சமூக, பொருளாதார தளங்களில் இந்திய முஸ்லிம்களின் பிற்பட்டத் தன்மையை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த ஆட்சிக் காலத்தில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப் பட்டது. அது தனது பரிந்துரைகளையும் சமர்பித்தது.
நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிக்கப் பட்டப் பிறகும், சச்சார்க்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த ஐ.மு.கூட்டணி அரசு உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற டெல்லியில் த.மு.மு.க. மாபெரும் பேரணியையும் நடத்தியது. மத்திய அரசிடம் பல்வேறு வழிகளில் மன்றாடிப் பார்த்தும், சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற் கான அறிகுறி ஆட்சியின் அந்திமகாலம் வரை தென்படவில்லை.
மறுபடியும், மத்தியில் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக் கிறது காங்கிரஸ் கட்சி. சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களை பெற்றே அசுர பலத்தை பெற்றிருக்கிறது. இப்போதாவது காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். சிறுபான்மை முஸ்ம் களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த நீதிபதி சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற் காக விரைவான முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
சச்சார் கமிட்டியின் பிரதான பரிந்துரைகளான முஸ்லிம் பெரும் பான்மை பகுதிகளில் கல்விக் கூடங் களை நிறுவுவது, கல்வி வேலை வாய்ப்பு களில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் 50 ஆண்டு காலமாக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் கடைக்கோடி யில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் முன்னேற ஒரு முனைப்பு உண்டாகும்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் சச்சார் கமிட்டி அறிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு பெரிய அளவிலான முயற்சிகள் ஏதும் செய்ய வில்லை. முஸ்லிம்களின் சமூக, பொரு ளாதார நிலைகள் பற்றி ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.
சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று டெல்யை குலுங்க வைத்த தமுமுக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு முஸ்ம் அமைப்புகளின் தொடர் வலியுறுத்தல் களுக்கும் பின்புதான் சச்சார் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சச்சார் கமிஷன் விவரித்திருந்த முஸ்ம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றிய புள்ளி விவரங்கள் நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
ஆனாலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை சரியான முறையில் அமல்படுத் தாத காங்கிரஸை, முஸ்லிம் களுக்கு அகில இந்திய அளவில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காத காங்கிரஸை இந்த தேர்தலில் மன்னித்து பா.ஜ.க. எனும் நச்சுப்பாம்பை நசுக்குவதற்காகவும், நாட்டின் ஸ்திரத் தன்மைக்காவும் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் என்ன கைமாறு செய்ய போகிறது.
சச்சார் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த காங்கிரஸ் அரசு முன்னுரிமை அளித்து செயல் படும் என மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறி யுள்ளது முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சச்சார் கமிட்டி பரிந்துரை களை அமல்படுத்துவதோடு ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரைகளையும் உடனடியாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நடை முறைப்படுத்த வேண்டும் என்பதே சிறுபான்மை முஸ்லிம்களின் கோரிக்கை. சொன்னதை செய்யுமா காங்கிரஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக