடந்த 1.6.2009இல் சோதனை ஒளிபரப்பு மூலம் பீஸ் டீவி (Peace TV) தொடங்கியது.

உருது ஒளிபரப்பின் சோதனை ஓட்டமும் பெருவரவேற்பைப் பெற்றதால், கடந்த 19.6.2009 முதல் முழுமையான 24 மணி நேரச் சேவையாக பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) செயல்படத் தொடங்கி விட்டது, அல்ஹம்து லில்லாஹ்!

பிற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் பல்வேறு மூடநம்பிக்கைக் கற்பனைக் கதைகள், நாடகங்கள், வன்முறைகள், ஆடல்-பாடல் ஆபாசங்கள் போன்ற நிகழ்சிகளில் சிக்கியிருந்த மக்களுக்கு "மனித குல அமைதிக்குத் தீர்வு" எனும் தலைப்போடு ஒளிபரப்பப்படும் தூய்மையான இந்நிகழ்சிகள் ஒரு சிறந்த மாற்று வழியாகவும் அறிவொளியாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

கடந்த வாரம்வரை உர்து நிகழ்சிகள் PEACE TVயின் ஆங்கில நிகழ்சிகளுடன் ஒளி பரப்பப்பட்டன. அந்த ஒளிபரப்பில் 66% முதல் 75% ஆங்கில நிகழ்சிகளும் 25% முதல் 33% வரை உர்து நிகழ்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இனி இரண்டு அலைவரிசைகளும் 100% ஆங்கிலம் மற்றும் உர்து நிகழ்சிகளை ஒளிபரப்பக் கூடிய, இரண்டு 24 மணி நேர அலைவரிசைகளாக இயங்கும்.

மிகவும் வித்தியாசமான முறையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்சிகள் டாக்டர் ஜாகீர் நாயக், அஹ்மத் தீதாத், பிலால் பிலிப்ஸ், அப்துல் ரஹீம் கிரீன், யூசூஃப் எஸ்டேஸ், யாஸர் ஃபஜாகா, டாக்டர் ஜமால் அல்-பதவீ போன்ற பல உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், பத்திரிகையாளர்கள் கேள்வி-பதில் நிகழ்சிகள், ஆகிய ஆன்மீக, உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் அமைதியான முறையில் தீர்வுகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கபடுகின்றன என்பது குறிப்பாக இளம் அறிவு ஜீவிகளை கவர்கின்றது.

ஒளிபரப்பு அலை வரிசைகள்:

1) INTELSAT 10 ( PAS 10)

Position : 68.5 East Frequency : 4116 Symbol rate : 8145, FEC 3/4

Polarization Vertical.

Reach : Asia, Middle East, Australia & Africa.

2) ARAB SAT : BADR - 4

Position : 26.0 East Frequency : 12169 Symbol rate : 27500, FEC 3/4

Polarization vertical.

Reach : Middle East, Africa & Europe.

அதே போல் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பீஸ் மாநாட்டு நிகழ்சிகள், மும்பை இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் (IRF ISLAMIC RESEARCH FOUNDATION) [ஐ ஆர் எஃப்]அரங்க நிகழ்சிகள், கேள்வி-பதில்கள், டாக்டர் வில்லியம் கேம்ப் பெல், டாக்டர் ருக்னுத்தீன், குரு ரவி ஷங்கர், போன்றவர்களுடன் நடைபெற்ற மத ஒப்பாய்வு விவாதங்கள் மிகவும் பிரபலமானவை.

மேலும் பொருளாதார, விஞ்ஞான, கல்வி போன்ற இதர வாழ்வியல் துறையின் புகழ்பெற்ற நிபுணர்கள் நேர்காணல்கள், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மும்பையில் நடத்தும் ISLAMIC INTERNATIONAL SCHOOL சிறுவர்கள், மாணவர்கள் நிகழ்சிகள் என்று எல்லா வர்க்கத்தினரையும் கவரும் சேனலாக இது செயல்படுகிறது.

முற்றிலும் இலவசமான இந்த ஒளிபரப்பு அலைவரிசைகளை உங்கள் கேபிள் ஆபரேட்டர்களைத் தொடர்பு கொண்டு நிறுவிக் கொள்வதன் மூலம் ஆங்கிலம் மற்றும் உர்து (ஹிந்தி) இரு மொழிகளில் 24 மணி நேரமும் உங்கள் இல்லத்தில் இறை மார்க்கம் இஸ்லாமிய மணம் கமழச் செய்வீர்களாக.

அல்லாஹ்வின் அருளும் கிருபையும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இவ்வழியில் உழைத்து நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றி நோக்கத்தில் செயல்படும் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

ஈரான் பேரணி புகைப்படத்தில் மோசடி: சர்ச்சையில் பி.பி.சி

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் செல்வாக்கிக்கிற்கு இழுக்கை ஏற்படுத்த பி.பி.சி செய்த புகைப்பட மோசடியை "வாட் ரியலி ஹேப்பன்ட்" என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜாத் தனது ஆதரவாளர்களின் வெற்றிக்கொண்டாடத்தை பார்த்து கையசைக்கும் புகைப்படத்தை ஹுசைன் மூசாவியின் ஆதரவாளர்களின் போராட்டமாக மாற்றி மோசடிச்செய்துள்ளது.

விசாரணையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பிரசுரித்த புகைப்படத்தில் நஜாதை மாற்றிவிட்டு ஈரான்செய்திகளுடன் வெளியிட்டது.அந்த படத்தின் கீழ் "தடைகளை தாண்டி மூசாவியின் ஆதரவாளர்கள் போராட்டக்களத்தில்" என்ற அடிக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

குட்டு வெளிப்பட்டவுடன் அந்த அடிக்குறிப்பை மாற்றியுள்ளது பி.பி.சி.இதே போல் ஒருமோசடியை 2003-இல் ஈராக்கில் சதாம்ஹுசைனின் உருவச்சிலையை அமெரிக்க ராணுவமும் சில ஈராக் நாட்டவரும் சேர்ந்து உடைத்ததை ஒரு பெருங்கூட்ட ஈராக் மக்கள் உடைத்ததாக வீடியோ காட்சியில் மோசடியைச்செய்தது.

இநிகழ்விற்குப்பின் தற்ப்போது புகைப்படம் சம்பந்தமாக தவறு நிகழ்ந்துவிட்டதாக கூறி மன்னிப்புக்கேட்டுள்ளது.




மோசடிச்செய்த படம், இதில் நஜாதின் உருவம் மாற்றப்பட்டு குளோசப்பில்

http://www.bbc.co.uk/blogs/theeditors/2009/06/what_really_happened.html

ஞாயிறு, 21 ஜூன், 2009

சிடியில் உள்ளது வருண் காந்தியின் குரல்தான்- ஆய்வு முடிவு!

லக்னோ: பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக கூறி சமர்ப்பிக்கப்பட்ட வருண் காந்தியின் பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது, வருண் காந்தியின் குரல்தான் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிலிபித்தில் பேசிய வருண் காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் துவேஷமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறை சென்ற அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலையானார். பின்னர் அவர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கும் தள்ளுபடியானது.
இந்த நிலையில் பிலிபித்தில் தான் பேசிய பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது தனது குரலே அல்ல, அதை திரித்து தயாரித்துள்ளனர் என்று கூறியிருந்தார் வருண் காந்தி. இதையடுத்து சிடியில் உள்ள பேச்சு வருண் காந்தியின் குரல்தானா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த சோதனையில் சிடியில் உள்ள குரலும், வருண் காந்தியின் குரலும் ஒத்துப் போவதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக உ.பி. போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சண்டிகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இந்த குரல் பரிசோதனை நடந்தது. பிலிபித் மற்றும் தேஷ்நகர் ஆகிய இரு இடங்களில் வருண் காந்தி பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்களையும், வருண் காந்தியின் குரலையும் சோதனை செய்ததில் அவை ஒத்துப் போவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை அடிப்படையாக வைத்து விரைவில் வருண் காந்தி மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யப் போவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால் போலீஸாரின் இந்தக் கூற்றை ஏற்க முடியாது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

சனி, 20 ஜூன், 2009

இஸ்லாத்திற்கு 'கவுரவ கொலைகள்' புதிதல்ல- திலகவதியின் திமிர் பேட்டி!

சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் சலீம் ஷேக் என்ற முஸ்லிம், காதல் பிரச்சினைக்காக தன் மகள் யாஸ்மின் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்த செய்தி பத்திரிக்கைகள் மூலமாக நாம் அறிந்த ஒன்றுதான். யாஸ்மின் காதலித்தது ஒரு முஸ்லிம் வாலிபரைத்தான். எனவே படிப்பு முடிந்த பின் நானே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று அப்பெண்ணின் தந்தை கூறிய பிறகும், அப்பெண் தன் காதலனோடு ஓடியதாலும், தன் அறிவுரையை ஏற்க மறுத்தாலும் ஆத்திரத்தில் அறிவிழந்த ஷேக் தன் மகளை கொலை செய்துள்ளார். இந்த கொலை இந்திய சட்டப்படியும், இஸ்லாமிய சட்டப்படியும் தவறுதான் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. கொலையாளி தானே சரணடைந்துள்ளார். சட்டம் என்ன தண்டனையை அவருக்கு வழங்கினாலும் அது வரவேற்க தக்கதே!

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நக்கீரன்[20 -06 - 09 ]இதழில் கருத்து தெரிவித்துள்ள திருமதி. திலகவதி ஐ.பி.எஸ்.என்பவர், இந்த சம்பவத்தை வைத்து இஸ்லாத்தை இழிவு படுத்தும் வகையில் விஷக்கருத்தை உதிர்த்துள்ளார்.

அவரது கருத்து; பெற்றோரின் முடிவுக்கு எதிராகவும், குடும்பத்தின் கவுரவத்திற்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் ஒரு ஆணோ, பெண்ணோ செயல்பட்டால், குடும்ப கவுரவத்தை காப்பாற்ற பெற்றோர்களே அந்த பிள்ளையை கொன்று விடும் கவுரவக்கொலைகள் அரபு நாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இது புதிதானதும் அல்ல. என்று கூறியுள்ளார்.

திலகவதியின் கூற்று பிரகாரம் சலீம் செய்த கொலையை இஸ்லாம் ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க முனைகிறார். எந்த உயிரையும் அநியாயமாக கொள்ளுமாறு இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. ஒரு ஆத்மாவின் ரத்தம் எப்போது பூமியில் சிந்தப்படவேண்டும் என்பதை படைத்த இறைவன் தெளிவாக சொல்லியுள்ளான்;


مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاء تْهُمْ رُسُلُنَا بِالبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَلِكَ فِي الأَرْضِ لَمُسْرِفُونَ
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" [5:32 ].

யாரோ ஒரு ஒரு தனிமனிதன் செய்ததை வைத்து இஸ்லாத்தை இழிவு படுத்திய திலகவதி முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கு கொடி பிடித்து கோஷம் போடும் சமுதாய இயக்கங்கள் திலகவதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். அல்லது திலகவதி மீது வழக்கு தொடரவேண்டும். செய்வார்களா?

தாக்கரேவுக்கு மூச்சுத்திணறல் - ஓடி வந்து காப்பாற்றிய முஸ்லீம் டாக்டர்கள்

கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு, இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்து அவரை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளனர்.

சிவசேனாவின் முஸ்லீம் துவேஷப் போக்கு அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வியாழக்கிழமையன்று கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து தாக்கரேவுக்கு சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

தாக்கரேவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் லீலாவதி மருத்துவமனைக்குத் தகவல் போனது. இதையடுத்து அங்கிருந்து டாக்டர்கள் ஜலீல் பர்கர், சமத் அன்சாரி ஆகியோர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

இதுகுறித்து டாக்டர் பர்கர் கூறுகையில், பால் தாக்கரேவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான் அவரது வீட்டுக்கு தினசரி சென்று பார்த்து கண்காணித்து வருகிறேன்.

வியாழக்கிழமையன்றும் நான் போயிருந்தபோது நன்றாகத்தான் இருந்தார். ஆனால் இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நானும் டாக்டர் சமத்தும் வீட்டுக்கு விரைந்தோம். அவருக்கு ரத்த அழுத்தம் ஏறியிருந்தது. இதயத் துடிப்பும் தாறுமாறாக இருந்தது. ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது.

உடனடியாக அவருக்கு சில ஊசிகளைப் போட்டோம். பின்னர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம் என்றார்.

தாக்கத்தை ஏற்ப்படுத்தாத நபி- உளரும் ஷாரூக்கான்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் அவ்வப்போது தான் ஒரு முஸ்லிம் என்பதை அடையாளம் காட்டும் வகையில் ஏதேனும் ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். சில மாதங்களுக்கு முன் திருக்குர்'ஆன் வசனங்களுக்கு அவர் தவறாக அர்த்தம் கொடுத்ததை நாம் 'ஷாருக்கானின் திருக்குர்'ஆன் விளக்கம்[..?] என்ற தலைப்பில் ஆக்கமாக வெளிட்டிருந்தோம் அதை படிக்க விரும்புவோர் இந்த லிங்கை கிளிக் செய்க;http://mugavai-abbas.blogspot.com/2008/12/blog-post_8687.html

இப்போது அதே திருவாளர் ஷாரூக்கான், மாநபி[ஸல்] அவர்களை பற்றி ஒரு கருத்து கூறியதாகவும், அதையொட்டி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் பத்திரிக்கை செய்தி கூறுகின்றது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு ஷாரூக்கான் அளித்துள்ள பேட்டியில், மனித குலத்தின் அருட்கொடை மாநபி[ஸல்] அவர்களைப்பற்றி கூறும்போது ,அவர்[நபி] வரலாற்றில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று கூறினாராம். இதையறிந்த மும்பையில் உள்ள அமன் கமிட்டி ஷாரூக்கான் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன், மத ரீதியாக பேசி மக்கள் மனதை புண்படுத்தியதாக ஷாரூக்கான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உலக அளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்திய நூறு பேர் என்ற நூலை எழுதிய மைக்கேல் ஹார்ட்ஸ் எனும் கிறிஸ்தவ ஆய்வாளர், அந்த நூலில் முதலிடத்தை மாநபி[ஸல்] அவர்களுக்கு தருகிறார். ஒரு கிறிஸ்தவரான இந்த ஆய்வாளர் கூட வியப்புறும் அளவுக்கு உலக வரலாற்றை புரட்டிப்போட்ட உத்தம தலைவர்[ஸல்] அவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த கூத்தாடி கொக்கரிக்கிறது. ஆம்! யாரோ எழுதியதை மனப்பாடமாக திரையில் ஒப்பித்து கைநிறைய சம்பாதிக்கும் இவர் போன்றவர்களுக்கு, மறையோனின் அருள்மறை மூலம் மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வாழ்ந்த மக்களை திருத்தி, அவர்கள் மூலம் இஸ்லாத்தை உலகெங்கிலும் பரப்பி, ஆண்டான்-அடிமை, மேலோன்-கீழோன் என்ற பேதம் நீக்கி, மண்ணையும்- மரத்தையும்- கல்லையும்-மனிதனையும்-மிருகங்களையும் இவ்வாறாக காண்பவை அனைத்தையும் கடவுளாக கற்பனை செய்து, கற்காலத்தில் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனை ஒப்பற்ற இறைவனை மட்டுமே வணங்ககூடியவர்களாக இன்று உலக அளவில் சுமார் நூற்றி ஐம்பது கோடி மக்களை மாற்றிய மாநபி [ஸல்] அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் பெரிதாக தெரிய வாய்ப்பில்லைதான்.

இஸ்லாம் என்ற ஜோதியை இந்த உலகில் ஏற்றிவைத்த உத்தம தலைவரின் தாக்கம் இந்த உலகம் உள்ளளவும் இருக்கும். இந்த ஜோதியை மறைக்க, முஸ்லிம் என்ற போர்வை போர்த்தி வந்தாலும் வேறு எந்த ரூபத்தில் வந்தாலும் அணைத்துவிட முடியாது என்பதை ஷாரூக் போன்றவர்கள புரிந்து கொள்ளவேண்டும்.

குஜராத் கலவரம்: மோடிக்கு வந்த, பேசிய போன் கால்கள் விவரம் ஒப்படைப்பு!





அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வரலாறு காணாத கலவரத்தின்போது, முதல்வர் நரேந்திர மோடிக்கு வந்த, அவர் பிறருக்கு பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் சிறப்பு புலனாய்வுப் படையிடம் (எஸ்.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை ஜன் சங்கர்ஷ் மன்ச் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், எஸ்ஐடியிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடிக்கு, முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி. தலைவர் டாக்டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாக பேசியுள்ளனர் என்று அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மாயா பென் கோத்னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய இருவரும் நரோடி படியா மற்றும் நரோடா கிராமத்தில் நடந்த ஒட்டுமொத்த படுகொலைகளைத் தூண்டி விட்டும், நேரில் சென்று கலவரக்காரர்களை ஊக்கப்படுத்தியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.

பெண் அமைச்சரான மாயா பென் கோத்னானி, இந்த வழக்கில் ஜாமீனில் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் டிஸ்மிஸ் செய்யவில்லை.

பின்னர் மாயாவே தனது பதவியை ராஜினாமா செய்து சரணடைந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அவரும் படேலும் மீண்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

ஜன் சங்கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் குறித்த விவரத்தை கொடுபத்துள்ளோம்.

இதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்துடன் 9 முறை பேசியுள்ளார். மாயா பென் கோத்னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் கமிஷனர் நான்கு முறையும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசியுள்ளனர்.

இந்த தொலைபேசித் தொடர்புகள் குறித்த விவரங்களை ஐபிஎஸ் அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த விவரங்களின் அடிப்படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச் எஸ்ஐடியிடம் வழங்கியுள்ளது.

புதன், 17 ஜூன், 2009

இணைய வானொலி,அல்-மனார்!

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு இணைய வானொலி!ஆம், அல்-மனார் எனும் பெயர் கொண்ட இவ்வானொலி இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகிறது.தினமும் அதிகாலை ஸுபுஹு தொழுகையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகள்,இரவு பதினொன்று மணியுடன் நிறைவு பெறுகிறது.இதில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.உதாரணமாக,வெள்ளிக்கிழமை அன்று ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி நிரல்கள்:

மு.ப. 04.30 பஜ்ருக்கான அதான், துஆ,
திலாவதுல் குர்ஆன் (சூறதுல் பகறா)
மு.ப. 07.00 "ஸபாகுல் ஹைர்"
மு.ப. 08.00 செய்திகள்.
மு.ப. 08.30 நாளும் ஒரு தகவல்.
மு.ப. 09.00 இன்றைய நாளேடுகள்.
மு.ப 09.30 ஸவ்துன் நிஸா (மகளிர் ஓசை)
மு.ப. 10.30 இசையில்லா இனிய கீதம்
பி.ப. 11.00 சொற்பொழிவு.
பி.ப. 12.30 திலாவதுல் குர்ஆன்.
பி.ப. 01.30 செய்திகள்.
பி.ப. 02.00 தர்ஜூமதுல் குர்ஆன்.
பி.ப. 02.30 அல்-குர்ஆனும் நீங்களும் (வினா-விடை நிகழ்ச்சிகள்)
பி.ப. 04.30 பிராந்திய செய்திகள்.
பி.ப. 04.40 சொற்பொழிவு கோவை.எஸ். ஐயூப்.
பி.ப. 06.10 அல்குர்ஆன் விளக்க வகுப்பு
பி.ப. 07.30 செய்திகள்.
பி.ப. 08.00 இஸ்லாமியக் குடும்பவியல் தொடர்...
பி.ப. 09.00 நேயர் நேரம்.
பி.ப. 10.00 சொற்பொழிவு.
பி.ப. 11.00 நிகழ்ச்சி நிறைவு.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை பீஸ் டிரைன் தளம் மூலமாக சென்று,சத்திய உறவுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று,தமிழ் வானொலி மேல் சொடுக்கியும் அல்லது இந்த லிங்க் மூலம் சென்றும் கேட்கலாம்.

http://www.almanarmedia.com/home.html

இணைய ரேடியோ மூலம் மார்க்கப் பணி செய்யும் இந்த சகோதர,சகோதரிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

செவ்வாய், 16 ஜூன், 2009

எங்கே செல்கிறது என் சமுதாயம்...?


எங்கே செல்கிறது என் சமுதாயம்...?


[செய்தியின் மீது கிளிக் செய்து படிக்கவும். நன்றி மாலைமலர்]
ஒரு காலத்தில் கருணாநிதியை எதிர்த்து துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி, பின்பு அதே கருணாநிதியிடம் ஐக்கியமாகி இப்போது அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்துவரும் துறைமுகம் காஜா என்பவர், அவர் சார்ந்த ஊரை சேர்ந்த சில தொழிலதிபர்கள் விசயத்தில் இடைஞ்சல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வூரை சேர்ந்த சென்னை வாழ் ஜமாஅத் நிர்வாகம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனநாயக நாட்டில் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூட்டாது. அப்படியிருக்க தங்கள் ஜமாத்தை சேர்ந்தஒரு முஸ்லிம், அதே ஜமாத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு இடையூறு செய்தால் முதல் கட்டமாக ஜமாஅத் மூலம் அவருக்கு அறிவுரை சொல்லலாம். அறிவுரையை செவியேற்க மறுத்தால் அவர்மீது ஜமாஅத் நடவடிக்கை எடுக்கலாம். ஜமாஅத் நடவடிக்கையும் பயனளிக்கவில்லையெனில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க முயற்ச்சி செய்யலாம். அதிலும் திருப்தியில்லை அவர் சார்ந்துள்ள கட்சிதான் அவரை அடக்கிவைக்கமுடியும் எனில், அவர் செய்த இடையூறுகளை பட்டியலிட்டு மனு ஒன்றை அவரது கட்சி தலைமையிடம் அளிக்கலாம். ஆனால் மேற்கண்ட ஜமாஅத், துறைமுகம் காஜா மீது முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பத்திரிக்கையில் எதோ விளம்பரம் கொடுப்பதுபோல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நமது சமுதாயத்தில் நமக்குள் ஏற்படும் மோதல்களை அப்படியே உலகுக்கு படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது அந்த விளம்பரம். இதை பார்க்கும் மாற்றார்கள் நம்மை எள்ளி நகையாடமாட்டார்களா என்று சம்மந்தப்பட்ட ஜமாஅத் உணர்ந்ததாக தெரியவில்லை. மேலும் அந்த கோரிக்கையில், ஒரு வாசகம்; நமது உயிருக்கும் மேலான கழகத்தின் உயர் பதவியில் இருக்கின்றபடியால்....

ஒரு முஸ்லிமுக்கு உயிருக்கும் மேலானவைகள்; அல்லாஹ், இஸ்லாம், ரஸூல்[ஸல்] அவர்கள், அல்-குர்ஆன்-அல் ஹதீஸ் இவை மட்டுமே, இவையல்லாத எவரும், எதுவும் ஒரு முஸ்லிமுக்கு உயிருக்கு மேலானதல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

இயன்றவரை நமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை நமக்குள் பேசி சரி செய்ய சமுதாயம் முன்வரவேண்டும். மாறாக, ஒவ்வொருவரும் அடுத்தவர் செய்தவைகளை அம்பலப்படுத்துவதே குறியாக கொண்டால், சமுதாயத்தின் வீழ்ச்சியை எவராலும் தடுக்க இயலாது[அல்லாஹ்வை தவிர] எனபதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ்.