செவ்வாய், 30 ஜூன், 2009

கும்பகர்ண தூக்கம் கலைத்து; 17 ஆண்டுகளுக்குப் பின் அறிக்கை கொடுத்த லிபரகான்!

பொதுவாக நாட்டில் ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டால், அந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வேகத்தை குறைக்கவும், நாட்களை கடத்தி மற்ற மக்களும் அந்த சம்பவத்தை மறக்க அமைக்கப்படுவதுதான் விசாரணை கமிஷன்கள். இந்த கமிஷன்கள் முஸ்லிம்களின் விஷயத்தில் மிக தாராளமாக அமுல்படுத்தப்படும். பெரும்பாலும் அந்த கமிஷன்கள் அரசுக்கு/அநீதியாளர்களுக்கு ஆதரவான அறிக்கையையே சமர்ப்பிக்கும். விதிவிலக்காக மும்பை கலவரத்தை விசாரித்த ஸ்ரீ கிரிஷ்ணா கமிஷன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் உள்ளிட்ட சில கமிஷன்கள் விசாரணைகள் நியாயமான முறையில் நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து ஆண்டுகள் பல கடந்தபின்னும் அவை கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் நிலையில்,
சிரிக்கவே தெரியாத ஒருவர் பிரதமராக இருந்தபோது உலக நாடுகள் இந்தியாவை பார்த்து கைகொட்டி சிரித்த நிகழ்வுதான் இந்துத்துவா பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் சம்பவம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவயில்லை என்பதை போன்று சுமார் 450 ஆண்டுகளாக அந்த இடத்தில் பள்ளிவாசல் இருந்ததும், அதை பயங்கரவாதிகள் இடித்ததும், இடித்த பயங்கரவாதிகள் யார் யார் என்று சிறு பிள்ளையும் அறிந்த நிலையில், லிபரகான்எனும் நீதிபதி தலைமையில் கண்துடைப்பு கமிஷனை அமைத்து, அக்கமிஷன் தனது அறிக்கையை 1993 மார்ச் 16 அன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு பணித்தது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு.

பின்பு தினத்தந்தி சிந்துபாத் கதைபோன்று, 48 முறை கால நீட்டிப்பு செய்து ஒரு வழியாக இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் லிபரகான். அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அறிக்கையில் என்ன இருந்தாலும் முஸ்லிம்களுக்கு கவலையில்லை. பாபர் மஸ்ஜித் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமெனில், பாபர் மஸ்ஜித் இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும். இந்த இரண்டுதான் முஸ்லிம்களின் லட்சியம்.இதற்கிடையில், பாபர் மஸ்ஜிதை பயங்கரவாதிகள் இடித்ததை போன்று, தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்கு முன் அதிகார வர்க்கத்தால் ஒரு பள்ளிவாசல் இடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் தாங்கள் நினைத்த இடத்தில்[ அது அரசு இடமாக இருந்தாலும்] நினைத்த நேரத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புகிறார்கள். அவ்வாறு எழுப்பப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் லட்சக்கணக்கில் நாட்டில் உள்ளன. ஆனால் அவைகளை கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம், 400 அஆண்டு பழமைவாய்ந்த பள்ளிவாசல் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளாதாக கூறி, எவ்வித முன்னறிவிப்புமின்றி இடித்து மீண்டும் ஒரு பாபர் மஸ்ஜிதாக அப்பள்ளியை மாற்றியுள்ளது. பாபர் மஸ்ஜித் போன்று ஒவ்வொரு டிச. 6 அன்று கத்திவிட்டு முஸ்லிம்கள் கலைந்து விடுவார்கள் என்று அரசு தப்புக்கணக்கு போடவேண்டாம். காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் மற்றும் டெல்லியில் இடிக்கப்பட்ட மஸ்ஜித் ஆகியவற்றை உரிய முறையில் முஸ்லிம்களிடம் திருப்பித்தர ஆவன செய்யவேண்டும். இல்லையேல், அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க, தங்கள் இன்னுயிரையும் இழக்க முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் எனபதை அதிகார வர்க்கம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: