சனி, 20 ஜூன், 2009

தாக்கத்தை ஏற்ப்படுத்தாத நபி- உளரும் ஷாரூக்கான்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் அவ்வப்போது தான் ஒரு முஸ்லிம் என்பதை அடையாளம் காட்டும் வகையில் ஏதேனும் ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். சில மாதங்களுக்கு முன் திருக்குர்'ஆன் வசனங்களுக்கு அவர் தவறாக அர்த்தம் கொடுத்ததை நாம் 'ஷாருக்கானின் திருக்குர்'ஆன் விளக்கம்[..?] என்ற தலைப்பில் ஆக்கமாக வெளிட்டிருந்தோம் அதை படிக்க விரும்புவோர் இந்த லிங்கை கிளிக் செய்க;http://mugavai-abbas.blogspot.com/2008/12/blog-post_8687.html

இப்போது அதே திருவாளர் ஷாரூக்கான், மாநபி[ஸல்] அவர்களை பற்றி ஒரு கருத்து கூறியதாகவும், அதையொட்டி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் பத்திரிக்கை செய்தி கூறுகின்றது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு ஷாரூக்கான் அளித்துள்ள பேட்டியில், மனித குலத்தின் அருட்கொடை மாநபி[ஸல்] அவர்களைப்பற்றி கூறும்போது ,அவர்[நபி] வரலாற்றில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று கூறினாராம். இதையறிந்த மும்பையில் உள்ள அமன் கமிட்டி ஷாரூக்கான் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன், மத ரீதியாக பேசி மக்கள் மனதை புண்படுத்தியதாக ஷாரூக்கான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உலக அளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்திய நூறு பேர் என்ற நூலை எழுதிய மைக்கேல் ஹார்ட்ஸ் எனும் கிறிஸ்தவ ஆய்வாளர், அந்த நூலில் முதலிடத்தை மாநபி[ஸல்] அவர்களுக்கு தருகிறார். ஒரு கிறிஸ்தவரான இந்த ஆய்வாளர் கூட வியப்புறும் அளவுக்கு உலக வரலாற்றை புரட்டிப்போட்ட உத்தம தலைவர்[ஸல்] அவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த கூத்தாடி கொக்கரிக்கிறது. ஆம்! யாரோ எழுதியதை மனப்பாடமாக திரையில் ஒப்பித்து கைநிறைய சம்பாதிக்கும் இவர் போன்றவர்களுக்கு, மறையோனின் அருள்மறை மூலம் மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வாழ்ந்த மக்களை திருத்தி, அவர்கள் மூலம் இஸ்லாத்தை உலகெங்கிலும் பரப்பி, ஆண்டான்-அடிமை, மேலோன்-கீழோன் என்ற பேதம் நீக்கி, மண்ணையும்- மரத்தையும்- கல்லையும்-மனிதனையும்-மிருகங்களையும் இவ்வாறாக காண்பவை அனைத்தையும் கடவுளாக கற்பனை செய்து, கற்காலத்தில் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனை ஒப்பற்ற இறைவனை மட்டுமே வணங்ககூடியவர்களாக இன்று உலக அளவில் சுமார் நூற்றி ஐம்பது கோடி மக்களை மாற்றிய மாநபி [ஸல்] அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் பெரிதாக தெரிய வாய்ப்பில்லைதான்.

இஸ்லாம் என்ற ஜோதியை இந்த உலகில் ஏற்றிவைத்த உத்தம தலைவரின் தாக்கம் இந்த உலகம் உள்ளளவும் இருக்கும். இந்த ஜோதியை மறைக்க, முஸ்லிம் என்ற போர்வை போர்த்தி வந்தாலும் வேறு எந்த ரூபத்தில் வந்தாலும் அணைத்துவிட முடியாது என்பதை ஷாரூக் போன்றவர்கள புரிந்து கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: