ஞாயிறு, 7 ஜூன், 2009

இவர் பிரதமரானால்.....?

திருவாளர் நரேந்திரமோடி. இவருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. தன்னுடைய ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக கோத்ரா ரயில் எரிப்பு நாடகமாடி அதை காரணம் காட்டி குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குரியதாக ஆக்கியவர்.இவரது இந்த 'இன சுத்திகரிப்பு' சம்பவத்தை முன்னிட்டு, இவரைப்போல் மற்றொரு முஸ்லிம் இன சுத்திகரிப்பு ஆட்சியாளர்களான அமெரிக்கா இவருக்கு விசா மறுக்கும் அளவுக்கு நல்லவர்[?]. மேலும், இவருக்கு நவீன 'நீரோ மன்னன்' என்று நாட்டின் நீதிமன்றம் சிறப்பு பட்டம் வழங்கியது.

இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளையுடைய[?] இவர் பிரதமராவதற்கு முழு தகுதியுடையவர் என்று நம்ம ஊர் சோ தொடங்கி அம்பானி வரை அங்கலாய்த்தார்கள். மோடியின் பிரதமர் தகுதிக்கு கூறிய காரணம் தொழில்துறையில் குஜராத்தை எங்கோ கொண்டுபோய்விட்டார் என்றார்கள். குஜராத் வளர்சிக்கு காரணம் மோடியல்ல என்பதை அறிய விரும்புவர்கள் இந்த சுட்டியை கிளிக் செய்க;
http://mugavai-abbas.blogspot.com/2009/02/blog-post_07.html

ஆனால் மோடி ஆட்சியின் சாதனை என்னவெனில், நாட்டின் கண் போன்ற கல்வியில் தனது மாநிலத்தை படு பாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதற்கு ஒரு சான்று;
குஜராத் மாநில பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இது குஜராத் மாநில ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறமையின்மையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. மாநிலம் முழுவதும் 119 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.கடந்த ஆண்டு 408 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 359 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 113 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற நிலையில் இருந்து இந்த ஆண்டு 119 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற மோசமான நிலையையும் அடைந்துள்ளது.ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் கிராமப்புறத்தில் இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை தகர்த்து, அகமதாபாத் நகரில் 12 பள்ளிகள், பரோடா மற்றும் சூரத் மாவட்டங்களில் தலா 12 பள்ளிகள், பஞ்சமகால் மாவட்டத்தில் 13 பள்ளிகள் என நகர்ப்புற பள்ளிகளிலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.மாநிலம் முழுவதும் 1,236 பள்ளிகளில் 0 முதல் 30 சதவீத தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 968 ஆக இருந்தது.[நன்றி;இந்நேரம்]

இப்படிப்பட்டவர் பிரதமரானால், குஜராத்தின் கல்வி நிலை இந்தியா முழுவதும் ஏற்பட்டால்? உலகிலேயே படிப்பறிவில்லா நாடு என்று நமது நாட்டிற்கு பெருமை[?] வந்து சேரும். அது சரி! இந்துத்துவாக்களின் ஒரே நோக்கமான முஸ்லிம்களின் கருவறுப்பு கொள்கைக்கு அறிவு எதற்கு..? ஆயுதம் போதும் என முடிவெடுத்து விட்டார்கள் போலும்!

கருத்துகள் இல்லை: