வியாழன், 4 ஜூன், 2009

குஜராத் மதக் கலவரம்-மோடியை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு

Modi
டெல்லி: குஜராத் மதக் கலவரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் குழு அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை அந்த மாநில அரசு உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்குளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தக் குழு ஜூலை 26ம் தேதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிடோரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு கர்ப்பிணியான முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவை வெளியில் தூக்கி வீசியதாக பாபு பஜ்ரங்கி மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட பேரை விசாரிக்கவுள்ளதால் தனது அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு கூடுதல் அவகாசம் கோரும் என்று தெரிகிறது.

இந்தக் குழு தான் மோடியின் அமைச்சரவையைச் சேர்ந்த பெண் அமைச்சரான மாயா கோதானியை நரோடா பாடியாவில் நடந்த வன்முறைகள் தொடர்பாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: