செவ்வாய், 30 ஜூன், 2009

பலஸ்தீன் சிறுவர்கள் மீது நடத்தப்படும் சித்திரவதைகளுக்கு மனித உரிமை ஆணையங்கள் கடும் கண்டனம்

மேற்குக்கரையில் 14 வயது நிரம்பிய இரு சிறுவர்களைத் தாக்கி, அவர்களின் கண்களை குருடாக்கியதாக இஸ் ரேலிய சிப்பாய்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேற்குக்கரை வீடொன்றை சுற்றிவளைத்த போது இச்சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். ்இங்கு 10 மணி நேரம் நின்று கொண்டு எதை யும் செய்யாமல் இருப்பது சோர்வைத் தரு கிறது. எனவே நீங்கள் பலஸ்தீனர்களை அடித்துத் தாக்குங்கள் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் கூறியுள்ளதை சர்வதேச மனித உரிமை நிறுவனம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.

சென்ற மாதம் 14 வயது நிரம்பிய சிறுவர் கள் உட்பட 150 பலஸ்தீனர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலியப் படையினர் இவர்களை துஷ் பிரயோகம் செய்து தாக்கி, சித்திரவதை செய்தது நிரூபிக்கப் ப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களைச் சித்திரவதை செய்வதே மத்திய கிழக்கிலுள்ள ஒரே ஒரு ஜனநாயக நாடு எனக் கருதப்படும் இஸ்ரேலியப் படை வீரர்களின் செயல்பாடாக மாறியுள்ளமை கண்டிக்கத்தக்கது என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கழிவறைக்கு தங்களை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறிய கைதிகள் பலர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். சில கைதிகள் கண்கள் கட்டப்பட்டு கழி வறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இத னால் காயமடைந்து அவ்விடத்திலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளனர். பதின் வயதினரே இவ்வாறு அடித்துத் துன் புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படு கிறது. இவ்வாறு இஸ்ரேலியப் படைகள் சிலர் அடித்துத் துன்புறுத்தும்போது ஏனையவர்கள் பார்த்து கேளிக்கையாக சிரிக்கும் காட்சி தனது நெஞ்சை உறுத்திய தாக இஹாப் சம்ஷலாவி என்ற பல் கலைக்கழக மாணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Thanks:Meelparvai.net

கருத்துகள் இல்லை: