
எங்கே செல்கிறது என் சமுதாயம்...?
[செய்தியின் மீது கிளிக் செய்து படிக்கவும். நன்றி மாலைமலர்]
ஒரு காலத்தில் கருணாநிதியை எதிர்த்து துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி, பின்பு அதே கருணாநிதியிடம் ஐக்கியமாகி இப்போது அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்துவரும் துறைமுகம் காஜா என்பவர், அவர் சார்ந்த ஊரை சேர்ந்த சில தொழிலதிபர்கள் விசயத்தில் இடைஞ்சல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வூரை சேர்ந்த சென்னை வாழ் ஜமாஅத் நிர்வாகம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனநாயக நாட்டில் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூட்டாது. அப்படியிருக்க தங்கள் ஜமாத்தை சேர்ந்தஒரு முஸ்லிம், அதே ஜமாத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு இடையூறு செய்தால் முதல் கட்டமாக ஜமாஅத் மூலம் அவருக்கு அறிவுரை சொல்லலாம். அறிவுரையை செவியேற்க மறுத்தால் அவர்மீது ஜமாஅத் நடவடிக்கை எடுக்கலாம். ஜமாஅத் நடவடிக்கையும் பயனளிக்கவில்லையெனில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க முயற்ச்சி செய்யலாம். அதிலும் திருப்தியில்லை அவர் சார்ந்துள்ள கட்சிதான் அவரை அடக்கிவைக்கமுடியும் எனில், அவர் செய்த இடையூறுகளை பட்டியலிட்டு மனு ஒன்றை அவரது கட்சி தலைமையிடம் அளிக்கலாம். ஆனால் மேற்கண்ட ஜமாஅத், துறைமுகம் காஜா மீது முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பத்திரிக்கையில் எதோ விளம்பரம் கொடுப்பதுபோல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நமது சமுதாயத்தில் நமக்குள் ஏற்படும் மோதல்களை அப்படியே உலகுக்கு படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது அந்த விளம்பரம். இதை பார்க்கும் மாற்றார்கள் நம்மை எள்ளி நகையாடமாட்டார்களா என்று சம்மந்தப்பட்ட ஜமாஅத் உணர்ந்ததாக தெரியவில்லை. மேலும் அந்த கோரிக்கையில், ஒரு வாசகம்; நமது உயிருக்கும் மேலான கழகத்தின் உயர் பதவியில் இருக்கின்றபடியால்....
ஒரு முஸ்லிமுக்கு உயிருக்கும் மேலானவைகள்; அல்லாஹ், இஸ்லாம், ரஸூல்[ஸல்] அவர்கள், அல்-குர்ஆன்-அல் ஹதீஸ் இவை மட்டுமே, இவையல்லாத எவரும், எதுவும் ஒரு முஸ்லிமுக்கு உயிருக்கு மேலானதல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இயன்றவரை நமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை நமக்குள் பேசி சரி செய்ய சமுதாயம் முன்வரவேண்டும். மாறாக, ஒவ்வொருவரும் அடுத்தவர் செய்தவைகளை அம்பலப்படுத்துவதே குறியாக கொண்டால், சமுதாயத்தின் வீழ்ச்சியை எவராலும் தடுக்க இயலாது[அல்லாஹ்வை தவிர] எனபதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக