ஞாயிறு, 28 ஜூன், 2009

'த‌த்கல்' திட்டத்தில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளரும், முதன்மை கடவு‌சீ‌ட்டு அதிகாரியுமான ஏ.மாணிக்கம் சென்னையில் உள்ள மண்டல கடவு‌சீ‌ட்டு அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, கடவு‌சீ‌ட்டு அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு சேவை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாதாரண முறையில் கடவு‌சீ‌ட்டவிண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக தரை தளத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய அறை அமைக்கப்பட்டது. கடவு‌சீ‌ட்டவழங்குவதற்கான கால அளவை குறைக்கவும், அலுவலகத்தில் உள்ள குறைபாடுடைய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மண்டல கடவு‌சீ‌ட்டு அலுவலகம் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலுவைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மாதம் 20ஆ‌ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நிலுவைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் பயனாக ஒரு மாதத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 1,100 கடவு‌சீ‌ட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்க தயார் செய்யப்பட்டன. இன்னும் சில மாதங்களில் மண்டல கடவு‌சீ‌ட்டஅலுவலகத்தில் தேங்கி இருக்கும் கடவு‌சீ‌ட்டு விண்ணங்கள் கணிசமாக குறைக்கப்படும்.

கடவு‌சீ‌ட்டு இணைய தளத்தில் (http:// passport.gov.in) தட்கல் ஆன்லைன் முறையில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக ூன் 20ஆ‌ம் தேதி முதல் த‌த்கலுக்கான புதிய ஆன்லைன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. த‌த்கல் விண்ணப்பங்களுக்காக உள்ள தனியான மெனுவில் த‌த்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: